அருள்வாக்கு


ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்முத்துசுவாமி தீட்சிதருக்கு சுப்ரமணிய சம்பந்தம் ஜாஸ்தி. அவர் சகல க்ஷேத்திரங்க ளுக்கும் போய் சகல தெய்வங்களையும் பாடி வைத்தவர். ஆசார்யாள் மாதிரி. ஆனாலும் உபாசனையில் அவரை அம்பாள் பக்தராகவே விசேஷமாகத் தெரிந்து கொண் டிருக்கிறோம். கடைசியிலும் அவர் மீனாட்சி அம்மன் பேரில் ‘பாசமோசனி’ என்று பாடிக் கொண்டேதான் சரீரத்தை விட்டிருக்கிறார். ஆனால் அவருடைய பிறப்பு, அவருக்கு சாகித்ய ஆற்றல் ஏற்பட்டது முதலியவற்றி லெல்லாம் சுப்ரமணிய சம்பந்தமே இருக்கிறது.

முத்துசுவாமி என்கிற பேரே வைத்தீஸ் வரன் கோவில் முத்துக்குமாரசுவாமியின் பெயரை வைத்துத்தான் அவருக்கு நாமகரணமாயிருக்கிறது. அப்பா ராமஸ்வாமி தீட்சிதர் - அவரும் பெரிய பண்டிதர்.

சங்கீதத்தில் நிரம்பத் தெரிந்தவர். சாகித்தியங்கள் பண்ணியிருப்பவர். பெரிய ஸ்ரீவித்யா உபாசக ருங்கூட. அவருக்கு நாற்பது வயசு வரை புத்திர பாக்கியமில்லை. பத்தினியோடு கூட வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போய் முத்துக்குமாரசுவாமி சந்நிதியில் ஒரு மண்டலம் விரதம் இருந்தார். அந்த அம்மாளுக்குத் தன் மடியிலே தேங்காய், பழம் முதலான மங்கள வஸ்துக்களை யாரோ கட்டுவதாக ஸ்வப்னம் ஏற்பட்டது. அடுத்தாற்போலவே கர்ப்பமும் உண்டாயிற்று. முத்துக்குமார சுவாமி புத்ரவரம் தந்ததற்கே அப்படி ஸ்வப்னத்தில் சமிக்ஞையாயிருக்கிறதென்று புரிந்து கொண்டார்கள். அதற்கேற்றாற் போல் பிள்ளையும் ஒரு கிருத்திகா நட்சத்திரத்திலேயே - அது பங்குனி மாச கிருத்திகை - பிறந்தது. அப்படிப் பிறந்தவர்தான் முத்துசுவாமி தீட்சிதர்.

அப்புறம் அவர் வளர்ந்து சங்கீத அப்யாஸம், ஸ்ரீவித்யா அப்யாஸம், காசியில் சந்நியாச குருவுடன் வாசம் எல்லாம் பண்ணினார். காசியிலேயே குரு சித்தியானார். சித்தியாகிற சமயத்தில் அவர் தீட்சதரிடம் “தட்சிணத்துக்குத் திரும்பிப் போய்விடு. அங்கே முதலில் திருத்தணிக்குப் போ. நீ எதற்காக ஜன்மா எடுத்திருக்கிறாயோ அது பலிதமடையுமாறு சுப்ரமணிய சுவாமி அனுக்கிரகம் பண்ணுவார்” என்று சொன்னார்.

அப்படியே தீட்சிதர் திருத்தணிக்குப் போனார். அடிவாரத்தில் திருக்குளத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டு அவர் மலை ஏறிப் போய்க் கொண்டிருக்கும்போது முன்பின் தெரியாத ஒரு கிழ பிராமணர் அவரை, “முத்துசுவாமி!” என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டு, “வாயைத் திற” என்றார். அவர் அப்படியே பண்ணியதும் வாயிலே ஒரு கற்கண்டைப் போட்டுவிட்டு போன இடம் தெரியாமல் போய்விட்டார்.

வந்தது யாரென்று தீட்சிதருக்குப் புரிந்துவிட்டது. இவர் வந்த காரியமும் தத்க்ஷணமே ஆரம்பித்து விட்டது - சாகித்திய ஆற்றல் ஏற்பட்டுவிட்டது! தகப்பனாரான பரமேஸ்வரனுக்கும் குருவாக இருந்த குகன் மீது அப்போதே எட்டு வேற்றுமைகளில் ஒவ்வொன்றிலும் ஒரு கிருதியாக எட்டு கிருதிகளைப் பாடிவிட்டார்.

கிருதிகளில் தம் முத்திரையாக அவர் ‘குருகுக’ என்ற சுப்ரமணிய நாமாவையே வைத்திருப்பதையும் குறிப்பாகக் கவனிக்கவேண்டும். குகையில் இருப் பவன் குகன். இருதய அந்தரங்கம் என்ற குகையில் ஆத்ம ஸ்வரூபமாக உள்ள குருதான் குருகுகன்.

தீட்சிதர் சரீர யாத்திரையை முடித்தது ஒரு தீபாவளியில். அதற்கு அடுத்த ஆறாம் நாள்தான் மகா ஸ்கந்த சஷ்டி வருவதும். சஷ்டியன்று பூர்த்தியாகிற விதத்தில் ஆறு நாள் விரத

உபவாசங்களிருப்பது வழக்கம். அதாவது தீட்சதர்வாளின் பிறப்பு மட்டுமில்லாமல் முக்தி யடைந்ததிலும் ஒரு சுப்ரமணிய சம்பந்தம் தெரிகிறது.

தீட்சதர் க்ஷேத்திரம் க்ஷேத்திரமாகப் போய் அங்கேயுள்ள மூர்த்தியை - அது என்ன மூர்த்தியானாலும் அதை - வித்தியாசமில்லாமல் பாடினார் என்றேன். அந்தந்த கிருதியிலேயே அது எந்த க்ஷேத்திரத்தைப் பற்றியது என்பதற்கு அகச்சான்று என்கிறார்களே, அப்படிப்பட்ட ஐணtஞுணூணச்டூ ஞுதிடிஞீஞுணஞிஞு இருக்கும். குறிப்பிட்ட க்ஷேத்திரத்தில் அந்த ஸ்வாமிக்கு உள்ள பெயர், அதற்கான மந்திர ரகசியம், அந்த ஸ்தல புராணக் குறிப்பு என்று ஏதாவது இருக்கும். இந்த

‘ஸ்ரீ சுப்ரமணியாய’வில் குறிப்பாக, அது இன்ன க்ஷேத்திரத்தில் பாடியது என்று காட்டுவதாக ஒன்றுமில்லை.

அத்தனை சுப்பிரமணிய க்ஷேத்திரங்களிலுள்ள மூர்த்திகளையும் சேர்த்துத் தம்முடைய பாட்டினாலேயே மூலமூர்த்தியாக அவர் பண்ணிவைத்துவிட்ட மாதிரி இந்த கிருதி பிரகாசிக் கிறது!

அனந்தகோடி நமஸ்காரத்தோடு ஆரம்பித்திருக்கிறார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :