முங்கு நீச்சல்


சிறுகதை : கீர்த்தி
ஓவியம் : சேகர்



கிருஷ்ணமூர்த்தியும் ராமநாதனும் ஒரே பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்தான். அட்மினிஸ்ட்ரேடிவ் ஆஃபீஸர் பொறுப்புதான் இருவருக்கும். கிட்டத்தட்ட இருவரும் முப்பத்து மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து, ஒரே சம்பளத்தில் பணி நிறைவு செய்தவர்கள்.

கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு ஆணும் பெண்ணும்தான். பெண் ரோஷிணி பி.ஈ. முடித்துவிட்டு ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள். திடீரென்று ஒரு மாப்பிள்ளை வரன் வந்ததென்று சொன்னார். அடுத்த மாதமே கல்யாணம் முடிந்து, இப்போது சென்னையிலேயே வசிக்கிறாள்.

அதைப்போலவே அவருடைய பையன் பாஸ்கரும் பி.ஈ. மெக்கானிக்கல் முடித்தான். அடுத்த மாதமே ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். நான்கு ஆண்டுகளில் திருப்திகரமான சம்பளமும் வாங்கிக் கொண்டிருக்கிறான். அவனுக்கும் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக கிருஷ்ணமூர்த்தி போன மாதம் சொன்னார்.

‘கிருஷ்ணமூர்த்தியால் செய்ய முடிந்ததை என்னால் ஏன் செய்ய முடியாமல் போனது? என்ன தவறு நடந்தது?’ என்று யோசித்துப் பார்த்தார் ராமநாதன்.

‘இதைத்தான் விதி என்று சொல் வார்களோ? விதியையும் மதி யால் வெல்ல முடியும் என்று சொல்வார்களே! அந்த அள வுக்கு மதி கெட்டுப் போ விட்டதோ எனக்கு?’ என் றெல்லாம் யோசனை ஓடிக் கொண்டிருந்தது ராமநாதனின் மனத்தில்.

சட்டென்று ஒரு யோசனை அவருக்குள் எழுந்தது. ‘நாளை கிருஷ்ணமூர்த்தியை ஒரு நடை பார்த்துவிட்டு வந்தால் என்ன?’ என்ற எண்ணம்தான் அது. பல இக்கட்டான நேரங்களில் கிருஷ்ணமூர்த்தி ராமநாதனுக்கு

யோசனைகள் சொல்லியிருக்கிறார். இப்போது இந்த விஷயத்திலும் ஏதேனும் யோசனை சொல்வார் என்று தோன்றியது.

மறுநாள்...

வீட்டுத் தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி... வாங்க ராமநாதன்! நானே உங்களுக்கு ஃபோன் பண்ணணும்னு இருந்தேன்..."

தன்னைக் கண்டதும் வெறுமனே வா வார்த்தைக்காகச் சொல்கிறாரோ என்றுதான் நினைத்தார் ராமநாதன்.

ஓ... என்னவோ உங்களைப் பார்க்கணும் போல இருந்தது... அதான் புறப்பட்டு வந்தேன்" - பதிலுக்குச் சொன்னார் ராமநாதன்.

நல்லதாப் போச்சு... என் பொண்ணு ரோஷிணி தாயாகப் போறா. கூடவே பாஸ்கருக்கும் பொண்ணுப் பார்த்து ஃபிக்ஸ் பண்ணிட்டோம். அனேகமா அடுத்த மாசக் கடைசியில கல்யாணம் வெச்சுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்..." - கிருஷ்ணமூர்த்தி சொன்னதும், இதைச் சொல்லத்தான் ஃபோன் பண்ண நினைத்திருப்பார் என்று ஊர்ஜிதம் செய்து கொண்டார் ராமநாதன்.

குட் நியூஸ் ரெண்டு சொல்லியிருக்கீங்க..."

சரி... உங்க பொண்ணுக்கு வரன் ஏதாவது அமைஞ்சுதா? பையன் வேலைக்குப் போயிட்டானா? வாங்க! உள்ளே போய்ப் பேசலாம்..." - என்றபடியே வீட்டுக்குள் அழைத்துப் போனார் கிருஷ்ணமூர்த்தி.

தன் மகன் வருண் வேலைக்குப் போகாமல் இருப்பதையும், மகள் அனுஷா கல்யாணத்தைத் தட்டிக் கழிப்பதைப் பற்றியும் சுருக்கமாகச் சொன்னார் ராமநாதன். அதைக் கேட்டு வெறுமனே புன்னகை செய்தார் கிருஷ்ண மூர்த்தி.

இந்தக் காலப் பிள்ளைங்க அப்படித்தான். ஆனாலும், பெற்றோர்கள் கையிலயும் சில கடிவாளம் இருக்குது ராமநாதன். ஒண்ணு கேட்கு றேன்... வெளிப்படையாகச் சொல்லுங்க.."

கேளுங்க கிருஷ்ணமூர்த்தி..."

நீங்க ரிடையர் ஆகும்போது உங்களுக்கு என்ன சம்பளம்னு உங்க பிள்ளைங்களுக்குத் தெரியுமா? எவ்வளவுன்னு சொன்னீங்க?"

கையில அம்பத்தஞ்சாயிரம் வாங்கினேன்னு அவங்களுக்குத் தெரியும்."

நானும் அதே சம்பளம்தான் வாங்கினேன். ஆனா, என் பிள்ளைங்கக்கிட்டே நான் சொன் னது இருபத்தி நாலாயிரம் ரூபா. மீதி எல்லாம் பிள்ளைங்க படிப்புக்காக, வீடு கட்டுறதுக்காக லோன் வாங்கினது பிடிச்சுட்டதா சொன்னேன். ரிடையர் ஆன பிறகு கையில கிடைச்ச தொகை யிலயும் பாதிதான் சொன்னேன்...."

புருவங்களைச் சுருக்கியபடி பார்த்தார் ராமநாதன்.

ஆமா ராமநாதன்... பிள்ளைங்ககிட்டே எதுக்காகப் பொய் சொல்லணும்னு உங்களுக்குத் தோணலாம். ஆனா, பிள்ளைங்க வாழ்க்கையில முன்னுக்கு வரணும்னா சில பொய்கள் தேவைப்படுது...

ராமநாதன்... பறவைகள் குஞ்சுகளைக் கூட்டுலயிருந்து கீழே தள்ளிவிடும் பார்த்திருக் கீங்கள்ல? எதுக்காக? குஞ்சுகள் பறக்கக் கத்துக் கிடணும்ங்கிறதுக்காக. இனியாவது வாழ்க்கை யோட நிதர்சனத்தைப் புரிய வைங்க. உங்களுக் குப் பென்ஷன் வருது... இப்ப உங்களுக்குத் தெம்பு இருக்குங்கிற தைரியத்துல உன் பிள்ளை கள் இருக்காங்க. சுமைதாங்கியா நீங்க இருப்பீங் கன்னு அவங்க பாரத்தைச் சுமக்கத் தயங்கு றாங்க. இதெல்லாம் என்னிக்கு வேணும்னாலும் சட்னு காணாமப் போகும். அவங்க வாழ்க்கையை அவங்கதான் தாங்கிப் பிடிக்கணும்னு அவங்களுக்குப் புரியவைங்க. முள் பாதையில அவங்களையும் நடக்க வைங்க. பைக்குக்கு பெட்ரோல் நீதான் போட்டுக்கணும்னு சொல் லுங்க. இனி கரண்ட் பில், வீட்டு வரி எல்லாம் நீதான் கட்டணும்னு மகன்கிட்ட சொல்லுங்க. உனக்குன்னு வாழ்க்கைத் துணை வந்தாத்தான் உனக்கு பாதுகாப்புன்னு பொண்ணுக்கிட்ட சொல்லுங்க.

நானூறு ரூபாய் சம்பளத்துலதான் உங்க வாழ்க்கை ஆரம்பமாச்சுதுன்னு உங்க பையனுக்குச் சொல்லுங்க. அவனோட படிப்புக்காக எவ் வளவு செலவு செதிருக்கீங்கன்னு எடுத்துச் சொல்லுங்க. அப்பதான் குறைஞ்ச சம்பளம் கிடைக்கிற வேலைக்கும் போக அவன் தயாராவான்.

உங்க நானூறு ரூபாய் சம்பளத்தை நம்பித் தான் உங்க மனைவி உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு உங்க பொண்ணுக்கு எடுத்துச் சொல்லுங்க. எந்த நாட்டுக்குப் போனாலும் வாழ்க்கைங்கிறது குடும்பம், உறவுகள்னு சின்ன வட்டம்தான்னு அவளுக்குப் புரிய வைங்க.

அதுக்காக அவங்களை தரக்குறைவா பேச வேண்டாம், நடத்தவும் வேண்டாம். உங்க வாழ்க்கையில நீங்க பட்ட கஷ்டத்தை எடுத்துச் சொல்லி, வாழ்க்கையோட மேடு பள்ளங்களை அவங்களுக்குப் புரிய வைங்க. நீங்களும் உங்க மனைவியும் மட்டும் பத்து பதினைஞ்சு நாள் ஏதாவது டூர் போட்டு வாங்க. குடும்பத்தைத் தனியா தாங்குற சுமையை உங்க பிள்ளைங்க கத்துக்கிடட்டும். மூழ்காம காப்பாத்தணும்,

நீச்சலும் கத்துக் குடுக்கணும். அதுக்குத் தண்ணி யில இறக்கி விட்டுத்தான் ஆகணும். மூழ்குறது வேற, முங்கு நீச்சல் வேற. அவங்க நீச்சல் கத்துக்கிறது தனக்காக மட்டும் இல்லை; அடுத் தவங்களைக் காப்பாத்தவும்தான். நான் சொன் னதைச் செய்து பாருங்க... சீக்கிரமே நீங்க எனக்கு நல்ல செய்தி சொல்வீங்க..." - கிருஷ்ணமூர்த்தி சொல்லச் சொல்ல, ராமநாதனுக்குள் ஏதோ கதவு திறந்தது போலிருந்தது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :