மும்பை பரபர...


ஆர்.மீனலதா, மும்பைவேனிடி வேன்!

மும்பையில் காவல் துறையினரும், சுகாதாரப் பணியாளர்களும் நேரம் காலம் பார்க்காமல் பணி செய்து வருகின்றனர். இதில் பங்கேற்று வேலை செய்யும் பெண்கள் ஊரடங்கு சட்டத்தினால், சங்கடப்பட்டு தவிக்கின்றனர். அவசரத் தேவைகளைத் தவிர்க்க, மிகவும் குறைந்த அளவு தண்ணீர் குடித்து பணி புரிகின்றனர்.

இதைக் கண்ட மும்பை தொழிலதிபர் ஒருவர் திரைத்துறைக்கு வாடகைக்கு விடக்கூடிய, தன்னிடமுள்ள 50 வேனிடி வேன்களில், 12ஐ கொரோனா வாரியர்களாக முன்களப் பணியில் ஈடுபட்ட இவர்களுக்கு அளித்துள்ளார். இதனுள் டிரெஸ்ஸிங் டேபிள், கழிவறை, ஏ.ஸி என எல்லாமே இருக்கும். பெண் பணியாளர்கள் மட்டுமன்றி, ஆண்களும் இதனுள் அமர்ந்து உணவருந்த, ஓய்வெடுக்க மற்றும் கழிவறைகளையும் பயன்படுத்த முடியும். இதற்கான வாடகைக் கட்டணத்தை வசூலிக்காமல், இலவசமாக வேனிடி வேன்களை அளித்துள்ளது பாராட்டுக்குரியதாகும்.

இலவசக் கல்வி

மும்பைக்கு வெளி மாநிலங்களிலிருந்து பிழைப்புத் தேடி புலம் பெயரும் தொழிலாளிகள் மற்றும் ஏழை எளியோர்கள் தங்குமிடம் சாலையோரங்கள்தான். இவர்களின் குழந்தைகளுக்குக் கல்வி கற்க வாய்ப்பு கிடைப்பதில்லை. குர்லா எல்.டி.டி. டெர்மினஸ் பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு இப்பகுதியைச் சேர்ந்த குந்தன் என்பவர் இந்திர்மராத்தி; ஆங்கில மொழிகளில் ஆரம்பக் கல்வியை இலவசமாகக் கற்பித்து வருகிறார். 10ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவரது மகளும் தகப்பனாருடன் சேர்ந்து கற்றுக் கொடுக்கிறார். இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது எனக் கூறுகிறார். பசங்களும் ஆர்வமுடன் பயில்கிறார்கள்.

புதுமையான கண்டுபிடிப்பு!

மும்பை மாநகரில் ஆக்ஸிஜனுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், மும்பை ஐ.ஐ.டி. மாணவர்கள், வளாகத்திலுள்ள நைட்ரஜன் தயாரிப்பு பிரிவை மாற்றம் செய்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் முறையைக் கண்டுபிடித் துள்ளனர். எளிமையான தொழில் நுட்ப முறை யில் இதை தயாரிக்க முடியுமென கூறப்பட்டுள்ளது. இதற்காக, ஐ.ஐ.டி. மும்பையுடன் ‘டாடா கன்சல்டிங்’ மற்றும் ‘ஸ்பான் டெக்’ நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து ஆக்ஸிஜன் தயாரிக்க ஆலோசனை நடத்தி வருகிறது.

ஆசிரியர் டூ ஆட்டோ ஓட்டுநர்!

பள்ளிக்கூடமொன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணி புரியும் தத்தாத்ரேய சாவந்த் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக மாறிவிட்டார். பாதிக்கப்பட்ட கோவிட் - 19 நோயாளிகள், குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோருக்கு மருத்துவமனை செல்லவோ அல்லது குணமடைந்த பிறகு வீடு திரும்புவதற்கோ போக்குவரத்து சரியாகக் கிடைப்பதில்லை. இதைக் கண்ட இவர் கொரோனா பாதுகாப்பு வாரியராக மாறி இவர்களை இலவசமாக ஆட்டோவில் ஏற்றிச் செல்கிறார். கொண்டும் விடுகிறார். அடிக்கடி சானிடைஸர் கொண்டு சுத்தம் செய்வதோடு, PEP உடையும் அணிந்து செயல்படுவது பாராட்டுக்குரியதாகும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :