குளு குளு குச்சி ஐஸ்


ஆர்.மீனலதா, மும்பைமாம்பழ லஸ்ஸி குச்சி ஐஸ்

தேவை:

இனிப்பான பழுத்த நல்ல மாம்பழம் (தோல் சீவி பொடியாக அரிந்தது) - 300 கிராம், தேன் - 2 டேபிள் ஸ்பூன், புளிப்பில்லாத கடைந்த கெட்டித் தயிர் - 100 கிராம், குங்குமப்பூ - லி சிட்டிகை, உப்பு - சிறிது, ஏலப்பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் குங்குமப்பூ தவிர்த்து, மற்றவைகளைப் போட்டு மத்தால் நன்றாகக் கடைந்து கூழ்போல் ஆக்கவும். கொஞ்சம் அரிந்த மாம்பழத் துண்டுகளைத் தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஐஸ்க்ரீம் அச்சுக்களில், அரிந்து தனியாக வைத்துள்ள மாம்பழத் துண்டுகளைப் போட்டு அதன்மீது குங்குமப் பூவைத் தூவி விடவும். பின்னர் மாம்பழத் தயிர், தேன் கூழை மேலாக விட்டு மரக்குச்சிகளை ஒவ்வொன்றிலும் சொருகி ஃப்ரீஸரில் 6-8 மணி நேரம் வைத்தெடுத்து சாப்பிட்டால் ஆஹா! சூப்பர் குச்சி ஐஸ். (வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம்.)

ரோஜா குச்சி ஐஸ்

தேவை:

ரோஜாப் பூ இதழ்கள் (ஃப்ரஷ்) - லி கப், புதினா இலை (சுத்தம் செய்தது) - லி கப்,

தேன் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - சிறிது, தண்ணீர் - 1லீ கப், வெள்ளரிக்காய் (தோல் சீவி மெல்லிதாகத் துருவியது) - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - லீ டீஸ்பூன்

செய்முறை:

முதலில் 1லீ கப் தண்ணீரை சுடவைத்து அதில் ரோஜா இதழ்களைப் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வெளியே எடுக்கவும். ஆறிய பிறகு புதினா இலையுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரு திருப்பு திருப்பி ஒரு பாத்திரத்தில் போடவும்.

இத்துடன் தேன், உப்பு, துருவிய வெள்ளரிக்காய், எலுமிச்சைச்சாறு சேர்த்து கரண்டியால் மசித்துக் கொள்ளவும்.

ஐஸ்க்ரீம் அச்சுக்களில் இக்கலவையை விட்டு குச்சிகளை சொருகி ஃப்ரீஸரில் இரவு முழுவதும் வைத்து, மறுநாள் எடுத்துச் சாப்பிட்டால், மாறுபட்ட தனிச்சுவையைத் தரும் இந்த ‘ரோஜா ஹெர்பல்’ குச்சி ஐஸ். உடலுக்கும் கெடுதல் விளைவிக்காது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :