புகையிலைப் பழக்கம்; எதிர்த்துப் போராடும் முழக்கம்!

மே 31
லதானந்த்



‘உலகெங்கிலும் 24 மணி நேரத்துக்கு எந்த விதத்திலும் புகையிலையைப் பயன்படுத்தக் கூடாது’ என்று வலியுறுத்துவதற்கும் ஒரு தினம் இருக்கிறது. அதுதான் இந்த தினம். புகை யிலைப் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அதனால் ஏற்படும் உடல் நலக் குறைவுகளை நினைவூட்டுவதோடு, ஆண்டுதோறும் 54,00,000 மக்கள் புகையிலை யினால் இறக்கின்றனர் என்ற உண்மையையும் வலியுறுத்துவதும் இந்த தினத்தை அனு சரிப்பதன் நோக்கங்களாகும். நிகோடின், தார், ஃபார்மால்டிஹைட், பென்ஸீன், கார்பன் மோனாக்ஸைடு, ஹைட்ரஜன் சயனைடு போன்ற தீமை தரும்

இரசாயனப் பொருட்கள் 4,000க்கும் மேலாகப் புகையிலையில் இருக் கின்றன. இந்தியாவில் மட்டும் 12,00,000,00 நபர்களுக்குப் புகை பிடிக்கும் பழக்கம் இருக் கிறது எனக் கணக்கிட்டிருகிறார்கள்.

புகை பிடிப்பது, அவர்களை மட்டுமின்றி; அவரைச் சுற்றியுள்ள மனைவி, குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே புகையின் தீமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதுதான் கொடுமை. ஒரு முறை புகையிலைக்கு அடிமை யாகிவிட்டால் அதனிடமிருந்து விடுபடுவது மிகவும் கடினம்.

இத்தினம் 1987ல் உலக சுகாதார தின உறுப்பினர் நாடுகளால் உருவாக்கப்பட்டது. அன்று முதல் அரசு அமைப்புகள், சுகாதார நிறு வனங்கள், புகையிலை உபயோகிப்போர், பயிரிடு வோர், புகையிலைப் பொருட்களின் தயாரிப் பில் ஈடுபட்டுள்ளோர் ஆகிய அனைத்துத் தரப் பினராலும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

புகையிலை உபயோகிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்பதற்கும் இந்த தினத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. புகையிலைப் பயன்பாட்டைக் குறைப்பதற்கான முயற்சிகளுக்கு ஆண்டுதோறும் உலக சுகாதார நிறுவனம் விருதுகள் வழங்கிக் கவுர விக்கிறது. பொதுக் கூட்டங்கள், பேரணிகள், விழிப்புணர்வு முகாம் கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவற்றின் மூலம் புகையிலை யின் தீமைகளை விளக்குவது என்று புகையிலை எதிர்ப்பாளர்கள் இந்த தினத்தில் பட்டையைக் கிளப்புகிறார்கள்.

இதுபோன்ற நடவடிக்கைகள் தங்களது தனி மனித சுதந்திரத்தில் குறுக்கிடுவதாகவும் சில அமைப்புகள் கூக்குரல் இடுகின்றன. புகையிலை பயிரிடுவோரும், புகையிலை தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்பவர்களும் இந்த தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

புகையிலை உடம்புக்கு கேடு விளைவிக்கும்.... புகைப் பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்.

உஷார்!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :