எமோஜிக்கள் பிறந்த கதை...


ஜி.எஸ்.எஸ்.வாட்ஸ்அப் குறுந்தகவல்களில் பலரும் இப்போது ‘எமோடிகான்ஸை’ப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். (சிரிக்கும் முகம், அழும் முகம், அதிர்ச்சியான முகம், பாராட்டும் விதத்தில் உயர்த்தப்படும் கட்டை விரல், நீ சொல்வதை எடுத்துக் கொள்ளமாட்ட@ன் என்பதுபோல கீழ்ப்புறம் காட்டும் கட்டை விரல், வணக்கம் கூறும் இரு குவிந்த கைகள் போன்றவைதான் எமோடிகான்கள்). இவற்றை எமோஜிக்கள் என்றும் கூறுவதுண்டு.

‘எமோஜிக்களின் தந்தை’ என்று கருதப்படுபவர் ஷிக@டகா குரிதா என்ற ஜப்பானிய வடிவமைப்பாளர். இவர்தான் எமோஜிக்களை முதலில் வடிவமைத்தாராம்.

ஒரு மின்னஞ்சலில் 250 எழுத்துக்களை மட்டும@ பயன்படுத்த லாம் எனும்படியான திட்ட நிரல் ஒன்றை அவரது குழு வடி வமைத்துக் கொண்டிருந்தது. அப்போது ஒருவருக்கொருவரான தகவல் பரிமாற்றத்துக்கு எமோஜிக்கள் உதவும் என்று கருதி அவற்றை உருவாக்கினார் அந்த ஜப்பானியர்.

முதலில் ஜப்பானிய மார்க்கெட்டை குறி வைத்துதான் வடிவமைத்த@ன். ஆனால், எமோஜிக்கள் வ@கமாகப் பரவி உலக அளவில் புகழ்பெற்று விட்டன. தகவல் பரிமாற்றத்துக்கான சிறப்பான கருவிகள் ஆகிவிட்டன" என்கிறார் ஷிக@டகா குரிதா.

செல்போன்களில் மட்டுமின்றி, வ@று வணிக நோக்கங்களுக்காகவும் எமோஜிக்கள் பயன் படுத்தப்பட்டன. ஒரு கோலா தயாரிப்பு நிறுவனம் தனது பாட்டில்களில் எமோஜிக்களைப் பயன் படுத்தியது (கண்களை மூடியபடி உதடுகளைக் குவிக்கும் எமோஜி!).

எமோஜிக்களை உருவாக்கிய டொகோமா நிறுவனம் ஜப்பானிய தொலைக்காட்சிகளின் வானிலை அறிக்கைகளில் எமோஜிக்களைப் பயன்படுத்தியது. இதனால் ஜப்பானிய மொழி புரியாதவர்களாலும் வானிலை நிலவரத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

எமோஜிக்களில் தொடக்கத்தில் முழு இதயம், உடைந்த இதயம் ஆகியவை அதிகம் பயன்படுத்தப்பட்டன. உணவு வகையைப் பொருத்தவரை பிறந்த நாள் க@க், பீட்ஸா துண்டு ஆகியவற்றைப் பலரும் பயன்படுத்தினார்கள்.

நியூயார்க்கிலுள்ள நவீன கலை அருங் காட்சியகம் இப்போது எமோஜியின் ஒரிஜினல் கலை வடிவங்களை (குரிடா உருவாக்கியவை) பாதுகாப்பாக வைத்துள்ளது. 2012ல்@ என்ற குறியீட்டுக்கான உரிமையையும் இவர்கள் வாங்கி வைத்துள்ளார்கள்.

@ என்பதன் பின்னணியையும் பார்ப்போமா?

@ என்பதன் பொருள் என்ன? இது எதற்காக மின்னஞ்சல்களில் தவறாமல் இடம் பெறவேண்டும்?

@ என்ற குறியீட்டை நெதர்லாந்தில் ‘குரங்கு வால்’ என்றும், இத்தாலியில் ‘நத்தை’ என்றும் அழைக்கிறார்கள். 1885ல் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Underwood தட்டச்சுக் கருவிகளில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.

அதற்கு முன்பு பல வருடங்களாகவே இடத்தைக் குறிக்க இது சுருக்கமாகப் பயன்பட்டது. He lived @ Chennai என்பது போல. அதாவது @ என்பது at என்பதன் சுருக்கமாகப் பயன்பட்டது. ‘@ என்பதை எழுதும் ந@ரத்தில் ‘ச்ணா’ என்ற@ எழுதியிருக்கலாம@, இதுவா சுருக்கம்?’ என்ற க@ள்வி எழுகிறதா? நியாயம் தான். ஆனால், தட்டச்சு செய்யும்போது ஒரு ஸ்பேஸ் குறைவதுகூட சில விஷயங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

மின்னஞ்சல் முகவரி என்பது அந்தத் தகவல் எங்க@ அளிக்கப்பட வ@ண்டும் என்பதைக் குறிக்கிறது. முதன் முதலில் இந்த முறை கண்டு பிடிக்கப்பட்டபோது தகவல் அனுப்புபவரின் முகவரி, தகவல் பெறுபவரின் முகவரி இரண்டுக்கு மிடைய@ ஒரு முக்கியமான வித்தியாசம் த@வைப்பட்டது. அதாவது, பெறுபவரின் முகவரியிலுள்ள ஒரு எழுத்து அனுப்புபவரின் முகவரியில் நிச்சயமாக இருக்கக் கூடாது. இதற்கு ஒரு தீர்வாகத்தான் @ மின்னஞ்சல் களில் அறிமுகமானது (ஏனென்றால் எண்களோ, எழுத்துகளோ நிறுத்தக் குறிகளோ அனுப்பு பவரின் முகவரியில் இருக்க வாய்ப்பு உண்டு).

@ குறியீட்டுக்குப் பின்னால் இருப்பது தகவல் பெறும் கணினியின் (Host computerன்) பெயர். @ என்பதற்கு முன்னால் இருப்பது குறிப்பிட்டவரின் தனி அடையாளம்..
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :