கொரிய நாட்டு க்ளாஸ் ஸ்கின்


லதா சேகர்பளபள சருமம், பட்டுப் போல் சருமம், பளிச் சருமம்... அது என்ன ‘கண்ணாடி சருமம்’?

‘கண்ணாடி சருமம்’ என்று ஒரு அலை சில வருடங்களாக அடித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் கொரிய நாட்டு ‘க்ளாஸ் ஸ்கின்’ என் றால் பெண்கள் ‘ஹய்யோ எனக்கில்லையே...’ என்று ஓலமிடுகிறார்கள்.

க்ளாஸ் ஸ்கின் என்றால் உங்கள் சருமம் மிக ஹெல்தியாக, மாசுமருவற்று, பொலிவுடன் துளைகளற்ற பளபளப்பான சருமம். கண்ணாடி போன்ற மேனி, கண்ணாடி போன்ற சருமம்... என்று கொரியர்கள் இதை அடைமொழி படுத்தி ப்யூட்டி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கினர்.

சரி... கண்ணாடி சருமம் பெறுவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்? சரிவிகித உணவு, ஆரோக்கியமான லைப் ஸ்டைல், சருமத்திற்கென அயராது உழைக்கும் திடமான மனம்... இது போதும்... கண்ணாடி மேனிக்கு சொந்தக்காரி நீங்கதான் அம்மணீஸ்...

தினமும் சில ரூல்ஸ் கடைபிடிக்க வேண்டும். அதுல மாற்றமே கிடையாது. ஒரு பத்து ஸ்டெப் (என்னது பத்தா? எனக்கா...) கண்டிப்பாக ஃபாலோ பண்ணியே தீரணும் என அழகு வல்லுநர்கள் சொல்ல, கொரிய நாரிமணிகள் கேட்டு க்ளாஸ் ப்யூட்டிகளாக ஊர்வலம் வருகின்றனர்.

தேவையான கம்பல்ஸரி க்ளீனிங் ரூல்ஸ்

* ஆயில் அல்லது க்ளென்ஸர்

* எக்ஸ்ஃபோலியேட்டர்

* டோனர்

* எஸென்ஸ்

* சீரம் அல்லது பேஸ் ஆயில்

* மாயிஸ்சரைஸர்

* சன் ஸ்கிரீன்

* பேஸ் மாஸ்க்

முதலில் நல்ல தரமான ஆயில் எடுத்துக் கொண்டு முகத்தில் நன்றாக மஸாஜ் செய்ய வேண்டும்.இதனால் சரும துளைகளில் அடைப்பு ஏற்படாது.

இதற்குப் பிறகு ஃபேஸ் வாஷ் செய்தல் நலம். முகத்திற்கு எப்போதுமே ஃபேஸ்வாஷ்தான். நோ சோப்.

* அடுத்ததாக எக்ஸ்ஃபோலியேட் ஸ்டைல். இந்த ஸ்டெப்பில் சருமத்திலிருக்கும் உயிரற்ற செல்கள் நீக்கப்படும். சருமத்தை தளர்வாக்கிக் கொடுக்கும்.

* டோனர் அடுத்தது... உங்களுடைய சருமத்தை அடுத்தடுத்த ஸ்டெப்களுக்கு ரெடியாக்கும் ஒரு அழகு திரவம்...

* எஸென்ஸின் பணி என்னவென்றால், சருமத்தின் மாயிஸ்சரைஸரை ஏற்படுத்தி, நாச்சுரல் க்ளோவைத் தரும். இது, ஸ்கின்கேர் ரூட்டினில் ஒரு அத்தியாவசியமான ஸ்டெப்.

* சீரம் அல்லது, ஃபேஸ் ஆயில் என்பது சரு மத்திற்கு மிக மிகத் தேவை. ஆண்டி ஆக்ஸிடென் டாக செயல்படுகிறது. எப்போதுமே இளமை யாக, வயதே ஆகாத (ஹை ஜாலி) யங்+ சரும பொலிவு. சீரம்ஸ் செலக்ட் செய்யும் போது வைட்டமின்கள் மற் றும் Hyaluronic acid (ஹயோல் யூரோனிக் ஆஸிட்) சேர்ந்த சீரம்ஸை வாங்கி உபயோகப் படுத்தவும் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். எந்தவிதமான சருமத்திற்கும் பீச் அண்ட் லில்லி க்ளாஸ் ஸ்கின் ரிஃபனிங் சரியாக வரும் என்கின்றனர்.

* மாயிஸ்சரைஸர் யூஸ் பண்ணுவதால் சருமத்தில் ஈரப்பசை தங்கி, வழவழப்பாக இருக்கிறது.

சன் ஸ்கீரின்: நம்மூர் கொளுத்தும் வெயிலுக்கு இது கண்டிப்பாகத் தேவை. கவசம் போன்ற பாதுகாப்பு. கண்ணாடி சருமத்தின் முக்கியமான ஸ்டெப். நல்ல ப்ராடக்ட் யூஸ் பண்ணுங்கம்மா. சுண்ணாம்பு அடித்தது போலிருக்கும் சிலது.

* ஃபேஸ் மாஸ்க் - க்ளே மாஸ்க் போட்டால் குளிர்ச்சி, சரும க்ளினீங், துவாரங்கள் குறைப்பு... என ஏகப்பட்ட பெனிஃபிட்ஸ். க்ளீன் மாஸ்க் அல்லது ஷீட் மாஸ்க் (ண்டஞுஞுணா ட்ச்ண்டு) உபயோகிக்கலாம்.

நம் ஒவ்வொருவருடைய சருமம் ஒவ்வொரு ரகம். ஒரே ஐடியா எல்லோருக்குமே வொர்க் அவுட் ஆகுமா என்பது பிரயோகித்துப் பார்த்தால் தான் தெரியும். நாச்சுரலாக என்னென்ன செய்யலாம்?

* ஏகப்பட்ட காய்கறிகள், பழங்கள் சாப்பிடவும். கணக்கிலடங்கா சத்துக்கள்.

* அவோகேடோ என்னும் பட்டர் ஃப்ரூட்டை கபளீகரம் பண்ணுங்க. ஏகப்பட்ட பெனிஃபிட்ஸ்.

* கீரைகள், நட்ஸ், சக்கரை வள்ளிக்கிழங்கு, குடைமிளகாய், க்ரேப்ஸ்... இவை எல்லாமே சருமத்தின் ஃப்ரெண்ட்ஸ்.

* நீர் நீர்... பாட்டில் பாட்டிலாக குடிக்கவும். ட்ரை ஸ்கின் இருக்கவே இருக்காது. ஸோ ஆக்னே (ச்ஞிணஞு) வரவே வராது.

* நிம்மதியான உறக்கம். கருவளையம் தராது. கரெக்டா தூங்கிடணும். சும்மா இன்ஸ்டா யூட்யூபில் என்ன என்று மொபைலை உற்றுப் பாத்துண்டே இருக்கக் கூடாது.

செவன் டே சாலஞ்ச் என்று ஒரு க்ளாஸ் ஸ்கின் ட்ரீட்மெண்ட். ஜாலி சாலஞ்ச் என்ன ரெடியா? காஸ்ட்லி பொருட்கள் வாங்க முடியாது.

இயற்கை வைத்தீஸ்வரி நாங்கள் என பிடிவாதம் பிடிக்கும். நம் வாசகிகளுக்கான ஒரு க்விக் ட்ரீட்மெண்ட்.

* முதலில் ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை நன்றாக வாஷ் பண்ணி ரெடியாகுங்க.

* காய்ச்சாத பாலில் பஞ்சை வைத்து முகத்தை நன்றாக க்ளீன் செய்யவும். காய்ச்சாத பாலில் ஏகப்பட்ட சத்து!

* ஒரு கப்பில் சிறிதளவு அரிசி மாவு

2 ஸ்பூன் தயிர் கலந்து, (எண்ணெய் சருமத்திற்கு ரோஸ்வாட்டர்) பேஸ்ட் ஆக்கி, எலு மிச்சையை கட் செய்து, அதை இந்தக் கலவை யில் தோய்த்து முகத்தில் தேய்க்கவும். ஸ்க்ரப் பர் போல் வொர்க் பண்ணும். மென்மையாக கையாளவும். ஐந்து நிமிடங்கள் செய்த பிறகு வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும்.

* நெக்ஸ்ட் ஸ்டெப் தக்காளியை வட்டமாக கட் பண்ணி தேனில் தோய்த்து (இதெல்லாம் ரொம்ப ஓவர்னு கத்தக் கூடாது) முகத்தில் தேய்க்கவும். சர்க்குலர் மோஷனில்... வட்டவட்ட மாக... நடுநடுவே தக்காளியை குத்திவிட்டால் ஜூஸ் வரும். முகத்தில் தடவுங்க. பிறகு வாஷ்.

* இனி கடைசி ஸ்டெப். ஃப்ரெஷ் ஆலோவெரா (காற்றாழை) ஒரு சின்ன பீஸ் எடுத்து, முகத்தில் நன்றாக படுமாறு தேய்க்கவும். பிறகு நோ வாஷிங்.

காலையில் எழுந்தால் முகம் ஒரு தனி பொலிவுடன் காட்சி தரும்.

இதையே 7 டே அல்லது ஒன் மன்த் ரூட்டினாக செய்கிறார்கள். கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தபடியே செய்யலாம்!

அரிசி மாவு, எலுமிச்சை, தேன், ஆலோ வெரா இது எல்லாமே நம் கிச்சனிலிருக்கும் பொக்கிஷம். யூஸ் பண்ணுங்க. க்ளாஸ் ஸ்கின் பெறுங்க டில் தென் ‘என்ஜாய் எஞ்சாமிகளா...

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :