சம்மரை சமாளிக்க... கூல் ரெசிபி தொடர் 4

பாப்ஸிகிள்ஸ்
கீதா பாலகிருஷ்ணன்பழச்சாறு, பழங்கள், பால் போன்ற வற்றை உறைய வைத்து குச்சி ஐஸ் போல் தயாரிப்பதே பாப்ஸிகிள்ஸ். பழங்களின் சத்தை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான குளிர்ச்சியுடன், கடும் வெயில் காலத்தில் பாப்ஸிகிள்ஸ் மூலம் சுலபமாகக் கொடுக்கலாம். பெரியவர்களுக்கு பழச்சாற்றின் இயற்கை இனிப்புடனேயே பாப்ஸிகிள்ஸ் தயாரிக்கலாம். குழந்தைகளுக்குத் தேவையானால் சர்க்கரை அல்லது தேன் சிறிதளவு சேர்க்கலாம்.

கவனிக்க...

* பாப்ஸிகிள்ஸ் தயாரிக்க ‘பாப்ஸிகிள் மோல்ட்’ (Popsicle Mould) ரெடிமேடாக சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது.

* பாப்ஸிகிள்ஸ் மோல்ட் இல்லாவிட்டாலும் ஒரு தம்ளரில் தயாரித்த கலவையை போட்டு, அதன் நடுவே ஐஸ்கிரீம் குச்சி சொருகுமளவிற்கு ஓட்டை ஒன்று போடவும். தம்ளரை ஒரு அலுமினியம் ஃபாயிலால் மூடி ஃப்ரீஸரில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் செட் செய்து பின்னர் வெளியே எடுக்கவும். ஓட்டையின் வழியாக ஐஸ் கிரீம் குச்சியைச் சொருகி, மேலும் ஃப்ரீஸரில் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் செட் செய்யவும்.

* ஃப்ரீஸரில் இருந்து வெளியே எடுத்த வுடன் மோல்டுகளை சற்றே சூடான நீரில் சில விநாடிகள் முக்கி எடுக்கலாம். ஐஸ் க்ரீமை கத்தியால் மெல்ல எடுத்து விடலாம்.

* கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று வகையான பாப்ஸிகிள் போல பலப்பல காம்பினேஷன்கள் போட்டு விதவிதமாக பாப்ஸிகிள் தயாரித்து சம்மரை ஜாலியாக எதிர்கொள்ளுங்கள்.

நான்கு பழ பாப்ஸிகிள் :

தேவை: மாம்பழம் - 1, ஸ்ட்ராபெர்ரி - 8, கிவிப்பழம் - 1, பிளம் - 4, ஃப்ரஷ் இளநீர் - 2 கப், தேன் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி, கிவி பழம், ப்ளம் பழம் ஆகியவற்றை தோல், கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பாப்ஸிகிள் மோல்டின் ஒரு பக்கத்தில் கிவிப்பழ ஸ்லைஸ்களை வைக்கவும். மற்ற பழத் துண்டுகளையும் ஒன்றின் மேல் ஒன்றாகப் போட வும். ஃப்ரஷ் இளநீருடன் தேன் கலந்து, இந்தக் கலவையை பாப்ஸிகிள் பழக்கலவையின் மேல் ஊற்றி பாப்ஸிகிள் மோல்டை மூடவும். இதனை ஃப்ரீஸரில் குறைந்தது எட்டு மணி நேரம் செட் செய்து எடுக்கலாம். ஜில் என்று ஸெர்வ் செய்ய சிறந்த ரெசிபி.

குறிப்பு: ஸ்ட்ராபெர்ரி, கிவிப்பழம் உறைந்த நிலையில் மிகவும் அழகாக பாப்ஸிகளில் தெரியும். அதேபோல் கொட்டை நீக்கிய பச்சை அல்லது கறுப்பு திராட்சை, மாதுளம் பழத்தின் கொட் டைகள், ஆரஞ்சு சுளைகள் போன்றவற்றையும் உப யோகிக்கலாம். பழக் கல வையின் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியத்துடன், கண்ணுக்கு அழகும், உடலுக்கு ஆரோக்கியமும், நாவிற்கு ஜில்லென்ற குளுமையுடனும் பாப்ஸிகிள், ஸம்மரை குளுகுளுவென்று மாற்றிவிடும்.

வண்ண வண்ண பாப்ஸிகிள்

தேவை: தர்பூசணி - 2 பெரிய துண்டுகள், ஆரஞ்சு - 2, பைன் ஆப்பிள் - 8 சிறிய துண்டுகள், பச்சை திராட்சை - 20, எலுமிச்சம்

பழம் - 4, சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து ஐஸ் க்யூப் டிரேயில் நிரப்பி, ஐஸ் க்யூபு களாக செய்து வைத்துக் கொள்ளவும். தர்பூசணி, ஆரஞ்சு, பைன் ஆப்பிள், பச்சை திராட்சை ஆகியவற்றை கொட்டை நீக்கி, ஜூஸாக தயார் செதுக் கொள்ளவும். பாப்ஸிகிள் மோல்டுகளில் முதலில் தர்பூசணி ஜூஸை ஊற்றி, ப்ரீஸரில் வைத்து இரண்டு அல்லது மூன்று மணி நேரம் செட் செய்யவும். பிறகு அதன் மேல் ஆரஞ்ச் ஜூஸை ஊற்றி ஃப்ரீஸரில் மேலும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் செட் செய்யவும். பிறகு அதன் மேல் பைன் ஆப்பிள் ஜூஸை ஊற்றி ஃப்ரீஸரில் மேலும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் செட் செய்யவும்.

கடைசியாக மோல்டுகளில் பச்சை திராட்சை, சர்க்கரை கலந்த ஜூஸை ஊற்றி எலுமிச்சம் பழ ஐஸ் க்யூபுகளை அதன் மேல் போட்டு குறைந்தது ஆறு அல்லது எட்டு மணி நேரம் செட் செய்து, வெளியே எடுக்கவும். அழகாக பல வண்ணங்களில் செட் ஆகி இருக்கும் வண்ண வண்ண பாப்ஸிகிள் தயார்.

குறிப்பு: ஒன்றின் மேல் ஒன்றாக இடைவிட்டு தயார் செவதால் சுவை கூடும். கொளுத்தும் வெயிலில் வெளியேசென்று களைத்து வருகையில் பழச்சாறு பாப்ஸிகிள் சாப்பிட்டால் களைப்பும் அலுப்பும் நீங்கி, புத்துணர்ச்சி பிறக்கும்தானே?

பால் சேமியா பாப்ஸிகிள்

தேவை: வறுத்த சேமியா - லீ கப், பால் -

1 லிட்டர், குங்குமப்பூ - லி டீஸ்பூன், ஏலப்

பொடி - லி டீஸ்பூன், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம் - 2

டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வறுத்த சேமியாவை குழை யாமல் தண்ணீரில் வேக வைத்து வடித்து எடுத்துக் கொள்ளவும். பாலைக் கொதிக்க வைத்து, முக்கால் பங்காக வற்றியதும், சர்க்கரை, பாலில் கரைத்த குங்குமப்பூ, ஏலப்பொடி

சேர்த்து கொதிக்க வைக்கவும். வேக வைத்த சேமியாவில் பாதி அளவை கொதிக்கும் பாலில் சேர்த்து, மேலும் ஒரு கொதிவிட்டு அடுப்பை அணைக்கவும். முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம் அனைத்தையும் சிறுசிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.

பாப்ஸிகிள் மோல்டுகளில் முதலில் வேக வைத்த சேமியாவைப் போடவும். பிறகு சர்க் கரை, குங்குமப்பூ, ஏலப்பொடி சேர்த்து கொதிக்க விட்ட பாலை ஆற வைத்து சேமியாவின் மேல் ஊற்றவும். மோல்டுகளை மூடி, ஃப்ரீஸரில் மூன்று அல்லது நான்கு மணி நேரம் செட் செய்யவும். பின்னர் மோல்டுகளை வெளியே எடுத்து, அதன் மேல் சிறிதளவு வேக வைத்த சேமியா, வெட்டி வைத்த உலர் பழம் மற்றும் நட்ஸ் சேர்த்து மூடி, குறைந்தது எட்டு மணி நேரம் ஃப்ரீஸரில் செட் செய்து வெளியே எடுக்கவும்.

குறிப்பு: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும் சேமியா பாப்ஸிகிள் பார்ப் பதற்கும் சுவாரஸியமானதுதானே?

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :