உஷார்.. இது பொல்லாத பொத்தான்!


என்.சோக்கன்சில ஆண்டுகளுக்கு முன்னால், வட கொரியாவின் தலைவரான கிம் ஜாங்-உன் அமெரிக்காவை மிரட்டுவதுபோல் ஓர் அறிக்கை வெளியிட்டார், ‘என்னுடைய மேசை மீது ஒரு பொத்தான் இருக்கிறது. நான் அதை அழுத்தினால் போதும், எங்களுடைய அணு ஆயுதங்கள் எதிரிகளை நோக்கிப் பாயும்.’

- இதைக் கேள்விப்பட்டதும் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு பதில் மிரட்டல் விடுத்தார். ‘எங்ககிட்டயும் சீப்பு (அதாவது, அணு ஆயுதப் பொத்தான்) இருக்கு. உங்க பொத்தானைவிட எங்க பொத்தான் பெரிசு. அழுத்தட்டுமா?’

உண்மையில் கிம், டிரம்ப் மேசையில் பேரழிவை உண்டாக்கக்கூடிய அணு ஆயுதப் பொத்தான்கள் இருந்தனவா என்று நமக்குத் தெரியாது. ஆனால், நம் ஒவ்வொருவருடைய சட்டைப் பையிலும் கைப்பையிலும் உள்ளங்கையிலும் ஒரு பேரழிவுப் பொத்தான் இருக்கிறது. அதன் பெயர், ‘ஃபார்வர்ட்.’

காலையில் எழுந்து வாட்ஸாப்பைத் திறக் கிறோம். ஒரு திடுக்கிடும் தகவல் (அல்லது பயனுள்ள தகவல் அல்லது நெஞ்சை நெகிழவைக்கும் தகவல்) வந்திருக்கிறது. அனுப்பியவர், நமக்கு நன்கு தெரிந்த ஒரு நண்பர் அல்லது உறவினர். நல்ல படிப்பு, பழக்க வழக்கங்களைக் கொண்டவர். உண்மையிலேயே நம் மீது இருக்கும் அக்கறையால்தான் இதை அனுப்பியிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆகவே, ‘ஃபார்வர்ட்’ பொத்தானை அழுத்துகிறோம், அதை இன்னும் சிலருக்கு அனுப்பி வைக்கிறோம்.

இப்படி உலகம் முழுக்க ஒவ்வொருவரும் ஃபார்வர்ட் பொத்தானை அழுத்த அழுத்த, செதிகள் அதிவிரைவாகப் பரவுகின்றன. ஒரே பிரச்னை, அவற்றில் பெரும்பாலானவை பொச் செதிகள். இதை உணராமல் நாம் அவற்றைப் பரப்பும்போது, பிரச்னைக்கு முக்கியக் காரணமாகிவிடுகிறோம்.

‘ஃபேக் நியூஸ்’ எனப்படும் பொய்ச் செய்திகள் இன்றைக்கும் உலகம் முழுக்கப் பரவிக் கொண்டிருக்கின்றன. எழுத்து, புகைப் படம், வீடியோ என அனைத்து வடிவங்களிலும் இந்தச் செதிகள் பரப்பப்படுகின்றன. செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி போன்ற வழக்கமான ஊடகங்களின் தாக்கம் குறைந்து சமூக ஊடகங்களின் தாக்கம் மிகுதியாகியிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் இவற்றின் வீச்சு இன்னும் பெரிதாக இருக்கிறது.

மக்கள் இவற்றைத்தான் மிகுதியாகப் படிக் கிறார்கள் என்பதால், உண்மைகள் மறைக்கப் படுகின்றன.

இப்படிப் பரப்பப்படும் செதய்ிகள் எதைப் பற்றியும் இருக்கலாம். ‘ஒருமுறை அந்தத் தலைவர் காரில் சென்று கொண்டிருந்தபோது...’ என்று தொடங்கும் வரலாற்று(?)க் குறிப்புகள், ‘எலுமிச்சைச் சாறையும் இந்தப் பொடியையும் சேர்த்துக் கரைத்துக் குடித்தால் ஜலதோஷம் ஓடிவிடும்’ என்று தொடங்கும் மருத்துவக் குறிப்புகள், இந்த முதியவரை இருபது நாளாகக் காணவில்லை, அந்தக் குழந்தை பத்து நாளாகக் காவல் நிலையத்தில் இருக்கிறது, இந்தக் குடும்பத்துக்கு அவசரமாக உணவு தேவைப்படுகிறது என்பதுபோன்ற கோரிக்கைகள், அரசியல் தலைவர்கள், ஆளுமைகள் கூறியதாகப் பரப்பப்படும் பொன்மொழிகள், கேலி மீம்கள், ‘அதிர்ச்சியளிக்கும்’ வீடியோக் கள், ‘இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொண்டால் பதினேழு ரூபாக்கு ஒரு விமானம் இலவசமாகக் கிடைக்கும்’ என்பதுபோன்ற சலுகைகள்... இப்படி இன்னும் பல.

மேலே உள்ள அனைத்தும் பொய்தானா என்றால், இல்லை. கண்டிப்பாக உண்மைகள், பயனுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களில் பரவுகின்றன. ஆனால், அவற்றைப்போல் பல மடங்கு கூடுதலாகப் பொகள் பரப்பப்படு கின்றன. பலர் இவற்றைத் திட்டமிட்டு பரப்பு கிறார்கள், அதன்மூலம் லாபம் பெறுகிறார்கள். அப்பாவிகள் இதை உணராமல் அந்தக் குற்றத்தின் ஒரு பகுதியாக ஆகி விடுகிறார்கள்.

அதற்காக, எதையும் ஃபார்வர்ட் செய்வ தில்லை என்றும் இருந்துவிடக்கூடாது. சமூக ஊடகங்களின் பலமே நல்ல விஷயங்களை விரைவாகப் பலருக்கும் கொண்டுசேர்க்கலாம் என்பதுதான். அந்த நன்மையை இழந்துவிடாமல், இதுபோன்ற பொச் செதிகளை மட்டும் கட்டுப்படுத்துவது எப்படி? அதற்குச் சில வழிகள் இங்கே:

அனுப்பியவரை வைத்து ஒரு செய்தியின் உண்மைத்தன்மையைத் தீர்மானிக்காதீர்கள். மெத்தப் படித்தவர்களும் இந்த விஷயத்தில் முட்டாள்தனமாக நடந்துகொள்வதுண்டு. ஆகவே, ‘இவர் அனுப்பினால் சரியாகத்தான் இருக்கும்’ என்று எண்ண வேண்டாம். அதற்குப் பதிலாக, விஷயத்தைப் படித்து அல்லது பார்த்துத் தீர்மானியுங்கள். அதற்கு நேரமோ விருப்பமோ இல்லை என்றால், எதையும் ஃபார்வர்ட் செய வேண்டாம். (நீங்கள்

இந்த ஒழுக்கத்தைப் பின்பற்றாவிட்டால், இன்னொருவர் உங்களை நம்பி அந்தச் செய்தியைப் பிறருக்கு ஃபார்வர்ட் செவார். ஆகவே, இந்த விஷயத்தில் உங்கள் பொறுப்பு மிகப் பெரியது.)

ஸ்க்ரீன்ஷாட் (திரைப்பதிவு) வடிவில் பரப்பப்படும் பெரும்பாலான செய்திகள் பொயாகத்தான் இருக்கின்றன. ஆகவே, அவற்றை உடனடியாக ஃபார்வர்ட் செய வேண்டாம். உண்மையிலேயே பயனுள்ள தகவல், அனுப்பத்தான் வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றினால், அதில் இருக்கும் எழுத்துக்களை இணையத்தில் தேடிப் பாருங்கள். அதே செதி இணையத்தில் எழுத்து வடிவில் இருந்தால், மூன்றாவது குறிப்புக்கு நகருங்கள். இல்லாவிட்டால், அந்த ஸ்க்ரீன்ஷாட்டை அழித்து விட்டு அடுத்த வேலையைப் பாருங்கள்.

ஒரு செதி இணையத்தில் இருக்கிறது என்பதால் மட்டும் அது உண்மையாகிவிடாது. அந்தச் செய்தியை யார் வெளியிட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள், புகழ் பெற்ற செதித்தாள்கள், இதழ்கள், நம்பகமான ஊடகங்களுடைய செய்தி என்றால், நான்காவது குறிப்புக்கு

நகருங்கள். தனிப்பட்ட நபர்களுடைய தளங் கள், ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்கள், யூட்யூப் சானல்கள், அரசியல் கட்சிகளுடைய தளங் கள், ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பரப்பும் தளங்களில் வெளியான செய்தி என்றால், கொஞ்சம் ஐயத்துடனே அணுகுங்கள். வேறு நம்பகமான இடத்தில் அந்தச் செதி வந்திருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொண்டு அதன் பிறகு ஃபார்வர்ட் செயலாம்.

ஃபேக் நியூஸ் என்ற மாய வலையில் பெரிய இதழாளர்கள், எழுத்தாளர்களும் சிக்கிக் கொள்வதுண்டு. ஆகவே, நம்பகமான இடத்தில் வெளியாகி யிருந்தாலும் சரி, அந்தச் செதியை இன்னும் நான்கைந்து இடங்களில் தேடிப் பார்த்து, அதே செய்தி பல இடங்களில் வெளியாகியிருக்கிறது, அவற்றை யாரும் மறுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, அதன்பிறகு ஃபார் வர்ட் செயுங்கள்

குறிப்பாக, அறிவியல், மருத்துவச் செய்திகள் உரிய வல்லுனர்களால் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். அரசு அறிவிப்புகள் அந்தந்த அரசாங்க இணைய தளங்களில் இருக்க வேண்டும். வரலாற்றுக் குறிப்புகள் பொருட் படுத்தக்கூடிய நூல்கள், கட்டுரைகளில் இடம் பெற்றிருக்கவேண்டும். இவையெல்லாம் இல்லை என்றால், அநேகமாக அது பொய்தான்.

தனிப்பட்ட நபர்களை கேலியாக, ஆபாசமாகப் பேசுகிற, அவர்களை காரண மில்லாமல் இழிவுபடுத்துகிற, கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகிற, வெறுப்பை உமிழ்கிற செய்திகளைப் பரப்ப வேண்டாம். குறிப்பாக, குழந்தைகள் இடம்பெறுகிற எந்த வீடியோவையும் அவர்களுடைய பெற்றோரின் அனுமதி இல்லாமல் யாருக்கும் அனுப்பாதீர்கள்.

ஒருவேளை, ஒரு செய்தி பொய்தான் என்று உங்களுக்கு உறுதியாகத் தெரிந்தால், அதை உங்களுக்கு அனுப்பியவரிடம் இந்தத் தகவலைச் சொல்லுங்கள். சண்டை போட வேண் டாம். பணிவாகச் சான்றுகளுடன் சொல்லி, ‘இதை இனிமேல் யாருக்கும் அனுப்ப வேண்டாம்’ என்று கேட்டுக் கொள் ளுங்கள். ஒருவேளை அவர்கள் சினம் கொண்டால், ‘இது உண்மைதான்’ என்று வாதாடினால், ‘நல்லதுங்க. அப்புறம் பேசுவோம்’ என்று ஃபோனை வைத்துவிடுங்கள், உறவும் நட்பும் காப்பாற்றப்படும்.

‘நீங்கள் உண்மையான தமிழராக இருந்தால் இந்தச் செய்தியை எல்லாருக்கும் அனுப்புங் கள்’ என்பது போன்ற சீண்டல்களைக் கொஞ்சமும் நம்பாதீர்கள். பொய்ச் செய்தியை உணர்ந்து, அதை யாருக்கும் அனுப்பாமல் இருக்கிறவர்தான் உண்மையான தமிழர்!

உங்கள் குழந்தைகளுக்கு, ‘நெட்ல படிக்கிற எல்லாத்தையும் நம்பிடாதே’ என்று சொல்லிக் கொடுங்கள். ஒரு விஷயத்தின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ளாமல் எதையும் யாருக்கும் அனுப்ப வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்லுங்கள்.

வாட்ஸாப், ஃபேஸ்புக், ட்விட்டருக்கு வெளியில் ஒரு மிகப் பெரிய அறிவுலகம் இருக் கிறது. புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உண்மைகளைத் தொடர்ந்து படிக்கப் படிக்க, இந்தப் பொய்களைப் படித்த வுடன் அடையாளம் காணும் திறமை உங்களுக் குள் தானாகவே வளர்வதைக் காண்பீர்கள்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :