நம்ம ‘சென்னை தமிழச்சி’


எஸ்.சந்திரமௌலிபத்மபிரியா வயது 25. மைக்ரோ பயாலஜிஸ்ட், பள்ளி ஆசிரியை, யூடியூப் பிரபலம், சுற்றுச் சூழல் போராளி என பல முகங்கள் கொண்டவர். அண்மையில், நடந்து முடிந்த தமிழக சட்ட மன்றத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க. அமைச்சர் பெஞ்சமின், தி.மு.க. வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி இருவரையும் எதிர்த்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மயம் கட்சியின் சார்பில் போட்டி யிட்டார். அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 33401. பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருந்த அவர், யூடியூப் மூலம் பிரபலமானது எப்படி? அரசியலுக்கு வந்தது எப்படி? தேர்தல் கள அனுபவம் எப்படி இருந்தது? மங்கையர் மலருக்கு அவர் அளித்த இந்தப் பிரத்யேகப் பேட்டியில் பளீரென்று பதிலளித்தார்.

ஹாய் பத்மபிரியா! உங்களுடைய குடும்பப் பின்னணி அரசியல் தொடர்பு உடையதா?

நோ..நோ.. எங்கள் குடும்பத்துக்கும் அரசியலுக்கும் துளிக்கூட சம்பந்தமே கிடையாது. நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் மதுரவாயல் ஏரியாவில்தான். இங்கே, லோக்கலாக அரசியல் கட்சிகளில் பொறுப்பில் இருக்கிறவர்களைக் கூட எனக்குத் தெரியாது. என்னுடைய அரசியல் நுழைவு என்பது மிகவும் எதேச்சையாக நிகழ்ந்த ஒன்றுதான்!

ஆசிரியையாக இருந்த நீங்கள் அரசியல் கட்சியில் சேர முடிவு எடுத்ததற்குக் காரணம் என்ன?

நான் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்சி. மைக்ரோ பயாலஜி படித்து முடித்துவிட்டு, பெங்களூரில் கேன்சர் ரிசர்ச்சில் ஈடுபட்டிருந்தேன்.

அப்போது, பிஹெச்.டி முடித்துவிட்டு கல்லூரி ஆசிரியயையாக வரவேண்டும் என்பதுதான் என் விருப்பமாக இருந்தது. ஆனால், பெங்களூரில் ரிசர்ச் செய்து கொண்டிருந்த சமயத்தில், தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகமாக ரிசர்ச் ஃபீல்டுக்கு வருவதில்லை என்பதை கவனித்தேன். ஸ்கூலில் படிக்கும்போதே, தங்களுடைய மேற்படிப்பு பற்றிய ஆர்வத்தை, அதற்கான திட்டமிடுதலை மாணவர்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆகவே, சென்னைக்கு வந்து, நான் படித்த ஸ்கூலிலேயே ஆசிரியையாகச் சேர்ந்தேன்.

சயின்ஸ்தான் எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட். மாணவர்களுக்கு விஞ்ஞான விஷயங்களை சுவாரசியமாக சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக யூடியூபில் அது தொடர்பான பல வீடியோக்களை அப்லோடு செய்தேன். அவற்றுக்கு நல்ல

வரவேற்பு கிடைத்தது. சுற்றுச் சூழல் என்பதும் விஞ்ஞானத்தின் ஒரு அங்கம்தானே. ஆகவே, எனது ஆர்வம் சுற்றுச் சூழல் பற்றித் திரும்பியது.

அப்போதுதான் சென்னை தமிழச்சி உருவானாரா?

ஆமாம்! சென்னை தமிழச்சியாக சுற்றுச் சூழல் விஷயங்கள் குறித்து, கள ஆய்வு செது பிரச்னைகளை முழுவதுமாகப் புரிந்துகொண்டு, அந்த விஷயங்களை மக்கள் மத்தியில் கொண்டு போகவேண்டும் என்று நினைத்தேன். அந்த காலகட்டத்தில் வெளியான சுற்றுச்சூழல் குறித்த ஆவறிக்கை எனது கவனத்தை ஈர்த்தது. அந்த அறிக்கையில் இருந்த பாதகமான அம்சங் களைப் பற்றி மக்கள் மத்தியில் ஒரு விழிப் புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று நினைத்தேன். இன்றைக்கு, சொஷியல் மீடியா எல்லோரையும் சென்றடைவதற்கான ஒரு வழி. நாம் நினைக்கும் விஷயங்களை சுதந்திரமாக சொல்ல உதவும் ஒரு தளம். எனவே, சுற்றுச் சூழல் சம்பந்தமான விஷயங்களை விளக்கிச் சொல்லி, யுடியூப் மூலமாக ஒரு வீடியோ வெளியிட்டேன். அது வைரலாகிப் போனது. எல்லோரும் என்னை கவனிக்க ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் சிலர் என்னை கடுமையாக தாக்கிப் பேசினார்கள். அந்த சமயத்தில்தான், கமல் சாரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் என்னிடம் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து விரிவாகப் பேசினார். எனது சுற்றுச் சூழல் விழிப்புணர்வு முயற்சிகளைப் பாராட்டினார். மிரட்டல்களுக்கு பயப்பட வேண்டாம் என்று தைரியம் சொன்னார். மக்கள் நீதி மயத்தில் சேரவேண்டும் என்றும், சுற்றுச்சூழல் பிரிவுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றும் என்னிடம் கேட்டார். நானும் சம்மதம் சொன்னேன்.

அரசியல் கட்சியில் சேர்வது குறித்த உங்கள் முடிவிற்கு உங்கள் குடும்பத்தினர் மறுப்பேதும் சொல்லாமல் ஆதரவு அளித்தார்களா?

மற்ற அரசியல் கட்சிகள் எதிலாவது சேருவ தாகச் சொல்லி இருந்தால், வேண்டாம் என்று சொல்லி இருப்பார்களோ என்னவோ, மக்கள் நீதி மயம் என்று சொன்னதும், என்னை உற்சாகப்படுத்தினார்கள். கடந்த வருடம் ஜூலையில் மக்கள் நீதி மய்யத்தில் சேர்ந்தேன்.

தேர்தலில் நிற்க விரும்பியது ஏன்?

பொதுவாகவே, எந்த ஒரு கட்சியிலும் தேர்தல் பற்றி பேச்சு வரும்போது, ‘எலக்ஷன்ல நிற்கறீங்களா?’ என்று கேட்பார்கள். ஆனால், நான் அதை அத்தனை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், வேட்பாளர் தேர்வு நடப்பதற்கு முன்னால், கமல் சார் என்னிடம் ‘கட்சியில் உன்னைப் பற்றிய எதிர்காலக் கனவு எனக்கு ஒண்ணு இருக்கு’ என்று ஆரம்பித்து, ஒரு பதினைந்து நிமிடம் பேசி, என்னை கன்வின்ஸ் செதார். நான், வசிக்கும் மதுரவாயல் தொகுதி யில் நிற்கும் என் ஆர்வத்தை சொன்னேன். அதன்பிறகு, முறைப்படி விருப்ப மனு, வேட்பாளர் நேர்காணல் எல்லாம் நடந்தன. நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன். மனுதாக்கல், பிரச்சாரம் எல்லாம் தொடர்ந்தன.

பண பலம், அதிகார பலம் வாந்த பெரிய கட்சி வேட்பாளர்களை எதிர்த்து, பிரச்சாரம் செத அனுபவம் எப்படி இருந்தது?

என்னுடைய தேர்தல் வியூகம் என்பது ரொம்ப சிம்பிள். பெரிய கட்சிகளின் வேட் பாளர்கள், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என்று பெரிய தலைவர்களின் பெயரில் ஓட்டுக் கேட்டார்கள். தாங்கள் இன்ன கட்சி; தாங்கள் ஆட்சியில் இருந்தபோது என்ன செதோம்? என்று

சொன்னார்கள். ஒருவராவது, தான் யார்? தன் பின்னணி என்ன? இந்தத் தொகுதி மக்களின் பிரச்னைகள், எதிர்பார்ப்புகள் என்னென்ன? தொகுதிக்கு நான் என்ன செயல் திட்டம் வைத்திருக்கிறேன்? என்று சொல்லவில்லை. நான் அதைத்தான் செதேன். அதேபோல, கடைசியாக இரண்டு நாட்கள் மட்டுமே வாகனம் மூலமாக தொகுதிக்குள்ளே வாக்கு சேகரித்தேன். மற்றபடி, அதற்கு முன்பு வரை தெருத்தெருவாக நடந்து சென்று, மக்களை நேரில் சந்தித்து, வாக்கு கேட்டேன். அதையும் கூட கச்சிதமாக திட்டமிட்டுக் கொண்டேன். என் பெயரையும், படிப்பையும் சொல்லி மதுரவாயல் மக்கள் நீதி மயம் வேட்பாளர் என்று முப்பதே வினாடிகளில் சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டு, தொகுதிக்கான என் செயல்திட்டம் என்ன என்பதை விளக்கிச் சொல்லிவிட்டு வாக்கு கேட்பேன். எந்த ஒரு வேட்பாளரும் ரோட்டில் இறங்கி வந்து வாக்கு கேட்காத சூழ்நிலையில், சூரிதார் அணிந்துகொண்டு, ஒரு இளம் பெண் வீடு வீடாக

வந்து வாக்கு கேட்பதை மக்கள் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். நான் பிரச்சாரத்தின்போது மொத்தம் இரண்டு முறை எல்லா மக்களையும் சந்தித்திருக்கிறேன்.

தேர்தல் பணிக்காக அமைந்த பத்து பேர் கொண்ட டீம் பம்பரமாக சுழன்று எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்தனர். கூகுள் மேப் மூலமாக தொகுதியில் உள்ள தெருக்களில் என்றென்றைக்கு பிரச்சாரம் செயலாம் என்று திட்டம் போட்டுக் கொடுத்தார்கள். நான் எம்.எல்.ஏ. ஆனால், தொகுதிக்கு என்ன செ வேன் என்பதை ஒரு கடிதம் போல அச்சிட்டு வினியோகம் செதேன். பிரச்சாரம், மீடியா ஒருங்கிணைப்பு என்று எல்லா வேலைகளையும் கச்சிதமாக செததை நினைக்கும்போது எனக்கு அமைந்த டீம் குறித்து மிகவும் பெருமையாக இருக்கிறது.

பெரிய பெரிய அரசியல் கட்சி தலைவர்களை எல்லாம் விட உங்களுடைய தேர்தல் பிரமாணப் பத்திரத்தை மூன்று லட்சத்துக்கும் அதிகமான வர்கள் பதிவிறக்கம் செதார்களே! அந்த

ஆச்சர்யத்தின் பின்னணி என்ன?

எனக்குக் கூட அது ஆச்சர்யம்தான்! எனக்கொன்றும் மற்ற அரசியல்வாதிகள் போல கோடிக்கணக்கில் சொத்து இல்லை. சமூக வலைதளங்கள் மூலமாக எனக்கு கொஞ்சம் பாபுலாரிடி இருக்கிறது. அரசியல் பின்புல மில்லாத, தைரியமான இளம் வயது வேட்பாளர் என்று என் மீது மக்களுக்கு, குறிப்பாக

இளைய தலைமுறையினருக்கு என்னைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்ள கூடுதல் ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி வேறு காரனம் எதுவும் எனக்குத் தோன்ற வில்லை.

தேர்தல் அன்று ரொம்ப டென்ஷனாக இருந்ததா?

பண பலம், அதிகார பலம், இதர பலம் கொண்ட பெரிய இரண்டு அரசியல் கட்சிகளோடு போட்டி போடும்போது, வெற்றி வாய்ப்பு இல்லை என்பது தெரிந்ததுதான். ஆனாலும், தேர்தல் தினத்தில் மக்கள் என் முகத்தைப் பார்த்தால், நான் கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வரும் என்று, அத்தனை வாக்குச்சாவடிகளுக்கும் சென்று, பார்த்தேன். காரணம், நாங்கள் மாற்றம் என்ற விஷயத்தை இந்தத் தேர்தலில் மக்கள் முன் வைத்தோம். அதற்கு மக்களிடம் என்ன ரெஸ்பான்ஸ்? எத்தனை பேர் எங்கள் வாக்குறுதியின் பேரில் நம்பிக்கை வைத்து வாக்களிக்கிறார்கள் என்பதை அறிய மிகுந்த ஆர்வமாக இருந்தேன். மற்றபடி, தேர்தல் நாளன்றும் சரி, வாக்கு எண்ணிக்கையின் போதும் சரி டென்ஷன் இல்லை. அந்த வகையில் பார்த்தால், வெறும் 15 நாள் பிரச்சாரத்தில், 33401 பேர் என் மீதும், மக்கள் நீதி மயத்தின் மீதும் நம்பிக்கை வைத்து வோட்டுப் போட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தபோது, மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. என்னைப் போன்ற இளைய தலைமுறையினர் தேர்தலில் போட்டியிடுவதன் மூலமாக, வரும் நாட்களில் பல இளைஞர்கள் தேர்தலில் நிற்க முன்வருவார்கள்; இளைய தலைமுறையினர் தவறாமல் வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :