விரல் நுனியில் உன் உலகம்! - 4


காம்கேர் கே.புவனேஸ்வரிApps & Widgets

(ஆப்களும், வைட்ஜெட்டுகளும்!)

நாம் ஸ்மார்ட் போனில் உள்ள தொழில்நுட்ப விவரங்களைத் தெரிந்துகொண்டால் மட்டுமே அதை நம்மால் முழுமையாகப் பயன்படுத்த முடியும். பத்திரிகைகள் வாசிக்க முடியும், புத்தகங்களை படிக்க முடியும், ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய முடியும், ஓட்டல்களில் ஆர்டர் செய்து சாப்பாடு வரச் செய்ய முடியும். இப்படி என்னவெல்லாம் செய்ய நினைக்கிறீர்களோ, அதையெல்லாம் செய்ய முடியும். வெர்ச்சுவல் உலகில் இன்றைய தலைமுறையினருடன் பின்னிப் பிணைந்து சங்கமிக்க முடியும்.

அது என்ன வெர்சுவல் உலகம்?

வெர்ச்சுவல் உலகம் என்பது இண்டர்நெட் உலகம். நிஜ உலகில் செய்ய முடிவதை எல்லாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து சாதித்துக் கொள்ளக்கூடிய உலகம்.

அப்படிச் சாதிப்பதற்கு மொபைல் போனில் உள்ள ஆப்கள் பற்றியும், வைட்ஜெட் பற்றியும் இன்னபிற தொழில்நுட்ப விவரங்கள் பற்றியும் அறிந்து வைத்திருப்பது முக்கியம்.

`App` என்றால் என்ன என்று புரிகிறது, அது என்ன "Widget` என்று திகைக்கிறீர்களா?

ஆப்ஸ் (Apps) என்று சுருக்கமாக அழைக்கப் படும் அப்ளிகேஷன்களைப் (Applications) பயன்படுத்த ஆரம்பித்தால்தான் ஸ்மார்ட் போன்களின் சிறப்புகள் நமக்குத் தெரியவரும். பெரும்பாலானோருக்கு ஆப்ஸ் பற்றி தெரியாத காரணத்தால், ஸ்மார்ட் போன்களை அடிப்படை போன்கள் போல பேசுவதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும், குறுஞ்செய்திகள் அனுப்புவதற்கும் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆப்ஸ் என்பது ஸ்மார்ட் போன்களில் இயங்குகின்ற சாஃப்ட்வேர் புரோ கிராம்கள். நம் கம்ப்யூட்டரில் டைப் செய்வதற்கு எம்.எஸ்.வேர்ட், கணக்கீடுகள் செய்வதற்கு எம்.எஸ்.எக்ஸல், ப்ரசன்டேஷன் செய்வதற்கு எம்.எஸ்.பவர் பாயின்ட் என வெவ்வேறு சாஃப்ட்வேர்கள் இருப்பதைப் போல நம் ஸ்மார்ட் போன் களிலும் தேவைகளுக்கு ஏற்ப வெவ்வேறு ஆப்ஸ் இருக்கின்றன.

இமெயில் அனுப்புவதற்கு, ஃபேஸ்புக் பயன்படுத்துவதற்கு, குறுஞ்செய்திகள் அனுப்புவதற்கு, இலவசமாக போன் பேசுவதற்கு, வழி சோல்வதற்கு, வங்கிக் கணக்குக்கு என ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் பிரத் யேகமான ஆப்ஸ் இவை. ஒருசில ஆப்கள் ஸ்மார்ட் போன் வாங்கும்போது அதிலேயே இணைக்கப்பட்டிருக்கும். நம் தேவைக்கு ஏற்ப எத்தனை ஆப்ஸ் வேண்டுமானாலும் டவுன் லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

ஆப்ஸ்கள் போலவே வைட்ஜெட்டுகளும் (Widget) ஸ்மார்ட் போன்களில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. ஆப்ஸ் என்பது நாம் கிளிக் செய்து இயக்கினால் மட்டுமே இயங்கப்பெறும். ஆனால், ‘வைட்ஜெட்’ என்பது ஆன் செய்யப்பட்டிருக்கும் ஸ்மார்ட் போனில் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும்.

கடிகாரம் (Clock), நாள்காட்டி (Calendar), சீதோஷ்ன நிலை முன்னறிவிப்பு (Weather forecast)போன்றவை வைட்ஜெட்டுகளுக்கு உதாரணமாகக் கொள்ளலாம். இவற்றை நாம் கிளிக் செது இயக்கத் தேவையில்லை. இதனால் வைட்ஜெட்டுகள், மொபைல் போனின் மெமரியையும் பேட்டரியின் சக்தி யையும் முழுமையாக எடுத்துக்கொள்ளும். வெகுவிரைவில் பேட்டரி சார்ஜ் இழந்துவிடும்.

வாட்ஸ் ஆப், கூகுள் மேப், ஃபேஸ்புக், ஜிமெயில், கூகுள் குரோம் போன்றவை ஆப்ஸ் களுக்கு உதாரணமாகக் கொள்ளலாம். இவற்றை நாம் கிளிக் செது இயக்கினால் மட்டுமே இயங்கப்பெறும். ஆப்ஸ் மெமரியையும் பேட்டரியின் சக்தியையும் நாம் அவற்றை கிளிக் செய்து பயன்படுத்தும்போது மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

ஆப்ஸ் எல்லா போன்களுக்கும் பொதுவானதா?

பொதுவாக, ஆப்களை ஐபோன், ஆண்ட்ராய்ட் என எல்லா போன்களிலும் டவுன்லோட் செய்துகொள்ள முடியும். ஆனால், அவை அந்தந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மட்டுமே இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு, ஐபோன் ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஐஓஎஸ்ஸில் வடிவமைக்கப்பட்ட ஒரு ஆப், ஆண்ட்ராட் போனில் இயங்காது.

அதுபோல, ஆண்ட்ராட் ஆப்பரேட்டிங், சிஸ்டத்தில் வடிவமைக்கப்பட்ட ஒரு ஆப், ஐபோனில் செயல்படாது. ஒவ்வொரு நிறுவனமும் அதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஆப்ஸ்களை வடிவமைத்து வெளியிடும். ஒரு சில ஆப்ஸ்கள் ஸ்மார்ட் போனில் முன்பே இன்ஸ்டால் செயப்பட்டிருக்கும். (உதாரணத்துக்கு ஆண்ட்ராட் போனில் கூகுள் அப்ளிகேஷன்களான கூகுள் குரோம், ஜிமெயில், கூகுள் மேப்ஸ், யு-டியூப், கூகுள் டிரைவ் போன்றவை முன்பே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும்.)

எல்லா ஸ்மார்ட் போன்களிலும் ஆப்களின் செயல்பாடுகள் ஒரே மாதிரியாக இருக்குமா?

ஆண்ட்ராட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக்கூடிய ஸ்மார்ட் போன்கள் சாம்சங், மைக்ரோமேக்ஸ், எல்.ஜி, சோனி, ஹெச்.டி.சி என ஏராளமாக உள்ளன. அவற்றில் இயங்கும் ஆப்ஸ்களின் பயன்பாட்டில் மாற்றம் ஏதும் இருக்காது. ஆனால், ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் பட்டன்களிலும், மெனுக்களிலும் மட்டும் சில மாற்றங்கள் இருக்கும். பயன்படுத்த ஆரம்பித்ததும் பழகிவிடும்.

ஸ்மார்ட் போனில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப விவரங்கள்:

வை-பி (Wi-Fi), மொபைல் டேட்டா (Mobile Data), புளூ டூத் (BlueTooth), ஏர்பிளேன் மோட் (Airplane Mode)போன்றவை ஸ்மார்ட் போன்களில் அடிக்கடிப் பயன் படுத்தும் தொழில்நுட்ப விவரங்கள்.

வை-பி (Wi-Fi): எந்த ஒயர் இணைப்பும் இன்றி, இன்டர்நெட் தொடர்பை கொடுக்கக்கூடிய தொழில்நுட்பம் இது. நம் வீட்டில் உள்ள வை-பி மோடம் மூலம் நம் மொபைலில் இன்டர்நெட் இணைப்பைப் பெறலாம். அதுபோல சினிமா தியேட்டர்களில், ஷாப்பிங் மால்களில், கால் டாக்ஸிகளில், விமான நிலை யங்களில் அவர்களின் வை-பி சேவையை இலவசம் என அறிவித்திருந்தால் அதை நாம் பகிர்ந்து பயன்படுத்த முடியும். அதற்கு அவர்கள் பாஸ்வேர்ட் தேவை.

மொபைல் டேட்டா Mobile Data) மொபைல் டேட்டா என்பது நம் ஸ்மார்ட் போனின்

சர்வீஸ் புரொவைடர் (BSNL/Vodafone/Airtel etc.,) நமக்குக் கொடுக்கின்ற இன்டர்நெட் இணைப்பைக் குறிக்கிறது. அந்த சர்வீஸ்

புரொவைடர்கள் கொடுக்கின்ற இன்டர்நெட் இணைப்பிற்கான சிக்னல் கிடைக்கும் இடங் களில் இதைப் பயன்படுத்தலாம். இந்த நெட் வொர்க் இணைப்புகளின் பெயர்கள் 3G, 4G, LTE (Long Term Evolution) என்றிருக்கும். LTE என்பது ஸ்மார்ட் போன்களுக்காக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் தொழில் நுட்ப மாகும்.

புளுடூத் (BlueTooth) வை-பி இன்டர்நெட் இணைப்போ அல்லது மொபைல் டேட்டாவோ இல்லாமல் பிற சாதனங்களுடன் இணைப்பினை ஏற்படுத்தி, ஆடியோ, வீடியோ மற்றும் பிற பைல்களை பரிமாறிக் கொள்ள உதவும் தொழில்நுட்பம் இது.

ஏர்பிளேன் மோட் (Airplane Mode) இந்த நிலைக்கு போனைக் கொண்டு சென்றால், நமக்கு வரும் போன் அழைப்புகள் துண்டிக்கப் படும். நாமும் யாருக்கும் போன் செய்து பேச முடியாது. இன்டர்நெட் இணைப்பும் கிடைக் காது. ஆனால், போனில் கேம்ஸ் விளையாட லாம். இசையைக் கேட்கலாம். டவுன்லோட் செய்த வீடியோக்களைக் காணலாம். புகைப் படங்களைப் பார்வையிடலாம்.

பயன்படுத்தும் முறை:

1. இதை கிளிக் செய்தால் வை-பி (Wi-Fi), மொபைல் டேட்டா (Mobile Data) புளூடூத் (BlueTooth) ஏர்பிளேன் மோட் (Flight Mode/Airplane Mode) போன்ற தொழில்நுட்ப விவரங்கள் பட்டியலிடப்படும்.

2. இதை கிளிக் செய்யும்போது On, Off என இரண்டு நிலைகளைக் கொண்ட ஒரு சிறிய ஸ்லைடர் வெளிப்படும். அதை இடதுபக்கம் நகர்த்தினால் கிரே கலரில் OFF நிலையையும், வலதுபக்கம் நகர்த்தினால் பச்சைக் கலரில் ON நிலையையும் அடையும். ஸ்லைடர் பச்சைக் கலரில் ஆன் நிலையில் இருந்தால் மட்டுமே அவை இயக்கத்துக்கு வரும்.

இந்த தொழில்நுட்ப வசதிகளை பயன் படுத்தாதபோது, அவற்றைப் பயன்படுத்தாத Off நிலையில் வைக்க வேண்டும். அவை இயக்கத்தில் இருக்கும்போது, பேட்டரியின்

சக்தியை எடுத்துக்கொண்டே இருக்கும்.

வை-பி மற்றும் புளூடூத் இவற்றை ஒரே கிளிக்கில் ஆன், ஆஃப் செய்ய...

ஸ்மார்ட் போனில் ஹோம் ஸ்கிரீனின் மேல் பக்கத்தில் இருந்து கீழாக ஸ்வைப் செய்தால் ஒரு சிறிய விண்டோ கிடைக்கும். அதில் WiFi மற்றும் Bluetooth இவை கிரே கலரில் இருந் தால் ஆஃப் மோடில் இருப்பதாக பொருள். இவற்றை ஒரு முறை தொட்டால் பச்சை கலரில் ஒளிர ஆரம்பித்து ஆன் மோடுக்கு வந்துவிடும். திரும்பவும் ஆஃப் செய்ய மீண்டும் ஒருமுறை தொட்டால் போதும். இது ரொம்ப ஈசி.

(முன்னேறுவோம்)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :