அன்பு வட்டம்


அனுஷா நடராஜன்தமிழக புதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்கொள்ளப்போகும் சவால்?

- வாசுதேவன், பெங்களூரு

கலைஞர், முதல்வர் பதவியை ‘முள் கிரீடம்’ என்பார்; நம்ப ஸ்டாலினுக்கோ அது ‘முள் நாற்காலி’யாகவே வாய்த்துவிட்டது.சவால்கள் எக்கச்சக்கம்! கொரோனா காலம்! கஜானா காலி! மொத்தம் 505 தேர்தல் வாக்குறுதிகள்! பெண்களுக்கு உரிமைத் தொகை 1000/-, கல்விக் கடன் ரத்து, மகளிர் கடன் ரத்து, நகைக்கடன் ரத்து, ப்ளஸ் டு மாணவர்களுக்கு டேப்லட் இலவசம் என அள்ளித் தெளித்த சலுகைகளுக்கு என்ன செய்வாரோ?

மொதல்ல பத்து ஆண்டுகளாக அதிகாரப் பசியில் இருக்கும் முக்கியஸ்தர்களை, கட்சி நிர்வாகிகளைக் கட்டுப்படுத்தணும்...

குடும்பத்தினரால் கெட்ட பெயர் வராமல் வேற பார்த்துக்கணும்... எதிர்க்கட்சியைச் சமாளிக்கணும். பத்தாததற்கு பிரஷாந்த் கிஷோர் டைரக்ஷனும் இனி இல்லை. துண்டை உதறிவிட்டு போய்விட்டாரே! ஆல் தி பெஸ்ட் தளபதி ஸார்!

‘கொரோனாவைக் கட்டுப்படுத்துகிறேன் பேர்வழி’ என்ற ரீதியில் அபராதம் விதிப்பது சரியா?

- ச. ஜான்ரவி, கோவில்பட்டி

நம்ம ஆளுங்க டிஸைன் அப்படி! வாங்கின அடியைத் தொடச்சுப் போட்டுட்டுப் போயிடு வாங்க... ஆனா, ஃபைனா கட்டின காசை மட்டும் மறக்கவே மாட்டாங்க... ஸோ அபராதம் விதிப்பது சரி என்றே தோன்றுகிறது!

இல்லன்னா, இலங்கை ட்ரீட்மென்ட் வெச்சுக்கலாமா? அங்க மாஸ்க் போட லைன்னா, 21 நாள் ஆர்மி கேம்ப்ல போட்டுடு வாங்களாம்! வசதி எப்படி?

தனிமை எப்போது இனிமையாகிறது? எப்போது கொடுமை ஆகிறது?

- ஆர். ராஜலட்சுமி, திருச்சி

இளமையில் தனிமை இனிமை! அதுவே வயதானபின், தனிமை என்பது கொடுமை! குறைந்தபட்சம் திட்டிக்கிட்டே காபி கொடுக்கும் மனைவியும், முறைச்சுக்கிட்டே கண்ணுக்கு சொட்டுமருந்து விடும் கணவனும் மட்டுமாவது தேவை!

‘கல்கி’ போலவே மங்கையர் மலரும் டிஜிட்டல் வடிவத்திற்கு மாறிவிட்டதே?

- ஹேமா, வந்தவாசி

‘உலகமே விரல் நுனியில்’ வந்துவிட்ட பிறகு, நாமும் காலத்துக்கு ஏற்றாற்போல மாறுவதுதானே புத்திசாலித் தனம். டிஜிட்டல் ஆனாலும் இளமையும், இனிமையும் மாறாத தரமான புத்தம்

புதிய மலராகத்தான் மணம் வீசும்! அப்படியே உங்களுக்குத் தெரிஞ்சவங்க, அறிஞ்சவங்களுக்கும் ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ன்னு சொல்லி மங்கையர் மலருக்குத் தொடர்ந்து ஆதரவு தாங்க.

எங்கள் படைப்புகளை, கேள்விகளை, கடிதங்களை, ஈமெயிலில்தான் அனுப்பணுமா? தபாலிலும் அனுப்பலாமா?

- ஆர். பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்

லாம்! லாம்! லாமே!

கமல்?

- சாந்தி குருநாதன், வேளச்சேரி

பலாப்பழம் கிடைக்கலேன்னா... பரவாயில்லை! அட்லீஸ்ட்... ‘கோவை’ப் பழமாவது கிடைச்சுருக்கலாம். இட்ஸ் ஆல் ரைட் கமல் ஸார்! வெல்கம் டு பிக்பாஸ் சீஸன் 5!

வாணிஸ்ரீ நடித்த படங்களிலேயே அனுவுக்கு மிகவும் பிடித்த படம் எது?

- ச.ஜான்ரவி, கோவில்பட்டி

‘உயர்ந்த மனிதன்’, ‘வசந்த மாளிகை’, ‘சிவகாமியின் செல்வன்’ என எல்லா படங்களிலும் கொள்ளை அழகுடன் இருப்பார் வாணிஸ்ரீ. இருந்தாலும் டபுள் ரோலில் கலக்கிய ‘வாணி ராணி’தான் அனூஸ் சாய்ஸ்!

ஒரு விஷயம்: எத்தனையோ பேர் கொண்டை போட்டாங்க! ஆனா ‘வாணிஸ்ரீ கொண்டை’ மாதிரி வருமா? அதேபோல் முழங்கை வரை டைட் ப்ளவுஸ்?

இன்னொரு விஷயம்; என்னுடைய 43 புனைப்பெயர்களில் ‘வாணிஸ்ரீ’யும் ஒன்று! ஹி...ஹி..

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :