பறவை மொழி


ரத்னமாலா புரூஸ்
தமிழ்பக்கத்து வீட்டுக்குப் புதிதாக வந்திருந்தனர் அந்த இளந்தம்பதி. அதிலும் அந்தப் பெண், கிராமத்தைச் சேர்ந்தவள் போல் இருந்தாள்.காலையில் நான் என் வீட்டைவிட்டு வெளி யில் செல்லும்பொழுது அவள் வீட்டு வாசலில் சிறியதா, ஆனால் மிக நேர்த்தியா, அழகான கோலம் இடப்பட்டிருந்தது. அப்பார்ட்மென்டில் வசிக்கும் என் போன் றோர்க்கு நிச்சயமா இது புதிதாத்தான் இருக்கும். இருந்தாலும் ரசித்துக்கொண்டே சென்றுவிட்டேன். காகறி வாங்கிவிட்டு நான் வீடு திரும்பியபோது அந்தப் பெண் அவளது வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் சிரித்தாள். நானும் சிரித்தேன்.

புதுசா வந்திருக்கீங்களா?" இது நான். ஆமா அக்கா! பால் காச்சிருக்கேன். வந்து சாப்பிட்டுப் போங்க. காலைலருந்தே உங்க வீட்டப் பார்த்தேன். பூட்டியே இருந் திச்சு..." வியப்பாக இருந்தாலும் மறுப்பேதும் சொல்லாமல், ஓ! அப்படியா... இதோ வர்றேன்!" என்று சொன்ன நான் காகறிப் பையை வீட்டில் வைத்துவிட்டு அவள் வீட்டுக்குச் சென்றேன்.

உள்ளே போனபோது மூன்று பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். நான் அவளுடைய உறவினர்களா இருக்கும் என்று நினைத்துக் கொண்டு சிரித்தேன். பதிலுக்கு அவர்களும் சிறு புன்னகையை உதிர்த்தார்கள். உள்ளே யிருந்து அந்தப் பெண், பால் மற்றும் இனிப்பு வகைகளை எடுத்து வந்தாள். பாலை எடுத்துக்கொண்ட நான், உங்க பேரு?" என்றேன்.

என் பேரு வளர்மதிக்கா. எங்க ஊரு குரங்கணி... தேனி பக்கம் உள்ள குரங்கணி இல்ல... தூத்துக்குடி மாவட்டத்துல இருக்கற குரங்கணி. எங்க ஊரு அம்மன் கோயில் கொடை ரொம்ப விசேஷம். முத்துமாலை அம்மா ரொம்ப சக்தியுள்ள சாமி. என்ன கேட் டாலும் கொடுக்கக்கூடிய தாயி. சுத்தியிருக்குற அவ்வளவு ஊர்ல இருந்தும் லட்சக்கணக்குல மக்கள் அவள கும்பிட்டுட்டுப் போவாங்க. எங்க ஊரு அம்மன் கொடைக்கு மாவட்டம் பூரா லீவு. கேள்விப்பட்டிருக்கீங்களா?" என்று அவள் படபடவென்று சொன்னபோது அவளுடைய அப்பாவித்தனத்தை ரசித்துக் கொண்டே ஓ! நான் கேள்விப்பட்டதில்ல...’ என்றேன்.

உங்க பேர இதுவரை சொல்லலியேக்கா" என்றவுடன், ஆங்... என் பேரு சௌமியா" என்றேன். அப்போது உள் அறையிலிருந்து அவளது கணவர் வாங்க வாங்க வணக்கம்" என்றவாறே வெளியில் வந்தார். சட்டைப்பை யிலிருந்த செல்போன் ஒலிக்க, சாப்பிடுங்க. இதோ வர்றேன்" என்று சொல்லிவிட்டு மீண்டும் அறைக்குள் சென்றுவிட்டார். அந்த மூன்று பெண்களும் ஏதும் பேசவில்லை. அக்கா! ஸ்வீட் எடுத்துக்கோங்க" என்று வளர்மதி தொடர்ந்தாள். அக்கா, இவங்க மூணு பேரையும் உங்களுக்குத் தெரியாதா?"

‘எனக்கு எப்படித் தெரியும்?’ என்று மனதில் நினைத்துக்கொண்ட நான், தெரி யாது" என்று மட்டும் சொன்னேன். இவங்க நம்ம அபார்ட்மெண்ட்ல இருக் கற ஷாலினிக்கா, பிருந்தாக்கா, சுஜா தாக்கா"என்று ஒவ்வொரு பெண்ணையும் கைகாட்டி அறிமுகப்படுத்தி வைத்தாள் வளர்மதி.

‘ஒரே அபார்ட்மென்டா? நான் இவங்கள பார்த்த தில்லையே’ என்று மனதுக் குள் நினைத்துக்கொண்ட நான் ஹா, ஹலோ!" என்று அசடு வழிந்தேன். கொஞ்ச நேரம் அமைதி. பின்பு ஒருவருக்கொருவரிடையே சிறிய அறிமுகமும் உரையாடலுமாக முடிந்தது.

நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். மதிய நேரம். யாரோ கதவைத் தட்டுவது போல் இருந்தது. பார்த்தால் அங்கே வளர்மதி.கதவைத் திறந்தேன். என்னாச்சு வளர்மதி? உள்ளே வாங்க..." இல்லக்கா... சாதம் வடிச்சேன். காக் காங்களுக்குச் சாதம் வைக்கணும்... நீங்க எப்படி வைப்பீங்க?" என்றாள் வளர்மதி. ஆச்சர்யப்பட்ட நான், இங்க யாரும் அந்த மாதிரியான காரியங்கள் செறது இல்ல" என்றேன்.

ஓ அப்படியா? சரிக்கா... நான் பாத்துக் கறேன். சாயங்காலம் உங்க வீட்டுக்கு வர்றேன்" என்றவாறு சென்றுவிட்டாள். சிறிது நேரத்தில் நிறைய காக்கைகளின் சத்தம். ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அவள் வீட்டு ஜன்னலில் சாதத்தை வைத்திருந் தாள். முதல்முறையாக அபார்ட்மென்டில் காக்கைகளின் சத்தம் கேட்கிறது. வளர்மதியை நினைத்துச் சிரித்துக்கொண்டே என் வேலையில் மூழ்கிவிட்டேன். சொன்னது போல் சரியாக மாலை நேரத்தில் என் வீட்டுக்கு வந்தாள் வளர்மதி. அவளுடைய கல்யாண ஆல்பம் மற்றும் சில இனிப்பு வகைகளையும் எடுத்து வந்திருந்தாள்.

ஒவ்வொரு புகைப்படத்தையும் காட்டி யார், என்ன என்று விலாவரியாகச் சொல்லி முடித்தவள், அக்கா! உங்க பசங்க எங்கே?" என்றாள். டியூஷனுக்குப் போயிருக் காங்க." சார், எப்போ வருவார்?" 9 மணிக்கு வருவார்." டிபன் பண்ணிட்டீங்களா?"

இல்ல வளர்மதி... இனிதான்." நான் உதவி செயட்டுமா?" இல்ல வளர்மதி... நானே பண்ணிக்கறேன்." ஏங்க்கா வார்த்தைக்கு வார்த்தை வளர்மதி வளர்மதின்னுட்டு... வளர்னு கூப்பிடுங்க போதும்" என்ற அவளை ஏனோ எனக்குப் பிடித்தது. அதுவும் ஒரே நாளில்... எல்லோரை யும் அலசி ஆராயும் எனக்கு இவளை மட்டும் அப்படிச் செயாதது ஆச்சர்யமாக இருந்தது.

விளக்கேத்தணும்.நேரமாச்சு. நாளைக்கு வர்றேங்கா" என்றவள், அக்கா, உங்க போன் நம்பர் குடுப்பீங்களா?" என்றாள். என் கணவருக்கும் மிக நெருங்கிய தோழி ஒருத்திக்கும் மட்டுமே தெரிந்திருந்த என்னு டைய தனிப்பட்ட அலைபேசி எண்ணைச் சட்டென நான் யோசிக்காமல் கொடுத்துவிட்டேன். அவளும் சென்றுவிட்டாள்.

ஆறு மாதங்கள் ஓடிச் சென் றன. நானும் ‘வளரு’ம் மிக நெருக்க மாகப் பழகிவிட்டோம். என் வீட்டுக்கு அவளும் அவள் வீட்டுக்கு நானும் எப் போது வேண்டுமானாலும் செல்லுமளவுக் குப் பழக்கமானது. அவளிடம் பிடிக்காத விஷயம் என்றால், கொஞ்சம் சுத்தக் குறைவு. அதுவும் காக்கைகளுக்குச் சாதம் வைக்கிறேன் என்ற பெயரில் அவள் வீட்டு ஜன்னல் மட்டுமல்ல, என் வீட்டு ஜன்னலையும் காக்கைகளின் எச்சத்தால் அசிங்கப்படுத்தி வைத் திருக்கிறாள். எத்தனையோ முறை சொல்லியும் கேட்கவில்லை அவள். இதெல்லாம் தேவையா? எனக்குப் பிடிக்கவே இல்லை வளர். அந்த இடத்தைப் பாரு, எவ்வளவு அசிங்கமாயிருக்கு. சில நேரம் அதுல வர்ற நாற்றம். அயோ" என்ற என்னைப் பார்த்து, விடுங்கக்கா... எப்ப பாரு அதையே பேசிட்டு..." என்றவாறு தன்னுடைய ஐந்து மாத வயிற்றைத் தடவிய படியே சிரித்தாள்.

இவளைத் திருத்தவே முடியாது" என்று எண்ணிக்கொண்ட நான் அதன் பின்பு அதைப் பற்றிப் பேசுவதே இல்லை. ஒரு மாதம் சென்ற நிலையில் ஒரு நாள் காலை காகக்கூட்டம் கரைந்தவாறு அங்கு மிங்கும் பறந்து கொண்டிருந்தது. வித்தி யாசமான அழுகைச் சத்தம் போல் இருந்தது. நாம்தான் கற்பனை செ கிறோம் என்று எண்ணி சமைய லறையில் தொடர்ந்து பாத்திரம் தேத்துக் கொண்டிருந்தேன். திடீரென்று இரண்டு மூன்று காக்கைகள் சமையலறையில் இருந்த ஜன்னலை நோக்கிப் பறந்து வந்து மோதின. எனக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி. நான் யோசிக்கும்போதே மீண்டும் மூன்று நான்கு பறவைகளாகச் சேர்ந்து என் வீட்டு ஜன்னலை முட்டி மோதின. அதிலும் இன்னும் இரண்டு காக்கைகள் ஜன்னல் கண்ணாடியைக் கொத்தின.

‘ஐயோ! இதென்ன விபரீதம்? கண்ணாடி உடைஞ்சுடும் போல் இருக்கே’ என்று நினைத்த நான் என் கணவரை அழைத்தேன். அவருக்கும் ஆச்சர்யம். ஏன் இப்படி செய்யுது இந்த காக்காங்க?" என்றவரிடம், எனக்கும் புரியல.எல்லாம் இந்த வளர்மதியால... சொல்லச் சொல்லக் கேட்காம... இப்ப பாருங்க, ஜன்னல் கண்ணாடிய இதுங்க உடைச்சுடும் போல இருக்கு. இருங்க இப்ப வர்றேன்" என்ற நான் வளர்மதியின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினேன். வளர்மதி கதவைத் திறக்கவில்லை. பின்பு கதவைக் கொஞ்சம் வேகமாகத் தட்டினேன். அப்போதும் அவள் திறக்கவில்லை.

‘என்னாச்சு வளர்மதிக்கு...? கதவைத் திறக்காமல் இருக்கமாட்டாளே! போன் பண்ணிப் பார்க்கலாம்’ என்று நினைத்துக் கொண்டே வீட்டுக்கு வந்த நான் செல் போனில் தொடர்ந்து முயற்சித்தும் ‘அழைப்பை ஏற்கவில்லை’ என்ற குரல் மட்டும் ஒலித்தது. மனதுக்குள் என்னவோ போல் இருந்தது. என் கணவரை அழைத்து, வளர் இப்படி இருந்தது இல்லை. கொஞ்சம் என் கூட வாங்களேன்" என்றேன். சரி" என்று அவரும் என்னுடன் வர இருவரும் வளர்மதி யின் வீட்டின் வாசலில் நின்று கதவை வேக மாகத் தட்டினோம்.

வளர், வளர்" என்று நான் சற்று வேக மாகக் கத்தினேன். பொறுமையாக இரு", என்ற என் கணவர் செக்யூரிட்டியையும் பக்கத்து வீட்டில் இருப்பவர்களையும் அழைத்துக்கொண்டு வந்தார். எவ்வளவோ முயற்சித்தும் கதவு திறக்கப்படவில்லை. பின்பு அனைவரும் சேர்ந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது அங்கே வளர்மதி மயங்கிய நிலையில் கிடந் தாள். அவளுடைய நைட்டி முழுவதும் ரத்த மாக இருந்தது. எல்லோரும் சேர்ந்து அவளை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றோம். அங்கு அவளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சரியான நேரத்தில் கொண்டுசென்றதாக மருத்துவர் எங்களைப் பாராட்டினார். வளர் மதிக்கு ஒன்றும் ஆகவில்லை. தாயும், வயிற் றில் உள்ள சேயும் நலம்" என்றார் மருத்துவர். அப்போதுதான் எனக்கு உயிரே வந்தது போலிருந்தது. வளர்மதியைக் கட்டியணைத் துக் கொண்டேன். வெளியூர் சென்றிருந்த அவளது கணவருக்கும் தகவல் சொல்லி யாயிற்று. வீட்டுக்கும் திரும்பி வந்தாயிற்று.

சமையலறைக்குள் சென்றேன். அங்கே காக்கைகள் ஜன்னலருகில் அமைதியாக அமர்ந்திருந்தன. அவற்றைக் கண்டதும் ஏனோ அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. படபடவென்று சாதம் வடித்தேன். அதைக் கொண்டுபோ என் வீட்டு ஜன்னலில் வைத்தேன். இப்போது அந்தக் காக்கைகள் அனைத்தும் வயிறார உண்டு சத்தம் போட்டுக் கொண்டே வானத்தில் வட்டமடித்தன. அவற்றோடு என் மனமும் ஆனந்தமாக வானில் பறந்தது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :