ஆனந்தக் கன்ணீர்


அமுதா பாலகிருஷ்ணன்
பாண்டியன்என்ன மேடம்... ரொம்ப ஜாலியா இருக்குற மாதிரி தெரியுது..." ஆமாங்க... சமையலுக்கு ஒரு ஆள் கிடைச்சிடுச்சு..." பரவால்லியே..."

ஏற்கெனவே இருந்த சமையல்காரம்மா போனதால, நானும் மருமகளும், மாத்தி மாத்தி எல்லா வேலையையும் பார்த்துக்கிட்டு இருந்தோம்... எனக்கும் வயசாயிடுச்சு. மருமகளுக்கும் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புறது, போய் கூட்டிட்டு வர்றது, பாடம் சொல்லிக் கொடுக்குறது... அப்புறம் சமையலையும் பார்த்துக்குறதுன்னு ஏகப்பட்ட வேலை. பாவம்... அவ செல்லமா வளர்ந்த பொண்ணு!

சமையலுக்கு ஆள் வேணும்னு நம்ம சொந்த பந்தம், என்னோட ஃபிரண்ட்ஸ் கிட்ட சொல்லி வச்சிருந்தேன். நம்ம மங்களம் ஆன்ட்டி, இந்த அம்மாவ அனுப்பி வச்சிருக்காங்க..." என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தாள் தனலட்சுமி.

சரி... அப்போ... இனிமே வாக்கு ருசியா சாப்டலாம்னு சொல்லு!" இந்த லொள்ளுதானே வேணாம்ங்கிறது. அப்போ இத்தனை நாளும் நாங்க வாக்கு ருசியா சமைச்சி போடலியாக்கும்..." அய... கோவிச்சுக்காத... சும்மா ஒரு தமாசுக்குச் சொன்னேன்...!"

பொல்லாத தமாஷ்! இருந்தாலும் உங்க ளுக்கு அடுத்தவ சமைச்சா நாக்குல சப்பு கொட்டி சாப்பிடுவயன்னு எனக்குத் தெரியாதாக்கும். அன்னைக்கு, நாம அந்த மல்லிகா வீட்டுக்குப் போகையில, கண்றாவியா புளித்தண்ணி மாதிரி ஒரு குழம்ப வச்சா... ஆனா, நீங்க ஆஹா... ஓகோ... பேஷ்... பேஷ்னு சப்புக்கொட்டி சாப் பிட்டியல்ல. எனக்குத் தெரியாதாக்கும். சும்மாவா எங்க ஊரில சொன்னாங்க... ‘காக்கிறவ காச்சா கழுதை மோளும் நல்லாருக்கும்’னு!"

அம்மா தாயே... நான் இந்த விளையாட் டுக்கு வரலை. ஆள வுடு தாயே" நழுவினார் செந்துர் லிங்கம். அது ஒரு கூட்டுக் குடும்பம்! ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த லிங்கம், ஓரளவுக்குப் படித்து, தந்தைக்கு உதவியாக விவசாயம் பார்த்து, வருமானம் போதவில்லை என்ற காரணத்தால், ‘கெட்டும் பட்டணம் போ சேர்’ என்ற பழமொழியைத் தாண்டி, இவர் கெடாமல் வந்து சேர்ந்தார் மெட்ராசுக்கு.

ஒரு கடையில் வேலை பார்த்து, அதில் படிப் படியாக முன்னேறி, பிறகு சொந்தக் கடை வைத்து, அதன் பின், கிராமத்தில் தூரத்து சொந்த மான பெண்ணை, பெற்றோர் நிச்சயித்தவண்ணம், திருமணம் செதுகொண்டு, பட்டணம் வந்து, வியாபாரத்தைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்தனர்.

பானை பிடித்தவள் பாக்கியசாலி! அந்த பாக்கியசாலி, தனலட்சுமி வந்த நேரம், ‘லட்சுமி’ தனத்தை நிதானமாக, படிப்படியாக வாரி வழங்கினாள். இன்று கார் பங்களா, பிள்ளைகள், பேரன், பேத்திகள் என்று அன்பான கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

லிங்கம், வயதான, தனது தாயையும், தந்தை யையும் தன்னுடனே வைத்து கவனித்துக் கொள்கிறார். குடும்பத்துக்கு ஏற்ற குலவிளக்காக, தனலட் சுமியும் மாமன் மாமியாரை மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக் கொள்கிறாள்.

பையனும், வியாபாரத்தை நவீனப்படுத்தி, தந்தைக்கு ஒத்தாசையாக இருக்கிறான். வீட்டுக்கு விளக்கேற்ற வந்த புதிய மருமக ளும் பிள்ளைகள் நான்கு பெற்றபோதும் கூட்டுக் குடும்பத்துக்கு ஏற்ற மாதிரி அன்பான மருமகள் என்று பெயரெடுத்ததில், எல்லோருக்கும் பெருமை.

இருந்தாலும்...

என்ன... வீடே ஒரு நிசப்த அசைவுடன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பட ‘ஷூட்டிங் ஸ்பாட்’ மாதிரி இருக்குது? என்ன விசேஷம்? என்ன ஆச்சு...?" ஒண்ணுமில்ல..."

ஒண்ணுமில்லாததற்கா... இப்படி இருக் கிய...?" இல்ல... சமையல்காரம்மா வேலையை விட்டு நிற்கப் போறதா சொல்றாங்க..." ஏன்... என்ன... ஆச்சி...! வந்து மூணு மாசம்தானே ஆவுது...!" என்னமோ தெரியல... ஊருக்குப் போணும்னு சொல்றாங்க... ஆனா முகம் கொஞ்சம் வாட்டமா தெரியுது..."

சரி... நான் பேசிப் பார்க்கட்டுமா...?" ம்..." அன்று மாலை, முன் வாசல் வெளியில இருக் குற செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும்போது, அந்த அம்மாவைத் தனியாகக் கூப்பிட்டு பேச்சுக் கொடுத்தார் லிங்கம்.

யம்மா... நீங்க ஊருக்குப் போறதாச் சொன் னீங்கன்னு அம்மா சொன்னாங்களே...?" ஆமாயா... நான் ஊருக்குப் போறேன். ஊரில எங்க அண்ணன் தம்பி கூட, வயக்காட்டுல வேலை செய்து பொழைச்சுக்குவேன்..."

வந்த புதுசுல... யயா, எனக்கு இந்த வீடு புடிச்சிருக்கு, நீங்க எல்லாரும் பாசமா வைச்சிருக் கீங்க, புருஷன் இல்லாத நான், என் ஒரே மருமக கூட வாழப் பிடிக்காததால, வீட்டு வேலைக்கு வந்தேன். நம்ம வீடு நல்லா புடிச்சிருக்கு. அதனால இங்கேயே இருந்துருறேன்னு சொன் னீயளே... இப்ப என்ன ஆச்சி...?"

இல்லயா, எல்லாரும் நல்லாதான் வச்சிருக் காங்க... ம்... ம்... நான் போறேன்யா." இல்ல... நீங்க ஏதோ மறைக்கறீங்க... என்ன நடந்திச்சின்னு சொல்லுங்க. என்னால சரி பண்ண முடிஞ்சா, பண்றேன்; முடியலன்னா... அப்புறம் - நீங்க போங்க..."

இல்லய... குடும்பத்துல குழப்பத்த உண்டாக்க விரும்பல..." நான்... என் மனசுக்குள்ளதான் வச்சுக்கு வேன். நீங்க சொல்ல வந்ததைச் சொல் லுங்க." ஐயா... உங்க மருமக... எப்ப பார்த்தாலும் சிடுசிடுன்னு, எரிஞ்சு எரிஞ்சு வுழுறாங்க!

நீங்க எல்லாரும் எப்படி எங்கிட்ட அன்பா பேசுறீங்க...! அவங்க ஒரு நாள் கூட எங்கிட்ட அன்பா பேசுனதில்ல! அன்பா பேசணுங்குற துல்ல, எரிஞ்சி விழாம இருக்கலாம்ல என்ன பாத்தாலே, அவங்களுக்கு, பிடிக்கலபோல! நான் எல்லாருக்கும் ஏத்தபடி சமைச்சுப் போட்டாலும் அவங்க ஏதாவது குத்தம் சொல்லிக்கிட்டே இருக் காங்க! நீங்கல்லாம், சமையல் நல்லாயிருந்தா, இன்னைக்கு சூப்பரா இருக்கு! இன்னைக்கு உப்பு கொஞ்சம் அதிகமாயிருக்கு, நேத்து நல்லா யிருந்திச்சில்ல, அத மாதிரி இருக்கட்டும்னு எவ்வளவு இதமா சொல்றீங்க..."

வெயிட்... வெயிட்... என் மருமக மதிக் கலைங்குறதுக்காகவா நீங்க போணுங்கிறங்க. நாங்க எல்லோரும் மதிக்கிறோம்ல... அதுக்காக நீங்க இருக்கலாம்ல. நாங்க எல்லாரும், ஏழ்மை யில பிறந்து, கஷ்டத்துல வளர்ந்தவங்க. எங்க ளுக்கு மத்தவங்க வலி தெரியும். மருமக, செல் வச் செழிப்புல பிறந்து, வசதியா வளர்ந்த பிள்ள! அது மட்டுமல்ல... அவ அவங்களுக்குச் செல்லப் பிள்ள. உலகம் அறியாம வளர்ந்த பிள்ள! உங்க ளுடைய அனுபவத்திற்கும், அவளுக்கும் ஏணி வச்சாலும் எட்டுமா? உங்க வயசென்ன அனுபவ மென்ன? அவ சின்ன வயசு, அறியா வயசு. மத்த வங்க கஷ்டத்தப் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாத வயசு. அவகிட்ட போ போட்டிப் போடுறீங்களே! இதுவே உங்க மகள்னா போட்டி போடுவீங்களா? உங்க மகளா நினைச்சி, கண்டும் காணாம போவீங்களா. சின்னப்பிள்ள சொன் னான்னு கோவிச்சுக்கிறீங்களே! அதெல்லாம் கொஞ்ச நாள் போனா சரியாப் போயிடும்."

இல்லயா... ‘நீ வேலக்காரிதான... நான் சொன்னபடி செ’ன்னு சொல்லும்போது, மனசுக்கு கஷ்டமாயிருக்குயா..." அய... இதையெல்லாம் பெரிசுபடுத்த லாமா? அதான் சொன்னேன்ல... உங்க பொண்ணு மாதிரி நினைச்சுக்குங்க. அவ எது சொன்னாலும் சரி, சரின்னு சொல்லுங்க. அப்புறம் அவளுக்கே மனசு மாறும்! நம்மள வெறுப்பவர்களையும் விரும்பச் செயிறதுதான் வாழ்க்கையின் வெற்றி! நீங்க தாக்குப்பிடிச்சி ஜெயிச்சுக் காட் டுங்க! நாங்க எல்லாரும் உங்களுக்கு ஆதரவாத் தான இருக்கோம்! சரி, கவலைப்படாதீங்க. எதையும் கண்டுக்காதீங்க. காட்டிக்காதீங்க. ஒங்ககிட்ட ஒரே ஒரு வேண்டுகோள்..."

என்னங்கயா...?" நாங்க இருக்குற காலத்துவரைக்கும் நீங்க எங்ககூட இருங்க. எங்க காலத்துக்கு அப்புறம் நீங்க போங்க..." அயா... அப்படிச் சொல்லாதீங்கயா...! நீங்க எல்லாரும் நூறு வயசுக்கு நல்லாயிருக்க ணும். இனிமே அந்த வார்த்தையைச் சொல்லா தீங்கயா! நான் இங்கேயே இருக்கன்யா..."

* * *

அடுத்த நாள். மருமகளிடம் தனியாகப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தார் லிங்கம்! அந்த வாப்பும் கிடைத்தது!

யம்மா... எப்படியிருக்க... பிள்ளைகள்லாம் என்ன பண்றாங்க...?" நல்லாயிருக்கன் மாமா. பிள்ளைங்கள்லாம் டி.வி.ல கார்ட்டூன் பார்த்துகிட்டு இருக்காங்க..."

யம்மா... நான் உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்மா. பேசலாமா...?" என்ன மாமா... எங்கிட்ட பேசுறதுக்கு நீங்க கேக்கணுமா மாமா..." சரிம்மா...! யம்மா... உனக்கும் சமையல் காரம்மாவுக்கும் ஏதோ..." ஆமாம் மாமா. நான் ஒண்ணச் சொன்னா அவ ஒண்ணச் செயிறா..." இல்லம்மா... அவங்க வயசுல பெரியவங்க! அவ இவன்னு சொல்லலாமா? அத்த கூட அவங்க இவங்கன்னுதான போசுறாங்க."

சாரி மாமா..." பரவால்லம்மா..." பிள்ளைங்களுக்கு ஸ்கூலுக்கு நேரமாகும் போது எனக்கு ஏத்த மாதிரி செய்ய மாட்டேங்குறாங்க."

சரிம்மா, உனக்கு ஏத்த மாதிரி செய்யச் சொல்லுறேன். நீ கவலைப்படாத. நாம எல்லோ ருக்கும் ஒவ்வொண்ணு பிடிக்குது. அத்தனையும் அந்தம்மா செய்துதானே தர்றாங்க! கொஞ்சம் டைம் முன்னபின்ன ஆகுது. அவ்வளவுதானே. சமயத் துல அத்த கூட அந்தம்மாவுக்கு ஒத்தாசையாத்தானே இருக்காங்க. அது மட்டுமில்ல. இத்தன வருஷத்துல சமையலுக்கு வந்தவங்கல்லாம், ஏனோ தானோன்னு தான் பண்ணினாங்க! அதுவும் நிலைச்சி நிக்காம... எம் பிள்ளய பாக்கணும், எம் புருஷனப் பாக்கணும்னு தானே போயிட்டாங்க. ஒரு வேலையைச் செதா, இன்னொரு வேலையைச் செயமாட்டேன்னு முரண்டு பண்ணுவாங்கல்ல. இந்தம்மா, மத்த வேலையையும் இழுத்துப் போட்டு செயிறாங்கல்ல. பாவம்... அவங்களுக்குப் புருஷன் இல்ல! பிள்ளை யிருந்தும் பிரயோசனமில்ல. ஆதரவு இல்லாத அம்மா! ஆண்டவன் அவங்க தலையில அப்படி எழுதியிருக்கான் - வேலைக்காரம்மாவா வாழணும்னு. அந்தப் பாவத்த நாம குத்திக் காட்டி சொல்லிக் காமிச்சா அவங்க மனசு எவ்வளவு வேதனைப்படும். நாம நல்லதையே நினைப்போம்.

இருந்தாலும்... யாருடைய வாழ்க்கையும் யாருடைய கையிலும் இல்லை! ‘ஆற்றங்கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே’ என்று அவ்வையார் பாடலை ஐந்தாம் வகுப்பிலேயே நாம படிச்சது தானே. அதனால... யாருடைய மனசும் நோகாம, யாருடைய வருத்தத்திற்கும் ஆளாகாம, அனுசரிச்சி, அரவணைச்சு போனால் நல்லதுன்னு நான் நினைக்கிறேம்மா. இதுவரைக்கும் வந்ததிலேயே, இந்த அம்மாதான் பொறுப்பா, எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செயிறாங்க. இவங்கள விரட்டிட்டா இன்னொரு ஆளத் தேடணும்! அது எப்படி அமையுதோ தெரியாது. அப்புறம் அதை விரட்டிட்டா, வேற ஒரு ஆளத் தேடணும்! அதனால... இப்ப இருக்குற இந்த அம்மாவே நல்லாத்தான இருக் காங்க. எனக்கு ஒரு உதவி பண்ணுவியாம்மா?"

என்ன மாமா?" இன்னொரு ஆளத் தேடுற சிரமத்த எனக்குக் கொடுக்காம... இந்த அம்மாவையே கொஞ்சம் அனுசரிச்சி, அரவணைச்சி, தட்டிக் கொடுத்து போவியாம்மா?" என்ன மாமா... நீங்க போ என்னக் கையெடுத்துக் கும்பிடணுமா? சாரி, மாமா... நான் அனுசரிச்சிப் போறேன்? மாமா, இனி உங்களுக்கும் அத்தைக்கும் சிரமத்தைக் கொடுக்கமாட்டேன்." சொல்லும்போதே அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. லிங்கத்தின் கண்களிலும் கண்ணீர். அது ஆனந்தக் கண்ணீர்!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :