அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

மேகங்கள் வாழும் சொர்க்கம் 5
ரமணன்
ஓவியம்: ரமணன்அசாம் மாநிலத்தில், ஜோஹாட் மாவட்டத்தில், பிரம்மபுத்திரா நதிக்கரையிலிருக்கும் சிறிய கிராமம் கோகிலமுக். அங்கே அதிகாலை நேரத்தில் நதியின் நடுவில் இருக்கும் தீவுக்குச் செல்ல, கரையில் படகுக்காகக் காத்திருக்கிறோம். வெண்பனி மூட்டம் பரவியிருப்பதால் நதியோ, படகோ கண்ணில் தெரியவில்லை. படகு எப்போது வரும் எனக் கேட்க, அருகில் எவரும் இல்லை. பத்து நிமிடக் காத்திருப்புக் குப் பின் தொலைவில் கேட்கும் படகின் ஓசை நம்பிக்கையளிக்கிறது. அதிகமான மனிதர் களுடனும் பசுமையான காகறிகளுடனும், அந்தச் சிறிய படகு வந்து நின்றவுடன் எங்கி ருந்தோ வந்த ஒரு டெம்ப்போ அத்தனை யையும் அள்ளிக்கொண்டு மறைகிறது.

படகுக்காரரிடம் நம்முடன் உதவிக்கு வந்த ராணுவ வீரர் பேசுகிறார். நாம் மொலா காடுகளைப் பார்க்க வந்திருப்பதைச் சொல்லு கிறார். மெல்லச் செல்லும் படகைப் போலவே பனியும் கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறது. அந்தத் தீவு தெரிகிறது. அரை மணி நேரப் பயணத்துக்குப் பின்னர் அதை அடைகிறோம். நதியின் நீர் மட்டத்தைவிட உயரத்திலிருக்கும் நிலப்பரப்பிற்குப் போக வசதிகள் எதுவும் இல்லாததால் மிகக் கவனமாக அந்தச் சரிவில் ஏறிப் போகிறோம். இதுதான் மொலா காடுகள் இருக்கும் தீவு. இன்று ‘தீவு’ என்ற கௌரவத்தைப் பெற்றிருக்கும் இந்த இடம் நீண்ட காலமாக ஒரு பரந்த மணல் திட்டாகத் தான் இருந்தது.

பள்ளி சென்று, படிக்க வாப்பு இல்லாத அந்த 16 வயது இளைஞனுக்கு, 1979இல் ‘கோல்காட்’ என்ற அருகிலுள்ள மாவட்டத்தில் அரசின் சமூகக் காடுகள் வளர்க்கும் திட்டத்தில் தினக்கூலியாக வேலை கிடைத் தது. வேலை, மரங்கள் நடுவது. அந்த வேலை அவனுக்கு மிகவும் பிடித் திருந்தது. காரணம், சிறுவ னாக இருந்தபோது இந்த மணல்திட்டில் வாழும் பாம்புகள், கடும் வெயில் தாக்கி இறந்து கொண்டி ருப்பதைக் கவனித்து, அவை வசதியாக நிழலில் வளர மூங்கில் கன்றுகளை நட்டு, தினமும் நீந்திப்போ அதற்குத் தண்ணீர்விட்டு வளர்வதைப் பார்த்துச் சந்தோஷப்பட்டிருக் கிறான். இன்று அதுவே வேலையாகக் கிடைத்திருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியுடன் அதைச் செய்து கொண்டிருந்தார் அந்த இளைஞர். அவர் பெயர் பையாங்க்.

அந்த மாவட்டத்தில் பணிகள் முடிந்ததும் அடுத்த மாவட்டத்துக்கு நகர்ந்தது அந்தப் பழங்குடி கூலிகள் குழு. ஆனால், பையாங்க் அவர்களுடன் போகவில்லை. தான் நட்ட மரம், செடிகளுக்குக் கிராம மக்கள் ஒழுங்காக நீர் ஊற்றாவிட்டால் என்ன செவது என்ற கவலைதான் காரணம். சம்பளம் கிடையாது, தங்க இடம்கூடக் கிடையாது என்றாலும் அந்தக் கிராமத் திலேயே தங்கி மரச் செடி களுக்கு நீர் ஊற்றிக்கொண் டிருந்தார். அந்தப் பணியி லிருக்கும்போதுதான், ‘இதை நாம் ஏன் பாம்புகளுக்காக மூங்கில் நட்ட இடத்தில் செயக் கூடாது?’ என்று விழுந்த எண்ண விதைதான் இன்று ஒரு தனி மனிதன் உருவாக்கிய ‘காடு’ என்ற பிரம் மாண்ட விருட்சமாக இங்கு நிற்கிறது. அதைப் பார்க்கத்தான் இந்தக் குளிரிலும் படகுப் பயணம்.

30 ஆண்டுகளாக இந்த மனிதர் தனியாக அரசிடமோ, நிறுவனங்களிடமோ உதவி எதுவும் பெறாமல் இந்த மணல் தீவுக்கு வந்து, தினசரி வகை வகையான மரக்கன்று களைக் காடுகளிலிருந்து கொண்டுவந்து நட்டு, நீர் ஊற்றி வளர்த்திருக்கிறார். செடி, கொடிகள் எதுவுமே இல்லாதிருந்த மணல் மேடுகள் மெல்லச் சோலையாகி இன்று 1360 ஏக்கரில் காடாகி நிற்கிறது. இவர் இப்படித் தனியாக மணல் தீவில் கண்ணும் கருத்துமாக வளர்க்கும் காடு பற்றி யாருக்கும் தெரியாது. பலர், ஏதோ அரசின் திட்டம் என நினைத்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கிராமத்தில் சிலர், ‘பையாங்க் ஒரு பைத்தியக்காரன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இந்த மனிதர் எதற்கும் கவலைப்படாமல் கருமமே கண்ணாய் இருந்தார்.

உள்ளூர் செதித் தாள்களில்கூட அதிகம் வெளிவராத இந்தக் காடு பற்றிய செதி 2008ல் ஒரு நாள் காட்டுத்தீயாகப் பரவியது. காரணம் ஆச்சர்யமானது. அருகிலுள்ள ஒரு கிராமத்தில் 100 காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செதுவிட்டுக் காணாமல் போ விட்டன. அதைத் தேடிப் புறப்பட்ட வனத் துறை அதிகாரிகள், அதை இந்தக் காட்டில் கண்டுபிடித்தனர். ‘இது என்ன காடு? நமது துறை ஆவணங்களிலேயே இல்லையே?’ என்று ஆராந்தபோதுதான் இந்த மனிதரின் ஆச்சர்யமான, நம்பமுடியாத செயல் தெரிந் தது. (‘கண்டுபிடித்த’ காட்டை அரசு உடனே அளவிட்டுப் பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவித்தது வேறு விஷயம்.) ஒரே இரவில் இந்திய ஊடகங்களில் மட்டுமில்லை, உலகின் பல பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியானார் ஜாதவ் பையாங்க். தொடர்ந்து பி.பி.சி., நேஷனல் ஜியாக்ரபி, டிஸ்கவரி சானல்கள் இவரையும் இவரது காட்டையும் உலகிற்குக் காட்டின.

இவரது பணியை வந்து பார்த்து வியந்து போன புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தர், இவரைப் புவி நாள் அன்று தில்லிக்கு அழைத்து, ‘ஃபாரஸ்ட் மேன் ஆப் இந்தியா’ என்ற பட்டத்தை 2012ல் வழங்கியிருக்கிறார். அதே ஆண்டு தொடர்ந்த பசுமை வளர்ச்சிக்காக பிரான்ஸில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் இவருக்கு விருதும் பதக்கமும் வழங்கியிருக்கிறார்கள். தாலாந்து மன்னரின் விருதை, தூதர் வந்து வழங்கியிருக்கிறார். உலகமே இவரை ஆச்சர்யத்துடன் பார்த்த பின்னர் மத்திய அரசு இவருக்கு 2015ல் பத்மஸ்ரீ வழங்கியிருக்கிறது. இவரைப் பற்றி ஆறு ஆவணப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இரண்டு விருது பெற்றிருக்கின்றன.

சிறுவர்களுக்கான காமிக்ஸ் புத்தகமாக இவரது கதையும் வெளிவந்திருக்கிறது. இன்று இந்தக் காட்டில் புலிகளும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட மான்களும் வாழ்கின்றன. எண் ணற்ற பறவைகள் வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 100க்கும் மேலான யானைகள் இங்கு வந்து குட்டிகளைப் போடுகின்றன. முந்நூறு ஏக்கரில் செழித்த மூங்கில் காடு ஒன்றும் உருவாகியிருக்கிறது. காட்டைப் பார்ப்பதற்கு இயற்கை ஆர்வலர்களும் மாணவர்களும் வருகின்றனர். அருகிலிருக்கும் ரெஜிமென்ட் களிலிருந்து ராணுவ அதிகாரிகள் டிரெக்கிங்க்காக வருகிறார்கள். அந்தக் காட்டிற்குள் போகும் முன், சில ஆண்டுகளாக அங்கே உருவாகிக்கொண்டிருக்கும் ஒரு சின்னக் கிராமத்தைக் கடக்க வேண்டும். இந்தக் காட்டிருக்கும் அந்தக் கிராமத்துக்கும் ‘மொலா’ என்று பெயரிட் டிருக்கிறார்கள். ‘மொலா’ என்பது ஜாதவ் பையாங்க் சார்ந்த பழங்குடி மக்களின் இனக் குழுவின் பெயர்.

கிராமத்துக்குள் போக நதிக்கரையிலிருந்து கோரைப் புதர்கள் வழியாக அரை மணி நேரம் நடக்க வேண்டும். வழியெங்கும் சந்தோஷத்துடன் பொங்கிக்கொண்டிருக்கும் பசுமை. 300 பேருக்கும் குறைவாக வசிக்கும் அந்தக் கிராமத்தில் பழங்குடி மக்கள் வசிக்கவும், விவசாயம் செயவும் அனுமதிக்கப்பட்டிருக் கின்றனர். ஆனால், நிலம் அவர்களுக்குச் சொந்தமில்லை; அரசினுடையது. கட்டடங் கள் எழுப்ப அனுமதியில்லை. கிராமத்தில் கடைகள், வாகனங்கள், எதுவுமில்லை. ஏன் சாலைகளே இல்லை. அழகான அமைதி. சில குடிசைகளின் முன்னால் சோலார் மின் வசதி யைச் சொல்லும் தகடுகள்.

பரங்கிக்கா கொடி பரவியிருக்கும் ஒரு குடிசை வீட்டில் இருக்கும் அந்தக் கிராமத்தின் தலைவர் மகிழ்ச்சியுடன் நம்மை வரவேற் கிறார். காட்டின் உள்ளே தனியாகப் போவது உசிதமில்லை. மிருகங்களினால் ஆபத்து நேரக்கூடும். பாதுகாப்பான இடம் வரை போ வாருங்கள்" எனப் பாதுகாப்புக்கு ஒரு பழங்குடி நண்பரை அனுப்புகிறார். ஒரு வினோத வடிவிலான கத்தியுடன் அவர் நம்மைக் காட்டுக்கு அழைத்துச் செல்கிறார். ‘இந்தக் கத்தியால் இவர் என்ன செதுவிட முடியும்?’ என நினைத்துக்கொண்டே பின் தொடர்கிறோம். சில காட்டெருமைகள், மான்கள் தவிர எதுவும் கண்ணில் படவில்லை. ‘இனி போகமுடியாது; இது புலிகள் நடமாடும் பகுதி’ என்று சொன்னதால் திரும்புகிறோம். களைப்புடன் வந்த நமக்குக் கிராமத் தலைவர், டீ சாப்பிடுகிறீர்களா? எனக் கேட்டது தெய்வவாக்காகக் கேட்டது.

சாப்பிட்ட பின்னர் தான் கடைகள் ஏதுமில்லாத இந்த இடத்தில் எப்படி இந்த டீ, பிஸ்கட் எல்லாம் கிடைக்கிறது என யோசிக்கிறோம். நாங்கள் டீ, பால் அருந்துவதில்லை. அதிகாரி கள் வந்தால் தர வைத்திருக்கிறோம். அவசிய மானபோது மட்டும் பாலைக் கறந்து கொள் வோம்" என அருகிலிருக்கும் ஒரு பசுவைக் காட்டுகிறார். கறந்த பாலில் தயாரிக்கப்பட்ட நிஜமான இன்ஸ்ட்டென்ட் டீ. அந்தச் சிறிய வீட்டின் முன்னே பெரிய டிராக்டர். இது எப்படி இங்கே? என வியக்கும் நம்மிடம், பத்தாயிரம் செலவழித்து விசேஷ படகின் மூலம் இங்கே கொண்டுவந்து பயன் படுத்துகிறோம். இந்தத் தீவின் மண் முதன் முதலாக உழப்பட்டது இந்த டிராக்டரால் தான். கிராமத்தில் மற்றவர்களின் பயன்பாட் டுக்கும் கொடுக்கிறேன்" என்று சொல்லும் இவர் கூலி வேலைகள் செது சிறிய காண்ட் ராக்டராக உயர்ந்தவர். தங்கள் இன மக்களுக்கு பையாங்க் உருவாக்கிய இந்தக் காட்டி னால் புது வாழ்வு" என்கிறார்.

கிராமத்தில் 20 மாணவர்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் இருப்பதைப் பார்த்த ஆச்சர்யத் தில் அதன் ஆசிரியரைப் பார்க்க விரும்பு கிறோம். அவர் தீவில் வசிக்கவில்லை என்றும், இன்று விடுமுறை என்பதால் வரவில்லை என்றும் சொல்லுகிறார்கள். நம்மையே வியப்புடன் பார்க்கும் அந்தக் குழந்தைகளின் பெயரைக் கேட்டபோது, கைகளைக் கூப்பி நமஸ்கார்" என்று சொல்லி தங்கள் பெயரை ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள். ஆசிரியர் அப்படித்தான் சொல்லவேண்டும் எனச் சொல்லிக் கொடுத்திருக்கிறாராம். கல்வியுடன், அடுத்தவரை மதிக்கும் பண்பு களை, ஆங்கிலத்தை இந்தப் பழங்குடி குழந்தைகளுக்குப் போதித்திருக்கும் அந்தப் புண்ணியவதியைப் பார்க்க முடியவில்லையே என்று சற்று வருத்தமாகயிருந்தது.

அநியாயத்துக்கு அழகாகவும் அமைதியாக வும் இருந்த அந்தக் கிராமத்திலிருந்து விடை பெற்றுக் கொள்ளும் முன் ஒரு சிறுமி ஒரு பரங்கிக்காயைப் பறித்து நமக்குப் பரிசாக அளிக் கிறாள். மனதைத் தொட்ட நிகழ்வு அது. உடன் வந்தி ருந்த என் மனைவியின் கண் களில் நீர் கட்டிவிட்டது. ‘நாங்கள் நதியின் மறுகரை யில் வசிப்பவர்கள் இல்லை. வெகு தூரத்திலிருந்து வந்த வர்கள்’ என்பதைச் சொல் லிப் புரியவைக்க முடியவில்லை. கையில் ஒரு இந்திய வரைபடம் இருந்து அதில் காட்டி யிருந்தால் அந்தக் குழந்தை புரிந்துகொண் டிருக்குமோ என்னவோ?

ஆயுதம் தாங்கிய நமது பாடிகார்ட் உடன் வந்து படகிலேற்றிவிடுகிறார். நண்பகலில் பளிச்சென்று தெரியும் பிரம்மபுத்திராவின் கம்பீரத்தை ரசித்தபடியே கரையை அடை கிறோம். அந்தக் கிராமத்தில் வசிக்கும் ஜாதவ் பையாங்க் வீட்டைத் தேடவே வேண்டாம், தெருமுனையிலிருக்கும் கான்கிரீட் போர்டு சொல்லுகிறது. மிக மிக எளிமையான வீடு. நான்கு கல்தூண்களின் மேல் நிற்கும் இரண்டு அறைகளிருக்கும் ஒரு மூங்கில் குடிசை, கீழே கல்யாண்களுக்கிடையே நிறுவப்பட்டிருக்கும் சின்னத் தறி. அதில் நெது முடியும் நிலையிலிருக்கும் துண்டு.

பையாங்க் ஜாம்ஷெட்பூட் பயணத்திலிருப்பதாகவும் அன்றிரவு திரும்பக்கூடும் என்றும் குடும்பத்தினர் சொல்லுகிறார்கள். இப்போ தெல்லாம் அடிக்கடி பல நகரங்களில் பல அமைப்புகளில் பேச அழைக்கப்படுவ தாகவும் சொல்லுகிறார்கள். சற்றே ஏமாற்றத் துடன் திரும்புகிறோம். அந்தப் பகுதியிலுள்ள ஒரு பழைய கோயிலைத் தேடிப் போக்கொண்டிருந்த மாலை நேரத்தில் பையாங்க் நண்பரிடமிருந்து போன். அவர் கௌகாத்தி விமான நிலையத்தி லிருந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார். இரவு எவ்வளவு நேரமானாலும் நாம் சந்திக்கலாம் என்ற செய்தியைச் சொல்லுகிறது. மீண்டும் அந்தக் கிராமத்திற்குப் போகிறோம்.

பார்த்தவுடன் பளிச்சென்று தெரியும் பழங்குடி மக்கள் முகம். அதிக உயரமில்லை. லுங்கி, டீ சர்ட்டில் இருக்கிறார். கூட்டங் களுக்கும் இதுதான் உடையாம். சில சமயம் மட்டும் சட்டை அணிவாராம். ஆங்கிலம், ஹிந்தி தெரியவில்லை. அசாமிய மொழியில் தான் பேசுகிறார். இவரது நண்பரான கல்லூரிப் பேராசிரியர் உதவியுடன் அவருடன் பேசுகிறோம்.

விருதுகள் கிடைத்ததில் சந்தோஷம்தான். ஆனால், நமது அரசு காடுகளைக் காப்பாற்ற இன்னும் நிறையச் செய வேண்டும். மக்களுக்குக் காடுகளின் அவசியத்தைப் புரிய வைக்க வேண்டும்" என்கிறார். கடந்த சில வருடங்களாக இயற்கையை நேசிக்கும் கர்னல் ரவிநாரயணன், குரு கேப்டன் சதீஷ் போன்ற ராணுவ அதிகாரிகளும் தன்னார்வலர்களும், அமைப்புகளும் இந்தக் காட்டில் ஆர்வம் காட்டுவதையும் உதவிகள் செவதை யும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். மிகச் சிறு வயதிலேயே இயற்கையின் மீது நாட்டமும் அதை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமும் எழுந்ததை ஆண்டவன் எனக்கு இட்ட கட்டளையாக நினைக்கிறேன். இயற்கையைப் பாதுகாக்கப் பின்பற்ற வேண்டிய ஆறு விஷயங்களை மாணவர்களுக்குப் போகுமிடமெல்லாம் சொல்லுகிறேன்" என்கிறார்.

பத்மஸ்ரீ விருது பற்றிய செதி அவருக்குத் தெரிவிக்கப்படும் வரை அந்த விருது பற்றிய விவரங்கள் எதுவும் தெரியாது என்று சொல் லும் இவர், இப்பொழுதும் தினமும் சைக்கி ளில் நான்கு கி.மீ. சென்று, படகில் நதியைக் கடந்து, தான் காதலிக்கும் காட்டில் புதிய இடங்களைத் தேடி விதைகளைத் தூவி வருகிறார். அடுத்த முறை வரும்போது தமிழ்நாட்டிலிருந்து விதைகள் கொண்டு வாருங்கள், இங்கே அவற்றையும் முயற்சித் துப் பார்க்கிறேன்" என்கிறார்.

நம்மை வீட்டிற்குள் அழைத்து தன் தந்தைக்கு அளிக்கப்பட்டிருக்கும் பத்மஸ்ரீ பதக்கத்தையும், மும்பை விழாவில் அப்துல் கலாமால் வழங்கப்பட்ட நினைவுச் சின்ன மான ஆளுயர வெண்கல விளக்கையும் பெருமிதத்தோடு காட்டுகிறார் அவரது மகள். அருகிலிருக்கும் நகரின் கல்லூரியில் ஆங்கில இலக்கியப் பட்டப்படிப்பு மாணவி. அப்பாவைத் தொடர்ந்து நீங்களும் இந்தக் காடு வளர்க்கும் பணியைச் செவீர் களா?" என்ற நம் கேள்விக்கு, நிச்சயமாக" என்ற இந்தப் பெண்ணின் பதிலில் பையாங்க் வளர்த்திருப்பது காடுகள் மட்டுமில்லை எனப் புரிகிறது.

விடைபெறும் நமக்கு அவர் குடும்பத்தினர் நெத ஒரு அழகான கைத்தறி துண்டைப் போர்த்துகிறார், பையாங்க். இம்மாதிரித் துண்டு போடுவது இந்திய வடகிழக்குப் பகுதியில் மிகப் பெரிய கௌரவம். அரசியல்வாதிகளுக்குப் போடும் சம்பிரதாயச் சால்வை மாதிரி இல்லை இது; மிகவும் மதிக்கும் விருந்தினருக்கு மட்டுமே" என்று நமக்குச் சொல்லுகிறார் பேராசிரியர். உலகம் பாராட்டும் இவரைக் கௌரவிக்க நாம் சரியான ஏற்பாடுகளுடன் வரவில்லையே எனத் தோன்றிற்று. அதை அவரிடம் சொன்ன போது, என்னைப் பார்க்க நாட்டின் மறுமுனையிலிருந்து வந்து காத்திருந்து இந்த இரவு நேரத்திலேயும் சந்திக்கிறீர்களே; அதுதான் எனக்குப் பெரிய கௌரவம்" என்கிறார்.

‘இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது’ என்றார் அண்ணல். இந்தப் பயணத்தில் இன்று சந்தித்த எளிமையான கிராம மக்கள் காட்டிய உண்மையான அன்பில் அந்த வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.

(பயணம் தொடரும்)
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :