என்ன செய்யப்போகிறார் சசிகலா?

கவர் ஸ்டோரி
மீரான்தமிழகத் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பவர்களில் மிக முக்கியமானவர் சசிகலா. இந்தத் தேர்தல் முடிவுதான் அவரது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயக்கப் போகிறது.

ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூருவில் நான்கு ஆண்டுகாலச் சிறை தண்டனையை அனுபவித்தார் சசிகலா. இந்தச் சிறைவாசத்துக்குப் பின் தமிழகம் திரும்பினார். அப்படித் தமிழகம் திரும்பிய சசிகலாவுக்கு பெங்களூரு டூ சென்னை வழியில் 23 மணிநேரம் பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த வரவேற்பு சில எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு முக்கிய காரணம் அந்த வரவேற்பில் அவர் பேசியிருந்தது.

தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன், அ.தி.மு.க. அலுவலகத்துக்குச் செல்வீர்களா? என நிறைய பேர் கேட்கின்றனர். பொறுத் திருந்து பாருங்கள், என்ன நடக்கப்போகிறது என்று. நான் தொண்டர்களின் அன்புக்கும், மக்களின் அன்புக்கும் எப்போதுமே அடிமை. எம்.ஜி.ஆர். கூறியதைப்போல, ‘அன்புக்கு நான் அடிமை, தமிழ்ப் பண்புக்கும் நான் அடிமை, கொண்ட கொள்கைக்கும் நான் அடிமை, தமிழ் மக்களுக்கும், தொண்டர்களுக்கும் என்றுமே நான் அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு என்றுமே நான் அடிபணிய மாட்டேன்."

ஆனால் கிளைமாக்ஸ், எதிர்பாராத திருப்ப மாக இருந்தது. சில நாட்கள் அமைதிக்குப் பின்னர் சசிகலா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தற்போதைய நிலையில் அரசியலில் ஒதுங்கி இருக்கப் போவதாகவும் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதனையடுத்து சசிகலாவைச் சுற்றிய எதிர் பார்ப்புகள் அத்தனையும் முடிவுக்கு வந்தன. இதனால் சசிகலா வருகைக்குப் பின்னர் அ.தி.மு.க.வில் பிரளயம் ஏற்படும் என்பது முடிவுக்கு வந்தது. சசிகலாவை அமைதிப்படுத் தியது எது?

சிறையிலிருந்து வெளிவந்த சசிகலாவை அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் ஒருவர் கூட சந்திக்கவில்லை. தில்லி சென்றிருந்த எடப்பாடி பழனிசாமி சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கவே மாட்டோம் என்று அறிவித்தார். இந்த நிலையில் அதுவும் குறிப்பாக, தேர்தல் நடந்து முடிந்த பின்னர் சசிகலா ஓர் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கினார். சென்னையில் உள்ள கிருஷ்ணப்பிரியாவின் தி.நகர் இல்லத்தில் தங்கியிருந்த அவர், கடந்த மாதம் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்தவாறே தமிழகத்தின் முக்கியக் கோயில்களுக்குச் சென்று சிறப்பு பூஜைகள் செதுவருகிறார். தஞ்சாவூர், ராமேஸ்வரம், திருப்புல்லாணி, மதுரை மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றம், அழகர் மலை எனப் பல கோயில்களுக்குச் சென்று சிறப்பு பூஜைகளைச் செய்துவருகிறார்.

சசிகலாவை அ.ம.மு.க.வைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் சந்தித்து ஆசி வாங்கிவருகிறார்கள். தற்போது தேர்தல் களம் மிகவும் பிஸியாக இருந்த காலகட்ட நிலையில் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கியிருந்தார் சசிகலா. அ.ம.மு.க. வேட்பாளர்கள் குறிப்பிட்ட சில தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு டஃப் கொடுத்துவருகிறார்கள். நிச்சயம் வெற்றிபெறுவார்கள். அல்லது அ.தி.மு.க. தோல்விக்குக் காரணமாவார்கள் என்ற நிலை இருக்கிறது. அப்படிப்பட்ட வேட்பாளர் களுக்கு வாழ்த்துச் சொல்லவும், தீவிரமாகத் தேர்தல் பணியாற்ற வேண்டுமென்றும் ஊக்கப்படுத்தவே இந்தப் பயணத்தை சசிகலா திட்டமிட்டார் என்கிறார்கள்.

வெளியே ஆன்மிகப் பயணமாகத் தெரிந்தா லும், இது திட்டமிட்ட அரசியல் பயணம் என்றே விஷயம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். இது ‘அரசியலைவிட்டு ஒதுங்குகிறேன்’ என்று உருக்கமாக அறிக்கைவிட்டு சிறிது நாட்கள் ஓவெடுத்த சசிகலாவின் அரசியல் ரீ-என்ட்ரி என்று அ.தி.மு.க. தலைவர்கள் கணித்து அதற்கேற்ப காகளை நகர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

ராமேஸ்வரம் கோயிலில் சிறப்பு பூஜை செய்ய வந்தவரை, அ.ம.மு.க.வின் ராமநாத புரம் வேட்பாளர் ஜி.முனியசாமி, திருவா டானை வேட்பாளர் வ.து.ஆனந்த், முதுகுளத்தூர் வேட்பாளர் முருகன் ஆகியோர் வரவேற்றனர். அன்று முழுவதும் அவருட னேயே இருந்தனர். அப்போது பல விஷயங் களை சசிகலா பகிர்ந்திருக்கிறார். தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கு எதிராக வரும், அதன் பின்னர் துரோகிகளைத் தவிர அனை வரும் என்னைத் தேடி வருவார்கள். அதுவரை நான் அமைதியாக இருப்பேன்" என்று கூறிய தாக அவருக்கு நெருங்கியவர்கள் சொல்லு கிறார்கள். அந்த மாவட்டத்தின் சில மூத்த பத்திரிகையாளர்களிடமும் பேசியிருக்கிறார். இது குறித்து அவர் ஆன்மிகக் குருவிடமும் ஆலோசனை கேட்டதாகவும் ஒரு செய்தி கசிகிறது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த மறைந்த மூக்குப்பொடி சித்தர்தான் தினகரனின் ஞான குரு. பிரச்னையான நேரங்களில் மூக்குப் பொடி சித்தரை தரிசனம் செவதுதான் தினகரனின் வழக்கம். இந்தத் தேர்தலில் கூட திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மூக்குப்பொடி சித்தரின் சன்னதிக்கு தினகரன் சென்ற பின்னர்தான் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவரி டம் சசிகலா சார்பாக தினகரன் பேசியிருப்பதாகத் தெரிகிறது.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் மகளுக்கு ஜூன் 13-ந் தேதி திருவண்ணாமலை கோவிலில் திருமணம் நடைபெற உள்ளது. அன்று அந்த நிகழ்ச்சி யிலேயே சசிகலா நீண்ட உரையாற்ற இருக் கிறாராம். எப்படியும் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. பின்னடைவைச் சந்திக்கவே வாப்பிருக்கிறது. இந்தப் பின்னடைவை சரி செய சசிகலா தலைமையே தீர்வு என்கிற குரல்கள் மே 2-க்குப் பின்னர் அ.தி.மு.க. வில் எழும். இதற்கு ஏற்ப ஜூன் 13-ந் தேதி சசிகலா நிகழ்த்தும் உரையில், ‘ஜெயலலிதா கட்டிக் காப் பாற்றிய அ.தி.மு.க.வை நூற்றாண்டுகளுக்கும் காப்பாற்ற தாம் மீண்டும் அரசியலுக்கு வருகிறேன்’ என்கிற அறிவிப்பை வெளியிடுவார் என்கின்றது தினகரன் தரப்பு.

அதைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக போயஸ் கார்டனில் வேதா நிலையம் போன்ற அமைப்பி லேயே தனக்காகக் கட்டப்பட்டு வரும் வீட்டி லிருந்து ஒரு எழுச்சிப் பயணத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் பயணம் செயப்போகிறார் என்கிறார்கள் அ.ம.மு.க. பிரமுகர்கள்.

ஒருவேளை அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் வாப்பைப் பெற்றால்?

அம்மாவின் நல்லாட்சிதான் தொடர வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதற்காகத் தொண்டர்கள் தலைமைக்கு உதவ வேண்டும் என்று அறிவித்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற வாசகம்தான் இருக்கிறதே.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :