நூல் அறிமுகம்

கடன் வாங்கிய கருத்துகளைக் கொண்டு சிந்தனையாளன் ஆகாதே!
ஜெ.ரகுநாதன்நாற்பத்தியிரண்டு வருஷங்களுக்கு முன்னால் எனக்கு வந்த லெட்டரில் ஒரு வாக்கியம் என்னைப் புரட்டிப்போட்டு இன்றளவும் என் மனசில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாக்கியத்தை ‘’intellectual on borrowed thought`` என்று எனக்குக் கடிதத்தில் எழுதியவர் பிரபல எழுத்தாளர் உஷா சுப்பிரமணியன்.

காலேஜ் படித்துக்கொண்டிருந்த நான் அவரின் கதைகளைப் படித்துவிட்டு என் கருத்துகளை விலாவாரியாக அவருக்கு எழுதப்போ அதற்கு வந்த பதிலில்தான் இந்த வாக்கியம்!

ஆக, நான் எழுதிய பல வார்த்தைகளில் இருக்கும் என் ‘கடன் வாங்கிய’ சிந்தனை களின் ‘லட்சணத்தை’ அவர் அப்போதே கண்டுகொண்டு எனக்கு அறிவுரை சொல்லி யிருந்தார். ஏதோ ஒரு வாசகன் எழுதிய கடிதத்திற்கு நன்றி என்று சம்பிரதாயமான பதிலைப் போட்டுவிட்டு அடுத்த வேலையை கவனிக்கப் போயிருக்கும் அளவுக்கு அவர் பிஸிதான். ஆனாலும் எழுதிய இளைஞனுக்கு மெனக் கெட்டு தெளிவுற பதில் எழுதிய அக்கறைதான் உஷா சுப்பிரமணியம்.

அறிவுறுத்திய அந்த வாக்கியம் இன்றள வும் என்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அவரின் சிறுகதைத் தொகுப்பான உஷா சுப்பிரமணியன் கதை களிலும் நாம் காண்பது அந்த அக்கறையைத் தான்.

கற்பனையை ஓடவிட்டு கதைகள் எழுது வது எவருக்கும் இயல்பு. ஆனால் அந்தக்கதை களில் ஒரு செதி அல்லது படிப்பினை இருக்கவேண்டும் என்பது சிலராலேயே முடிந் திருக்கிறது. எல்லா காலகட்டத்திலும் சமூக அவலங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக் கின்றன. அதைக் கதையாக்கிப் படிப்பவர் களின் மனதில் ஒரு ‘சுருக்’கை உண்டாக்கி அவலங்களின்பால் மனதைத் திருப்பச் செ வதும் சமூக சேவைதானே! அதைத் திறம்பட செய்துகொண்டிருந்தவர் உஷா சுப்ரமணியன். அவரது 56 கதைகள் ஒரு தொகுப்பாக 500 பக்கங்களில் வெளியாகியிருக்கிறது.

புகை கதையில் ஒரு மனநலக் காப்பகத்தின் சில நிதரிசங்களைச் சொல்லி கூடவே வைத்தி யரின் அலட்சியத்தையும் கோடிக்காட்டுகிறார். மாறுபாடுகளில் கமலேஷ் எல்லாவித அழுத்தங்களும் கொண்ட ஏழை இளைஞன். ஆனால் அவனால் எப்படி டிப்ரெஷன் ஏதும் இன்றி சகல கவலைகளுக்கும் நடுவில் ஒன்றுமே நடக்காதது போல வாழ முடிகிறது என்பதில் இந்தியாவின் ஸைக்கியை தொட்டுக் காண்பிக்கிறார். த்ரில் கதையின் அனு குடும்ப கோர்ட் நீதிபதியையே திடுக்கிட வைக்கும் முடிவைச் சொல்லி நடந்து போகும் போது நாம் நிமிர்ந்து உட்காருகிறோம்.

நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண் டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தக் கதைகள் எல்லாம் எழுதப்பட்ட கால கட்டம் ஆயிரத்தித்தொள்ளாயிரத்தி எழுபது, எண்பதுகள். அப்போதைய தமிழ்ச் சமூக நிலைப்பாடுகளிலிருந்து இன்று நாம் வேறு பட்டு நிற்கிறோம். அன்றைய வேலைக்குப் போகும் பெண் என்பவள் பெரும்பாலும் தோளில் தொங்கும் பையுடன் பஸ் ஏறி இடிபட்டு ஆஃபீசுக்குப் போ மானேஜரிடம் திட்டு வாங்கியும் சக ஊழியர்களின் காதல் கேலிப் பேச்சிற்கும் ஆளாகுபவள். ஐ.டி. படித்து ஸ்கூட்டரில் செல்பவள் போல தன்னைக் கேலி செய்யும் ஆணிடம் நடு விரலைக் காண்பித்துவிட்டு அலட்சியமாக அவனை ஓவர்டேக் செதுபோகும் இன்றைய பெண்ணில்லை. உஷா சுப்பிரமணியனின் கதைகளில் அந்தக் காலப் பெண்களின் மன முதிர்ச்சியும் அவர்களில் சிலர் சமூகப் பிரச்னைகளை கையாளும் திறனும் கொண்ட வர்களாகச் சித்திரிக்கப்படும்போது அன்றைய காலகட்டத்தில் இக்கதைகள் ஒரு தீர்வையே சொல்லக்கூடியவையாக இருந்தன.

கௌரி, ஏமாற்றுக்காரரான தன் கணவன் சங்கரின் துரோகமும் அயோக்கியத்தனமும் புரிந்து திக்கற்று மீண்டும் தன் பெற்றோரிடம் திரும்பி வரும்போது அவர்கள் தம் பெண்ணின் எதிர்காலம் பற்றிய பயத்தில் தடுமாற, சமஸ்கிருதம் படித்து பழமைக் கலாசாரத்தில் மூழ்கிய குரு அவளைப் பிறக்கவிருக்கும் குழந்தையோடு திருமணம் செய முன் வருவது பயப்பட வைக்கும் புரட்சி. இதற்காக உஷா சுப்பிரமணியன் எவ்வளவோ எதிர்ப்பு களைச் சந்தித்திருக்கக் கூடும்.

சாட்சி என்னும் கதையில் வேறொரு ஜாதிப் பையன் குருக்கள் வீட்டுப் பெண்ணை மணமுடிக்க ஆசைப்பட அவளும் ஏழ்மை காரணமாகப் பெற்றோரை எதிர்த்துத் திருமண செதுகொள்ள, எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் குழந்தை இல்லாத காரணத்தால் அவன் இன்னொரு மதத்துப் பெண்ணை வீட்டுக்கே அழைத்து வந்துவிடுகிறான். வெறுத்துப்போன மனைவி வெளியேறி அல்லாடி திருமண ரிஜிஸ்ட்ரேஷன் ஆஃபீஸ் வாசலில் எதேச்சையாக ஏதோ ஒரு ஜோடிக்கு சாட்சியாகி அதுவே தன் ரெகுலர் தொழிலாக ஏற்று பொருளாதாரத்தில் நிமிர்ந்து நிற்கும் போது முன்னாள் கணவனே அவளை சாட்சிக்குக் கூப்பிடுகிறான். இன்னமும் அவனுக்குக் குழந்தை இல்லை என்பதை பூடகமாக உணர்த்தி ஒரு பொயட்டிக் ஜஸ்டிஸைத் தருகிறார் எழுத்தாளர்.

மறுபடி சொல்கிறேன், எழுபது எண்பது களில் இத்தகைய கருத்துக்கொண்ட கதைகள் அபூர்வமாகவே வந்தன. அன்றைய சமூகச் சூழலை நாசுக்காகச் சாடும் இவரின் சிறு கதைகள் காலப்போக்கில் உண்மையாகி அன்று இவர் சொன்ன பல தீர்வுகள் இன்று நிதரிசனமாக நடப்பதைப் பார்க்கிறோம். ஆக சமூக மாற்றத்திற்கு அடிகோலியவை இக்கதைகள் என்று சொன்னால் ஓரளவுக்குச் சரிதான். அது மட்டுமில்லை, அன்றே கார்ப்ரேட் வாழ்க்கை பற்றியும் அதன் போலித் தனங்களையும் உரித்துக் காட்டும் கதைகளை எழுதியிருக்கிறார். உயர்தர, மத்தியதர மற்றும் அடித்தட்டு வாழ்க்கை பற்றிய கதைகளும் இவரின் எழுத்தில் மிளிர்கின்றன. பிரபஞ்சனின் அழுத்தமான முன்னுரையுடன் அமைந்திருக்கும் இத் தொகுப்பு நிச்சயம் படித்து உணரப்பட வேண்டிய ஒன்று என்பதை உறுதிபடச் சொல்லலாம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :