உங்கள் குரல்

படிக்கும்போதே த்ரில்லாக இருந்தது!துடுப்பதி ரகுநாதன் எழுதிய ‘ரிஷி’ சிறுகதையில் வரும் அந்த நாக்குக் கூட ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்’னு புரியுது. நம்மைப் போன்ற மனிதர்களுக்கு அது புரியலையே.- ஸ்ரீகாந்த், திருச்சி

செவ்வாய் கிரகத்திற்கான ஹெலிகாப் டரை வடிவமைத்த டாக்டர் ஜெ. பலராமன் குறித்த கட்டுரையை வெளியிட்டு, இன்றைய இளைய தலைமுறையினர் மனதில் வரலாற்றுச் சாதனையாளர் பலராமனின் முயற்சி, வலிமை யைப் பதிவு செய்து இளைய சமுதாயம் சாதனை படைக்க கல்கி தனக்குள்ள கடமையை மறக்காமல் வழக்கம்போல் செய்துள்ளது.- சொக்கலிங்க ஆதித்தன், திருச்செந்தூர்

‘நல்லதை நினைப்போம்; நல்லதைச் செய்வோம்’ கட்டுரை மனதைப் பண்படுத்தியது. உறவு, நட்பில் விரிசல் ஏற்படக் காரணம் காசோ, பணமோ அல்ல, ‘பேசும் வார்த்தை கள்’தான். அன்பால் மனிதர்களை வென்று விட்டால் எடுத்த காரியத்தில் வெற்றி உறுதி தான். ஒருவரை ஒரு பொருட்டாக மதிக்காதபோது அவர் மனதைக் காயப்படுத்துவதோடு அவரையும் அவமானப்படுத்துவதுமாகும் என்று ‘வாழ்வியலை’ விளக்கியது கட்டுரை.- மஹாலட்சுமி, திண்டுக்கல்

430 சதுர மீட்டரில் பரந்து விரிந்து கிடக்கும் ‘காசிரங்கா வனப் பகுதி பயணத்தை’ப் படித்த போது, கட்டுரையாளர் கூடவே சேர்ந்து பயணிக் கின்ற உணர்வை ஏற்படுத்தியது. இயற்கை யோடு ஒன்றிப்போகச் செகிற எழுத்து நடை பிரமாதம். காண்டாமிருகங்கள், மான்கள், காட்டு எருமைகள், பறவைகளைக் காண, யானையில் அமர்ந்து பயணித்ததைப் படிக்கும்போதே த்ரிலாக இருந்தது. பயணம் முடிந்து திரும்பும் வரை, அந்த சமர்த்தான பாப்பா அமைதியா இருந்ததன் மூலம் இயற்கையை ரசிப்பவள் என்பதை நிரூபித்து விட்டது. ‘காடுகளும் உயிரினங்களும் மனிதச் சமுதாயத்திற்குக் கடவுள் அருளிய வரம். வனத்தையும் அதன் உயிரினங்களையும் பாதுகாப்போம்.- ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

தராசார் பதில்கள், வகுப்பில் பாடம் கேட் கும் மனநிலைக்கு நம்மைக் கொண்டுவந்து, சிந்திக்க வைத்து, பக்குவப்படுத்துகிறது. மங்களகரமான நாள் என்று அரசு எப்படி முடி வெடுக்கிறது? அன்று, மற்ற மதத்தினருக்குப் பத்திரப்பதிவு சாதாரண கட்டணமா? என்றுகேட் டுள்ளது தமிழகத்தில் யாரும் சிந்திக்காதது. - நெல்லை குரலோன் நெல்லை

‘ஆணுக்குப் பெண் சரிநிகர் சமமில் லையா?’ என்ற கேள்வியைப் படித்து, இந்தக் காலத்தில் இப்படியொரு கேள்வியா என்று ஆச்சர்யமாக இருந்தது. அதற்குத் தராசாரின் பதில், உண்மையைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டது. - ஆர்.ராஜலட்சுமி, திருச்சி

‘பாப விநாசன முதலியாரின் நிந்தாஸ்துதி பாடலைச் சொல்லி, பொருளையும் விளக்கியுள்ள காஞ்சி மகானின் அருள்வாக்கு மகா அற்புதம். பாடலில் ஒளிந்துள்ள பக்தி உணர்வும் புரிந்தது. - ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம்

‘தண்ணீர் குடிக்கும் தேனீக்கள்’ கடைசிப் பக்கக் கட்டுரையில் கதை ஒன்றை சுவாரசிய மாகப் படித்துக்கொண்டு நகரும்போது கடைசியில் முடிவு என்னவென்று தெரியாமல் தவிக்க வைத்துவிட்டார் சுஜாதா தேசிகன். ப்ளீஸ் அடுத்த வாரம் தொடரவும். இல்லை கடைசிப் பக்கத்துக்கு இன்னும் இரண்டு பக்கங்களை ஒதுக்கவும்.- மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

‘மறுமணம்’ என்ற கதை ஒரு துணிவான முடிவை எடுக்கும் பெண் சந்திக்கும் பிரச்னை களை இயல்பாகச் சொல்லுகிறது. நல்ல எழுத்து நடை, அருமை.-ஈஸ்வரி, தேவகோட்டை

தேர்வுகள் குறித்து தலையங்கத்தில் முன்வைத்துள்ள கருத்துகளை அரசு கவனத்தில் கொண்டு மாணவர்கள் நலன் சார்ந்த நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். கொரோனா வின் கொடூர ஆட்டத்தில் தேர்தல் நடத்தப்படு கிறதுபோது தேர்வுகள் நடத்த முடியாதா? நமது டிஜிட்டல் இந்தியாவில் கட்சிகள் குக்கிராமங்களில்கூட வீடியோ கான்பரன்ஸ் நடத்துகிறபோது ஆன்லைன் தேர்வுகள் நடத்த முடியாதா? போன்றவை சிந்தனையைத் தூண்டும் கேள்விகள். ஆட்சியாளர்களுக்குச் சாட்டையடிகள். - அ. செல்வராஜ், கருர்

‘தடுப்பூசிக்குக் கட்டுப்பாடா?’ என்ற கவர் ஸ்டோரி படித்து மனம் முழுவதும் பயம். இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்று விளக்கி, இந்த நிலை தொடராமல் இருக்கப் பிரார்த்தனை செயச் சொன்ன வரிகளைப் படித்ததும் தினமும் கடவுளிடம் பிரார்த்திக்கத் தொடங்கிவிட்டேன். - பிரகதாநவநீதன், மதுரை

‘மாணவர்களின் எதிர்காலத்தைப் பலி யிடாதீர்கள்’ என்று மாணவர்களாகப் பரிந்துப் பேசிய தலையங்கம் நெத்தியடி. தேர்வு வேண் டாம், தேர்தலின் வெற்றி மட்டுமே லட்சியம் என்ற அரசின் மனநிலையைச் சுட்டிக் காட்டியது அருமை.- உஷா முத்துராமன்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :