திரைக்கடலில் எழுந்த நினைவலைகள்


எஸ்.சந்திரமௌலிதமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத ஆளுமை இயக்குநர் ஸ்ரீதர். அவர் தன் நீண்டகால சினிமா அனுபவங்களை சுவாரசியமாகவும் வளரும் தலைமுறைக்கு வழிகாட்டியாகவும் பதிவு செய்தார். இந்தத் தொடர் கல்கி களஞ்சியத்திலிருந்து வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கே மீள்வதிவாக.

என் வாழ்க்கையைத் திருப்பிப் போட்ட அந்த நிமிடம்!

‘எப்படியும் சினிமா உலகில் நுழைந்துவிட வேண்டும் என்பதுதான் என் லட்சியம். தஞ்சாவூரில் ஜூபிடர் பிக்சர்ஸின் பிரதிநிதியா சில காலம் பணியாற்றியபோது ஒரு ஸ்கிரிப்ட் எழுதியிருந்தேன். அதை எடுத்துக்கொண்டு போய், ஏதாவது கம்பெனியில் கொடுத்து, சினிமா சான்ஸ் பெற முயற்சி செய்ய முடிவு செய்தேன்.

அப்போது, ஏவி.எம்.மில் கதை தேவைப்படுவதாக் கேள்விப்பட்டேன். ஆனால் ஏவி.எம்.மில் எனக்கு யாரையும் தெரியாது. சரி, நேரே போய் முயற்சி செய்து பார்த்து விடுவது என்ற எண்ணத்துடன், ஏவி.எம். ஸ்டூடியோவுக்குப் போனேன். வாட்ச்மேன் என்னை உள்ளே விடவில்லை. அவரிடம் நைஸா பேசி, தாஜா செது, ஒரு வழியா ஸ்டூடியோவுக்குள் நுழைந்துவிட்டேன்.

யார் யாரையோ கேட்டுக்கொண்டு, இறுதியில் ஒருவரைச் சந்திக்க வெகுநேரம் காத்திருந் தேன். அவர், ‘என்ன தம்பி வேணும்?’ என்பதுபோல அலட்சியமாக என்னைப் பார்க்க, கதை கேட்டிருந்தீங்களே! ஸ்கிரிப்ட் எழுதி வெச்சிருக்கேன். நீங்க படிச்சுப் பார்க்கணும்" என்றேன். பைஜாமா, சட்டையில் பதினேழு வயதுப் பையன் ஒருத்தன் தன்னிடம் சினிமாவுக்குக் கதை இருப்பதாகச் சொன்னதை அவர் நம்பவில்லை போலும்!

நீ எல்லாம் என்ன தம்பி கதை எழுதுவே! அப்புறம் பார்க்கலாம்; போயிட்டு வா!" என்று கூறிவிட்டார். எனக்குப் பெருத்த ஏமாற்றம். என்னைப் பார்த்து இப்படிக் கூறியவர் யார் தெரியுமா? அப்போதைய மிகப் பிரபலமான டைரக்டரான ப.நீல கண்டன்தான்! அப்போது நிராகரிக்கப்பட்ட என்னுடைய ஸ்கிரிப்ட் நாடக மா நடத்தப்பட்டு பிறகு சினிமாவாகவும் தயாரிக்கப்பட்டது. வெற்றி பெற்ற அந்தக் கதையை ஏவி.எம். நிறுவனம் இந்தியில் தயாரிக்க விரும்பியது. அதற்காக மிக அதிகத் தொகையைக் கொடுத்து கதையை வாங்கினார்கள். இதுதான் காலம் என்பது!

டி.கே.எஸ். சந்திப்பு

சினிமா உலகில் நுழையும் ஆர்வம் காரணமா, சினிமா பத்திரிகைகள் நிறைய படிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அப்படி ஒரு நாள் ‘பேசும் படம்’ பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தபோது, எங்கள் ஊர்க்காரரும், எனக்குப் பள்ளிக்கூடத்தில் சீனியருமான சம்பத்குமார் என்ற எனது நண்பர் ‘பேசும் படம்’ பத்திரிகையில் பணிபுரிவது ஞாபகத் துக்கு வந்தது. சம்பத்குமாரைச் சந்தித்து ஏதாவது வழி கேட்டால் என்ன என்று தோன்றியது. அப்போது ராயப்பேட் டையில் இருந்த ‘பேசும் படம்’ ஆபீசுக்குப் போ சம்பத்குமாரைச் சந்தித்தேன். என்னுடைய விருப்பம், எனது முயற்சிகள், நான் அடைந்த அடுத்தடுத்த தோல்விகள் என்று விவரமாச் சொல்லி, எனக்கு உதவுமாறு கேட்டேன். அவர் அக்கறையுடன் எனக்கு ஒரு வழி சொன்னார்.

டி.கே.எஸ். சகோதரர்கள் இன்றைக்கு மிகவும் பாபுலரான நாடகக் குழுவினர். அவர்களைச் சந்தித்து உன் ஸ்கிரிப்ட்டைக் கொடு. அவர்கள் அதை நாடக மாப் போட்டார்கள் என்றால் அது ‘கிளிக்’ ஆகி, சினிமா சான்ஸ் கிடைக்க வாப்பு உண்டு. டி.கே.சண்முகம் வீடு கூட ராயப்பேட்டையில்தான் இருக்கிறது. போ முயற்சி செ" என்று சொல்லி, அவர் கள் முகவரியையும் கொடுத்தார் சம்பத்குமார்.

நேரே, லாயிட்ஸ் ரோடில் இருந்த டி.கே.எஸ். வீட்டுக்குப் போனேன். வீட்டு வாசலில் இரண்டு பேர் எதிரெதிராக அமர்ந்து பேசிக் கொண்டிருந் தார்கள். கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனதும், இரண்டு பேரில் இளையவராக் காணப்பட்ட வர், யாரு தம்பி நீங்க? என்ன வேணும்?" என்று கேட்டார். நான் டி.கே.சண்முகம் சாரைப் பார்க்கணும்" என்று கூற, நான்தான் டி.கே.சண் முகம்" என்றார் அவர். எனக்கு இனிய அதிர்ச்சி.

ஒரு கதை எழுதியிருக்கிறேன். நீங்க அதை நாடகமா போட முடியுமான்னு பார்க்கணும்" என்றேன். இப்போதைக்குப் புது நாடகம் போட வாப்பு எதுவுமில்லை" என்று கூறியபோதிலும், ஸ்கிரிப்ட் இருக்கா?" என்றார். இல்லை, கதைச் சுருக்கம் வெச்சிருக் கேன்." கையிலிருந்த நாடகத்தின் கதைச் சுருக்கத்தை நீட்டினேன்.

மூணு பக்கம் தான். அதைக் கொடுத்து விட்டு நான் நின்று கொண்டிருந்தேன். டி.கே.எஸ். அவர்களோ, எதிரே இருந்தவரிடம் பேசிக்கொண்டே இருந்தார். எனக்கோ தர்மசங்கடமான நிலை. இப்போதைக்கு நாடகம் போட வாப்பு இல்லை என்று அவர் சொன்னவுடன் நான் விடைபெற்றிருக்கலாம். ஆனால் அவரே தொடர்ந்து நாடகத்தின் ஸ்கிரிப்ட் இருக்கா என்று கேள்வி கேட்டு என்னை அங்கேயே இருக்கவைத்தார்.கதைச் சுருக்கம் எழுதிய ஸ்கிரிப்டை அவர் வாங்கிக்கொண்டு விட்டதால், நான் அதை அவர் திருப்பிக் கொடுத்ததும் வாங்கிக் கொண்டு போகும் எண்ணத்துடன் அங்கே நின்றிருந்தேன்.

அதுதான் என் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத் திய கட்டம். பேசிக் கொண்டே இருந்த டி.கே.எஸ். மேலோட்டமா முதல் பக்கத்தைப் படிப்பதை நான் கவனித் தேன். ரொம்ப அசுவாரசி யமாகத்தான் படித்தார். முதல் பக்கத்தைப் படித்து முடித்தவுடன் பேச்சை நிறுத்திவிட்டு, ஆர்வமுடன் படித்தார்.

‘ஒரு மனிதன் பிறக்கும் போதே அயோக்கியனாகப் பிறப்பதில்லை. அவன் வளரும் சூழ்நிலை, பழகும் நண்பர்கள், அவனுடைய வாழ்க்கை முறை இவற்றால்தான் அவன் அயோக்கியனாக மாறுகிறான்.’இப்படி எழுதப்பட்டிருந்த என் ஆரம்ப வரிகள்தான் அவரை மேலும் படிக்கத் தூண்டி யிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் நான் எழுதிய கதைச் சுருக்கத்தைப் படித்த அந்த ஒரு சில நிமிடங்கள் என் வாழ்க்கையிலேயே மிக மிக முக்கியமான நேரம் என்று நான் இன்றைக்கும் மிக அழுத்தமாய் நம்புகிறேன்.

கதைச் சுருக்கத்தைப் படித்து முடித்து விட்டு, என்னைப் பார்த்த டி.கே.எஸ். ஏன் தம்பி! இது நீங்க எழுதின கதைதானா?" என்று ஒரு கேள்வியைக் கேட்டார். நான் எழுதினதுதாங்க." முழு வசனமும் எழுதிட்டீங்களா? இல்லை இனிமேல்தான் எழுதணுமா?" எழுதி முடிச்சு வெச்சிருக்கேன்." கையில் இருக்கா?" இல்லை... ஊர்ல... மதுராந்தகத்துல..." அதைக் கொண்டுவாங்க." அடுத்த நாள் ஸ்கிரிப்டைக் கொண்டு போக் கொடுத்தேன். என்னை உட்காரச் சொல்லிவிட்டு, முழு ஸ்கிரிப் டையும் படித்து முடித்தார். நல்லா இருக்கு. ஆனா ரொம்ப சினிமா டிக்கா இருக்கு. இதை நாங்க நாடகமா நடித்தால், காட்சி மாற்றங்களின் போது கொஞ்சம் பிரச்னை வரும். ஒரு செட்டில் காட்சி முடிந்து, இன்னொரு செட் காட்சி மாறும் இடை நேரத்தில் ரோடு ஓர படுதா பின் னணியில் காமெடிக் காட்சிகள் இருக்க ணும். அதற்கேற்றபடி நீங்கள் மாற்றித் தரமுடியுமா?" என்றார். நான் சம்மதித்தேன்.

அதன் பிறகு அவர் ஒரு மாற்றம் சொல்லு வார். நான் அதைக் கேட்டுக்கொண்டு, மதுராந்தகத்துக்குப் போ, மாற்றி எழுதிக் கொண்டு மறுபடியும் சென்னைக்கு வந்து, அவரிடம் காட்டுவேன். அடுத்து செய வேண்டிய மாற்றத்தை அவர் சொல்ல, இப்படியே அடுத்த பதினைந்து நாட்களில் பலமுறை சென்னைக்கும் மதுராந்தகத்துக்கும் இடையே போ வந்து கொண்டிருந்தேன். அடிப்படைக் கதையில் எந்த மாற்றமும் இல்லாமல், மேடைக்கு ஏற்றபடி காட்சிகளை மட்டுமே மாற்றித் தரச் சொன்னதால், நான் தயங்காமல் மாற்றி எழுதித்தந்து கொண்டிருந்தேன்.

டி.கே.எஸ். வைத்த பரீட்சை

ஒரு நாள் ஓர் உணர்ச்சிபூர்வமான காட்சியைக் குறிப்பிட்டு, அதன் வசனங்களை, இன்னும் அழுத்தமாக மாற்றி எழுதித் தரும் படி என்னிடம் கூறினார் டி.கே.எஸ். நானும் தலையை ஆட்டிவிட்டு, ஸ்கிரிப்ட்டை வாங்கிக்கொண்டேன். வழக்கப்படியே மதுராந்தகத்துக்குப் புறப்பட்டேன்.

தம்பி, கொஞ்சம் நில்லுங்க" என்ற டி.கே.எஸ்., ஊருக்கா புறப்படறீங்க? வேணாம். இங்கேயே மாடி ரூமுக்குப் போ உட்கார்ந்து எழுதிக்கிட்டு வந்திடுங்க."

எனக்கு இன்றைக்குத் திடீரென்று ஏன் இப்படிச் சொல்லுகிறார் என்று புரிய வில்லை. மாடிக்குப் போ இரண்டுமணி மணிநேரத்தில் அவர் கேட்டபடியே பவர்ஃபுல் வசனங் களா மாற்றி எழுதிக் கொண்டு வந்து அவரி டம் கொடுத்தேன். ரொம்ப நல்லா இருக்கு. இத்தனை நாள் வரைக்கும், நீங்களே எழுத றீங்களா, இல்லை ஊரில் வேறு யாரிடமிருந் தாவது எழுதி வாங்கிக்கொண்டு வருகிறீர்களா என்று எனக்குச் சந்தேகம் இருந்தது. இப் போது அது தீர்ந்துவிட்டது. எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்றார்.

முழு ஸ்கிரிப்ட்டும் நாடகத்துக்கேற்பத் தயாரான நிலையில், ஸ்கிரிப்ட் என்னிடம் இருக்கட்டும். அடுத்து எப்போது, என்ன செவது என்பது பற்றித் தகவல் தெரிவிக்கி றேன்" என்று கூறினார்.

இரண்டு மூன்று வாரங்களுக்குப் பின் ஒரு நாள் எனக்கு டி.கே.பகவதியிடமிருந்து ஒரு தபால் கார்டு வந்தது. டி.கே.பகவதி, டி.கே.சண்முகத்துக்கு இளையவர். அவரும் டி.கே.எஸ். நாடகங்களில் முக்கிய பாத்திரத் தில் நடிப்பார்.

உங்கள் நாடகத்தை எங்கள் குழு சார்பில் அரங்கேற்ற முடிவு செய்திருக்கிறோம். நாடகத்திற்கு ‘லட்சியவாதி’ என்று நீங்கள் சூட்டிய தலைப்பை, ‘ரத்தபாசம்’ என்று மாற்றியிருக்கிறோம். இப்போது நாங்கள் நாடகம் போடுவதற்காகத் திருநெல்வேலி சென்றுகொண்டிருப்பதால், ஒரு வாரம் கழித்து, சென்னைக்கு வந்து எங்களைச் சந்திக்கவும்" என்று அதில் எழுதப்பட்டிருந் தது. எனக்கு மிகவும் சந்தோஷமா இருந்தது.

ஒரு வாரம் கழித்து, டி.கே.எஸ். அவர்களைச் சந்தித்தேன். நாங்கள் போட முடிவு செ திருந்த ‘கள்வனின் காதலி’ ஸ்கிரிப்ட் ரெடி யாகவில்லை. எனவே, உடனடியா உங்கள் நாடகத்தைப் போட முடிவு செதிருக் கிறோம்" என்றார் அவர். ரசிகரஞ்சனி சபாவில் 1951 நவம்பர், 11ம் தேதி அரங்கேற்றத் துக்கு நாள் குறிக்கப்பட்டது. அதற்கு முன் டி.கே.எஸ். வீட்டிலேயே ஒத்திகை நடக்கும். எனக்கு அங்கே பொறுப்பு ஏதும் இல்லாவிட் டாலும் நானும் ஒத்திகைக்குப் போவேன்.

அரங்கேற்ற நாளுக்குமுன் இரண்டு நாட்கள் ஆர்.ஆர்.சபாவில் இறுதி ஒத்திகை நடைபெற்றது. அதற்கும் நான் போயிருந்தேன். மறுநாள் அரங்கேற்றம். நாடகத்தில் பிசியா இருந்ததால் யாரும் என்னைக் கண்டுகொள்ள வில்லை. நானும் அதைப் பெரிதுபடுத்த வில்லை. நாடகத்தில் பல இடங்களில் ரசிகர் களின் கைத்தட்டல். அடுத்த நாளும் அதே நாடகம். என்னை வரச் சொல்லி யாரும் அழைக்காவிட்டாலும் கூட நான் போயிருந்தேன். முந்தைய நாளைப் போலவே பலத்த கைத்தட்டல். ரசிகர்களிடையே இத்தனை வரவேற்பு இருந்தும், என்னை யாரும் சரியான படி கௌரவிக்கவில்லையே என்று எனக்கு உள்ளூர ஆதங்கம். நான் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

இடைவேளையின்போது, சண்முகம் அண்ணாச்சி பேசினார். அப்போது, நேற்றும் இன்றும் இந்த நாடகத்தை அனைவரும் ரொம்ப ரசித்தீர்கள். இந்த நாடகத்தை எழுதி யவர் யார் என்று தெரிந்தால், நீங்கள் எல்லாம் மிகவும் ஆச்சர்யப்படுவீர்கள். அவர் பெயர் ஸ்ரீதர். ஒரு கல்லூரி மாணவர். (என் வயதை வைத்து, நான் கல்லூரி மாணவர் என்று அண்ணாச்சியே முடிவு கட்டிவிட்டார்.) இதோ அவரை அறிமுகப்படுத்து கிறேன்" என்று கூறி என்னை மேடையில் அறிமுகப்படுத்தி னார். இரண்டு நிமிடங்களுக்கு கரகோஷம் ஓயவில்லை.

சினிமா அழைத்தது

அப்போது எந்த ஊரில் பொருட்காட்சி என்றாலும் பத்துப் பன்னிரண்டு நாட்கள் நடைபெறும். அதில் ஐந்தாறு நாட்கள் டி.கே.எஸ். சகோதரர் களுடைய நாடகங்கள்தான் நடக் கும். ஔவையார், மனிதன், இன்ஸ்பெக்டர், ரத்த பாசம் இப்படிப் பல. ஒவ்வொரு ஊரி லும், ஒரு ரவுண்டு நாடகங்கள் போட்டு முடிந்ததும், ரசிகர்களின் வேண்டுகோளின் பேரில் திரும்ப வும் போடப்படுவது அநேகமா ரத்தபாச மாகத் தான் இருக்கும். அந்த அளவுக்கு அந்த நாடகம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது. 1951 இறுதியில், ஜூபிடர் கம்பெனியில் ‘ரத்தபாசம்’ கதையை வாங்கி சினிமாவாக எடுக்க விரும்பினார்கள். டி.கே.எஸ்.சகோதரர் கள், கதையை ஜூபிடருக்குக் கொடுக்க சம்மதித்தாலும், சினிமாவில் அவர்களே நடிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட் டார்கள். ஆனால் டி.கே.எஸ். பிரதர்ஸ் நாடகங்களில்தான் பிரபலமே தவிர, சினிமாவில் அத்தனை பாபுலரில்லை. எனவே, ஜூபிடர் சோமு, டி.கே.எஸ். சகோதரர்களை நடிக்க வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அதேநேரம் ‘ரத்தபாசம்’ கதையை விட்டுவிடவும் மனமில்லை. இறுதி யில் சண்முகம் அண்ணாச்சி, சோமு இருவரும் ஒரு காம்ப்ரமைஸ் செது கொண்டனர். டி.கே.எஸ்.சகோதரர்கள் நடிக்க ஔவை - ஜூபிடர் புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பெயரில் பார்ட்னர் ஷிப்பாக ரத்தபாசத்தை எடுக்க முடிவு செய்து அக்ரிமெண்ட் போட் டார்கள். இப்படியாக நான் எழுதிய கதை சினிமா உலகினுள் நுழைந்தது. ஆனால் நான் நுழைய முடியவில்லை. ஆம்! மறுபடியும் ஒரு சிக்கல்.

‘ரத்தபாசம்’ படத்துக்கு வேறு யாராவது ஒரு பிரபலமான வசனகர்த்தாவைக் கொண்டு, வசனம் எழுத வைக்கலாம் என்று சோமு கூறினார். டி.கே.சண்முகம் அண்ணாச்சி, எந்த சிட்சுவேஷன் சொன்னாலும், புரிந்து கொண்டு பளிச்சென்று வசனம் எழுதிவிடுகிற இந்தப் பிள்ளைதான் படத்துக்கும் வசனம் எழுதணும். அதற்கு நீங்க ஒப்புக் கொள்ள வில்லை என்றால், உங்களுடன் சேர்ந்து சினிமா எடுப்பதையே நாங்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டிவரும்" என்று பிடிவாதமாக் கூறிவிட்டார். கடைசியில், சோமுவும் ஒப்புக் கொண்டார். நான் சினிமா உலகினுள் கதை, வசனகர்த்தா வாகப் பிரவேசித்தேன்.

அண்ணாச்சி

இங்கே சண்முகம் அண்ணாச்சியை நன்றியுடன் நினைவுகூர நான் விரும்பு கிறேன். பாஸ் நாடகக் கம்பெனியில் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் அவர். பள்ளிக்கூடம் சென்று படிக்கமுடியாத காரணத்தால், சுயமா கல்வி கற்றுக் கொண்டவர். படிப்படியாத் தன் அறிவை யும், நடிப்புத் திறமையையும் வளர்த்துக் கொண்ட ஜீனியஸ் அவர். பெரிய படிப்பாளி.

அவர் வீட்டு மாடியில் ஒரு பெரிய நூலகமே இருந்தது. நடிகர் என்ற பந்தா எதுவுமில்லாத கண்ணியம் நிறைந்த மனிதர். அவருடைய நண்பர்கள் வட்டாரத்தில் மைலாப்பூரிலும், திருவல்லிக்கேணியிலும் வசித்த பெரிய பெரிய வக்கீல்கள், நீதிபதி கள், டாக்டர்கள் போன்ற பிரமுகர்கள் பலர் உண்டு. ம.பொ.சி.யிடம் அவருக்கு அபார பக்தி. எந்த ஒரு விஷயம் குறித்தும் விவாதம் செது, நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர் அவர். கட்டுப்பாட்டுக்குப் பெயர்போன அண் ணாச்சியின் நாடகக் கம்பெனியில் அனை வரும் ஒரே குடும்பம் போல பழகுவார்கள். ஆனால், யார் தவறு செய்தாலும் தாட்சண்யம் பார்க்காமல், கம்பெனியை விட்டு வெளியே அனுப்பிவிடுவார்.

ஒருமுறை ஹார்ட் அட்டாக் தாக்குதலுக் குட்பட்ட பின் அண்ணாச்சியால் முன்போல இயங்க முடியவில்லை. நாடகம் போடுவதைப் படிப்படியாக் குறைத்துக்கொண்டு இறுதி யில் நிறுத்திக்கொண்டு விட்டார். என்னுடைய ‘ஆலயதீபம்’ படத்தில் அவருக்கு மிகவும் பொருத்தமா ஒரு பாத்திரம் அமைந்தது. அந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று நான் அன்புடன் அவரைக் கேட்டுக் கொண்டேன். ஆனால், அவரது உடல்நிலை அவரை நடிக்க அனுமதிக்கவில்லை. இன்றைக்கும் எனக்கு அது ஒரு குறைதான்.

(தொடரும்)
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :