கடைசிப்பக்கம்

பஞ்ச கவ்வியம்
சுஜாதா தேசிகன்ஏழு வயதில் பூணூல் போடும் சடங்கில் என் மாமா பஞ்சகவ்வியம் என்பது எப்படிச் செய்கிறார்கள் என்று கூறியபோது அரண்டு போனேன். கொஞ்சமா இன்று சாப்பிட வேண் டும் என்றபோது ‘ராரா ஜோதிகா’ போல மிரண்டு போனேன்.

சில வருடங்களுக்கு முன் இயற்கை விவசாயம், பசுமைப் புரட்சி செய்த நம்மாழ்வாரால் உருவாக்கப்பட்ட ‘வானகம்’ இயற்கை விவசா யம் என்ற பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டேன்.

செடிகளைப் பூச்சி தாக்குவதிலிருந்து தடுக்க என்ன செய வேண்டும், பூச்சிகளை அழிக்காமல் அவற்றுடன் எப்படிப் பழகவேண் டும் என்ற முக்கியமான படங்களாக இருந்தது.

ஏர் டெக்கான் (Air Deccan) என்ற குறைந்த விலை விமானத்தைப் பறக்கவிட்ட கேப்டன் கோபிநாத் தன் சுயசரிதையில் தன் இயற்கை விவசாய அனுபவத்தை விவரிக்கிறார். அதில் அவர் கூறும் பல கருத்துகள் அன்று விவரிக்கப் பட்டது.

பெலூர் மற்றும் ஹலேபிட் கோயில்களுக்கு அருகிலுள்ள முப்பது ஏக்கர் நிலத்தைத் தன் குடும்பத்தினரிடமிருந்து விவசாயம் செய வேண்டும் என்று பெற்றுக்கொண்டார் கோபி நாத். அரசு அணை கட்டும் திட்டத்தில் இவர் களின் பூர்வீக நிலத்துக்கு இழப்பீடாக அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட நிலம் இது. மேடுபள்ளங்கள், புதர்கள் நிறைந்து, சரியான சாலைகள் இல்லாத நிலம். அங்கே ஒரு கூடாரத்தை அமைத்து, 15 வயது தலித் சிறுவன் ராஜுவைத் தனது உதவியாளராகவும், உடன் வசிப்பவராக வும் அழைத்துச் சென்றார்.

விவசாயத்திற்கு இயற்கை மிக முக்கியம் என்பதைக் கற்றுக்கொண்டார் கோபிநாத். அவர் எழுதியதிலிருந்து சிலவற்றை இங்கே சுருக்கமாகத் தருகிறேன்.

நவீன விவாசாயிகள் பெரிய இயந்திரங் களைக் கொண்டு செடி, கொடிகளை வெட்டி எறிந்து, புல்டோஸரால் நிலத்தை ஆழமாகத் தோண்டி அதில் இருக்கும் சிறு செடிகளை வேரோடு அப்புறப்படுத்துவார்கள். ஏன் என்று தெரியவில்லை. எனக்கு இந்த அணுகுமுறை பிடிக்கவில்லை. மனிதன் தூமையாக வைத் திருக்கும் தோட்டத்தைவிட இயற்கை குப்பைக் கூளமாக வைத்திருக்கும் காடுதானே செழிப் பாகக் காணப்படுகிறது? அதனால் என் நிலத்தை அப்படியே விட விரும்பினேன். என் விவசா யத்தின் முதல் பாடம் நிலத்தைச் சுத்தம் செய்யாதே!

ஒரு சம்பவத்தை நான் மாபெரும் கண்டு பிடிப்பாகவே சொல்லமுடியும். பந்திபூர் வன விலங்குச் சரணாலயத்துக்குப் போயிருந்தபோது ஏதோ ஒன்று என் பார்வையைக் கவர்ந்தது. உயிருள்ள மரங்களைக் கரையான் எதுவும் செவதில்லை. அங்கே காந்த இலைகள், சருகுகள், குப்பைகள், பூச்சிகள் என ஏராளமாக உணவு எளிதில் கிடைப்பதால் உயிருள்ள மரத்தை அவை தாக்குவது இல்லை. நாம் தோட்டங்களில் பொதுவாக என்ன செகி றோம்? தரையைச் சுத்தமாக இருக்க இவற்றைப் பொறுக்கிச் சுத்தம் செய்கிறோம். இத னால் கறையான்களுக்குத் தரையில் உணவாக எதுவும் கிடைப்பதில்லை. எனவே, அவை உயிருடன் இருக்கும் மரங்களைத் தாக்க ஆரம் பித்துவிடுகின்றன. நாம் உடனே பென்ஸீன் ஹெக்ஸா குளோரைடைத் தெளித்து கறை யான்களை அழிக்கிறோம். மழை பெயும் போது அந்த வேதிப் பொருள் நீரில் கரைந்து மண்ணில் கலந்து மண் விஷமாகி, மண்ணி லிருந்து வழிந்து ஓடும் நீர் எங்கு எல்லாம் செல் கிறதோ அங்கே விஷம் பரவுகிறது.

இறந்த மரங்களைப் பூச்சிகளும் கறையான் களுக்கும் உணவாகத் தாக்குவதற்கு விட்டுச் செல்ல வேண்டும், இல்லை அவை நல்ல பயிர் களை அழிக்க ஆரம்பிக்கும் என்பதைக் கற்றுக் கொண்டேன் என்பதை எழுதியிருக்கிறார்.

இயற்கையை டிஸ்டர்ப் செயாதீர்கள். அதனுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்பதுதான் அன்றும் அந்தப் பட்டறையிலும் எனக்குப் பாடமாகச் சொல்லிக் கொடுத்தார் கள். மேலும் நம் முன்னோர்கள் பஞ்சகவ்வியம் பயன்படுத்தி வந்துள்ளனர். கோவில்களில் பிரசாதமாக வழங்கப்பட்டு வந்த பஞ்சகவ்வி யம் சிறந்த நோ எதிர்ப்புச்சக்தி பெற்றது, செடிகளுக்கு மேல் தெளித்தால் செடிகளை இயற்கை முறையில் பூச்சிகளிடமிருந்து காக்க லாம் என்று கூறி ‘வாங்க எல்லோரும் பஞ்சகவ்வியம் தயாரிக்கலாம்’ என்று அவர் பையைத் திறந்து அதற்குத் தேவையானவற்றை வெளியே எடுத்து எப்படித் தயாரிப்பது என்று சொல்லிக்கொடுத்தார்.

பசுவின் சாணம், சிறுநீர், பால், தயிர், கடலைப் புண்ணாக்கு ஆகியவற்றுடன், வாழைப்பழம், இளநீர், கரும்புச்சாறு ஆகிய வற்றைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கி... என்று கூறிவிட்டுத் தயாரிக்கச் சொன்னார்.

அவர் கூறியதுபோலப் பஞ்சகவ்வியம் தயாரிக்க ஆரம்பித்தேன். பசுஞ்சாணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார். கையில் எடுத்தேன். என் அம்மா வீட்டு வாசலில் சாணம் கொண்டு வாசல் தெளித்த அந்த வாசனை போல் இல்லாமல் சாக்கடை தூர்வாரும்போது அடிக்கும் துர்நாற்றம் அடித் தது. பட்டறை நடத்துபவரிடம் இதைப் பற்றிக் கேட்டேன்.

ஊரில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவு, சினிமா சுவரொட்டி போன்ற ஜங்க் ஐட்டங் களை மாடு உட்கொண்டால் இப்படித்தான் மணம் வீசும்" என்றார்.

இன்று சானிடைசருடன் வளரும் நம் குழந்தைகளுக்கு இயற்கை விவசாயக் கல்வி முறை பற்றிய சிந்தனையை ஆன்லைன் கிளாசில் விதைத்தால் வீட்டைவிட்டு வெளியே வரும் சமயம் இயற்கையை ரசிப்பார்கள்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :