எழுபது ஜெயில்கள்! 3080 சி.சி. டி.வி.க்கள்!

பொலிடிகல் நியூஸ் பார்சல்
கெளதம் ராம்அண்மையில், மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவரான திலீப் கோஷ் இட்ட ஸ்டேட் மென்ட், அரசியல் வட்டாரத்தில் சலசலப் பினை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்காளத்தில் தேர்தல் ஜுரம் ஆரம்பித்தது முதலே, ஏராளமான திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர்கள் பா.ஜ.க.வுக்குத் தாவி, மம்தா வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவந்தார் கள். ஆனால், அவர்களுக்கு இப்போது லேசான அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக் கிறார் திலீப் கோஷ். பா.ஜ.க. கங்கை நதி போல. கங்கை நதி புனிதமானதுதான். ஆனால், அதில் சாக்கடைகளும் கலக் கின்றன." இந்த ஸ்டேட்மென்ட்டின் மூலமாக அவர் மறைமுகமாகச் சொல்லும் சேதி என்ன தெரியுமா? ‘மம்தா பக்கமிருந்து வந்தவர்கள் எல்லோரையும் தேர்தலுக்கு முன் பா.ஜ.க.வில் சேர்த்துக் கொண்டுவிட்டோம். தேர்தல் முடிந்தவுடன், அவர்கள் நதிமூலம் கண்டறியப் பட்டு, களையெடுப்பு நடத்தப்படும்’ என்பது தான். அது தமிழ்நாட்டுக்கும் பொருந்துமா அமித் ஷா ஜீ?

ஹரித்வாரில் கூடிய கும்பமேளா கும்பல் கொரோனாவின் வேகமான பரவலுக்குக் காரணமாகிவிட்டதாலும், பொதுவாக உத்தரப்பிரதேசத்தில் கொரோனா நோயாளி கள் எண்ணிக்கை கிடுகிடுவென்று உயர்வதா லும், பிரதமர் அலுவலகத்தில் இருந்து அவரது தொகுதியான வாரணாசிக்கு சாதுக்கள் அதிக மாகத் திரள வேண்டாம் என்று ஒரு ரகசியத் தகவல் அனுப்பப் பட்டுள்ளது. வாரணாசியை முன்னிலைப் படுத்தி சர்ச்சைகள் வந்துவிடக்கூடாது என்று தான் இந்த நடவடிக்கையாம்! வாரணாசி எல்லையில் கோவிட் கிருமிக்கு நோ என்ட்ரி போர்டு வைக்கலாமே!" என்று ஐடியா கொடுக்கிறார் நம் ஊரு விஞ்ஞானி அமைச்சர்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், மறுபடியும் ஒரு லாக்டவுனை அறிவிக்க பிரதமர் மோடி விரும்பவில்லை என்று தில்லி வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். லாக்டவுன் ஏழை மக்களையும், தொழிற்சாலைகளையும்தான் மிகவும் பாதிக்கிறது. அதன் பொருளாதார பாதிப்புகள் மிகவும் கடுமையாக இருக் கின்றன. 2024ல் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில், பொருளாதார பாதிப்பு இல்லாமல், நோத் தொற்றைத் தடுக்க எல்லாவிதமான நடவடிக் கைகளையும் எடுக்க மோடி பச்சைக்கொடி காட்டி இருக்கிறாராம். லாக்டவுன் என்றால் வோட்டும் டவுன் என்ற பயமோ?

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சோனியா, ராகுல் மீதான அதிருப்தி தலைவர்கள், நடந்து கொண்டிருக்கும் சட்டசபைத் தேர்தல் முடிவு களை மிக ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருக் கிறார்களாம். காங்கிரஸ் எங்கேயும் பெரிசாக வெற்றி பெறப்போவதில்லை என்று நம்புகிற இவர்கள், அடுத்து, புதுக் கட்சி தொடங்கும் ஐடியாவில் இருக்கிறார்களாம். அப்படித் தொடங்கும் புதுக்கட்சி, சரத் பவார் தலைமை யில் வடக்கே மம்தா, அகிலேஷ் முதல் தெற்கே ஸ்டாலின் வரை எல்லாக் கட்சிகளை யும் ஒருங்கிணைத்து, புதுக் கூட்டணி அமைக்குமாம். ஐ-பேக் சொல்லும் ஆலோசனை களைத்தானே ஸ்டாலின் கேட்பார்?

உ.பி. மாநில ஜெயில் சரித்திரத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத். அண்மையில், அவரது உத்தரவின்பேரில், உ.பி. மாநிலத்தில் உள்ள 70 ஜெயில்களிலுமாக மொத்தம் 3080 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. லக்னோவில் உள்ள சிறைத்துறை தலைமையகத்தில் இருந்தபடியே அத்தனை ஜெயில்களையும் கண்காணிக்க முடியும். காரணம், சமீப காலமாக உ.பி.யின் மிக முக்கிய ரவுடிகள் பலரையும் ரவுண்டு கட்டி, கம்பி எண்ண வைத்திருக்கிறார் யோகி. சரிதான், இனி உ.பி. ஜெயில் வீடியோ கிளிப்பிங்குகள் பல மீடியா மூலம் வெளியாகி, பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது!

ஸ்டாலினுக்கு ஒரு பிரஷாந்த் கிஷோர் போல, அசாமில் காங்கிரஸ் கட்சிக்கு நரேஷ் அரோரா. ‘டிசைன் பாக்ஸ்’ என்ற அவரது கம்பெனிதான் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார போஸ்டர் டிசைன் தொடங்கி இதர பிரசார வியூகங்களை வகுத்துக் கொடுத் துள்ளது. ஆனால், அவர்களுக்கு தட்சிணை எவ்வளவு தெரியுமா? வெறும் 25 கோடி ரூபா. ஹூம் தமிழ்நாட்டில் பார்த்தீங்களா? பிரஷாந்த் கிசோர் வர்றாரு! ஸ்டாலின் 350 கோடி தர்றாரு!

பா.ஜ.க. இல்லாமல் வேறு கட்சி ஆளும் மாநிலங்களில் ஒன்று ஜார்கண்ட். அங்கே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடக்கிறது! முதலமைச்சர் ஹேமந்த் சோரன். அண்மையில் நடந்த வீடியோ கான்பிரன் ஸில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் ஜார்கண்டில் ரோடு போட 675 கோடி ரூபா மத்திய நிதி உதவி வேணும்" என்று அவர் கேட்டதும் கட்கரி, அவ்வளவு போதுமா? சாலை போட நிலம் கையகப்படுத்தும் வேலையை முடியுங்கள்! நான் 5000 கோடி தருகிறேன்" என்று சொன்னதும், முதலமைச்சருக்கு ஒரே ஷாக்! ஓ! ரோடு போட்டாத்தான் பணம் குடுப்பீங்களா மந்திரி ஜி?


Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :