‘‘கோவிட் வராமல் தடுக்க SMS செய்யுங்க’’


பத்மினி பட்டாபிராமன்இதய நல மருத்துவர் பேராசிரியர் வி.சொக்கலிங்கம் அவர்களுடன் ஓர் உரையாடல்:

உண்மைதான் நீங்கள் SMS பண்ணுங்க" இப்படிச் சொல்பவர் பிரபல இதய நோய் வல்லுனர், பேராசிரியர் டாக்டர் வி.சொக்கலிங்கம் அவர்கள்.

சென்னை மருத்துவக் கல்லூரியின் MMC இதய நோய்ப் பிரிவின் முன்னாள் இயக்குனராகவும், அரசு பொது மருத்துவமனையின் இதய நோய் நிபுணராகவும் பணியாற்றியவர். டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிபவர்.

அவரிடம் உரையாடியபோது, தற்சமயம் வேகமாகப் பரவி வரும் கோவிட் இரண்டாவது அலை பற்றிய நம் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.

சேனிடைசர் மற்றும் சோப்பைக் குறிக்க, S மாஸ்க் அணிவதன் அவசியத்தைக் குறிக்க M சமூக இடைவெளிக்கான (சோஷியல் டிஸ்டன்சிங்) கு. இவற்றைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றவர், தொடர்ந்து நம் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

கோவிட் 19, தற்சமயம் அதிக வேகமாகப் பரவுவது ஏன்?

சென்ற வருடம் முழுக் கட்டுப்பாட்டுடன் இருந்ததால் கோவிட் தாக்கம் குறைந்திருந்தது. தடுப்பு முறைளைப் பின்பற்றுவதிலிருந்த நாம் ரிலாக்ஸ் ஆகி விட்டோம். உலக சுகாதார நிறுவனம் சொல்லியிருந்த தடுப்பு முறைகளை முழுமையாகப் பின்பற்றத் தவறி விட்டோம்.இப்போது மீண்டும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் நிச்சயம் கோவிட் வைரஸை வெல்ல முடியும்.

கோவிட்19, உருமாற்றம் அடைந்து டபுள் ம்யூடன்ட் ஆகியிருப்பதாகவும், இதனால் சென்ற முறையை விட அதிக வேகமாகத் தொற்று பரவுவதாகவும் சொல்லப்படுகிறதே?

உண்மைதான். எந்த வைரஸுமே, தன்னைப் பெருக்கிக் கொள்வதற்காக உருமாற்றம் செய்து கொண்டே இருக்கும். . (Survival of the fittest) என்று சொல்லப்படுகிறதே, அதைப் போல. தான் வாழ்வதற்காக தன் சக்தியை அதிகப்படுத்திக் கொள்கிறது. இது இயற்கையின் நியதி. அதன் பரிணாம விதி. (evolutionary biology) சில வகை வைரஸ்கள் இதனால் பலவீனமடைவதும் உண்டு. கோவிட் 19 பொறுத்தவரை அதிகமான மாற்றம் இல்லை. அதன் புரத மூலக்கூறுகளில் (Protein molecules)தான் சிறு மாற்றம் ஏற்படுகிறது. இதைத் தான் ம்யூடன்ட் (Mutant) என்கிறோம். இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவக்கூடியதுதான்.

தடுப்பூசி புதிய வைரஸை அழிக்குமா? தடுப்பூசி, இத்தகைய வைரஸையும் தடுப்பதில் நிச்சயமாகப் பலன் தரும்.

எங்கிருந்து இந்த கொரோனா வைரஸ் வந்தது.? எப்படி மனிதரிடையே பரவியது?

விலங்குகளால் பரவும் ஸூனாடிக் (zoonatic diseases) நோய் பரப்பும் வகையைச் சேர்ந்தது கோவிட் வைரஸ். ஒற்றை வரியிலான ஆர்.என்.ஏ. (Single& Stranded RNA & Ribonucleic Acid)வகை மரபணுவாலானது. மனித உடலுக்குள் சென்றதும் இரட்டை வரியாகி விடுகிறது.

பொதுவாக இந்த ஆர்.என்.ஏ வைரஸ், தானே வாழும் தன்மை கொண்டவை அல்ல. பங்கோலின்கள் (Pangolins) எனப்படும் எறும்புத்தின்னி வகை விலங்குகள், மற்றும் வௌவால்களின் உடலில் ஒட்டிக்கொண்டு ஒட்டுண்ணிகளா வாழக்கூடியவை. மனிதர்கள் இவற்றை உணவுக்காக பயன்படுத்தும்போது கைகள், மூக்கு, வா வழியே மனிதர் உடலுக்குள் சென்று விடுகின்றன. குறிப்பாக, சீனர்களுக்கு மிக பிடித்தமான உணவு இது.

வேறு எப்படியெல்லாம் கோவிட் பரவும்?

இந்த வைரஸ், வயிறுக்குள் உணவு வழியே செல்லாது. சென்றாலும் குடலுக்குள் உடனே இறந்துவிடும். அதேபோல் ரத்தத்தில் கலந்தாலும் அதிக நேரம் வாழாது. நமது சருமம் வழியாகவும் பரவாது.ஆனால் தொண்டை, மூக்கு வழியே நுரையீரலுக்குள் நுழைந்தால் அங்கேதான் பல்கிப் பெருக ஆரம்பிக்கும்.

அங்கே அது வளரத் தேவையான புரோட்டீன் ரிசப்டார்கள் (Protein Receptors) இருக்கின்றன. கண்களுக்கும் மூக்குக்கும் இடையே ஒரு டக்ட் இருப்பதால் கண் வழியே கூட மூக்குக்குள் நுழையும்.

இது சற்றுக் கூடுதல் எடை கொண்ட வைரஸ். எனவே, பாதிக்கப்பட்ட ஒருவர் இருமினாலோ, தும்மினாலோ, வெளிப்படும் வைரஸ் ஆறடி தூரம் மட்டுமே செல்லும். பின்னர் விழுந்துவிடும். அதனால்தான் சமூக இடைவெளி அவசியமாகிறது. பொதுவாக இந்த வைரஸ் காற்றில் மூன்று மணி நேரம் உயிருடன் இருக்கும். எதிரில் இருப்பவர் மாஸ்க் அணியாதவராக இருந்தால் கண்டிப்பாக அவரது வா, மூக்கு வழியே உள்ளே நுழைந்து விடும்.

கடும் வெயிலில் சில நிமிடங்களில் இறந்து விடும். கோவிட் அறிகுறிகள் இருப்பவர்கள் தொட்ட பொருட்கள் மூலம், உதாரணமாக கண்ணாடி, மேஜை போன்றவற்றில் ஆறு மணி நேரம் வாழும். அதனால்தான் வெளியே சென்று வந்தாலும், எந்தப் பொருளைத் தொட்டாலும், கையைச் சோப்புப் போட்டுக் கழுவ வலியுறுத்துகிறோம்.

சோப்பில் உள்ள டிடர்ஜென்ட், கோவிட் வைரஸை அழித்துவிடும். கழுவாமல் முகத்தருகே கைகளைக் கொண்டு சென்றால், கண், மூக்கு, வா வழியே நுரையீரலுக்குள் சென்று விடும்.

வைரஸ் பாதிப்பு அதிகமாகும் போது நோயாளி இறப்பது ஏன்?

பொதுவாக ஒரு வைரஸ் உடலில் நுழையும் போது அதை எதிர்க்க நமது உடலின் எதிர்ப்பு சக்தியானது, படை வீரர்கள் போன்ற செல்களை உருவாக்கும். நோயுடன் போராடி இவை நோயைத் தடுக்கும்.

சில சமயம் இந்த செல்கள், நோயை எதிர்க்க அதிக அளவில் உருவாகி விடும். அப்போது பாதுகாக்கவேண்டிய இவையே, நுரையீரலைப் பாதிக்கும் ரத்தக் குழாகளில் அடைப்பை உண்டாக்கும்.

இதற்கு சைடோகைன் ரியாக்ஷன்" அல்லது புயல்" (cytokine reaction, cytokine storm) என்று பெயர். மூளை, சிறுநீரகம், இருதயம் என்று உடலின் எந்த உறுப்பை வேண்டுமானாலும் இது பாதிக்கும்.

எத்தகையோருக்கு கோவிட் வரும் ரிஸ்க் அதிகம்?

புகைபிடிப்பவர்களுக்கு ஏற்கெனவே நுரை யீரல் பாதிக்கப்பட்டிருக்கும். தவிர, குடிப் பழக் கம் உள்ளவர்கள், ஆஸ்துமா நோயாளிகள், சர்க்கரை நோ பாதித்தவர்கள், எதிர்ப்புச் சக்தியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மருந்து சாப்பிடுபவர்கள், ஸ்டிராட்ஸ் எடுத்துக் கொள்பவர்கள் இவர்களெல்லோரும் மிகுந்த எச்சரிக்கையுடனும் கட்டுப்பாட்டு டனும் இருப்பது அவசியம்.

இருதயப் பாதிப்புள்ளவர்கள், அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளவர்கள், தங்கள் மருந்துகளைக் குறைக்காமல், அந்தப் பாதிப்புக் களை கன்ட்ரோலில் வைத்துக் கொண்டு மருத் துவரின் அறிவுரைப்படி தடுப்பூசிப் போட்டுக் கொள்ளலாம். இவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கட்டுப்பாடுகளைப் பல மடங்கு கையாள வேண்டும்.

இரண்டாம் அலை இப்போது பரவுவது போல மாற்றமடைந்து மேலும் அதிகமாக பரவுமா?

அலைகள் ஓவதில்லை. நாம் மாஸ்க், சமூக இடைவெளி, கைகளைக் கழுவுதல் போன்ற கட்டுப்பாடுகளைக் கடைப் பிடிக்காமல் இருந்தால் மூன்றாம், நான்காம் என்று அலைகள் வரும்.

இதற்கான மருத்துவம் என்ன டாக்டர்?

நோ வராமல் தடுக்கும் மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு தடுப்பூசிகள் மூலம் அளிக்கப்படு கின்றன. முற்றிய நோயைக் குணப்படுத்தும் மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை.

வெந்நீரை வைத்து நீராவி பிடித்தல் பலன் தருமா?

கண்டிப்பாகச் செயலாம். நீராவியை மூக்கில் உள்ளிழுக்கும்போது, அந்த வெந்நீரில் சில சொட்டுக்கள் யூகலிப்ட்ஸ் ஆயில் விட்டு ஆவி பிடித்தால் கூடுதல் நலம்.

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படுகிறதே...மத்திய, மாநில அரசுகள், ஆக்ஸிஜன் தட்டுப் பாட்டை நீக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. சப்ளை அண்ட் டிமாண்ட் என்பார்கள். தேவை அதிகமாகும்போது உற்பத்தி, விநியோகம் அதிகரிக்கத்தானே வேண்டும்... நிச்சயம் அந்தத் தட்டுப்பாடு விரைவில் நீங்கிவிடும்.

கோவிட் பாதிப்பு பற்றிய விகிதாச்சாரம் சொல்கிறேன்..." என்ற டாக்டர் சொக்கலிங்கம், 100 பேருக்கு கொரோனா வந்தால் அதில் 85 பேர் குணமடைந்து விடுகிறார்கள். மீதமுள்ள 15 பேரில் பத்து பேருக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மீதி 5 பேரில் ஓரிருவர், நான் மேற்சொன்ன காரணங்களால் இறக்கிறார் கள். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால் எண்ணிக்கை அதிகமாகத் தெரிகிறது.

எனவே, விதிமுறைகளைப் பின்பற்றுவோர் யாரும் பயப்படத் தேவையில்லை" என்று நம்பிக்கை அளிக்கிறார் டாக்டர் சொக்கலிங்கம்.

தொடர்ந்து மூன்று ‘உ’க்களைப் பின்பற்றுங்கள்" என்கிறார்.உணர்வு, உணவு, உடற்பயிற்சி என்பவை தான் அந்த மூன்று ‘உ’க்கள்.

உணர்வு : அமைதியாக, மகிழ்ச்சியாக, மனதை வைத்துக் கொள்ள, யோகா, தியானம் போன்றவை உதவும்.

உணவு: ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவைத் தவிர்த்து, காகறிகள், பழங்கள் கொண்ட சத்தான சாப்பாடு.

உடற்பயிற்சி: நடைப்பயிற்சி உட்பட தவறாமல் செய்ய வேண்டியது.

பல விளக்கங்களுக்கும் தெளிவாக பதில் கூறிய டாக்டர் சொக்கலிங்கம் அவர்களுக்கு மிக்க நன்றி.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :