ஒரு வார்த்தை!


அனுஷா நடராஜன்மோனிகா, ஹவ் ஆர் யூ?"

மிகவும் களைப்பாகவும் பயமாகவும் இருக்கிறது, ஆனால், மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட குழுவுடன் பணியாற்றுவதால் சவாலை எதிர்கொள்ள முடிகிறது."

ஆம்... எனக்குத் தெரியும்." மிகவும் கொடுமையான காலம். ஹெல்த் கேர் நபர்களுக்கு கௌன்சிலிங்கும் தெரப்பியும் அவசியம் தேவை. இதை ஒரு போர்க்களம் போல உணர் கிறோம்."

உங்கள் குழந்தைகள் நலமா?"

என்னுடைய பத்து வயது மகள், ‘அம்மா, வேலைக்குப் போகாதே’ என்று தினமும் கெஞ்சி அழுகிறாள் - ‘இந்தச் சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உள்ளது. நான் துன்பப் படும் நோயாளிகளுக்கு உதவும் பணியைச் செதே ஆக வேண் டும் மகளே’ என்று தேற்றுகிறேன்."

நான் உன்னை அறிவேன் மோனிகா. ஒரு சாலை விபத்தில் என் குடும்பம் சிக்கியபோது, என் மனைவியும், மகளும் இறந்து போனார்கள். என் இரண்டு மகன்களும் சாவின் விளிம்பில் இருந்தார்கள். ஒருவனுக்கு மண்டை ஓடு நொறுங்கி விட்டது. அந்தச் சமயத்தில் அல்லும் பகலும் அருகே இருந்து கவனித்துக் கொண்ட உன் சேவையை எப்படி மறப்பேன்?"............"

ஸாரி... நான் கலங்கக்கூடாது. நீ நம்பிக்கை யின் சின்னம். மனிதனின் கடைசி உயிர் மூச்சு உள்ள வரை நம்பிக்கை தருவது உன் போன்ற நர்சுகளின் சீரிய சேவைதான்."......"

உன் போன்றவர்கள் செயும் தியாகமும் எடுக்கும் ரிஸ்க்கும் எத்தகையது என்பதை உணர்ந்தால்தான் தெரியும்."..........."கடவுள் உன்னை விரும்புகிறார் பெண்ணே... நீ எப்போதும் என் பிரார்த்தனையில் இருக்கிறாய்."

இது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் ICU பிரிவில் பணியாற்றும் ஒரு செவிலியருக்கும் இடையே நடந்த வீடியோ உரையாடல்.

நர்ஸ் மோனிகாவும் கண்கலங்க... அமெரிக்க அதிபரும் தழுதழுத்தார். செவிலியர்களின் ஒப்பற்ற சேவை போற்று தலுக்குரியது.பிரதிபலனே இல்லாத கடும் உழைப்பு. விடுமுறையே கிடையாது. தூக்கம் தூரமாகும். சுய பாது காப்பே கேள்விக்குறியாக இருக்கும்போது மற்றவர் நலனுக்காகப் பாடுபடும் கடும் தவம்.

இது வரமா? சாபமா? ஒட்டு மொத்த தெவங்களின் கருணை முகமா?

பத்து நிமிடம் கூட நம்மால் அந்த ppe உடையைப் போட முடியாது. சின்ன சம்பளம்... பெரிய சுமை.. ஆயினும், வெள்ளுடை தேவதைகளாச் சிரித்த முகத்துடன் அடுத்தவர் உயிரைக் காத்திட, களத்தில் துணிந்து நிற்கும் அந்த மாண்பு இருக்கிறதே... அது செவிலியர்க்கு மட்டுமே சாத்தியம். கைவிளக்கு ஏந்திய காரிகை ஃபிலாரன்ஸ் நைட்டிங்கேல் வழி வந்த செவிலியர் ஆண்... பெண்... இருவரையும் மங்கையர் மலர் வாழ்த்துகிறது. சல்யூட் சமூகப் போராளிகளே!!

சர்வதேச செவிலியர் தினம் - மே 12.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :