‘‘லாக்டவுன் சமையல் சாதம்; அதுவே எனக்குப் போதும்!’’


சந்திப்பு : எஸ்.சந்திரமௌலிரேணுகா... இந்தச் சின்னத்திரை தேவதை நாடகத்தின் மூலமாக கலை உலகுக்கு அறிமுகமாகி, மலையாளப் படங்களில் நடித்து பிரபலமாகி, தமிழ்ப்படங்களில் தலைகாட்டி, சின்னத்திரைக்கு வந்து கொடி நாட்டியவர். இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் மோதிரக் கையால் குட்டுப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இவர் நடித்த சீரியல்கள் இப்போது மீண்டும் யு-டியூபில் வலம்வந்து கொண்டிருக் கின்றன. அதன் மூலமாக மறுபடி யும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் ரேணுகா. மங்கை யர் மலருக்கு பேட்டி என்றதும், சந்தோஷமாகச் சம்மதித்தார். சரவெடி கணக்காப் படபட வென்று பொரிந்து தள்ளுகிறார். ஸ்ரீரங்கத்து சின்ன வயசு முதல் கொரோனா லாக்டவுன் காலத்து சமையல் வரை பல விஷயங்களை ஜாலியாகப் பகிர்ந்துகொண்டார். அவரது பாஸிடிவ் பேட்டி நமக்கு ஒரு பூஸ்ட். வாருங்கள்... ரேணுகா வைச் சந்திக்கலாம்!

‘நான் பிறந்து வளர்ந்தது ஸ்ரீரங்கம். எனது ஸ்கூல் படிப்பு அங்கேதான். இத்தனை வருஷங்கள் ஆனா லும், என் ஸ்ரீரங்கத்து சின்ன வயசு நினைவுகள் என்னுடைய மனசில் ஆழமாகப் பதிந்துவிட்டன. காவிரியும், அம்மா மண்டபமும் அவற்றைவிட அந்த ரங்கநாதரையும் மறக்க முடியுமா? கோயில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று சொல்லுவார் கள். ஆனால், கோயிலுக்குள்ளேயே ஒரு ஊர் அமைந்து, அங்கே வசிக்கிற பாக்கியம் எத்தனை பேருக்கு வாக்கும்?

எங்கள் குடும்பம் ஒரு டிபிகல் மிடில்கிளாஸ் குடும்பம். நான்தான் மூத்த பெண். எங்கள் அப்பா வக்கீல். அவரது தொழில் காரணமாக, நாங்கள் திருச் சிக்கே இடம்பெயர்ந்தோம். திருச்சியில் எல்லாம் சுமூகமாகத்தான் போக் கொண்டிருந்தது. நான் ஸ்கூல் படிப்பை முடித்துவிட்டு, சீதா லட்சுமி ராமசாமி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். பி.ஏ. எகனாமிக்ஸ். அப்போதுதான், எங்கள் குடும்பத்தை அந்தப் பேரிடி தாக்கியது. திடீரென்று எங்க அப்பா தவறிவிட்டார். குடும்பம் ரொம்பவே தடுமாறிப் போனது. அவரது மரணம் கொடுத்த அதிர்ச்சி ஒரு பக்கம் என்றால், அடுத்து எங்களுக்கு என்ன வழி? என்ற கேள்வி எங்கள் முன்னால் விஸ்வரூபம் எடுத்து நின்றது. எனக்கு இரண்டு தம்பிகள். இரண்டு பேருமே அப்போது படித்துக்கொண்டு இருந்தார்கள்.

அப்படியா? அந்த இக்கட்டிலிருந்து குடும்பம் மீண்டது எப்படி?

நான் படிப்பை நிறுத்துவது என்றும் அடுத்து, சென்னைக்கு இடம்பெயர்வது என்றும் முடிவு எடுத்தோம். சென்னையில் நான் ஏதாவது வேலைக்குப் போ, சம்பாதித் துக் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய சூழ் நிலை. அதை நன்றாகப் புரிந்துகொண்டிருந்த நாங்கள் சென்னைக்கு இடம்பெயரத் தயார் ஆனோம். சென்னைக்கு வந்தபோது, இடம் புதுசு; மக்கள் புதுசு; அக்கம் பக்கம் புதுசு; சென்னை ஒரு ஜனசமுத்திரம் போல இருந்தது. மென்மையாச் சலசலத்து ஓடும் காவேரியில் பிறந்து வளர்ந்த நாம், இந்த ஜனசமுத்திரத்தில் எப்படிக் குப்பை கொட்டப் போகிறோம் என்று ரொம்பவே பயந்து போனோம். ஆனா லும், ஆண்டவன் கைவிட்டுடமாட்டார். நமக்கு ஒரு நல்ல வழிகாட்டுவார் என்ற பரிபூரணமான நம்பிக்கை இருந்தது. முதலில் ராயப்பேட்டையில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சேல்ஸ் கேர்ள் ஆக வேலை கிடைத்தது. மாம் பலத்தில் இருந்து தினமும் பஸ்ஸில் போ விட்டு வருவேன். ஒரு ஆஸ்பத்திரியில் டெலி போன் ஆபரேட்டராகக் கூட இரண்டு மாசம் வேலை பார்த்திருக்கிறேன்."

இப்படியான வாழ்க்கையில், நாடகம், சினிமா ஆசை எப்படி வந்தது?

திருச்சியில் இருந்த காலகட்டத்தில் எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் துளியும் இல்லை. ஸ்கூலிலோ, காலேஜிலோ நான் பாட்டு, பேச்சு, நாட கம், டான்ஸ் என எதிலும் பங்கெடுத்துக் கொண்டதில்லை. குடும்பத்தைக் காப் பாற்ற, அம்மா, தம்பிகளுக்கு ஒரு சௌகரியமான வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பினை நான் ஏற்றுக் கொண்டபிறகு, என்னு டைய வெளியுலகப் பார்வை மாறி யது. சினிமாவில் நடித்தால், பணம் சம் பாதித்து, வசதியாக வாழலாம் என்று தோன்றி யது. நமக்கு நடிப்பு அனுபவம் இல்லையே என்று என்னுள்ளே கேள்வி எழுந்தபோது ‘அதைக் கற்றுக் கொண்டால் போச்சு!’ என்ற பதிலும் கிடைத்தது. நடராஜ் என்ற குடும்ப நண்பர் மூலமாக கோமல் சுவாமிநாதன் சாரின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கு, தன் நாடகக் குழுவில் நடிக்க ஒரு நடிகை தேவையாக இருந் தது. அந்த வாய்ப்பினை எனக்குக் கொடுத்தார்.

களிமண்ணாக அவரிடம் போய்ச் சேர்ந்த எனக்கு நடிப்பு என்றால் என்ன என்பதை பொறுமையாகச் சொல்லிக் கொடுத்து, எனக் குள்ளே ஒளிந்திருந்த திறமையை வெளிக் கொண்டு வந்த குரு அவர். திருச்சியில், அவரது ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகத்தில் நடிக்க வேண்டியவர் வரமுடியாத சூழ்நிலையில், சப்ஸ்டிட்யூட்டாக நடிக்க எனக்கு முதல் வாப்புக் கொடுத்தார். திருச்சியில் நடந்த பொருட்காட்சி அரங்கில், திரளான மக்கள் பார்க்க என் மேடை அரங்கேற்றம் நிகழ்ந்தது. அவ்வளவு கூட்டத்தைப் பார்த்து மிரண்டுபோ, வசனங்கள் மறந்துவிட, ஒருவழியாக சமா ளித்து, நடித்து முடித்தேன். அதன் பின் கோமல் சாரின் குழுவில் ஐந்தாறு வருடங்கள் நடித்தேன். ஒரு ரகசியத்தை சொல்லட்டுமா? நான் கோமல் சார் குழுவில் நடிக்கப்போனதற்கு இன்னொரு காரணமும் உண்டு. கோமலின் நாடகங்களை, டைரக்டர் கே. பாலசந்தர் சார் மிகவும் விரும்பிப் பார்ப்பார். அதன் மூலமாக, கே.பி.சாரின் கண் ணில் பட்டு, அவர் மூலமாக சினிமா வாப்பு கிடைக்காதா என்ற ஒரு நப்பாசைதான்!"

இடையில் விளம்பரங்களில் நடிக்கக்கூட வாப்பு வந்தது போல இருக்கு?

ஆமாம்! பட்டர்ஃப்ளை குக்கர், ஊறுகா, என்று சில வாப்புகள் வந்தன. என் விளம்பரங் களைப் பார்த்துவிட்டு, ‘சம்சார சங்கீதம்’ என்ற படத்தின் மூலமாக டி.ராஜேந்தர்தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அடுத்து, நானும் சினிமா வாப்புக்காக பல சினிமா கம்பெனிகளின் படியேறினேன். எல்லாரும் ஒரே மாதிரியாக ‘உங்க போட்டோக்களை கொடுத்துட்டு, போட்டோ பின்னால உங்க அட்ரசை எழுதிக்குடுங்க!’ என்று சொல்லுவார் கள். ஆனால், யாரிடமிருந்தும் அழைப்பு வர வில்லை. பாலசந்தர் சாரின் ஆபீசுக்குக் கூடப் போ, அவரைச் சந்திக்க முயற்சி செதேன். ஆனால், வாட்ச்மேன், ஸார் ஷூட்டிங் போயிட்டாரு!" என்ற ஒரே பதிலை திரும்பத் திரும்பச் சொல்லி ஏமாற்றத்துடன் அனுப்பி விடுவார்."

அதனால்தான் மலையாளக் கரையோரம் போவிட்டீர்களா?

ஆமாம்! தமிழ் நன்றாகப் பேசக்கூடியவர் களுக்குத்தான் தமிழ்ப் படங்களில் வாப்பு கொடுக்க மாட்டார்களே! மலையாளத்தில் ஹரிஹரன் என்ற பெரிய டைரக்டர் புதுமுகங் களை வைத்து எடுத்த ‘சர்க்கம்’ என்ற படத்தில் வினீத்தின் தங்கையாக நான் அறிமுகமானேன். அந்தப் படம் இரண்டு வருடங்கள் ஓடி பெரும் வெற்றிபெற்றது. அதன் பிறகு நிறைய மலையாளப் படங்களில் நடிக்கும் வாப்புகள் வந் தன. 90களில் சுமார் எண்பது மலையாளப் படங்களில் நடித்தேன். இடையில் ஓரிரு தமிழ்ப்படங்களில் நடிக்கக் கூப்பிட்டார்கள். ஆனால், நான் மலையாளத்தில்தான் அதிக கவனம் செலுத்தினேன். மலையாள சீரியல் களிலும் நடிக்கத் தொடங்கினேன்."

அப்போ, கே.பி.சாரின் அறிமுகம் எப்படித்தான் நடந்தது?

நானும், நடிகை கீதாவும் நிறைய மலை யாளப் படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறோம். இருவரும் நெருங்கிய சினேகிதிகள். அவர், கே.பி.சாரின் சீரியலில் நடித்துக் கொண்டிருந் தார். நான் மம்முட்டியின் தங்கையாக நடித்த ஒரு மலையாளப் படத்தைப் பார்த்துவிட்டு கே.பி.சார் கீதாவிடம் என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார். நான் கே.பி.சாரை சந்திக்க கீதாதான் ஏற்பாடு செய்தார்.

தி.நகர் அப்பு ஹவுசில் ஷூட்டிங்கில் இருந்த கே.பி.சாரை சந்தித்தேன். அவர் முன் நின்ற சில நிமிடங்களுக்கு ஒரே படபடப்பு. எனக்கு வார்த்தைகளே வரவில்லை. அதன் பின் பேச ஆரம்பித்து, ஓயாமல் பேசினேன். ‘நீ நல்ல உயரமா இருக்கே!’ என்று அவர் சொன்னபோது, ‘இதைவிட உயரமா இருந்தேன் சார்! உங்களைப் பார்க்க, உங்க ஆபீசுக்கு நடையா நடந்ததுல கால் தேஞ்சு உயரம் கொஞ்சம் குறைஞ்சு போச்சு!’ என்று நான் ஜோக் அடிக்க, அவர் அதை ரொம்பவே ரசித்தார்.

அடுத்த சில நாட்களில் அவரிடமிருந்து தகவல் ஒன்றும் வராத நிலையில், ‘நாம் ரொம்ப ஓவரா பேசிட்டதால, நம்மை ரிஜெக்ட் பண்ணிட்டாரோ!’ என்று தோன்றியது. அதன் பின், அவரிடமிருந்து அழைப்பு வந்தபோது, உண்மையிலேயே வானத்தில் பறப்பது போல உணர்ந்தேன்."

அவர் இயக்கத்தில் சீரியல்களில் நடித்த அனுபவம் பற்றி?

நான் நாடகத்திலும், சினிமாவிலும் ஏற்கெனவே நிறைய நடித்திருந்தாலும், கே.பி. சாரிடம்தான் நடிப்பு என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொண்டேன். கற்றுக்கொண்டேன். அதுவரை, வாஸ் மாடுலேஷனுடன் வசனம் பேசுவதுதான் நடிப்பு என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, அது மட்டுமே நடிப்பு இல்லை என்று புரிந்தது. பாடி லாங்குவேஜ் என்று நடிப்பின் இன் னொரு பரிமாணத்தைத் தெரிந்துகொண்டேன். நின்று கொண்டு வசனம் பேசாமல், ஏதாவது செதுகொண்டே வசனத்தையும் பேசும்படியாக காட்சிகள் வைப்பார் அவர். எனவே, நடிப்பில் சொதப்பி, அவரிடம் திட்டு வாங்கினவர்களை பட்டியல் போட்டால், அதில் முதல் இடம் எனக்குத்தான் கிடைக்கும். ஆரம்பத்தில் டியூப் லைட்டாக இருந்த நான், நாளாக நாளாக பிக்-அப் பண்ணிக் கொண்டேன். அவரது இயக் கத்தில், தயாரிப்பில் சுமார் 20 வருடங்கள் காதல் பகடை, கல்கி, கையளவு மனசு, சஹானா, பிரேமி, அமுதா ஓர் ஆச்சரியக் குறி என்று பல சீரியல்களில் நடித்தது எனக்குக் கிடைத்த அரியதொரு பாக்கியம்."

சினிமாவில் ஹீரோயினாக நடிக்கணும் என்கிற ஆசை உங்களுக்கு வரவில்லையா?

ஆரம்பத்தில் இருந்தே நான் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக பேரும், புகழும் சம்பாதிக் கணும்னுதான் விரும்பினேன். நான் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகி இருந்தால், எப்போதோ என் ஃபிலிம் கேரியர் முடிந்திருக்கும். ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நான் இருப்பதில் எனக்குத் துளியும் வருத்தம் இல்லை. எனக்கு அதில் மிகுந்த மகிழ்ச்சிதான்!"

உங்கள் கணவர் பற்றி?

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான சித்ரமகால் கிருஷ்ணமூர்த்தியின் கடைசி மகனான குமரன்தான் என் கணவர். பெரியவர் கள் பார்த்து நிச்சயித்து, நடத்தி வைத்த திருமணம். அவர் ‘தினந்தோறும்’ என்ற படம் எடுத்திருக்கிறார். அலோஹா (அடூணிடச்) என்ற அபேக்கஸ் (அஞச்ஞிதண்) கல்வி பிசினசில் இருக்கிறார்."

கொரோனா, லாக்டவுன் எல்லாம் எப்படி இருந்தது? பொது முடக்கத்தின்போது என்ன செய்தீர்கள்?

எப்போதுமே எனக்கு ஊர் சுற்றுவது என் றால் அவ்வளவாகப் பிடிக்காது. வீட்டிலேயே பொழுதைப் போக்க விரும்புவேன். எனக்குச் சமையலில் ஆர்வம் ஏற்பட்டு, யு-டியூபில் பார்த்து, ஏராளமான ஐட்டங்கள் செயப் பழகிக்கொண்டேன். அது எனக்குப் புது அனுபவமாகவும், நான் சமைத்தது வாக்கு ருசியாகவும் இருந்ததில் எனக்கு இரட்டிப்புாக சந்தோஷம். எஸ்.வி.ரங்காராவ் ஸ்டைலில் சொல்லணும் என்றால் ‘லாக்டவுன் சமையல் சாதம்! அதுவே எனக்கு போதும்!’ ஹா...ஹா...ஹா... (வாவிட்டுச் சிரிக்கிறார். அடுத்து சிரிப்பை நிறுத்திவிட்டுத் தொடர்கிறார்). ஆனால், அதே நேரம், இந்த லாக்டவுன் ஏராள மான சினிமாக் கலைஞர்களின் வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்துள்ளதைப் பார்க்கிற போது, ரொம்ப வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது."
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :