ஒரு பாலினத்தவருக்கு திருமண உரிமை உள்ளதா?


அலசல் : ராஜி ரகுநாதன்ராமச்சந்திர சிரஸ் என்ற பேராசிரியர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மராத்திய இலக்கியத் துறையின் தலைவராக இருந்தார். பல விருதுகளைப் பெற்ற சிறந்த அறிஞரான இவர் பல சிறுகதைகளையும் மராட்டிய மொழியில் எழுதியுள்ளார். 2002-ல் மகாராஷ்டிரா சாகித்ய பரிஷத் அவார்டும் பெற்றுள்ளார். ஆனால், இவருடைய திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை. பிப்ரவரி 8ஆம் தேதி 2010ல் மற்றொரு ஆணுடன் ஓரினப் பாலுறவு கொண்ட தாகக் கூறி இவரைக் கையும் களவு மாகப் பிடித்தார்கள். ஆனால், ஐ.பி.சி. செக்ஷன் 377-ன்படி ஹோமோ செக்ஸுவல் என்பது கிரிமினல் குற்ற மல்ல என்று தில்லி உயர் நீதிமன்றம் 2009ல் தீர்ப்பளித்து இருந்ததால் அவருக்குத் தண்டனை விதிக்கப்பட வில்லை. 2010 ஏப்ரல் 7 ஆம் தேதி ராமச்சந்திர சிரஸ் அவருடைய அபார்ட் மென்ட்டில் இறந்து கிடந்தார். காவல் துறை அதனைத் தற்கொலை என்று சந்தேகித்தது. ஆனால், உடற்கூறு சோதனையில் அவர் உடலில் விஷம் செலுத்தப்பட்டது கண்டறியப்பட்ட தால் அதனைக் கொலையாக முடிவு செது 6 பேர் கைது செயப்பட்டனர். இவருடைய பயோபிக் ‘அலிகர்’ திரைப் படத்தில் மனோஜ் பாஜ்பா நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் பல விருதுகளைப் பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.

ஓரினச்சேர்கையாளர் திருமணம் குறித்து விளக்கமளித்து மத்திய அரசு தில்லி உயர் நீதி மன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. இந்தியக் குடும்ப அமைப்புக் குறித்து தன் கருத்தை முன்வைத்தது. ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு அடிப்படை சட்ட உரிமை கிடையாது என்று பிப்ரவரி 24, 2021 வியாழனன்று மத்திய அரசு தில்லி உயர் நீதிமன்றத்திடம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. சிறப்பு திருமணச்சட்டம் (எஸ்எம்ஏ) மற்றும் வெளிநாட்டுத் திருமணச் சட்டம் (எப்எம்ஏ) இவற்றின் கீழ் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தைச் சேர்ப்பதா வேண்டாமா என்பது பற்றி தம் கருத்தை தெரிவிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எட்டு ஆண்டுகளாகச் சேர்ந்து வாழும் இரு பெண் களும், அமெரிக்காவில் சேர்ந்து வாழும் இரு இந்திய இளைஞர்களும் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செதிருந்தார்கள். அரசியல் சட்டத்தின் பிரிவு 21ன்படி மனதுக்குப் பிடித்தவரோடு திருமணம் செதுகொள்ளும் உரிமை இருப்பதால் அது ஓரினச் சேர்க்கையாளருக்கும் பொருந்தும் என்று இந்த இரண்டு ஜோடிகளும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.அதுகுறித்து தன் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு நீதிமன்றம் மத்திய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

ஒரே பாலினத்தவரிடையேயான திருமணத்தை அங்கீகரிப்பதற்கும் பதிவு செவதற்கும் இந்திய அரசியல் சட்டத்தில் அனுமதியில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. ஒரே பாலினத்தைச் சேர்ந்த மனிதர் களிடையே திருமண அங்கீகாரம் என்பது இந்திய குடும்ப அமைப்பிலுள்ள கணவன், மனைவி, குழந்தைகள் என்ற கருத்தோடு ஒப்பிட இய லாது. குடும்பம் என்பது இரு மனிதர்கள் சேர்ந்து வாழ்வது மட்டுமே அல்ல. ஒரு ஆண் கணவனாகவும் ஒரு பெண் மனைவியாகவும் அவர்கள் மூலம் பிறக்கும் பிள்ளைகளையும் கொண்ட சமூக அமைப்பு என்று விளக்கியது மத்திய அரசு. அத்தகைய திருமணத்தோடு ஓரினச் சேர்க்கையாளர் சேர்ந்து வாழ்வதை ஒப்பிட முடியாது என்று குறிப்பிட்டது. ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமல்ல என்று மட்டுமே இதற்கு முன் தீர்ப்பு வந்துள்ளது, அது ஒரு குறிப்பிட்ட நடத்தையை மட்டுமே அங்கீகரிக்கிறது என்றும் அத்தகைய திருமணத்தைச் சட்டமாக்கவில்லை என்றும் மத்திய அரசு விளக்கியது. இரு ஆண்கள் மட்டுமோ இரு பெண்கள் மட்டுமோ திருமணம் புரிந்துகொள்வதற்கு அரசியலமைப்பில் இட மில்லை என்பதையும் தெளிவு படுத்தியது. ஓரினச் சேர்க்கை யாளரின் திருமணத்திற்கு சட்ட பூர்வ அந்தஸ்து அளித்தால் ஏற் கெனவே நடை முறையில் இருக்கும் திருமண அமைப்பு தாறுமாறாகிவிடும் அபாயம் உள்ளது. திருமணம் என்பது புனிதத்தன்மை நிறைந்தது. இது சமூக மதிப்போடு தொடர்புடையது. பன்னெடுங் காலமாக தொடர்ந்து வரும் பண்பாட்டு வழக் கங்கள், கலாசாரம், சடங்குகள், நெறிமுறைகள் மற்றும் சமூக விழுமியங்களோடு இணைந்தது. இது குறித்த நீதிமன்ற தலையீடு தனிமனித சட்டங்களின் நுட்பமான சமநிலையில் பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் எடுத்துரைத்தது.

ஓரின ஜோடிகள் தம் துணையைத் தேர்ந் தெடுப்பதற்குச் சட்ட ரீதியான அங்கீகாரம் வேண்டி தாக்கல் செத மனுக்களைத் தள்ளுபடி செயும்படி நீதிமன்றத்தைக் கோரிய மத்திய அரசு, ஆணைக் கணவனாகவும், பெண்ணை மனைவியாகவும் ஏற்பதைத் தவிர, வேறு எந்த ஒரு விளக்கமும் சட்டரீதியான நிபந்தனைகளை பயனற்றதாகச் செயும் என்று எடுத்துக் கூறியது. திருமணத்தில் இரு மனிதர்களின் இணைப்பு சமூக அங்கீகாரத்தோடு இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் சட்டம் நுழை வது தனிமனித சட்ட உரிமைகளின் மென்மை யான சமநிலையைப் பாதிக்கும் என்று விவரித்தது.

பொது மக்கள் இதனை எப்படிப் பார்க்கி றார்கள்? வருங்காலத்தில் இதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும்? சமுதாயத்தால் அங்கீகரிக் கப்பட்ட ஒரு ஆணும் ஒரு பெண்ணும் குழந்தைகளும் சேர்ந்த அமைப்பையே குடும்ப மாகப் பார்த்து வருகிறோம். பல குடும்பங்கள் சேர்ந்தது சமூகமாகவும், பல சமூகங்கள் சேர்ந்தது சமுதாயமாகவும், பல சமுதாயங்கள் சேர்ந்தது ஒரு நாடாகவும் விளங்குகிறது. ஆணையும் பெண்ணையும் படைத்த இயற்கை, அவர்கள் மூலம் பிறக்கும் மக்கள் தொகையால் மனித இனம் தழைத்து வளர வேண்டும் என்று விரும்புகிறது. குடும்பத்தில் பிள்ளைகளுக்குத் தாயின் அரவணைப்பும் தந்தையின் கண்டிப்பும் தேவை. அப்போதுதான் அவன் வளர்ந்து

சிறந்த குடிமகனாக முடியும். ஓரினச்சேர்க்கைத் திருமணங்கள் செயற்கையான குடும்பங்க ளையே உருவாக்கும் அல்லவா?

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :