‘விரல் நுனியில் உன் உலகம்!’3காம்கேர் கே.புவனேஸ்வரி -‘ஆப்’ (APP) என்று செல்லமாக அழைக்கப் படும் அப்ளிகேஷன்கள் (Application)தான் ஸ்மார்ட்போன்களின் ‘பியூட்டி பார்லர்’. ஸ்மார்ட்போன்களுக்கு உயிர் ஊட்டுவதும் இந்த ஆப்கள்தான்.

கம்ப்யூட்டர் போலவும் பயன்படுத்தலாம், இன்டர்நெட் வசதிகள் அனைத்தையும் உபயோகிக்கலாம், செல்போன் போலவும் பேசிக் கொள்ளலாம், பொழுதுபோக்கு அம்சமாக வும் கையாளலாம் என்றால் யார்தான் ஸ்மார்ட்போன்களை வெறுப்பார்கள்?

ஸ்மார்ட் போன் களில் பயன்படுத்தப் படும் ஆப்களுக்கு ஏற்ப அவற்றின் பயன்பாடுகளும் அதிகரித்தன, மக்களிடையே வர வேற்பும் பெருகின. இதனால் ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு ஆப்ஸ்களை தயாரித்து வெளியிட ஆரம்பித்தன.

ஸ்மார்ட்போன்களைத் தொடர்ந்து டேப் லெட், ஐபேட், ஐபாட் என அதன் துணை தயாரிப்புகளும் மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றன. விரல் நுனித் தொட்டுப் பயன்படுத்த செல்போன் மற்றும் ஸ்மார்ட் போன், உள்ளங்கைக்குள் அடக்க டேப்லெட்/ஐபேட், மடியில் தூக்கி வைத்துக்கொள்ள லேப்டாப், டேபிள் மீது வைத்துப் பயன்படுத்த டெஸ்க்டாப் என டிஜிட்டல் சாதனங்களின் தயாரிப்பாளர்கள் தொழில்நுட்பத் துறையில் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டே வருகிறார்கள்.

சரி, வெப்சைட்டுகளுக்கும், மொபைல் ஆப்களுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்ப்போமா?

கம்ப்யூட்டரில் இணையத்தைப் பயன்படுத்துவதற்கு உதவுவது வெப்சைட்டுகள். வெப்சைட்டுகள், கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் திரைகளில் பார்ப்பதற்கு ஏற்ப வசதியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இணையத் தொடர்புள்ள மொபைலை பேசுவதற்காக மட்டும் உபயோக்கிக்காமல் எல்லா பயன்பாடுகளுக்கும் பயன்படுத்த உதவுவதுதான் மொபைல் ஆப்கள் (Mobile Apps).மொபைலில் வெப்சைட்டுகளைப் பார்வையிட முடியாதா என நினைக்கலாம். நிச்சயமாக பார்வையிடலாம், அதன் பயன்பாடுகளைப் பயன்படுத்தலாம்.

உதாரணத்துக்கு பத்திரிகைகளை ஆன்லைனில் படிக்க வெப்சைட்டுகளைப் பயன்படுத்தி கம்ப்யூட்டரிலும் படிக்கலாம். மொபைலிலும் படிக்கலாம். மின்கட்டணம், தொலைபேசி, அலைபேசி கட்டணம் போன்ற வற்றையும் கம்ப்யூட்டரில் வெப்சைட்டுகள் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம் அல்லது மொபைலிலும் வெப்சைட்டுகள் மூலமும் செலுத்தலாம்.

இணையத் தொடர்புள்ள கம்ப்யூட்டராக இருந்தாலும் சரி, மொபைலாக இருந்தாலும் சரி, வெப்சைட்டுகளைப் பயன்படுத்த பிரவுசர் சாஃப்ட்வேர்கள் தேவை. கம்ப்யூட்டருக்கு கூகுள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஃபயர் ஃபாக்ஸ் போன்ற பிரவுசர்களும், மொபைலுக்கு கூகுள் குரோம், சஃபாரி போன்ற பிரவுசர்களும் பரவலாகப் பயன்படுத்தப் படுகின்றன.

சரி, மொபைலிலும் வெப்சைட்டுகளைப் பயன் படுத்த முடியும் என்றால் பின் எதற்காக மொபைல் ஆப்கள்? என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். பெரும்பாலான வெப்சைட்டுகள் கம்ப்யூட்டர் திரையில் பார்ப்பதற்காக வடிவமைக்கப் படுபவை. மொபைல் திரையிலும் அவற்றைப் பார்க்கலாம். ஆனால், அத்தனை சுலபமாக இருக்காது. நீண்ட நேரம் மொபைலில் வெப்சைட்டுகளைப் பயன்படுத்தினால் கண்கள் வலி எடுக்கும்.

மொபைலில் படிப்பதற்காகவே வெப்சைட்டுகள் பெரும்பாலும் மொபைல் ஆப் களாக வடிவமைக்கப்பட்டிருக்கும். உதாரணத் துக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஃபேஸ் புக், டிவிட்டர், யு-டியூப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை வெப்சைட்டுகளாக கம்ப் யூட்டரிலும் பயன்படுத்தலாம், மொபைலில் ஆப்கள் மூலமும் பயன்படுத்தலாம்.

இரண்டையும் பயன்படுத்திப் பார்ப்பவர் களால் மட்டுமே வித்தியாசத்தை உணர முடியும். ஃபேஸ்புக்கை லேப்டாப்பில் www.facebook.com என்ற வெப்சைட் மூலம் திறந்து படிப்பதற்கும், மொபைல் திரையில் ஃபேஸ்புக் ஐகானைத் தட்டித் திறந்து படிப்பதற்கும் நிறைய வித்தி யாசம் இருப்பதை உணரலாம். அதன் உள்ள டக்கத்தில் மாற்றம் இருக்காது. ஆனால், பயன் பாட்டிற்கான வசதிகளில் மாற்றம் செதிருப் பார்கள். மொபைல் ஆப்கள் மொபைல் திரை யில் படிப்பதற்கு வசதியாக வடிவமைக்கப்பட் டிருக்கும். மொபைலில் பயன்படுத்துவது சுலபம்.

மொபைல் ஆப்கள் இலவசமா?

பெரும்பாலும் மொபைல் ஆப்கள் இலவசமாக மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ளும்படியே வடிவமைக்கப்பட்டிருக்கும். அதிலுள்ள வசதிகளை முழுமையாகப் பயன்படுத் தவே கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சமூக வலைதளங்களுக்கான ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற ஆப்கள் முற்றிலும் இலவசமே. ஒருசில நிறுவனங்கள் கட்டணங்களை மொபைல் ஆப் மூலம் செலுத்தினால் கட்டணத்தில் டிஸ்கவுண்ட் கொடுப்பதாகச் சோல்லி மக்களை ஊக்குவிக்கிறார்கள்.

மொபைல் ஆப்களை எங்கு வாங்குவது?

ஆன்ட்ராய்டு போனாக இருந்தால் ப்ளே ஸ்டோரிலும் (Play Store), ஐபோனாக இருந்தால் ஆப் ஸ்டோரிலும் (App Store) மொபைல் ஆப்களை டவுன்லோட் செதுகொண்டு இன்ஸ்டால் செயலாம். அவை நீங்கள் வைத்திருக்கும் போனில் ஒரு ஆப்பாக (APP) வெளிப்பட்டிருக்கும். அதைத் தட்டினால் அந்த ஆப் இயங்கி உங்களை வரவேற்கும். மிகச் சுலபமான வழிமுறைகள்தான். கஷ்டமே இல்லை.வெப்சைட்டுகளின் உரிமையாளர்கள் மொபைலுக்காக ஆப்பையும் வடிவமைத்திருப்பார்கள். அதை ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் உங்கள் பயன்பாட்டிற்காகக் கொடுத்திருப்பார்கள்.

உயிர் கொடுக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம்கள் மொபைல் போன் வாங்கக் கடைக்குப் போனால்... என்ன போன் வேண்டும்? ஆன்ட்ராய்டா, ஐஓஎஸ்-ஆ எனக் கேட்கிறார்களா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம் எனப் புரியவில்லையே என நீங்கள் தவிக் கிறீர்களா?

டெஸ்க்டாப் கம்யூட்டர், லேப்டாப், செல்போன், ஸ்மார்ட்போன், டேப்லெட், ஐபேட், ஐபாட் போன்றவை உபகரணங்கள் மட்டுமே. தொழில்நுட்ப வார்த்தையில் ஹார்டுவேர் எனலாம். இவற்றுக்கு ஆபரேட்டிங் சிஸ்டம்கள் எனப்படும் சாஃப்ட் வேர்தான் உயிர் கொடுக்கின்றன. இவை சுருக்கமாக ஓ.எஸ். (OS) எனப்படுகின்றன. ஓ.எஸ். என்னும் சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செயப் படாத இந்த சாதனங்கள் வெறும் ‘டப்பா’.நம் உடல் ஸ்மார்ட்போன்; உயிர் ஆபரேட்டிங் சிஸ்டம். இப்படி ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளலாம். ஆப்ஸ் என்பது நம் உடலை அலங்கரிக்கப் பயன்படும் அழகு சாத னங்கள் போலவும், மனதை மேம்படுத்த உதவும் அறிவுசார்ந்த விஷயங்கள் போலவும் கருதலாம். செல்போன் மற்றும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் ஆபரேட்டிங் சிஸ்டம் களுக்கு ‘மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம்கள்’ என்று பெயர்.

ஆன்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். இவற்றுக்கும் சாம்சங், ஐபோன் இவற்றுக்கும் என்ன வித்தியாசம்?

சாம்சங், ஐபோன் இவை மொபைல் போன்களின் பெயர்கள். ஆன்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். இவை மொபைல் போன்களை இயக்கி வைக் கும் ஆபரேட்டிங் சிஸ்டம்களின் பெயர்கள்.சாம்சங், ஹெச்.டி.சி. போன்ற நிறுவனங்கள் தயாரிக்கின்ற போன்களில் ஆன்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டமும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் ஐ.ஓ.எஸ். ஆபரேட்டிங் சிஸ்டமும் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவேதான், சாம்சங், ஹெச்.டி.சி. போன்ற போன்கள் ஆன்ட்ராய்டு போன்கள் என்றும், ஆப்பிள் நிறுவன போன்கள் ஐ.ஓ.எஸ். போன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு ஆபரேட்டிங் சிஸ்டம்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சாஃப்ட் வேர்கள். இவை தவிர Symbian, Android, Windows OS, Apple iOS, Blackberry OS, BADA, Palm OS, WebOS என ஏராளமான மொபைல் போன் ஆபரேட்டிங் சிஸ்டம்கள் உள்ளன. மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் ஆபரேட்டிங் சிஸ்டம்களைப் பொருத்துத்தான் அவற்றைக் கையாள்வது சுலபமாகவும் ஸ்மூத் தாகவும் அமையப்பெறும்.

(முன்னேறுவோம்)
Post Comment

Post Comment