ஞான விருத்தி தரும் ஸ்ரீ பைரவி தேவி!

மஹா பலன் தரும் தசமஹா வித்யா! 6
சுவாமி ஆத்ம சைதன்யா‘தசமஹா வித்யை’ என்கின்ற மூலப்படி யினுடைய அடுத்த தேவி அன்னை ஸ்ரீ பைரவி தேவி! சிவபெருமான் திருக்கயிலையில் அஷ்ட பைரவர்களைப் படைத்த பிறகு, அவர்களிடம் பார்வதி தேவியைச் சுட்டிக்காட்டி, பைரவர்களே இவள் மலையரசன் இமவான் மகள். இவள் கருநிறம் கொண்டதற்காக இவளை, ‘காளி’ என்றழைக்கிறோம்.

நான் ரகசியமாக வைத்திருப்பதனால், ‘குஹாயா’ என்றும் இவளைக் கூறுவார்கள். இவள் காளி எனும் வடிவத்தை விட்டுவிட்டு பைரவியாய் உங்கள் அனைவருக்கும் சக்தியாய் திகழப்போகிறாள். எனவே, இவளை அறுபது ஆண்டுகள் தவம் புரிந்து, இருபத்து இரண்டு எழுத்துகள் கொண்ட மூல மந்திரத்தால் ஜபம் செய்து வாருங்கள். இவள் உங்களுக்கு சக்தியாக ஆவாள்" என்றார்.

அதன்பின் பைரவர்கள் அனைவரும் குரோதன் முதலான பெயர்களை தங்களுக்கு வைத்துக்கொண்டு அறுபது ஆண்டுகள் அன்னையை நினைத்து இருபத்து இரண்டு எழுத்துக்களால் ஜபம் செய்து வந்தனர். இதனால் காளி தேவியாகிய அன்னை ஒவ்வொரு பைரவர்களுடைய வடிவம், உடை, நிறம், ஆயுதம் ஆகியவை அனைத்தையும் அவ்வாறே ஏற்று பல பைரவி சக்திகளாக மாறினாள். ஒவ்வொரு பைரவருக்கும் அவர்களது சக்திகளாக நின்றாள்.

‘பைரவி’ என்ற வட சொல்லுக்கு அச்சமூட்டுபவள் என்றும், பைரவி என்ற தமிழ் பெயருக்கு எதிரிகளை அழிப்பவள் என்றும் பொருள். இவள் நம்முள் இருக்கும் ஆணவம், கர்வம், மமதை, மாயையை கட்டுப்படுத்தி அழித்து, ஞானமளித்து அருள்கின்றாள். அதனால்தான் இவள் யோக நிலையில் அமர்ந்து யோகமாதாவாகக் காட்சியளிக்கின்றாள். இவள் ஞானக்கடலாக இருக்கிறாள் என்பதை உணர்த்தவே இவளுக்கு எரி சடையுடன் ஜ்வாலா மகுடம் தலையில் அமர்ந்துள்ளது.

இவள் ஞானமாதவாக விளங்குகின்றாள் எனக் காட்டவே, ஜப மாலையும், ஒலைச்சுவடியும் தாங்கி,அபயம் தந்து வரத முத்திரையைக் காட்டுகின்றாள். நெற்றியில் ஞானக்கண்! ஞானமுதம் பிறப்பிக்கும் மதியை தனது தலையில் சூடியிருக்கின்றாள். மூலாதாரத்தில் இவள் தப யோகினியாகவும் சிரசில் சரங்கா உச்சினிக்கு ஆரோகனித்த சுந்தரியாகவும் அமுத மழை பொழிகின்றாள்.

இந்த அன்னையினுடைய திதி பூர்ணிமா, இரவு காலராத்திரி. நம்முடைய உடலில் இருக்கக்கூடிய மூலாதாரம் எனும் சக்தியாக அன்னை பைரவி திகழ்கின்றாள். இந்த தேவியின் மூலாதார சக்கரத்தினுடைய தெய்வம் வல்லபீடம் கொண்ட விநாயகர். இந்த சக்கரமே அனைத்து சக்கரத்துக்கும் மூலாதாரம் ஆகும். இந்த சக்கரம் சரியாக இயங்கினால்தான் மற்ற உடல் பாகங்கள் சரியாக இயங்கும்.

அன்னை பைரவி மூலாதார சக்கரத்தில்தான் சர்வமும் ‘சாம்யா’ எனும் சக்தியுடன் நடனம் புரிகின் றாள். இவ்வாறு அவர்கள் அனந்த நடனம் புரியும் போது நவரசமும் பிறக்கின்றன. நவரசங்களையும் ஒதுக்கி விட்டு பக்தியுடன் பராசக்தியை புனைந்தால் முக்தி கிடைக்கும். அந்த ஆனந்த நடன சக்தியே பைரவி எனும் திருநாமத்தோடு ஆனந்த பைரவியாய் விளங்கு கிறாள். ‘சரஸ்வதி, லட்சுமி, காளி என்ற மூன்று சக்தி களும் அவளுக்கு உடலாக இருப்பதால் அவளே, திரிபுரா என்ற பெயரால் அழைக்கப்படுகிறாள்’ என்று ‘வாராஹி தந்திரம்’ கூறுகின்றது.

(நிறைந்தது)

தியானம்

‘ஆதாம் ராக்கதா தயோபாம் களித சசிகவ ரத்விதிதத் த்ரிநேத்ராம் தேவி நர்னெந்து வஸ்த்ராம் வித்ரு ஜபைவடி புஷ்தா வீதவஷ்டாம் வினோ துங்கஷ்தனாஸ் தாம் வணிக திதவீத்னா மசுருத் பங்கஜாம் முண்டரா மண்டி தாங்கிதீம் அருண தாரது கூலாம் லோபாம் நாமாமி...’

காயத்ரி

‘ஓம் த்ரிபுராயை ச வித்மஹே பைரவை ச தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்’

இந்த மந்திரத்தை பலாச புஷ்பம், புரசம் பூக்களால் அர்ச்சனை செய்தால் மிகப்பெரிய பலனை அடையலாம் என்பது, ‘மந்திர யாமளம்’ கூறும் உண்மை. திரிபுர பைரவி நாமத்தை மகாபூர்ணிமா எனப் படும் பௌர்ணமி நாளில் சொல்லி வழிபடுவது சிறந்தது. இந்த தேவிக்கு சிவந்த பட்டாடை உடுத்தி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சிக்க, மகிழ்ச்சி அடைகின்றாள். நான்கு திருக்கரங்களில் ஜபமாலை, புத்தகம், அபயம் வரதம் கொண்டிருக்கின் றாள். பூமியை தெய்வமாக வழிபடுகின்றாள்.

இவளுடைய ஆசனம் யோகாசனம். காலபைரவர் நாயகராக இருக்கின்றார். இவருடைய ரூப வேதங்களாக சமஸ்க்ருதா, சைதன்யா, காமேஸ்வரி, அகோரா, மஹாபைரவி, லலிதா பைரவி, ரத்ன நேத்ரா, ஷக்கோடா, நித்யா, மிருகந்த சஞ்சீவினி, ப்ரகஞ்ச பைரவி, ப்ரகஞ்சதாரிணி, புவனேஸ்வரி பைரவி, கமலேசி, சித்தகௌலேச பைரவி, டமால பைரவி, காமினி பைரவி என்று பல நாமங்களால் போற்றப்படுகிறாள். இந்த தேவியை உபாசனை செதால் பீடைகள் விலகும். தன லாபமும், சகல சம்பாத் யமும் உண்டாகும். உளவியல் ஞானமும், சகல சாஸ்த்ர ஞானமும் விருத்தியாகி, இறுதியில் முக்திப் பேறும் கிடைக்கும்.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :