எந்நாளும் நன்னாளே!

ராசிபலன்-21.04.2021 முதல் 05.05.2021 வரை
கி.சுப்பிரமணியன்மேஷம்

ராசியாதிபதி செவ்வா 3ஆம் அதிபதி புதனுடன் பரிவர்த்தனை யோகம் பெற்று 3ஆம் இடத்தில் இருப்பதால் முயற்சி வெற்றியை கொடுக்கும். சிலருக்கு இளைய சகோதர, சகோதரிகள் மூலம் ஆதாயம் கிடைக் கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளால் சிறப்படைவர். சிலருக்கு அரசாங்க பதவிகள் கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சிலருக்கு தந்தையார் வழி சொத்துக்கள் வர வாப்புண்டு. செவ்வா மற்றும் வெள்ளிக் கிழமைகளில் துர்கையை வழிபட்டு வருவது நல்ல யோகத்தை தரும். சந்திராஷ்டமம் : ஏப்ரல் 28 பகல் 11.55 முதல் ஏப்ரல் 30 பகல் 12.07 வரை.

ரிஷபம்

ராசியாதிபதி மாத இறுதியில் ராசியில் ஆட்சி பெறுவதால் சிலருக்கு யோகமான காலகட்டம். உத்தியோகத்தில் நல்ல உயர்வும் பண வரவும் ஏற்படும். சிலருக்கு அரசாங்க வேலையும், அனுகூலங்களும் கிடைக்கும். வெளிநாட்டு தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவன், மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் வர வாப்பு உண்டு. பேச்சில் கவனம் தேவை. ஆலயங் களில் வேலை பார்க்கும் அர்ச்சகர்கள் மற்றும் புரோகிதர்களுக்கு பணம் வரவு ஏற்படும். சுக்ரேஸ்வரரை வழிபடுவதன் மூலம் நல்ல வாப்புக்கள் அமையும். சந்திராஷ்டமம் : ஏப்ரல் 30 பகல் 12.07 முதல் மே 02 மாலை 02.46 வரை.

மிதுனம்

ராசியாதிபதி புதன் லாபத்தில் துவங்குவ தால் லாபம் ஏற்பட்டாலும் மாத இறுதியில் 12ஆம் இடமான விரய ஸ்தானத்தில் வருவதால் லாபமும் விரயமும் சரிசமமாக இருக்கும். ராசியாதிபதி புதன் லாபாதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனை யோகம் பெறுவதால் வேலை மற்றும் தொழில் லாபகரமாக இருக்கும். எதிர் பாராத சொத்து வந்து சேர வாப்பு உண்டு. சூரியன் வலுவாக இருப்பதால் சிலருக்கு அரசாங்க வேலை அல்லது சலுகைகள் கிடைக்க வாப்புண்டு. பிள்ளைகளின் கல்வி சிறக்கும். ஒவ்வொரு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லட்சுமி வழிபாடு நன்மை தரும். சந்திராஷ்டமம் : மே 02 மாலை 02.46 முதல் மே 04 இரவு 08.43 வரை.

கடகம்

உங்கள் ராசிக்கு 2ஆம் அதிபதி 10ஆம் இடத்தில் உச்சம் பெறுவதால் உத்தியோக உயர்வு ஏற்படும். சிலருக்கு திருமணம் நடைபெறும். புதிதாக வீடு கட்டும் யோகமும் உண்டு. மாத இறுதியில் 11ஆம் இடத்தில் நல்ல கிரக சேர்க்கை இருப்பதால் பணிபுரியும் இடத்தில் சாதனை மேலோங்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள், தொழிலாளர்களுக்கும் லாபகர மான காலகட்டம். சனிக்கிழமை தோறும் ஆஞ்சனேயர் வழிபாடு மற்றும் லக்ஷ்மி நரசிம்ம சுவாமி வழிபாடு செது வருவது நல்ல லாபகரமாக இருக்கும். சந்திராஷ்டமம்: மே 04 இரவு 08.43 முதல் மே 07 காலை 05.54 வரை.

சிம்மம்

ராசியாதிபதி 9ஆம் இடத்தில் உச்சம் பெறுவதால் சிலருக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். குடும்பத்துக்கு தேவையான பொருளாதார வசதிகள் ஏற்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாப்புண்டு. சிலருக்கு திருமண யோகம் அமையும். குரு 7ஆம் இடத்தில் இருந்து ராசியை பார்ப்பதால் திருமணம் நடைபெறும். கூட்டுத்தொழில் செபவர்களுக்கு லாபம் ஏற்படும். பிள்ளை களால் அனுகூலம் உண்டு. எதிரிகளை வெற்றி கொள்ளும் சூழல் உண்டாகும். நிலுவையில் உள்ள வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். தினமும் சூரிய நமஸ்காரம் செவது அல்லது சூரியனை வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

கன்னி

ராசியாதிபதி மற்றும் 10ஆம் இடத்து அதிபதியான புதன் 8ஆம் இடத்தில் மறைந் தாலும் 8ஆம் அதிபதியுடன் பரிவர்த்தனை யோகம் செதிருப்பதால் நல்ல யோகமான காலகட்டம். சிலருக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வாப்பு வரும். பொருளாதார உயர்வு இருக்கும். சிலருக்கு புதிய நிலம் வாங்குவதற்கு யோகம் இருக்கும். பிள்ளை களின் படிப்பில் கவனம் தேவை. வெளிநாடு செல்லக் கூடிய யோகம் சிலருக்கு இருக்கும். கொடுத்த கடன் திரும்பி வரும். அரசாங்க பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். சொந்த தொழில் மற்றும் வேலை பார்க்கும் இடத்தில் குரு வழிபாடு செவது நல்ல பலனைக் கொடுக்கும்.

துலாம்

உங்கள் ராசிக்கு லாபாதிபதியான சூரியன் 7ஆம் இடத்தில் உச்சம் பெறுவதால் சொந்தத் தொழில் யோகமாக இருக்கும். எதிர்பாராத பணவரவு ஏற்படும். சொந்தத் தொழிலை விரிவாக்கக்கூடிய யுக்திகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர் களுக்கு இந்தக் காலகட்டத்தில் தடைகளும் தாமதங்களும் ஏற்பட வாப்புண்டு. மாத இறுதியில் ராசியாதிபதி 8ஆமிடத்தில் ஆட்சி பெறுவதால் சிலருக்கு புதிதாக வண்டி, வாகனம் வாங்கும் யோகமும் வீடு அல்லது நிலம் வாங்க கூடிய யோகமும் ஏற்பட வாப்புண்டு. தினமும் விநாயகரை வழிபட்டு வருவது குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை தீர்க்க நல்ல வழியாகும்.

விருச்சிகம்

கேது ராசியில் இருக்க, ராகுவும் ராசியை பார்ப்பதால் உடல் ரீதியான பிரச்னைகள், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வர வாப்புண்டு. ஆனால், 10ஆம் அதிபதி 6ஆமிடத்தில் உச்சம் பெறுவதால் நல்ல வேலை கிடைக்கவும் பணி உயர்வு மற்றும் பண வரவு ஏற்பட வாப்பு உண்டு. 3ஆம் இடத்தில் சனி ஆட்சியாக இருப்பதால் முயற்சி நல்ல வெற்றியைத் தரும். சிலருக்கு நண்பர் களால் ஆதாயம் ஏற்படும். சொந்த வீடு, நிலம் வாங்கக்கூடிய யோகம், பங்கு சந்தையில் லாபம் காணும் யோகமும் உண்டு. மருத்துவத் துறை, கட்டுமான தொழில் அனுகூலமாக நடைபெறும். மருந்து வியாபாரத்தில் ஆதாயம் கிடைக்கும். செவ்வாக்கிழமை தோறும் முருகனை வழிபட்டு வர நல்ல பலன் தரும்.

தனுசு

உங்கள் ராசிக்கு 5 மற்றும் 7ஆம் அதிபதி கள் பரிவர்த்தனை யோகம் பெறுவதால் சொந்தத் தொழில் செபவர்கள், கலைத் துறையில் இருப்பவர்கள், சமையல் தொழில் செபவர்கள் லாபம் காண்பர். சிலருக்கு எதிர் பாராத அதிர்ஷ்ட வாப்புகள் ஏற்படும். தந்தைவழி சொத்துக்கள் வந்து சேரும். தா வழி சொந்தங்களுடன் கருத்து வேறுபாடு வர வாப்பு உண்டு. விரய ஸ்தானத்தில் கேது இருப்பதால் சிலருக்கு தான தர்மம் செயக் கூடிய வாப்புகள் வரும். சிலர் கலாச்சார முறைகளை பின்பற்றத் துவங்குவார்கள். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வணங்கி வர, நல்ல பலன் கிடைக்கும். சந்திராஷ்டமம் : ஏப்ரல் 20 பகல் 12.29 முதல் ஏப்ரல் 22 காலை 08.15 வரை.

மகரம்

ராசியில் ராசியாதிபதி ஆட்சியாக இருப்ப தால் உடல் ரீதியாக சில பிரச்னைகள் ஏற்படும். பேச்சை மூலதனமாக வைத்து உழைப்பவர்களுக்கு யோகமான காலம். தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. 5ஆம் இடத்து ராகுவால் பிள்ளைகளுக்கு உடல் ரீதியாக பிரச்னைகளை சந்திக்க நேரிடும். தெவ வழிபாட்டில் ஈடுபாடு ஏற்படும். மாத இறுதியில் சிலருக்கு கலைத் துறையில் நல்ல வாப்பு, அங்கீகாரம், பாராட்டு கிடைக்கும். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வீர பத்திரர், ஹயக்ரீவர் வழிபாடு நல்ல பலனைத் தரும். சந்திராஷ்டமம் : ஏப்ரல் 22 காலை 08.15 முதல் ஏப்ரல் 24 பகல் 11.55 வரை.

கும்பம்

உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்து கேதுவால் புதிய வேலை கிடைக்க வாப்பு உண்டு. சிலருக்கு பெற்றோர்களால் அனுகூலம் உண்டு. சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டு. பங்குச் சந்தையில் நல்ல ஆதாயம் பார்க்கலாம். சுய தொழில் சிறக்கும். சிலருக்கு அரசாங்க சலுகைகள் கிடைக்கும். ராசியில் இருக்கும் குருவால் சிலருக்கு குடும்பத்தை விட்டு வேறு இடம் செல்ல நேரிடும். கேதுவின் சஞ்சாரத்தால் ஆலயத் திருப் பணிகள் செயக்கூடிய வாப்புகள் தேடி வரும். சனிக்கிழமை தோறும் ஆஞ்சனேயரை வணங்குவதால் யோகம் உண்டாகும். சந்திராஷ்டமம் : ஏப்ரல் 24 பகல் 11.55 முதல் ஏப்ரல் 26 பகல் 12.32 வரை.

மீனம்

ராசியாதிபதி விரயத்தில் இருக்க, லாபாதி பதி லாபஸ்தானத்தில் ஆட்சியாக இருக்க, வரக்கூடிய லாப, நஷ்டம் சமமாக இருக்கும். பேச்சாற்றல் வெற்றி பெறும். சூரியன் இரண்டா மிடத்தில் உச்சம் பெறுவதால் முன்கோபம் வர வாப்புண்டு. சிலருக்கு திருமணம் நடைபெற வாப்பு உண்டு. சுக்ரனின் சஞ்சாரத்தால் கணினித் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு சொந்தத் தொழிலில் வெற்றி கிடைக்கும். சொந்த வீடு, புதிய வண்டி வாங்கும் யோகம் ஏற்படும். முருகர் வழிபாடு செவதும், சஷ்டி விரதம் இருப்பதும் நல்ல யோகத்தைக் கொடுக்கும். சந்திராஷ்டமம் : ஏப்ரல் 26 பகல் 12.32 முதல் ஏப்ரல் 28 பகல் 11 55 வரை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :