பக்தர் குரல் கேட்டு ஓடி வந்த ஸ்ரீ ராமர்!

அதிஷ்டான தரிசனம்
இரா.சுரேஷ்மராட்டிய சத்ரபதி சிவாஜிக்கு ஆன்மிக குருவாக விளங்கியவர் மகான் ஸ்ரீ சமர்த்த ராமதாசர். மாருதியின் அருளால் ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவின் தரிசனம் கிடைக்கப்பெற்ற ஸ்ரீ சமர்த்த ராமதாசர் பாரத தேசத்தில் தான் சென்ற இடமெல்லாம் ராம பக்தியை பரப்பி வந்தார். தஞ்சையை ஆண்ட வீர சிவாஜியின் சகோதரர் வெங்காஜி என்கின்ற ஏகோஜி ஆட்சி புரிந்த காலத்தில் தஞ்சைக்கு விஜயம் செய்த மகான் ஸ்ரீ சமர்த்த ராமதாசர் ராம பக்தியை தஞ்சையில் பரப்ப எண்ணி, தனது பிரதான சீடரான ஸ்ரீ பீமராஜ் கோஸ்வாமிக்கு தஞ்சையில் மடம் நிறுவிக் கொடுத்தார்.

தஞ்சையில் ஸ்ரீராமரின் பஞ்சாயதன மூர்த்தியை புதிதாகச் செய்து தனது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல நினைத்தார். இந்த விக்ரஹத்தை செய்யக்கூடிய ஆசாரிக்கு வயது முதிர்வின் காரணமாக கண் பார்வை சரியாகத் தெரியவில்லை எனக் கூறி, விக்ரஹம் செய்ய ஆசாரி மறுத்தார். இதைக் கேள்விப்பட்ட ஸ்ரீ சமர்த்த ராமதாசர் அந்த ஆசாரிக்கு கண் பார்வையைக் கொடுத் தார். அதன் பிறகு மிக அழகான முறையில் ஸ்ரீராமர் விக்ரஹத்தை செய்து முடித்தார் ஆசாரி. ஸ்ரீ பீமராஜ் கோஸ்வாமிகள் ஸ்ரீராமருடைய பஞ்சாய தன மூர்த்தியை தனது குருநாதரிடம் சமர்ப்பித்தார். இந்த விக்ரஹம் தற்போது ஸ்ரீ சமர்த்த ராமதாசரின் அதிஷ்டானத்தில் மேற்கு பகுதி சஜ்ஜன்கட்டில் உள்ளது.

இதுபோன்ற விக்ரஹத்தின் மறு மதிப்பினை அதே ஆசாரி ஸ்ரீ பீமராஜ் கோஸ்வாமி அவர்களுக்கும் செய்து கொடுத்தார். தனது குருநாதர் சமர்த்த ராமதாசர் அந்திம காலத்தில் உடனிருந்து பணிவிடை செய்தவர் ஸ்ரீ பீமராஜ் கோஸ்வாமி ஆவார். தஞ்சை, சாமந்தான் குளக்கரையில் கி.பி.1677ல் மடம் அமைத்து ஸ்ரீராம பக்தியை ஹரி கதை மூலம் பரப்பியும், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்த மகான் ஸ்ரீ பீமராஜ் கோஸ்வாமிகள் புகழ் திக்கெட்டும் பரவியது. தஞ்சையை ஆண்ட ஸ்ரீ பிரதாபசிம்ம மகாராஜா தனக்கு மந்திர உபதேசம் செய்ய மகான் ஸ்ரீ பீமராஜ் கோஸ்வாமிகளை அரண்மனைக்கு அழைத்து வருமாறு தனது அமைச்சரை பணித்தார்.

மன்னரின் வேண்டுகோளை பீமராஜ் கோஸ்வாமி அவர்களிடம் தெரிவித்தார் அமைச்சர். அதற்கு பீமராஜ் கோஸ்வாமிகள், ‘பசுவுக்கு தாகம் எடுத்தால் குளத்துக்குத்தான் வர வேண்டும். குளம் பசுவிடம் செல்லாது’ என்ற செய்தியை மன்னரிடம் தெரிவிக்கச் சொன்னார் அமைச்சரிடம். இந்த செய்தியை அமைச்சர் மன்னரிடம் தெரி விக்க, பிரதாபசிம்ம மகாராஜா கோபம் கொண்டு, ஸ்ரீ பீமராஜ் கோஸ்வாமிகள் ஹரி கதை சொல்லும் இடத்துக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென நுழைந்தார். பீமராஜ் ஸ்வாமிகளிடம் சற்றே உரத்த குரலில், ‘தனக்கு ராமபிரானை காட்ட முடியுமா?’ என மன்னர் வினவினார். பீமராஜ் கோஸ்வாமிகள் தான் பூஜை செய்து வரும் ராம விக்ரஹத்தின் முன்பு, ஏ! ராமா தாமதமின்றி ஓடி வா." என பாடி அழைத்தார். அச்சமயம் ராம விக்ரஹம் அமைந் துள்ள விமானம் முன்னே நகர்ந்து வருவதை மன்னரும், பக்தர்களும் கண்டு வியந்தனர். அதைக் கண்ட மன்னனின் அகம்பாவம் நீங்கியது. ஸ்ரீ பீமராஜ் கோஸ்வாமிகளிடம் சரணடைந்து மன்னிப்பு கோரினான் மன்னன். பீமராஜ் கோஸ்வாமிகள் தன்னிடம் சரணடைந்த பிரதாப சிம்ம மகாராஜாவின் அறியாமையை உணர்த்தி, மந்திர உபதேசம் செய்து வைத்தார்.

இத்தகைய புகழ்பெற்ற பீமராஜ் கோஸ்வாமிக்கு தஞ்சையில் பல மடங்கள் நிறுவுவதற்கு மன்னர் அனுமதி தந்தார். கி.பி. 1741ல் தனது 99வது வயதில் மகான் ஸ்ரீ பீம ராஜ் கோஸ்வாமிகள் ஸித்தி அடைந்தார். இவரது அதிஷ்டானம் தஞ்சாவூர் நகரம், கரந்தை பேருந்து நிறுத்தம் அருகில், பிரதான சாலையில் உள்ளடங்கி அமைந்துள்ளது. இந்த அதிஷ்டானத்தின் மேல் அனுமன் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மாலை ஆறு மணிக்கு இந்த அதிஷ்டானத்தின் மீது ஜோதி ஏற்றி, கூட்டுப் பிரார்த்தனையும், ராம நாம ஜபமும் செய்து பக்தர்கள் ஐந்து முறை இந்த அதிஷ்டானத்தை வலம் வந்து வழி பட்டு வருகின்றனர்.

இந்த அதிஷ்டானத்தின் பின்புறம் பீமராஜ் கோஸ்வாமியின் சீடர் ராமதாச சுவாமியின் அதிஷ் டானமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :