பாவம் போக்கும் சித்ரகுப்தர் ஆலயம்!

சித்ரா பௌர்ணமி ஆலயம்



சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தன் எனப்படும் சித்ரா புத்திரனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறு கின்றன. மானிடர்கள் புரியும் பாவ, புண்ணியங் களை உடனுக்குடன் பதிவு செய்யும் வல் லமை படைத்தவர் இவர். இவரை வழி பட, நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் மன்னிக்கப் படும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. மேலும், ஒருவர் நல்வழியில் செல்லவும் வழிகாட்டுபவர் இவர்.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் இவருக்குத் தனிக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சித்ரா பௌர்ணமி யன்று இவருக்கும் இவர் மனைவி கர்ணிகாவுக்கும் அபிஷேக, ஆராதனைகளுடன் திருமண விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

தேனி மாவட்டம், தேனி - போடிநாயக்கனூர் சாலையில் தேனியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், ‘தீர்த்தத்தொட்டி’ எனும் இடத்திலும், சித்ரகுப்தனுக்கு ஒரு கோயில் அமைந்துள்ளது. இதன் முன்மண்டபத்தில் விநாயகப் பெரு மான் எழுந்தருளியுள்ளார். வலப் புறம் உள்ள கருவறையில் சித்ர குப்தனும், இடப்புறக் கருவறை யில் சீலக்காரி அம்மனும் அருள் புரிகின்றனர். இரு கருவறை களுக்கும் தனித்தனி விமா னங்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயிலில் அருள்பாலிக்கும் சித்ர குப்தன் ஒரு பீடத்தில் அமர்ந்த நிலையில் இடக்காலை மடக்கி யும், வலக் காலைத் தொங்கவிட்டும், வலக்கரம் அபய முத் திரையுடனும், ஏடு, எழுத்தாணியுடன் திகழும் இடக்கரத்தை முழங்காலில் வைத்த வாறும் காட்சி தருகிறார். தலைப்பாகை, கழுத்தில் முத்து மாலை அணிந்து அருள்பார்வையுடன் தரிசனம் தருவது விசேஷம்.

கோயிலின் முன்பு உள்ள மண்டபத்தில் நவக்கிரகங் கள் தனித்தனியாக ஓவிய வடிவங்களில் காட்சி அளிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று இங்கு சித்ரபுத்திர விழா மிகச் சிறப்பாக நடைபெறு கிறது. அன்று இவருக்கு எருமைப்பாலால் அபிஷேகம் செய்து, எருமைப்பால் மற் றும் பயத்தம் பருப்பு கலந்த பாயசம் நிவேத்தியம் செய்யப்படுகிறது.

மேலும், சிதம்பரம் ஸ்ரீ நட ராஜர் கோயில், கும்பகோணம்-மயிலாடுதுறை பாதையில் உள்ள திருவாலங் காடு திருத்தலம், திருவிடை மருதூருக்கு அருகில் உள்ள திருக்கோடிக்கா ஆகிய திருத் தலங்களிலும் சித்ரகுப்தரை தரிசிக்கலாம்.

இவை தவிர, திருவண்ணா மலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சித்ரகுப்தன், தனது உதவியாளர் விசித்ரகுப்தனுடன் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். தனிச் சன்னிதியில் அருள்புரியும் இவரை, நேரிடையாக தரிசிக்காமல், பக்கவாட்டில் உள்ள சிறிய சாளரத்தின் வழியாக தரிசிக்க வேண்டும் என்பது மரபு.

சித்ரபுத்திரரை சித்ரா பௌர்ணமி மற்றும் பௌர்ணமி திதிகளில் வழிபட்டால் பாவங்கள் அழிந்து வாழ்வு வளம் பெறும் என்பது நம்பிக்கை.- டி.ஆர்.பரிமளம், திருச்சி




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :