திருப்புமுனை தரும் திருப்புடைமருதூர் ஈசன்!

வழிபாடு
ர.சாய்கார்த்திக்தலையார்ச்சுனம்’ எனப்படுவது ஸ்ரீசைலம். இது தேவார வைப்புத்தலம். தஞ்சாவூர் மாவட்டம், திருப்புடை மருதூர் இடையார்ச் சுனம் அல்லது மத்யார்ச்சுனம் என அழைக்கப்படுகிறது. ‘கடையார்ச்சுனம்’ எனப் போற்றப்படும் திருப்புடைமருதூரில் சுமார் 1,200 வருடங்கள் பழைமையான திருக்கோயிலில் அருள்மிகு கோமதி அம்பாளுடன் ஸ்ரீ நாறும்பூநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

மன்னர் வீரமார்த்தாண்டவர்மன் வேட்டைக்குச் சென்றபோது, அவர் எத அம்பு பட்டு மான் ஒன்று மருத மரத்துக்குள் சென்று மறைந்தது. மன்னர் அந்த மருத மரத்தை அருகில் வந்து பார்க்க, மான் லிங்கமாக மாறி இத்திருத்தலத்தின் இறைவன் ஸ்ரீ நாறும்பூநாத சுவாமியாக மன்னருக்கு காட்சியளித்ததாகக் கூறுகிறது கோயில் தல வரலாறு.

செவி சாத்து கேட்கும் சுயம்பு லிங்கம் : கருவூர் சித்தர் சிவனை தரிசிக்க இங்கு வந்தபோது தாமிர பரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அவரால் ஆற்றைக் கடந்து மறுகரையில் இருந்த கோயிலுக்குச் செல்ல முடியாமல், இருந்த இடத் திலிருந்தே மனமுருகி வழிபட்டார். பின்னர் சிவனை மனதில் நினைத்து பாடல் ஒன்றைப் பாடினார். அவர் பாடலை ரசிக்க விரும்பிய சிவன், தனது இடது காதில் கை வைத்து ஒருபுறம் சாவாக திரும்பினார். பின்னர் சித்தரிடம், என்னை மனதில் நினைத்தபடியே ஆற்றில் இறங்கி நடந்து வருக" என்றார்.

கருவூராரும் அப்படியே செய்து, ஆற்றைக் கடந்து சிவனை தரிசித்து அவரிடம் பக்தர்கள் நலன் கருதி ஒரு கோரிக்கையையும் முன் வைத்தார். அதாவது, எக்காலத்திலும் இங்கு தரிசிக்க வரும் பக்தர்களின் பிரார்த்தனைகளை செவிசாத்துக் கேட்டு,அவை அனைத்தையும் நிறைவேற்றித் தரும்படி வேண்டினார். சுவாமியும் அவர் வேண்டுதலை ஏற்று அருள்புரிந்தார்.

சுயம்பு அம்பிகை : பெருங்கருணை நாயகியான இத்திருத்தலத்து இறைவி ஸ்ரீ கோமதி அம்பாள் உச்சி முதல் பாதம் வரை உலகில் எங்கும் எவரும் காணா வண்ணமாக ருத்ராட்ச திருமேனி யுடன் மிகச் சிறந்த வரப்ரசாதியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தாரகா சக்தி பீடமாக உள்ள இந்தத்திருத்தலத்தின் அம்பிகை அருளே வடிவானவள். வேண்டுதல்களை நிறைவேற்று வதில் அம்பிகைக்கு தனிச் சிறப்பு உண்டு.

சுரேந்திர மோட்ச தீர்த்தம் : திருப்புடைமருதூர் ஆற்றங்கரை தீர்த்தக்கட்டத்துக்கு, ‘சுரேந்திர மோட்ச தீர்த்தம்’ என்று பெயர். இந்திரனும் இந்திராணியும் தவம் செது, தோஷம் நீங்க இந்தத் தீர்த்தக்கட்டத்தில் நீராடியதாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

மியூரல், டெம்ப்ரா ஓவியங்கள் அழகு! திருப்புடைமருதூர் கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையும் 11 கலசங்களையும் கொண்டுள்ளது. கோபுரத்தின் தளங்களில் மியூரல் டெம்ப்ரா வகை சுவரோவியங்கள் இடம்பெற்றுள்ளன. திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், கந்த புராணம், தசாவதாரம் உள்ளிட்ட ஓவியங்களும், கோயில் குறித்த ஓவியங்களும், சீன நாட்டு வணிகர்களின் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.

தனிச் சிறப்புகள் : சுவாமி மற்றும் அம்பாள் இருவரும் ஒரு சிவாலயத்தில் சுயம்பு திருமேனியாக அமைவது அரிதிலும் அரிது. மேலும், காசியில் கங்கை தெற்கில் இருந்து வடக்கு நோக்கிப் பாவதைப் போன்று இங்கு தாமிரபரணியும் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாகிறது. ஆக, ‘தட்சிணகாசி’ என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.

திருப்புடைமருதூரில்தான் திருமாலின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் நிகழும் என்று காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் ‘தெவத்தின் குரல்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமைவிடம் : திருநெல்வேலி - பாபநாசம் சாலையில் 28 கி.மீ. தொலைவில் வீரவநல்லூரிலிருந்து பிரியும் சாலையில்7 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புடை மருதூர்.

தரிசன நேரம் : காலை 6 முதல் 10.30 மணி வரை.மாலை 5 முதல் இரவு 7.30 மணி வரை.

சனி பிரதோஷத்தன்று ராஜ கோபுர திருப்பணி துவக்க விழா!

இந்தக் கோயிலில், ‘ஸ்ரீ கஜானன் மஹராஜ் கைங்கர்ய சபா’ ஏப்ரல் 24ல் இவ்வருடத்தின் முதல் மஹாபிரதோஷ வழிபாட்டோடு ராஜ கோபுர திருப்பணி நடைபெறுவதற்கு ஒரு விழா நடத்த உள்ளனர். முற்றிலும் புதுமையான ஒரு முயற்சியாக திருக்கோயில் தல வரலாறு காட்சியமைப்பாக உருவாக்கப்பட்டு, திருக்கோயில் முழுவதும் 10,008 தீபங்கள் ஏற்றப்படுகின்றன.

மாலை 4.30 மணிக்கு துவங்கும் மஹாபிரதோஷ பூஜையில் அபிஷேகத்தின் சிறப்பம்சமாக 3024 செவ்விளநீர் மற்றும் செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை மலர்களைக் கொண்டு செயப் படும் அலங்காரமும் இதில் இடம்பெறும். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை பேப்பரில் எழுதி,சுவாமி சன்னிதியிலிருந்து கீழே இறங்கும் வழியில் வைக்கப்பட்டுள்ள பிரார்த்தனை பெட்டியில் செலுத்தலாம். ஜாதக ரீதியாக கெடுபலன் உள்ளவர்கள் இதில் பங்கேற்றால் அவர்களின் நிலை மாறும் என்பது ஐதீகம்.

வீரவநல்லூர் மற்றும் முக்கூடல் பேருந்து நிலையங்களிலிருந்து திருக்கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக இன்று மதியம் 2 மணி முதல் பேருந்துகள் இலவசமாக இயக்கப்படுகின்றன.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :