நாடியவை நலம் தரும் ஸ்ரீ ராம நவமி வழிபாடு!


ஸ்ரீராம நவமி (21.4.2021)
தனுஜா ஜெயராமன் -



மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் மிகவும் உயர்வானது ஸ்ரீராம அவதாரம். உலகில் அறத்தையும் தெய்வீகத்தையும் வெளிப்படுத்தவே ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீராமனாக பூமியில் அவதாரம் செய்தார். அறமே உலக வாழ்வில் நெறி.

ஒரு சொல் ஒரு வில் ஒரு இல் என வாழ்ந்து காட்டி யவர் ஸ்ரீராமர். அத்தகைய பெருமைக்குரிய ஸ்ரீராமபிரான் இப்பூமியில் அவதரித்த திருநாளே ஸ்ரீராம நவமியாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக, யாரும் அஷ்டமி, நவமி தினங்களில் எந்த நல்ல காரியத்தையும் செய மாட்டார்கள். இதனால் கவலையடைந்த அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகாவிஷ்ணுவிடம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள மனக்குறையை கூறி வருந்தினர். அப்போது விஷ்ணு பகவான், ‘அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும்’ என்று உறுதியளித்தார்.

சித்திரை மாதம் வளர்பிறை நவமி திதியில் நண் பகல் நேரத்தில் தசரதர் - கௌசல்யா தம்பதியருக்கு மகனாக ஸ்ரீராமர் அவதரித்தார். மனிதனாகப் பிறந்து தர்ம நெறியின் பாதையில் தெவாம்ச நிலையை அடைவதற்கு ஆகச் சிறந்த உதாரணம் ஸ்ரீராமபிரானே! அவரது பாதங்களைப் பற்றி, பேரின்ப நிலையை அடைய, ராம நாமத்தை நாளும் உச்சரித்தாலே போதும்.

ஸ்ரீராமநவமி எல்லா இடங்களிலும் கொண்டாடப் படுவது பங்குனி மாத சுக்ல பட்ச நவமி அன்று. ஆனால், ஸ்ரீரங்கத்தில் சித்திரை மாத சுக்லபட்ச நவமி தினத்தில் கொண்டாடப்படுகிறது. பொதுவாக, பங்குனி மாத சுக்ல பட்ச நவமி ஆதிபிரம்மோத்ஸவம் நேரத்தில் வரும். எனவே, ஸ்ரீரங்கத்தில் சித்திரை மாத சுக்ல பட்ச நவமியில் ஸ்ரீராமநவமி கொண்டாடப் படுகிறது.

ஸ்ரீராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் மற்றொரு விரத முறையாகவும் ராமநவமியை பக்தர்கள் வழிபடுகின்றனர். சித்திரை மாதம் வளர் பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் கர்ப்போஸ்தவம் என்று பெயரில் ஸ்ரீராமநவமி கொண்டாடப்படுகிறது. அதேபோல்,சித்திரை மாத சுக்ல பட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் ஜன்மோத்ஸவம் என்று பெயரில் ராமநவமி கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ ராம நவமி விரதத்தை தொடங்குவதற்கு முதல் நாள், வீட்டை சுத்தம் செய வேண்டும். பூஜை அறை யில் ஸ்ரீராமர் படத்தை வைத்து, அதற்கு குங்குமம், சந்தனம் இட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஸ்ரீராம நவமி நாள் அன்று காலையில் விரதம் மேற் கொண்டு, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சனேயரின் அருட்பார்வை கிட்டும் என்பது நம் பிக்கை. இந்நாளில் ஸ்ரீ ராமரை பற்றிய ஆன்மிக நூல்களைப் படித்தும், ஸ்ரீ ராம துதியை பாராயணம் செவதுமாக இருப்பது நன்மை அளிக்கும். ஸ்ரீராம நவமி நாளில் ஸ்ரீராமர் கோயில்களில் பட்டாபிஷேகம் விழா நடைபெறும். அதை கண்டு ஸ்ரீராமன் ஆசிகளைப் பெறலாம்.

ஸ்ரீராம நவமி வழிபாட்டின்போது நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம், பானகம் மற்றும் பல்வேறு இனிப்பு வகைகள், பழங்கள் போன்றவற்றை படைத்து ஸ்ரீராமரை வணங்கலாம். ஸ்ரீராம நவமி விரதம் தொடங்கும் நாளன்று ராம நாமத்தை உச்சரித்துக்கொண்டிருக்க வேண்டும்.

ஸ்ரீ ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்த வேண்டும். இதனை ஒன்பது நாளும் செய முடியாதவர்கள், ஸ்ரீராம நவமி தினத்திலாவது செய வேண்டும். ஸ்ரீராம நவமி விரத நாட்களில் ராம ஜாதகத்தை காகிதத்தில் அல்லது செப்புத் தகட்டில் வரைந்து வழிபடுவது சிறப்பான பலனைத் தரக்கூடியதாகும்.

ராம நாமத்தை உச்சரிப்பதால் ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும். ஸ்ரீராம நவமி நாளில் விரத மிருந்து இறைவனை வேண்டிக்கொண்டால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை. குடும்ப நலம் பெருகி, வறுமையும் பிணியும் அகலும். நாடியப் பொருட்கள் கைகூடும் என்ற நம்பிக்கை உண்டு. ஸ்ரீராமனை, தம்பி லக்ஷ்மணன், சீதா சகிதம் வணங்கினால் குடும்ப ஒற்றுமை ஓங்கி வளரும் என்பது ஐதீகம்.

ஸ்ரீராம நவமி விரதம் மேற்கொள்வதால் நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். ஸ்ரீராம நவமி அன்று பல்வேறு ராமர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் சிறப்பு பூஜை களும் நடைபெறும். இத்திருநாளில் ராம நாமத்தை தொடர்ந்து உச்சரிப்பது விசேஷ பலன்களைத் தரும். இத் தகைய சிறப்பு வாந்த ஸ்ரீராம நவமியன்று ராமபிரானை வணங்கி வாழ்வில் பல்வேறு நலன்களையும் ஸ்ரீராமனின் அருளையும் பெற்று வளமுடன் வாழலாம்.




Post Comment

Post Comment