உங்களுடன்...


வாசக நெஞ்சங்களே, வணக்கம்.
-இந்த பூமி வாழ்க்கையின் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் என்ன என்பதுபற்றி ஒரு உபன்யாசகரின் கருத்து வெகுவாகக் கவர்ந்தது. இதோ நீங்களும் படியுங்களேன்!

ஒரு தாய் தன் குழந்தையை பிரசவித்த கையோடு இறக்கும் நேரம் வந்தது. எம தூதன் பரிதாபப்பட்டு தாயின் உயிரைப் பறிக்காமல் சென்றான். இதையறிந்த எமதர்மன், உனக்கு தேவ ரகசியங்கள் புரியும் வரையில் பூலோகத்தில் வாழ்க்கை நடத்து" என்று அந்த எம தூதனை பூமிக்கு அனுப்பினான்.

அந்த எம தூதன் பசியுடன் ஒரு தையற்காரர் வீட்டு வாசல் திண்ணையில் சுருண்டு படுக்க, அந்த தையற்காரன் எமதூதனுக்கு சாப்பிடத் தருமாறு தன் மனைவியிடம் கேட்க, அவளோ, ஆமாம்.. இங்க கொட்டிக் கிடக்கு..." என்று திட்டிவிட்டுச் சென்றாள். சற்று நேரத்தில் அவளே உணவைக் கொண்டுவந்து தந்தாள்.

அதன்பிறகு பத்து வருடம் அந்த தையற்காரனிடம் உதவியாக எமதூதன் பணியாற்றினான். ஒரு பெண்மணி கை சரியில்லாத ஒரு குழந்தைக்கு சட்டை தைக்க அழைத்து வந்தாள்.

அடுத்து சிறிது நாளில் பணக்காரன் ஒருவன், விலையுயர்ந்த சஃபாரி துணியைக் கொடுத்து குறைந்தது 20 வருஷம் உழைக்கிற மாதிரி சூட் தைத்து கொடு" என்று சொல்லிவிட்டுச் சென்றான். அடுத்த அரைமணி யில் அந்த பணக்காரனின் கார் டிரைவர் வந்து, எங்க முதலாளி இறந்து விட்டார்" என்று தகவல் சொன்னான். உடனே நான் வந்த வேலை முடிந்தது. கிளம்பறேன்" என்று எம தூதன், தான் பூமிக்கு வந்த காரணத்தை விளக்கினான்.

"முதன்முதலில் உன் மனைவி எனக்கு உணவிட மறுத்தபோது அவள் முகத்தில் தரித்திர தேவி தெரிந்தது. பின்னர் அவளே சாப்பாட்டு தட்டை எனக்கு நீட்டியபோது மகாலட்சுமியாகத் தெரிந்தாள். அதாவது - பூமியில் ஒருவர் வறுமையாகவோ செல்வந்தராகவோ இருப்பதற்கு அவரவர் எண்ணங்களும் செயல்களுமே காரணம் என்பதைப் புரிந்து கொண்டேன்.

அடுத்து - கைமுடமான அந்த குழந்தை! ஒரு குறையிருந்தால், அதை கவனித்துகொள்ள மாற்று ஏற்பாடும் இறைவன் செய்திருப்பார் என்பதை நான் உணரவில்லை. கடவுள் எல்லாம் காரண காரியங்களோடு நடத்துகிறான் என்று புரிந்து கொண்டேன்.

மூன்றாவது - சபாரி சூட் தைக்க சொன்னவர்! இறப்பு எப்போது வேண்டுமானலும் வரலாம் என்பதை அறியாமல், மனிதகுலம் அஞ்ஞானத்தில் உழல்வதுதான் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் என்பதை உணர்ந்தேன். இவையே தேவ ரகசியங்கள்" என்று சொல்லி விட்டுப் பறந்தான் எம தூதன்.

Post Comment

Post Comment