அருளை வாரி வழங்கும் அறுபடைமுருகன்!


ஆலயம் கண்டேன்
தனுஜா ஜெயராமன் -சிவக்குமாரனான முருகப் பெருமான் அறுபடை வீடுகளில் வீற்றிருந்து நாடி வரும் பக்தர் களுக்கு அருளை வாரி வழங்கி அருள்பாலிக்கிறார். முருகன் அருளும் அறுபடை வீடுகளையும் அனைவராலும் ஒரே நேரத்தில் சென்று தரிசித்துவிட முடியாது. பெரும்பாலானோருக்கு அதற்கான நேரமும் வசதியும் வாப் பதில்லை. அத்தகைய ஆவல் உள்ளவர்களுக்காகவே சென்னை, பெசண்ட் நகர் கலாகே்ஷத்ரா காலனியில் வங்கக் கடலின் அழகை பறைசாற்றும் எலியட்ஸ் கடற்கரைக்கு மிக அருகில் அமைதியான சூழலில் அமைந் துள்ளது கந்த பெருமானின் அறுபடை வீட்டுத் திருக்கோயில்.

இந்தக் கோயிலில் திருப்பரங் குன்றம் ஸ்ரீ சுப்பிரமணியர், திருச் செந்தூர் ஸ்ரீ செந்திலாண்டவர், பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி, சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமி, திருத்தணிகை ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி, பழமுதிர் சோலை ஸ்ரீ முருகப்பெருமான் என அறுபடை முருகனுக்கும் தனித்தனிச் சன்னிதிகள் அமைந் துள்ளது சிறப்பு.

அறுபடைவீட்டு கோயில்களில் இருந்து புனித நீர் எடுத்து வந்து பயன்படுத்தி முருகன் திருச்சிலை களை பிரதிஷ்டை செதிருக்கிறார்கள் என்பது இக் கோயிலின் தனிச்சிறப்பு. இந்தக் கோயில் ராஜ கோபுரங்கள் கடற்கரையை நோக்கியவாறு அமைந் துள்ளது. கோயில் கட்டுமானங்கள் அனைத்தும் கருங் கற்களால் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.

கோயிலின் உள்ளே நுழைந்ததும் மிகப்பெரிய கொடிமரம். இடதுபுறத்தின் ஓரம் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. கோயிலின் நடுநாயகமாக ஸ்ரீ வல்லபை கணபதி வீற்றிருக் கிறார். அச்சன்னிதியுடன் இணைந் துள்ளது அழகான பெரிய மண்ட பம். இங்கு முருகப்பெருமானை தவிர, தட்சிணாமூர்த்தி மற்றும் இடும்பனுக்கும் சன்னிதிகள் உள்ளன. இந்தக் கோயில் காஞ்சி, ஸ்ரீமகா பெரியவரின் அருட் கட்டளைப்படி கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் கட்டுமான பணிகள் 2016ஆம் ஆண்டு நிறைவு பெற்றன.

கோயிலில் கந்தர் சஷ்டி, திருக் கார்த்திகை, பங்குனி உத்திரம் போன்ற முருகப்பெருமானுக்கு உகந்த நாட்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இத் தலத்தில் அறுபடை முருகனும் வீற்றிருந்து அருளுவதால் திருமணத் தடைகளை நீக்கும் பரிகாரத் திருத்தலமாக இக்கோயில் விளங்குகிறது. அறுபடை வீட்டுத் திருத்தலங்களில் திருமணம் செவதாக வேண்டிக்கொள்பவர்கள், தவிர்க்க முடி யாத காரணங்களால் அதை நிறைவேற்ற முடியாமல் போகும்போது இந்தக் கோயிலில் தங்கள் வேண்டுதல் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

இக்கோயில் மிகவும் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் பராமரிக்கப்படுகிறது. ஒரே திருக்கோயிலில் அறு படை முருகப்பெருமானையும் தரிசித்து வேண்டிய வரங்களைப் பெற்று இன்புறலாம் என்பது கூடுதல் கடாட்சம்தானே!

அமைவிடம் : சென்னை, பெசண்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து சற்று தொலைவிலேயே கோயில் அமைந்துள்ளது.

தரிசன நேரம் : காலை 7 முதல் 11 மணி வரை. மாலை 5 முதல் 8 மணி வரை.


Post Comment

Post Comment