காக்க வந்த தெய்வம்


நீயல்லால் தெய்வமில்லை! 19
ஆத்மார்த்தி -மனித வாழ்வில்தான் எத்தனை எத்தனை நியமங்கள்? ஆன்மிகம் ஒரு விருட்சத்தைப் போல் படர்ந்து விரிந்து கிளை பரப்பி நிற்பதன் விஸ்தீரணம் வியப்புக்குரியது. அதன் மாபெரும் நிழல் மனித வாழ்வின் அத்தனை வீதிகளையும் குளிரச்செய்கிறது.

அருள்மழையின் துளிகள் பாரபட்சமின்றி யாவருக்குமானது. தேடுவோர்க்கு திசையெலாம் தெவம். ஒவ்வொரு காரியமும் ஒவ்வொரு காரணமும் அர்த்தப் பூர்வ மலர்கள். ஒவ்வொரு ஊரும் தனக்கே உண்டான சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கிறது. திரும்பும் திசையெலாம் வாழ்வின் வெம்மை பரவுகையில் அதிலிருந்து தப்பு விக்க தெய்வீக நிழலைத் தேடுகிறது மனித நெஞ்சம்.

‘இஷ்ட தெவம்’ என்ற சொல்லே எத்தனை தித்திக்கிறது? நம்பிக்கைதான் வாழ்க்கை. பற்றுதல் தான் தெய்வம். கொண்டவருக்குத்தான் அத்தனை அமுதமும். அப்படியான ஒரு அமுதம்தான் ஆன்மிகம். அருள் என்பது கொடுப்பினை. தெவ தரிசனத்தைப் பற்றி எனது உறவுக்கார பெரியவர் ஒருவர் சொல்வது இன்றைக்கும் பசுமையாக எண்ணத்தில் ஆடுகிறது. நாம் விரும்புகையில், நாம் எண்ணுகையில், நாம் திட்டமிடுகையில், நாம் பயணிக்கையில், நாம் வேண்டுகையில், நாம் ஈடுபடுகையில், நாம் செகிற எந்தச் செய லாலும் அல்லவே அல்ல. தெவ தரிசனமென்பது தெய்வ விருப்பம்.

கடவுளின் அனுக்ரஹம் இருந்தாலன்றி தரிசனம் என்பது வாப்பதில்லை. ஏதோ ஒரு வேலையா எங்கேயோ சென்றுகொண்டிருப்பவனைத் தேடி வந்து தேரிலிருந்து தெய்வம் தன்னை தரிசிக் கின்ற பாக்கியத்தை நல்கிப் போவது என்ன தற்செயலா? உள்ளபடியே சிந்தித்தால் தற்செயல் என்ற சொல்தான் தற்செய லானது எனச் சொல்லத் தோன்றுகிறது. தருணச்செயல் யாவும் தெவச் செயல்களே. வாழ்வதென்பதே திருச்செயல்தான் இல்லையா அன்பர்களே!

திரைப்படத் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்களைப் பற்றிய முதற்குறிப்பாகவே அவர் முருகன் மீது கொண்ட பக்தியைத்தான் சொல்வார்கள். யாரையுமே முருகனா பார்ப்பதற்குப் பெரிய மன மொன்று வாத்தல் அவசியம். அப்படித்தான் எங்கள் ஊரில் ஒரு நகைக்கடை அதிபர் இருந்தார். அவர் வாயைத் திறந்தால், ‘முருகா’ என்பதுதான் முழுமுதற் சொல்லா உதிரும். கோபமாகையில், ‘முருகா எனக்கு சாந்தத்தைக் கொடு’ என்று அழுத்தமாச் சொல்வது எனது உறவுக்காரர் ஒருவரது பழக்கம். ‘எல்லாமே முருகன் பேர்தானே முருகா’ என்பார் சிரித்துக்கொண்டே.

எனக்குத் தெரிந்த ஒருவர் சிறு வயதிலிருந்தே அதிகமா துர்சொற்களைச் சொல்பவராக இருந்திருக்கிறார். சொற்களின் பிடிக்குத் தன்னைக் கொடுத்தால் அத்தனை தீமைகளையும் அது அழைத்து வரத்தானே செயும்? சிறு பிசகு பெரியதோர் பலவீன மாக மாறிவிடுகிறது. அந்த பலவீனம் ஒரு பெருந் துன்பத்தை அழைத்து வருகிறது. அப்படியான துன்பத்தில் உழலும்போதுதான் தன்னைத் திறந்து தனது மனத்தை அகழ்ந்து பார்க்க முயற்சிக்கிறான் மனிதன். காலம் கடந்துவிட்ட பிறகு கண் திறந்தாலென்ன? காற்றுத்தான் வருடி என்ன?

ஒரு கட்டத்தில் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் அவரைப் பிடிக்கவில்லை என்று மனம் மறுத்துப் போவிட்டாராம். அதற்குக் காரணம் என வேறேதோ சொல்லித்தான் முறிதல் நிகழ்ந் திருக்கிறது. பிறகு, அழுத்திக் கேட்கை யில் அவர் வாயைத் திறந்தால் மிகவும் அனர்த்தமாகவும் அதீதமாகவும் பேசுவதைத் தாளவொண்ணாமல்தான் அந்தப் பெண் அப்படி முடி வெடுத்ததாகத் தெரிந்த போது அதிர்ந்திருக்கிறார்.

அந்தப் பெண்ணைத் தேடிச் சென்று, ‘என் கண்ணைத் திறந்ததற்கு நன்றி. நீ வேண்டும் என வந்தாலும், வேண்டாம் எனச் சென்றாலும் இனி என் வாழ்வில், என் நாவில் ஒரு அவச்சொல்லும் உதிராது’ என்று தனது சொல்லையே சத்தியமாக்கி இருக்கிறார். அதன் பிறகு அந்தத் திருமணம் தடையின்றி நடந்து விட்டது. கொண்ட பழக்கத்தைக் கைவிடுவதற்குக் கடினப் பிரயாசை கொண்டிருக்கிறார் அந்த மனிதர். முருகனின் நாமத்தைத்தான் இனி முழங்குவேன் என்று முடிவெடுத்தவர், அதன் பின் வருடக்கணக்காக முருகஸ்துதி செது வந்தார். சொற்களை மனிதன் ஆளுகிற வரை மனிதனுக்கு அது சிறகு. சொற்கள் தன்னை ஆளுகிற மனிதனின் வாழ்வு பாழும் கேணி.

முருகன் குழந்தைக் கடவுள். பாலகனாகத் தோன்று கிற மகாவுரு. காக்க வந்த தெவம். முருகனுக்குத்தான் ஆயிரமாயிரம் பாடல்கள் வாத்த வண்ணம் இருக்கும். அவன் ராசி அத்தகையது. இசையாலணைகிற தெவம் முருகன். எந்தக் காலத்தைத் திறந்து பார்த் தாலும் அங்கே சில அற்புதமான முருக கானங்கள் இருந்தே தீரும். இது நாளைக்கும் பொருந்தும். திரைப்படம் வினோதமான கலைக்கூட்டு. பல கற்பனைகளையும் பொகளையும் குழைத்துச் சேர்த்து ஒரு உண்மையை எழுப்பவேண்டிய உசிதம். அப்படியான சர்வகலா சாலையான சினிமாவில் ஆகக் கடினமான விஷயம் என்ன தெரியுமா? சிறு குழந்தை களை நடிக்க வைப்பது. ‘கூடினால் கரிக்கும்... குறைந் தால் துவர்க்கும்’ என்கிற உப்பின் குணாம்சம் எப்படிச் சமையலுக்கு லட்சணமோ, அப்படித்தான் குழந்தைகள் அதிகம் தெரிந்தால் உறுத்தும். குறைந்தால் சோபிக்காது. புரிதலும் விளைதலும் தன்னிலிருந்து எழ வேண்டியது அவசியம். அப்படிக் குழந்தையிலேயே நட்சத்திரமானவர்கள் வெகுசொற்பமே. அவர்களுள் ஒருவர் சிலம்பரசன். அஷ்டாவதானி டி.ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் தன் குழந்தமைப் பருவத்தில் பல படங்களில் நடித்தார். பேசியும் நடித்தும் ஆடியும் பாடியும் பல லட்சக்கணக்கானவர்களைக் கவர்ந்தவர் சிம்பு. அவர் நடித்து அபார வெற்றியைப் பெற்ற படம் தான், ‘எங்க வீட்டு வேலன்.’ அதிலொரு பாடல். ஆட லும் பாடலும் அத்தனை இயல்பாக இருக்கும். ஒரு கனவின் அதே துல்லியத்தோடு நகரும் அந்தப் பாடல் இன்றும் கேட்கவும் பார்க்கவும் உகந்து விளங்குகிறது.

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி மயில் காவடி மச்சக் காவடி முருகன் காவடி பழநி ஆண்டி உன்னை வேண்டி படியேறும் பக்தர் கோடி (பால் காவடி பன்னீர் காவடி)

கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல் (பால் காவடி) வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வீரவேல்

யானை முகத்தோன் தம்பி அவன் சக்தி சிவனின் பிள்ளை அவன்

யானை முகத்தோன் தம்பி அவன் சக்தி சிவனின் பிள்ளை அவன்

ஆறுமுகம் அவனுக்குண்டு ஆறுபடை வீடுமுண்டு வேல் முருகா எங்கள் மால்மருகா

திருப்பரங்குன்றத்தில் வாழ்பவனே திருத்தணி மலைமேல் நின்றவனே திருச்செந்தூரில் வென்றவனே

பழமுதிர்ச்சோலையில் நின்றவனே பழநி மலை ஆண்டவனே வா வா வா ஸ்வாமிமலை சரவணனே வா வா வா (பால் காவடி)

பால் வடியும் முகத்தைக் கண்டால் பக்தர் பசியும் தீருமடா அப்பனுக்கே பாடம் சொன்னான் பிரம்மனுக்கே வேதம் சொன்னான்

வேல்முருகன் எங்கள் மால்மருகன் பக்தருக்கு துயரம் என்றால் பக்கத்துணையா இருந்திடுவான்

சஷ்டி விரதம் இருந்து வந்தால் கவசம் போலக் காத்திடுவான் தெவானை நாயகனே வா வா வா வள்ளியவள் காவலனே வா வா வா

வேலிருக்க வினையுமில்லை நீயிருக்க பயமுமில்லை முருகா துயரமென்று வந்தவர்க்கு தொல்லைகளை போக்கிவிடும் மருகா... மால்மருகா

இன்முகனே சண்முகனே சரவணனே வேலவனே வா வா இன்முகனே சண்முகனே சரவணனே வேலவனே வா வா

ஓம் முருகா வெற்றி வேல் முருகா பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி மயில் காவடி மச்சக் காவடி முருகன் காவடி

கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்... (பால் காவடி)

இந்தப் பாடலைப் பாடியவர், ‘சின்னக்குயில்’ என்று புகழப்படுகிற, பல தேசிய விருதுகளைப் பெற்றவரான சித்ரா. பாடலை எழுதி இசையமைத்தவர் கலாஞானி டி.ராஜேந்தர். இதற்கு ஆடி, நடித்தவர் சிம்பு. எளிய, அதேசமயத்தில் உறுதியான வேண்டு தலை நிறைவேற்றும் எத்தனையோ பக்தர்களை நாளும் நம் வாழ்வெலாம் சந்தித்தவண்ணம் இருக் கிறோம். அப்படியான நிறைவேற்றத்தின் நிகழ்தலை அத்தனை கச்சிதமாகப் படமாக்கி நம்மை சிலிர்க்க வைத்த பாடல் இது. ‘நீயிருக்க பயமுமில்லை’ எனும் வாக்குத்தான் எத்தனை சத்தியமானது? ‘துயரமென்று வந்தவர்க்குத் தொல்லைகளைப் போக்கிவிடும் மருகா மால்மருகா’ எனும்போது நெஞ்சமெல்லாம் நிறைந்து பூக்களைச் சொரிகிறதல்லவா?

இந்தப் பாடலை சித்ராவை தவிர வேறு யாரால் இத்தனைப் பதின்மம் பொங்கும் குரலால் பாடிட முடியும்? தெவானை நாயகனாம் வள்ளியவள் காவலனாம் முருகப்பெருமானின் அருள்மழை பொழியும் ஆயிரமாயிரம் பாடல்களுக்கு நடுவே இந்தப் பாடல் ஒரு பௌர்ணமி நிலவு. (மேலும் வலம் வரும்)
Post Comment

Post Comment