ஸ்ரீ ராமர் வணங்கிய ரிஷ்யசிருங்கர்!


ஸ்ரீ ராமரின் பாதையிலே... 3
பிலாய் பிச்சு -ஏகபத்தினி விரதன் ஸ்ரீராமரின் அடிச்சுவட்டையொட்டி, அவர் சென்ற பாதையில் அடுத்து நாம் தரிசிக்கவிருப்பது தம்தரி சிஹாவாவில் உள்ள ஸப்த ரிஷி ஆசிரமம். இங்கு ரிஷ்யசிருங்கர் ஆசிரமமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷ்யசிருங்கர் மஹரிஷி ராமாயணத்தில் ஒரு முக்கிய அங்கம் வகிப்பவர். இவர் ராமரின் அக்காவான சாந்தாவின் கணவர்.தசரதன், கௌசல்யாவின் முதல் குழந்தை சாந்தா. கௌசல்யாவின் தங்கை வர்ஷிணியின் கணவர் அங்க தேச மன்னன் ரோமபாதன் ஆவார். இவர் தசரதனின் நெருங்கிய நண்பர். ரோமபாதனுக்கு பிள்ளைப் பேறு இல்லை. அந்தக் குறை தீர நெருங்கிய நண்பரான தசரதர் தனது பெண்ணை தத்துக் கொடுத்தார்.

விபாண்டக மஹரிஷியின் புதல்வரே ரிஷ்ய சிருங்கர். ‘கலைக்கோட்டு முனிவர்’ என்று அழைக்கப்பட்ட ரிஷ்யசிருங்கர் பிறக்கும்போதே தலையில் மான்கொம்புகளுடன் பிறந்தவர். விபாண்டக முனிவருக்கும் தேவலோக நடனப் பெண் ஊர்வசிக்கும் மகனாகத் தோன்றியவர். பிறந்த வுடனே தா ஊர்வசி, ரிஷ்ய சிருங்கரை விபாண்டக முனிவரிடம் விட்டுவிட்டு இந்திர லோகம் சென்றுவிட்டாள். தாயின் முகத்தை பார்க்காமலேயே தந்தையிடம் வளர்ந்த பிள்ளை ரிஷ்யசிருங்கர்.

இவரது நண்பர்கள் காட்டில் வசிக்கும் சிங்கம், புலி, கரடி, மான்கள் போன்ற விலங்குகளே. இவை தவிர, வேறு எந்த உலகப் பொருளையும் அறியாதவர் ரிஷ்யசிருங்கர். தந்தையைத் தவிர பிற மனித முகங் களை அவர் பார்த்ததே இல்லை. தந்தைக்கு சேவை செய்வது மட்டுமே இவரது பணியாக இருந்தது. யாகம், ஹோம முறைகளை தந்தையார் மகன் ரிஷ்யசிருங்கருக்குக் கற்றுக் கொடுத்தார். தந்தை கொடுக்கும் கனி வகைகள் மற்றும் எப்போதாவது கிடைக்கும் பட்சண வகைகளைத் தவிர வேறு எந்த உணவையும் உண்டு அறியாதவர். ஆசை என்ற சொல்லுக்கே அர்த்தம் அறியாதவர். எனவே, பாவம் செய்ய வழியே இல்லாத உத்தமராக இவர் வளர்ந்தார்.

ரிஷ்யசிருங்கர் காலடி வைத்த இடமெல்லாம் மழை பெதது. ஊரெல்லாம் மழை பெயாத போதும், ரிஷ்யசிருங்கர் எங்கெங்கு இருக்கிறாரோ அங்கெல்லாம் மழை பொழிந்து பசுமையாக இருந்தது. அங்க தேச அரசன் ரோமபாதனின் நாட்டில் பத்து வருடங்களாக மழை பெயாது பொத்துப் போனதால் அந்த நாட்டில் பஞ்சமும் வறுமையும் தலைவிரித்தாடியது.ரிஷ்யசிருங்கர் பற்றி அறிந்த மன்னன், விபாண்டக முனிவர் ஆஸ்ரமத்தில் இல்லாத நேரத்துக்காகக் காத்திருந்தார். ஒரு நாள் விபாண்டக முனிவர் ஆஸ்ரமத்தை விட்டு வெகு தொலைவு பயணம் போக, ரோமபாதன் தனது மகள் சாந்தாவையும் அவளது தோழியரையும் ரிஷ்யசிருங்கர் ஆசிரமத்துக்கு அனுப்பி அவரை அங்க தேசத்துக்கு கவர்ந்து வர அனுப்பி வைத்தார். பெண்களின் வாசம் அறியாத ரிஷ்யசிருங்கரை அணுகி பல நாட்கள் அவர்கள் பேசிப் பழகினர்.

நல்ல பலகாரங்களை சாப்பிட்டறியாத ரிஷ்ய சிருங்கருக்கு நிறைய பலகாரங்களை உண்ணக் கொடுத்தனர். இதனால் ரிஷ்யசிருங்கருக்கு வேறு ஓர் இடம் இருப்பதைக் காண மனதில் ஆசை ஏற்பட்டது .சில நாட்கள் கழித்து, ரிஷ்யசிருங்கரை ஒரு படகில் அமர்த்தி, அங்க தேசத்துக்கு அழைத்து வந்தனர். அவர் அங்க தேசத்தில் காலடி வைத்ததும் அந்நாட்டில் பெரு மழை பெதது. ரிஷ்யசிருங்கரை வரவேற்ற அரசன், அவரது தலைமையில் ஒரு மாபெரும் யாகம் நடத்தினான். யாகத்தின் முடிவில் அரசன், தனது மகள் சாந்தாவை ரிஷ்யசிருங்கருக்கு மணமுடித்து வைத்தான். முனிவரின் வருகையால் அங்க தேசத்தில் தொடர்ந்து மழை பெது செழித்தது. உலகம் இன்னதென்று அறிந்த ரிஷ்யசிருங்கர்,

நீண்ட நாட்கள் அந்த நாட்டில் தங்கியிருந்து சுகமாக வாழ்ந்தார். இதை அறிந்த தசரத சக்கரவர்த்தி, ரிஷ்யசிருங்கரை தனது நாட்டுக்கு வரவழைத்து, புத்திர காமேஷ்டி யாகம் ஒன்றை நடத்தினார். அந்த யாகத்தின் பலனாக பிரம்ம தூதன் தோன்றியதும், திவ்யபாயஸம் வழங்கியதும், தசரத சக்கரவர்த்தி புத்திர பாக்கியம் பெற்றதும், ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்கனன் ஆகிய நால்வர் அவதரித்ததும் ராமாயண காவியம் தெரிவிக் கின்ற செதிகளாகும். ஸ்ரீராமர் தமது வனவாசத்தின்போது ரிஷ்யசிருங்கர் ஆசிரமம் வந்து அவரை வணங்கி உபதேசம் பெற்றதாக அறியப்படுகிறது. இந்த ஆசிரமம் தம்தரி சிஹாவாவில் ஒரு மலை உச்சி யில் அமைந்துள்ளது. சுமார் ஐநூறு படிகளைக் கொண்ட இந்த மலை அக்காலத்தில், ‘மகேந்திரகிரி’ என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். மலை மேலிருந்து கீழே பார்க்கும்போது பச்சை பசேலென்று வயல்களும், குளம், ஏரிகளும் மனதை கொள்ளை கொள்ளுகின்றன. இங்கு பிள்ளைப்பேறு வேண்டி பக்தர்கள் யாகம் செவது வழக்கம். அதற்காக தனியாக, அழகான குடில் ஒன்றை அமைத்து உள்ளனர். இந்த மலையில் பல குகைகளும் உள்ளன.

இந்த மலையிலிருந்து பார்த்தால் தெரியும் ஒவ்வொரு மலையிலும் ஒவ்வொரு ரிஷியின் ஆசிரமம் இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஸ்ரீராமர் தமது வனவாசத்தின்போது இம்மலையில் தமது திருப்பாதம் பதித்து, இம்மலைகளில் வாழ்ந்த சப்த ரிஷிகளுடன் கலந்துரையாடிய தபோ பூமியிது. இந்த மலைக்கு அடுத்ததாக உள்ள ஒரு மலைக் குகையில் சாந்தா தேவிக்கு ஒரு ஆலயம் உள்ளது. இங்கு வாழும் மக்கள் சாந்தா தேவி அன்னையை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த மலைதான், ‘சத்தீஸ்கரின் கங்கை’ என்று அழைக்கப்படும் மகாநதியின் பிறப்பிடம். இங்குள்ள ஒரு சிறிய சுனையில் தண்ணீர் ஊற்றெடுத்து பின்னர் மகா நதியாக பெருக்கெடுக்கிறது.

ஒரு சமயம் முனிவர்கள் கங்கையில் நீராடச் சென்றனர். வழியில் ரிஷ்யசிருங்கரை அவர்கள் சந்திக்க வந்தனர். அப்போது ரிஷ்யசிருங்கர் கடும் தவத்தில் இருந்ததால், அவரது தவம் கலையக்கூடாது என்பதற்காக அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். முனிவர்கள் திரும்பி வரும்பொழுது ஒரு கமண்டலத்தில் கங்கை நீரை கொண்டு வந்தனர்.அப்போதும் அவர் தவத்தில் இருந்ததால், அவரது தவம் கலையாமல் அந்தக் கமண்டலத்தை அவருக்கு அருகிலேயே வைத்து விட்டுச் சென்றனர். தவம் முடிந்து எழுந்த ரிஷ்யசிருங்கரின் கைப்பட்டு கமண் டலம் கீழே விழ, அதிலிருந்து கங்கை நீர் வழிந் தோடியது. அதுவே மகாநதி என்ற கூற்றும் உண்டு.

இந்த மகாநதி சத்தீஸ்கரில் பிறந்து, ஒரிசா மாநிலத்தில் கடலில் கலக்கிறது. சத்தீஸ்கர், ஒரிசா ஆகிய இரு மாநிலங்கள் இந்த மகாநதியால் பயன் பெறுகின்றன. பொதுவாக மேலிருந்து கீழாக, அதாவது வடக்கில் உற்பத்தியாகும் நதிகள் தெற்கு நோக்கிப் பாயும். ஆனால், மகாநதி சத்தீஸ்கரில் பிறந்து சிறிது தொலைவு வடக்கு நோக்கிப் பாந்து, பிறகு கிழக்கில் ஒரிசாவில் கடலில் கலக்கிறது. தம்தரியில் மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, ‘கங்கரேல் அணை.’ இது ஒரு சுற்றுலா தலமாகவும் இங்கு வரும் பக்தர்களால் பார்க்கப்படுகிறது.

(தொடரும்)
Post Comment

Post Comment