அந்தர்வேதியில் அருளும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்!


வெளிமாநிலக் கோயில்
ராஜிராதா -ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சசினேதிபள்ளிக்கு அருகில் அநிதர்வேதி தீவில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில். கிழக்கிலும் தெற்கிலும் வங்காள விரிகுடா கடல், வசிஷ்ட நதி (கோதாவரி நதியின் உப நதி), ரதகுல்யா நதிகள் சங்கமிக்கும் மையப்பகுதியாக இந்தத் தீவு அமைந்துள்ளது.

நைமிசாரண்யத்தை, ‘யாக பூமி’ என அழைப்பர். இது, பிரம்மா உள்ளிட்ட முக்கிய முனிவர்கள் யாகங்கள் செய்த பூமி. இந்த நைமிசாரண்யம் போன்றே தெற்கே யாக பூமியாகத் திகழ்கிறது அந்தர்வேதி! இங்கேயும் பிரம்மா முதல் வசிஷ்டர் வரை பலரும் யாகம் செய்துள்ளனர்! கிருத யுகத்தில் சாக்சவுன்கா முனிவர் உட்பட ஏராளமான முனிவர்கள் கூடி சத்ர யாகத்தை இங்கு செய்தனர். அப்போது அவர்களுடைய ஓய்வு நேரத்தில் கதை சொல்ல சுதா என்பவர் அழைக்கப்பட்டார்! அவர் புண்ணிய பூமிகளைப் பற்றி கூறி வந்தபோது, முனிவர்கள் ஒருநாள் அந்தர்வேதி பற்றி கேட்டனர். இதன் வரலாறு ஏற்கெனவே பிரம்மாவால் நாரதருக்கு உரைக்கப்பட்டதாகும்.

கோதாவரியும் கடலும் சங்கமிக்கும் இந்த இடத் தில், சிவனுடன் சண்டையிட்ட பாவத்தைப் போக் கிக்கொள்ள லிங்கம் பிரதிஷ்டை செது, அதற்கு, ‘நீலகந்தேஸ்வரர்’ என்று பெயரிட்டு கடும் யாகம் செய்தார் பிரம்மா. இதனால் இப்பகுதி, ‘அந்தர்வேதி’ என அழைக்கப்பட்டது. இதற்குப் பிறகு இங்கு வசிஷ்டர் தனது மனைவி அருந்ததியுடன் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார்! பதிவிரதையான அருந்ததிக்கும் வசிஷ்டருக்கும் நூறு குழந்தைகள் பிறந்தனர்!

ஒரு சமயம் விசுவாமித்திரர் மன்னராக இருந்த போது, தனது படையினருடன் வசிஷ்டர் ஆசிரமத் துக்கு வந்திருந்தார்! வசிஷ்டரிடம் காமதேனு என ஒரு தெய்வீக பசு இருந்தது. அது நினைத்ததை உடனே அளிக்கும் திறன் பெற்றிருந்தது. வசிஷ்டர், பசுவிடம் விசுவாமித்திரர் மற்றும் படையினருக்கு உணவு ஏற்பாடு செய்து தர வேண்ட, அதுவும் உடனே மிக ருசியான உணவுகளை வரவழைத்து அவர் களுக்குத் தந்தது.

அதைக் கண்ட விசுவாமித்திரருக்கு, அந்த காமதேனு பசுவை தன்னுடையதாக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எழுந்தது! அதற்கான முயற்சி யில் அவர் இறங்க, காமதேனுவின் உடலிலிருந்து பல வீரர்கள் வெளிப்பட்டு விசுவாமித்திரரின் படை யினரை துவம்சம் செய்தனர். காமதேனுவுக்கு முன்பு விசுவாமித்திரரின் ஆயதங்கள் எடுபடவில்லை. பலன் தோற்று ஓடினார் விசுவாமித்திரர். இதனால் அரச பதவியை துறந்து, கடும் தவம் செய்து ராஜரிஷியாக மாறினார் விசுவாமித்திரர். ஆனாலும், அவர் மனதில் வசிஷ்டர் மீதான வன்மம் நிலையாகக் குடியேறியது.

இந்தக் காலகட்டத்தில் அந்தப் பகுதியை ஹிரண்ய அரக்கனின் மகன் ரக்தவிலோசனா என்பவன் ஆண்டு வந்தான். அவன் சிவபெருமானை திருப்திப்படுத்த, பல வருடங்கள் தவம் செய்து, அவருடைய ஆசியைப் பெற்றிருந்தான்! அதன்படி அவனுக்கு யுத்தத்தில் காயம்பட்டு, பூமியில் ரத்தம் சிந்தும்போது, ஒவ் வொரு ரத்தத் துளியிலிருந்தும் ஒரு அரக்கன் எழுந்து அவனுக்கு உதவுவான்! இதனால் கர்வம் கொண்ட ரக்தவிலோசனா, துஷ்ட காரியங்களை ஈடுபட்டு தேவர்கள், முனிவர்களை துன்பப்படுத்தினான்.

இதனை அறிந்த விசுவாமித்திரர் ரக்த விலோசனாவைத் தேடி வந்து உதவி கேட்டார். அந்த உதவி வசிஷ்டரின் நூறு குழந்தைகளையும் கொன்று விட வேண்டும் என்பதுதான். வசிஷ்டர் ஆஸ்ரமத்தில் இல்லாத சமயம் அதனை முடித்துவிட வேண்டும் எனக் கூற, அரக்கனும் சம்மதித்தான். அதன்படி வசிஷ்டர் இல்லாத நேரம் அவருடைய ஆஸ்ரமத் துக்குச் சென்று அவரது நூறு குழந்தைகளையும் கொன்றுவிட்டான் அரக்கன்.

அருந்ததி அழுதாள். கணவர் வசிஷ்டர் வந்ததும் நடந்ததைக் கூறினாள். துக்கத்தின் உச்சிக்குச் சென்ற வசிஷ்டர், இந்தச் செயலுக்குக் காரணம் யார் என் பதை ஞானதிருஷ்டி மூலம் அறிந்தார். சிவனிடம் அரக்கன் வரம் பெற்றிருந்ததால், மகாவிஷ்ணுவிடம், நடந்த அநியாயத்தைக் கூறி, அந்த அரக்கனுக்கு முடிவு கட்ட வேண்டும் எனக் கோரினார்.

வரமே கேட்காத வசிஷ்டர் வருந்திக் கேட்டவுடன் மகாவிஷ்ணு, கருடனில் மகாலட்சுமியுடன் நரசிம்ம ராக வந்தார். ரக்த விலோசனாவை சண்டைக்கு அழைத்து அவனைக் காயப்படுத்த, ஒவ்வொரு ரத்தத் துளியிலிருந்தும் பல அரக்கர்கள் வெளிப்பட்டு, மகா விஷ்ணு மற்றும் கருடனை காயப்படுத்த ஆரம்பித் தனர்! இதனை சமாளிக்கவும், புதிய அரக்கர்கள் உருவாவதைத் தடுக்கவும் தனது மாயாசக்தி மூலம் அரக்கனின் ரத்தம் பூமியில் விழாமல் தடுத்து விட்டார் மகாவிஷ்ணு. ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த மகாவிஷ்ணு, தனது சக்ராயுதத்தை ஏவி அரக்கணை வதைத்தார். அசுரனை வதைத்து ரத்தக் கறையோடு திரும்பிய சக்ராயுதத்தை ஒரு குளத்தில் கழுவினார்! அந்தக் குளமே தற்போது, ‘சர்க்கரை தீர்த்தம்’ என அழைக்கப்படுகிறது.

இந்தத் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்பவர்களின் பாவங்கள் விலகும். காசி, கயா செல்ல இயலாதவர்கள் தங்கள் மூதாதையருக்கு தர்ப்பணம், தானம் போன்ற வற்றை இந்தத் தீர்த்தக் கரையில் செய்தால், அவர் களுக்கு முக்தி கிட்டும் என்பது நம்பிக்கை! இதனால் அந்தர்வேதியை, ‘முக்தி ஸ்தலம்’ என அழைக் கின்றனர். மேலும் இது, ‘பூலோக வைகுண்டம்’ எனவும் அழைக்கப்படுகிறது.

அரக்கனைக் கொல்வதைக் கண்ட வசிஷ்டர், உயர்த்திய கையைத் தாழ்த்தாமல், தொடர்ந்து வணங்க, ஸ்ரீலட்சுமி நரசிம்மராக வசிஷ்டருக்குக் காட்சி தந்தார் மகாவிஷ்ணு. அப்போது வசிஷ்டர், ‘தாங்கள் இங்கேயே நிரந்தரமாகத் தங்கி, வழிபடும் பக்தர்களைக் காக்க வேண்டும்’ என வேண்ட, அதற்கு சம்மதித்த மகாவிஷ்ணு, ஒரு கணம் கல்லாய் சமைந்து சிலையாகி, பிறகு ஸ்ரீலட்சுமியுடன் வைகுண்டம் ஏகினார். அதன் பிறகு மகாவிஷ்ணு காட்சி தந்த ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சிலையை சுற்றி கோயில் எழுப்பி வழிபட்டார் வசிஷ்டர்.

இனி, கோயிலுக்குச் செல்வோம்! 15-16ம் நூற்றாண் டில் கோயில் பெரிய அளவில் புனருத்துவம் செய்யப் பட்டது. 54 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரம். பெரிய அளவில் கோபுரத்தில் சிலைகள் இல்லை. உள்ளே நுழைந்தால் ஒரு பக்கம் கருடனை யும், மறுபக்கம் அனுமனையும் தரிசிக்கலாம். அடுத்து, நேரடியாக கருவறை நோக்கி பயணிப்போம். அதன் உள் உச்சியில் வடபத்ர சாயியை தரிசிக்கலாம். ஆலிலையில் ஸ்ரீ கிருஷ்ணனை தரிசிக்கலாம். உள்ளே கருவறையினுள், ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை கம்பீரமான கோலத்தில் தரிசிக்கலாம்!

கருவறையை ஒட்டிய பிராகாரத்தை வலம் வருகையில், கிழக்கே ராஜலட்சுமி, வேங்கடேஸ் வரரையும், வடக்கே பூதேவி மற்றும் ரங்கநாதரையும், மேற்கே சந்தானகோபாலன், கேசவரையும், தெற்கே ஆச்சார்யார்கள், ஆழ்வார்களையும் தரிசிக்கலாம். கூடுதலாக கோயிலினுள், சதுர்புஜ அனுமன், பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கு தனிச் சன்னிதிகள் உண்டு. அதே போல் வசிஷ்டருக்கும் கோயிலினுள் சிறு சன்னிதி உண்டு!

பீஷ்ம ஏகாதசி, ரத சப்தமி, கார்த்திகை பௌர்ணமி, வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்கள் விசேஷமாக அனுசரிக்கப்படுகிறது. மகா சுத்த சப்தமியில் துவங்கி கல்யாண உத்ஸவம் நடைபெறுகிறது.ஜேஷ்ட ஏகாதசி யில், ஸ்ரீவேங்கடேஸ்வருக்கு கல்யாணம், நரசிம்ம ஜயந்தி என வருடம் முழுவதும் விழாக்களுக்கு கோயிலில் பஞ்சமில்லை. இதனால் கூட்டத்துக்கும் பஞ்சமில்லை. ஆந்திராவில் உள்ள 108 நரசிம்ம ஸ்தலங்களில் இது 32வது ஸ்தலம். இங்கு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது விசேஷம்.

அமைவிடம் : காக்கினாடாவிலிருந்து 130 கி.மீ., ராஜமுந்திரியில் இருந்து 100 கி.மீ., அமலாபுரத்திலிருந்து 65 கி.மீ., சென்னையிலிருந்து காக்கினாடா அல்லது ராஜமுந்தரி சென்று, அங்கிருந்து பேருந்தில் பயணிக்க வேண்டும்.

தரிசன நேரம் : காலை 4.30 முதல் இரவு 9.30 மணி வரை.


Post Comment

Post Comment