தமிழ் (பிலவ) புத்தாண்டு பலன்களும் பரிகாரங்களும்!கணிப்பு : கி.சுப்பிரமணியன், தொடர்புக்கு : 8610023308 -நிகழும் மங்களகரமான ஸ்ரீ பிலவ வருஷம் உத்திராயணம் ஹேமந்தரிது சித்திரை மாதம் 01ஆம் நாள், ஆங்கில கணக்கில் 14ஆம் நாள் ஏப்ரல் மாதம் 2021 புதன் கிழமை 2021ஆம் ஆண்டு சுக்ரனில் பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. அதுபோல, அடுத்த ஆண்டு சுக்ரனில் பூரம் நட்சத்திரத்தில் முடிகிறது.

இந்த பிலவ ஆன்டில் குரு மற்றும் ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. குரு ஏப்ரல் 06, 2021 மாலை 06.01 மணிக்கு மகரத்திலிருந்து கும்பத்துக்கு அதிசார பெயர்ச்சி பெறுகிறார். மீண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி காலை 04.22 மணிக்கு மகரத்தில் வக்ரம் பெறுகிறார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் நாள் பகல் 11.23 மணிக்கு மகரத்திலிருந்து கும்பத்துக்கு குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது. அதுபோல, ஏப்ரல் மாதம் 2022, காலை 10.36 மணிக்கு ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. ராகு, ரிஷபத்திலிருந்து மேஷத்துக் கும், கேது விருச்சிகத்திலிருந்து துலாமுக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

‘பிலவ’ என்பதற்கு சம்ஸ்கிருதத்தில் பீழரை- பூமிக்கு கீழேயுள்ள அல்லது பூமி பொருள் என அர்த்தம். இந்த ஆண்டு அகழ்வாராச்சியில் சில முக்கிய ஆவணங்களை பூமிக்கடியில் இருந்து கண்டுபிடிக்கப்படும். இந்த ஆண்டு செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ளது. ஆகவே, செவ்வா காரகத்துவம் உள்ள மருத்துவத் தொழில் புரிவோர், வழக்கறிஞர்கள், மருந்து விற்பனை, காவல் துறையில் பணிபுரிவோர் அவர்கள் சார்ந்த துறைகள் முன்னேற்றம் காணும்.

சித்திரை 1ஆம் தேதி (ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி) 2021 புதன் கிழமையில் பிறக்கிறது. செவ்வா சுக்ரன் பரிவர்த்தனை யோகம் பெற்று செவ்வா இந்நாளில் ரிஷ பத்தில் இருந்து மிதுனத்துக்கு பெயர்ச்சி பெறுகிறது. மருத்துவத் துறையில் பல புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் செயல்பாட்டுக்கு வரும். பல நாடு களில் மக்களின் நன்மை கருதி முக்கிய அறிவிப்புகள் வெளிவரும். அதன் மூலம் மக்கள் பலவித நன்மைகளை அடைய வாப்புண்டு. நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களில் விற்பது, வாங்குவது போன்ற பரிவர்த்தனைகளில் சில புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும். வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தலங்கள், புனித நதி தலங்கள் மக்களின் வசதிக்காக மேம்படுத்தப்படும்.

வணிகத்துறையில் பல முக்கிய மாற்றங்கள் ஏற் படும். ஆன்லைன் வர்த்தகம் பிரபலம் அடையும். நிலுவையில் உள்ள பல வழக்குகளுக்கு முடிவு காணப்படும். இயற்கை சீற்றங்களுக்கும் வாப்புண்டு. இந்த வருடம் அதிக மழை பெய வாப்பு உள்ளது. சில அயல்நாடுகளில் சூறாவளி, புயல் போன்ற பாதிப்புகள் தென்படலாம். செவ்வாய், சுக்ரன் பரிவர்த்தனை யோகம் பெற்று இருப்பதால் புதிய நோகள் வரவும், அதற்கு மருத்துவமும் கண்டுபிடிக்கப்படும்.

அதிக மழைக்கு வாப்பு உள்ளதால் விவசாயம் செழிக்கும். அதன் மூலம் பலரது பொருளாதார முன்னேற்றத்துக்கும் வாப்புண்டு. பல்வேறு தொழில் புரிவோர் இந்த ஆண்டு நல்ல முன்னேற்றம் காண்பர். இந்த பிலவ வருடம் செவ்வா கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறப்பதால் ஜாதகத்தில் செவ்வா கிரகம் வலுவாக அமையப்பெற்றவர்கள், ஆட்சி உச்சஸ்தானங்களில் இருப் பவர்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைய வாப்புண்டு. இந்தப் புத்தாண்டில் அனைவரும் அனைத்தும் பெற்று வளமோடு வாழ இறைவன் அருள்புரியட்டும். வாழ்த்துக்கள்.

மேஷம்

எதிலும் சுறுசுறுப்புடன் இயங்கத் துடிக்கும் மேஷ ராசி வாசகர்களே! இந்த தமிழ் புத்தாண்டு தொடங்கும்போது ராசியாதிபதியான செவ்வா மூன்றாம் இடத்தில் இருக்கிறார். சிலருக்கு இளைய சகோதர, சகோதரிகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பத்தாம் அதிபதி சனி ஆட்சியாக இருப்பது யோகம் தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பொருளாதார உயர்வு ஏற்படும்.

செவ்வாக்கும் சுக்ரனுக்கும் பரிவர்த்தனை யோகத் துடன் ஆண்டு துவங்குவதால் காவல்துறை மற்றும் கலைத்துறையில் சிலருக்கு ஆர்வம் ஏற்படும். பேச்சை மூலதனமாக வைத்து உழைப்பவர்களுக்கு யோகமான காலம். இந்த ஆண்டு துவங்கும்போதே 3 மற்றும் 6ஆம் அதிபதியான புதன் 12ஆம் இடமான விரய ஸ்தானத்தில் நீச்சம் அடைந்து யோகத்தைக் கொடுக்கிறார். இந்த ஆண்டு முழுவதும் செவ்வா ஆதிக்கத்தில் உள்ளதால் மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்கு பெரிய பிரச்னைகள் வராமல் இருக்கும்.

நீண்ட காலம் திருமணம் தடைபடுபவர்களுக்கு திருமண வாப்பு அமையும். கணவன், மனைவி இடையே இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வரும். பிரிந்திருந்த தம்பதியர் மீண்டும் சேர்ந்து வாழ்வர்.சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுயமாகத் தொழில் புரிபவர்களுக்கு சிறப்பான யோகம் தரும். சிலர் தொழில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வர். தந்தை அல்லது மூத்த சகோதரர்கள் செய்து வந்த தொழிலில் ஈடுபட்டு சிலர் வெற்றி காண்பர். ஆண்டு துவக்கத்தில் குருவின் பார்வை ராகுவை விட்டு விலகுவதால் முதல் நான்கு மாதம் உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டு சீரடையும். பெரியோர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் காணலாம். செப்டம்பர் மாதம் குரு வக்ரம் அடைவதால் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படும்.

சிலருக்கு சொந்த வீடு, வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பெண்கள் நகைகள் மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு பங்கு சந்தை லாபகரமாக அமையும். சிலர் வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்குக் குடி போவீர்கள். பிள்ளைகளின் கல்வி மேலோங்கும். பெரியோர்களின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம் : அருகில் உள்ள முருகன் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு வர, நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

ரிஷபம்

எந்த சூழ்நிலையையும் நேர்மையோடு எதிர் கொள்ளும் ரிஷப ராசி வாசகர்களே! இந்த பிலவ ஆண்டு துவங்கும்போதே ராசியாதிபதி சுக்ரன் மேஷத்தில் அமர்ந்து பரிவர்த்தனை யோகத்துடன் துவங்க, செவ்வாய் மூன்றாம் இடமான மிதுனத்துக்கு பெயர்ச்சியாகிறார். குடும்பத்துக்குத் தேவையான பொருளாதார வசதிகளை மேம்படுத்திக்கொள்ளும் ஆண்டாக இது அமைகிறது. பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றுசேர்வர். இரண்டாம் அதிபதி லாப ஸ்தானத்தில் நீச்சம் பெற்று ஆண்டைத் தொடங்குவதால் சிலருக்கு புதிய வீடு, வண்டி வாகன யோகம் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத சொத்து சேர்க்கை ஏற்படும். பங்கு சந்தை லாபகரமாக இருக்கும். ஆசிரியர் பணி புரிபவர்களுக்கு நல்ல ஆண்டாகவே அமைகிறது.

ராசியிலேயே ராகு இருப்பது மற்றும் ராசியாதிபதி சுக்ரன் 12ம் இடமான விரய ஸ்தானத்தில் அமைவதால் சிறு விரயங்களுக்கு வாப்புண்டு. திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் ஏற்படும். ராசியில் இருக்கக்கூடிய ராகு, குருவின் பார்வையிலி ருந்து விலகி இருப்பதால் முதல் நான்கு மாதங்களுக்கு சிரம சூழ்நிலைகள் நிலவும். நீண்ட நாட்கள் நோ வாப்பட்டு படுக்கையில் இருந்தவர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். குரு செப்டம்பர் மாதம் வக்ரம் பெற்று மீண்டும் மகரத்துக்கு வரும்பொழுது அனைத்து சூழ்நிலைகளும் மாறி பூரண ஆரோக்கியம் ஏற்படும். ஏழாம் இடத்தில் கேது இருப்பதால் கணவன், மனைவி இடையே ஊடலுக்குக் பிறகு கூடல் ஏற்படும். சொந்தத் தொழில் புரிபவர்களுக்கு சுமாரான நிலையே காணப்படும்.

சனி பகவான் ஒன்பதாமிடத்தில் இருப்பதால் தந்தை வழி சொந்தங்களுடன் மிகவும் கவனமாகப் பழகவும். பிள்ளைகளின் படிப்பு மேலோங்கும். பழுதுபட்ட வீட்டை புதுப்பிக்கும் சந்தர்ப்பம் வாக்கும். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீண்ட நாட்கள் வெளியூரிலிருந்து எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும். சமூகத்தில் நற்பெயர் உண்டாகும். நன்மை, தீமை இரண்டும் கலந்தே இந்த புத்தாண்டு உங்களுக்கு அமைகிறது.

பரிகாரம் : பிரதி செவ்வா, வெள்ளிக்கிழமை மாலை யில் துர்கை அம்மன் அல்லது காளியம்மனை வழிபட்டு வர, நல்ல யோகத்தைக் கொடுக்கும்.

மிதுனம்

அனைவரிடமும் சகஜமாகப் பேசி நட்பு பாராட்டும் மிதுன ராசி வாசகர்களே! உங்களுக்கு பிலவ ஆண்டு முழுவதும் அஷ்டம சனி. ஆண்டு துவங்கும்போது ராசியாதிபதி மற்றும் நான்காம் அதிபதி புதன் நீச்சம் பெறுகிறார். அதேசமயம் இந்த ஆண்டு இறுதியில் யோகம் பெறுகிறார். பிள்ளைகளால் அனுகூலங்கள் ஏற்படும். பெற்றோர்கள் பிள்ளைகளுடன் வெளிநாடு செல்லக்கூடிய வாப்பு அமையும். ராசியாதிபதி ஆண்டு தொடக்கத்தில் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் நீச்சம் அடைவதால் சிலருக்கு தொழிலில் சில சங்கடங்கள் உண்டு.

சொந்த பந்தங்களுக்கு மத்தியில் நற்பெயர் உண்டாகும். சமூகத்தால் பாராட்டப்படும் யோகமும் உண்டு. தாயார் உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரிகள், விவசாயிகளுக்கு சுமாரான லாபமே கிடைக்கும். ஆண்டு இறுதியில் புதன் லாப ஸ்தானத்தில் வருவதால், அந்த சமயத்தில் தொழில் முன்னேற்றம், வீடு வாகனங்கள் வாங்கக் கூடிய யோகம் ஏற்படும். வருட முற்பகுதியைக் காட்டிலும் பிற்பகுதியில் சிறப்பாக இருக்கும். கேது நல்ல நிலைமையில் இருப்பதால் சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செயக்கூடிய யோகம் உண்டாகும். அதுபோல, தான தர்ம காரியங்களில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவி செயக்கூடிய நிலைமை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல பணியிட மாற்றம் நிகழ வாப்புண்டு. பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டுக்கு குடிபோகும் வாப்பும் சிலருக்கு அமையும்.

சிலருக்கு கும்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பணம் கொடுத்து உதவ வாப்புண்டு. கணினி துறையில் பணிபுரிவோர் பொருளாதார முன்னேற்றம் காண்பர். கர்ப்பிணிப் பெண்கள் தக்க மருத்துவப் பரிசோதனை செது கொள்வது நல்லது. மருத்துவம், பொறியாளர்கள், மருந்து வியாபாரம் செபவர்கள், கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர் களுக்கு லாபகரமாக இருக்கும். உணவுப் பொருள்களைத் தயாரித்து விற்கக்கூடியவர்களுக்கு, ஐஸ் கிரீம், குளிர்பானங்கள் வியாபாரம் ஓரளவு நன்மை பெறுவர்.

பரிகாரம் : விநாயகர் மற்றும் ஆஞ்சனேயர் வழிபாடு நன்மை தரும். குறிப்பாக, ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆஞ்சனேயரை வழிபட்ட வருவது சிறப்பான பலன்களைத் தரும்.

கடகம்

மற்றவர்களிடம் மரியாதையுடனும் பணிவுடனும் நடந்துகொள்ளும் கடக ராசி வாசகர்களே! ராகு லாபஸ்தானத்தில் இருப்பதால் இந்த ஆண்டு உங்களுக்கு லாபகரமாக இருக்கும். சனியின் காரகத்துவம் உள்ள இரும்பு, எண்ணெ போன்ற தொழில்களில் ஓரளவு லாபம் கிடைக்கும். வண்டி வாகனங்களை பழுது பார்க்கும் தொழில் செபவர் களுக்கு லாபகரமாக இருக்கும். சிலருக்கு செப்டம்பர் மாதத்துக்கு மேல் வெளிநாட்டு விசா கிடைக்கும். தொழில் தொடர்பாக வெளிநாடு செல்லக்கூடிய வாப்பும் ஏற்படும்.

சுப விரயங்கள் அதிகம் ஏற்படும். புதிய வண்டி வாங்கும் யோகமும், திருமண நிகழ்ச்சிகளுக்காக சுபச் செலவுகளும் உண்டு. வீட்டுப் பெரியோர்களின் உடல் நலனில் அதிக கவனம் கொள்வது அவசியம். சிலர் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செவீர்கள். குலதெவ வழிபாடு செது மகிழ்வீர்கள். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு செலுத்தும் காலகட்டம் இது. சொந்த வீடு, வண்டி வாகனம் வாங்கும் யோகம் இந்த ஆண்டில் இறுதியில் சிலருக்கு உள்ளது. நீண்ட நாட்கள் கட்டி முடிக்காமல் இழுபறியாக இருந்த வீட்டு வேலைகளைத் தொடங்கி முடித்த குடி போகும் வாப்பு உண்டு.

நீண்ட நாட்கள் திருமணமாகாமல் இருந்த ஆண், பெண்களுக்கு திருமணம் கைகூடி வரும். வருட துவக்கத்தில் செதொழிலில் சில நஷ்டம் ஏற்பட்டு பிறகு லாபம் அதிகரிக்கும். உழைப்பு அதிகமாகும். வருவா குறைந்து காணப்படும். மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டிய காலகட்டம் இது. அலுவலகத்தில் உங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு காட்டாமல் அனுசரித்துப் போவது நல்லது.

வாகனம் ஓட்டும்போதும் மின் சாதனங்களைக் கையாளும்போதும் கவனம் தேவை. கணவன், மனைவியிடையே சில நேரம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். சுய தொழிலில் லாபம் தாமத மாகும். கூட்டுத் தொழில் புரிவோர் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகளின் நலனில் பெற்றோர்கள் அக்கறைக் காட்டுவது அவசியம்.

பரிகாரம் : ஒவ்வொரு திங்கட்கிழமையும் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று வில்வ அர்ச்சனை செய்து வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

சிம்மம்

தவறுகளை தைரியமாகத் தட்டிக்கேட்டு நல்வழிப் படுத்தும் சிம்ம ராசி வாசகர் களே! இந்த ஆண்டு ஆரம்பத்தில் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. அரசியலில் இருப்பவர்களுக்கு அனுகூலமான காலகட்டம். அரசாங்க வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கக்கூடிய வாப்பு ஏற்படும். அரசு உயர் பதவியில் இருப்பவர் கள் தங்கள் பதவியை தக்க வைத்துக்கொள்ளும் யோகம் உண்டு. சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் அமையும். இந்த ஆண்டு தொடக்கத்தில் குடும்ப ஸ்தானதிபதி புதன் நீச்சம் அடைந்திருப்பதால் வீண் விவாதங்களைக் குறைத்துக்கொள்வது நலம் பயக்கும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த லாபம், உரிய நேரத்தில் கிடைப்பதில் தாமதமாக வாய்ப்புள்ளது.

வருட பிற்பகுதியில் அனைத்துக் கஷ்டங்களும் மாறி, வெற்றி தரும் காலகட்டமாக அமையும். குருவின் பார்வையால் சிலருக்குத் திருமண யோகம் கைகூடும். சுயதொழில் செபவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இறை வழிபாட்டின் மூலம் பிள்ளைப் பேறு நிகழும். பிள்ளைகளின் கல்வி சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபம் காணும் சிறப்பான காலகட்டம் இது.

அரசியலில் இருப்பவர்களுக்கு யோகமான வருடமாக இது அமைகிறது. மருத்துவர்கள், பொறியாளர்கள் தங்கள் வாழ்க்கையை நல்லபடியாக சீரமைத்துக்கொள்ளும் காலகட்டம். சிலருக்கு பணியிடத்தில் உயர் பதவிகள் கிடைக்கக்கூடும். உங்களது முயற்சிகள் எந்த அளவுக்கு உள்ளதோ அந்த அளவுக்கு வெற்றிகள் உங்கள் காலடியில். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு புதிய வீட்டுக்குக் குடிபோகும் சந்தர்ப்பமும் அமையும். தந்தை வழி சொந்தங்களுடன் கருத்து வேறுபாட்டுக்கு வாப்புண்டு. சிலருக்கு பூர்வீக சொத்துகள் தேடி வரும். நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

பரிகாரம் : தினமும் காலையில் சூரிய வழிபாடு செவது, சூரிய காயத்ரி படிப்பது நல்ல யோகத்தைப் பெற்றுத் தரும்.

கன்னி

அன்பும் பொறுமையும் அமைதியும் கொண்ட கன்னி ராசி வாசகர்களே! இந்த ஆண்டின் முற்பகுதியில் நீங்கள் சில சிரமங்களை அனுபவித்தாலும், ஆண்டின் இறுதியில் மகிழ்ச்சிகரமான லாபத்தைக் காணக் கூடிய ஆண்டாக இது அமைகிறது.

விவசாயம், வியாபாரம் அனைத்தும் செப்டம்பர் மாதத்துக்கு மேல் சிறப்பாக இருக்கும். சொந்தத் தொழில் புரிபவர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்ற வாப்புண்டு. ராசியாதிபதி மற்றும் பத்தாம் அதிபதியான புதன் பகவான் 7ஆம் இடத்தில் நீச்சம் பெறுகிறார். தொழில் ஸ்தானாதிபதி நீச்சம் பெறுவதால் நீங்கள் சில சங்கடங்களை அனுபவித் தாலும் அதை வெற்றிகரமாக சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டாகும்.

பணியிடத்தில் சிரமங்களை சந்தித்தாலும் அதை உங்கள் நேர்மையின் மூலம் உடைத்தெறிவீர்கள். உங்கள் உயர் அதிகாரிகளிடம் இன்முகத்துடன் நடந்து கொண்டு நற்பெயர் வாங்க முயற்சி செய்யுங்கள். இதனால் அவர்களுடன் உண்டான கருத்து வேறுபாடுகள் மறையும். உங்களது பணிகளை மற்றவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செவது நலம் பயக்கும். அனைத்துத் தொழில் புரிபவர்களுக்கும் இது சுமாரான காலகட்டம். உங்கள் தன்னம்பிக்கைக் கும் முயற்சிக்கும் விடப்படும் சவால்களை சந்தித்து வெற்றி காணும் காலகட்டம். கர்ப்பிணிப் பெண்கள் தக்க மருத்துவப் பரிசோதனைகள் செதுகொள்வது நலம் பயக்கும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. சொந்தமாக வீடு, சொத்து வாங்கும் போது, பங்கு சந்தை போன்றவற்றில் ஈடுபடும்போது அதிக கவனமாக செயல்படவும்.

குரு பகவான் பார்வையால் ஆண்டு இறுதியில் வியாபாரம், தொழில் அமோக லாபமாக நடைபெறும். நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். பொம்மை வியாபாரிகள் மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களைத் தயாரிப்பவர்களுக்கு செப்டம்பர் மாதத்துக்கு மேல் நல்ல லாபம் கிடைக்கும். வாகனம் ஓட்டுநர் மற்றும் கூலித் தொழிலாளிகளுக்கு இந்த ஆண்டின் இறுதி சந்தோஷத்தைக் கொடுக்கும் சிறப்பான காலகட்டமாக அமைகிறது.

பரிகாரம் : ஒவ்வொரு புதன் கிழமையன்றும் பெருமாள் மற்றும் மகாலட்சுமி வழிபாடு செய்து வருவது நல்ல பலனைத் தரும்.

துலாம்

நன்மை, தீமைகளை சரியாக சீர்தூக்கிப் பார்த்துப் பழகும் துலாம் ராசி வாசகர்களே! இந்த ஆண்டு தொடக்கத்தில் ராசியாதிபதி சுக்ரன் 2 மற்றும் 7ஆம் அதிபதியான செவ்வாய்யுடன் பரிவர்த்தனை யோகமுடன் தொடங்குவதால் ஆண்டு ஆரம்பத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் யோகம் இருக்கிறது. சுக்ரன் யோகமாக இருப்பதால் சிலருக்கு கலைத் துறையில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். பெயர், புகழ் கிடைக்கக்கூடிய யோகமும், பண வரவும் ஏற்படும். ராகுவின் சஞ்சாரத்தால் சிலருக்கு ஆன்மிக சுற்றுலா சென்று வரக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

குரு வக்ரம் பெற்று மகரத்தில் வரும்பொழுது நல்ல பலன்கள் ஏற்படும். குழந்தைகளின் படிப்பில் கவனம் தேவை. வேலை இல்லாதவர்களுக்கு வேலை, பதவி உயர்வு கிடைக்கும். பேச்சாற்றலை மையமாகக் கொண்டு பணிபுரிபவர்களுக்கு ஆண்டின் பிற்பகுதி அதிர்ஷ்டமான ஆண்டாக அமைகிறது. வருடத்தின் துவக்கத்திலேயே ஒன்பதாம் அதிபதி ஆறாம் இடத்தில் நீச்சத்துடன் தொடங்குவதால் தந்தை வழி சொந்தங்களுடன் கவனம் தேவை. அதிர்ஷ்ட வாய்ப்புகள் தாமதமாகும். வாகனம், மின் சாதனங்களைக் கையாளும்போது மிகவும் கவனம் தேவை.

குடும்பத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் காலம் கடந்துபோகும். இரண்டாம் இட கேது, எட்டாம் இட ராகுவால் உங்களுக்கு ஏற்படும் தர்ம சங்கடங்களை வெற்றிகரமாக முறியடிப்பீர்கள். மனதை அமைதியான சூழலில் வைத்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள் உடன் எடுத்துச் செல்லும் பொருட்களின் மீது கவனமாக இருக்கவும். உடன் பணிபுரிபவர்களிடம் நிதானமாக நடந்து கொள்வது பல நன்மைகளைப் பெற்றுத் தரும்.

பேச்சில் நிதானம் தேவை. எதையும் பெறுமையுடன் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம். பிள்ளைகளின் படிப்பில் கவனம் தேவை.

பரிகாரம் : தட்சிணாமூர்த்தி மற்றும் சனிக்கிழமை தோறும் ஆஞ்சனேயரை வழிபட்டு வர, நல்ல யோகத்தைக் கொடுக்கும்.

விருச்சிகம்

வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு போராடும் விருச்சிக ராசி வாசகர்களே! இந்தத் தமிழ் புத்தாண்டில் செவ்வா, சுக்ரனுடன் பரிவர்த்தனை யோகம் பெற்று துவங்குவதால் லாபகரமான ஆண்டாக அமைகிறது. 7 மற்றும் 12ஆம் இட அதிபதி சுக்ரன் ஆறாம் இடத்தில் அமையப்பெற்றதால் விரோதிகளையும் வெற்றிகொள்ள வாப்பிருக்கும். ராசியாதிபதி சுக்ரனோடு பரிவர்தனை யோகம் பெற்று எட்டாம் இடத்தில் மறைந்து விடுவதால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குரு அதிசார பெயர்ச்சி பெற்று கும்பத்தில் இருக்கும் காலகட்டத்தில் அவருடைய பார்வை 7ஆம் இடத்தில் படாமல் இருக்கும் பட்சத்தில் திருமணத் தடை, தாமதம் ஏற்பட்டு மறையும்.

செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு அனைத்துத் தடைகளும் நீங்கி, சுபத்துவம் பெறுவதற்கு அதிக வாப்புகள் இருக்கின்றது. இந்த ஆண்டு செவ்வாயின் ஆதிக்கத்தில் இருப்பதால் மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்கு சிறப்பான ஆண்டாகவே அமைகிறது. சிலருக்கு சொந்த வீடு, நிலம், வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். செவ்வா ஆதிக்கத்தால் சிலருக்கு அரசாங்க வேலைகளும் கிடைக்கக்கூடிய யோகம் உண்டு. அரசாங்க ஊழியர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு ஏற்படும். சனி பகவான் 3ஆம் இடத்தில் இருப்பதால் செயும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைக் கொடுக்கக்கூடிய காலகட்டமாக அமைகிறது.

இரண்டாம் அதிபதியான குரு கேந்திர ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். தங்கம், வெள்ளி போன்றவற்றில் செயப்படும் முதலீடுகள் நல்ல லாபம் தரும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்கும் யோகம் பலருக்கும் உண்டு. மருத்துவர், பொறியாளர் கள், கட்டிடத் தொழிலாளிகள் சிறப்பான யோகம் பெறுவர். புதன் ஐந்தாம் இடத்தில் நீச்சம் பெற்று தொடங்குவதால் பிள்ளைகளால் கஷ்டங்கள், பிரச்னைகள் ஏற்பட்டு மறையும். முதல் ஆறு மாதம் அரசியல்வாதிகளுக்கும் அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கும் லாபகரமாக இருக்கும். அது போல, அரசாங்க வேலைக்காக முயற்சி செபவர் களுக்கும் நல்ல வாய்ப்பு வரும்.

பரிகாரம் : அம்பாள் மற்றும் முருகப்பெருமானை வழிபட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

தனுசு

தர்ம சிந்தனையும் பொறுமையும் கொண்ட தனுசு ராசி வாசகர்களே! இந்த ஆண்டு முழுவதும் 2ஆம் இடத் திலேயே சனி பகவான் ஆட்சியாக இருப்பார். ஏழரை சனியின் கடைசி காலகட்டம். பாத சனி அல்லது குடும்ப சனி. இந்த ஆண்டு செவ்வா யோகமாக இருப்பதால் சிலருக்கு திருமண வாழ்க்கை அமையும். 10 மற்றும் 11ஆம் இடத்து அதிபதி பரிவர்த்தனை யோகத்துடன் துவங்குவதால் சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். செவ்வா 5 மற்றும் 12ஆம் இடத்துக்கு அதிபதியாக இருப்பதால் சிலருக்கு குழந்தை பாக்கியம் அமைய வாப்பு உண்டு. அதிக சுப விரயங்கள் ஏற்படும். எவ்வளவுதான் லாபம் கிடைத்தாலும் லாப, நஷ்டங்கள் சரிசமமாக இருக்கும்.

செவ்வாய் ஏழாமிடத்தில் இருப்பதால் சுய தொழில் சிறக்கும். திருமணத்தில் இருந்து வந்த குழப்பங்கள், தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்குபவர்கள் வெற்றி காண்பர். வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆண்டு தொடக்கத்தில் ராசியாதிபதி மற்றும் 4ஆம் அதிபதி குரு 3ஆம் இடத்தில் இருப்பதால் முதல் நான்கு மாதங்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளை சந்தித்து வெற்றி காண்பீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் தக்க மருத்துவப் பரிசோதனை செது கொள்வது நல்லது. தாயார் உடல் நிலையில் அதிக கவனம் தேவை.

செய்தொழிலில் முதல் நான்கு மாதங்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பது அரிது. பிள்ளைகளின் படிப்பில் அதிக கவனம் தேவை. ஆண்டின் பிற்பகுதி பல தொழில் புரிபவர்களுக்கும் லாபகரமாக இருக்கும். பேச்சை மூலதனமாக வைத்து செயல்படு பவர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். வீண் வாக்குவாதத்தால் நண்பர்கள் மற்றும் கணவன், மனைவிக்குள் பிரச்னைகள் ஏற்படும். ஆண்டின் பிற்பகுதியில் சிலருக்கு வாகன யோகமும் சொந்த வீடு கட்டும் யோகமும் அமையும். நீதிமன்ற வழக்கு களை முதல் நான்கு மாதங்களுக்கு சாதகமாக எதிர்பார்க்க முடியாது. நெசவுத் தொழில், ஆன்மிக புத்தக வெளியீட்டாளர்கள், ஆன்மிகம் தொடர்பான பொருட்கள் வியாபாரம் செபவர்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் நன்மைகள் நடைபெறும்.

பரிகாரம் : வியாழக்கிழமைதோறும் குரு வழிபாடு செது வருவது சிறந்த யோகத்தைத் தரும்.

மகரம்

மன வலிமையும் தைரியமும் உடைய மகர ராசி வாசகர்களே! இந்த பிலவ ஆண்டில் ராசியாதிபதி சனி பகவான் ராசியில் ஆட்சியாகவும், ஜன்ம சனியாகவும் நடப்பில் உள்ளார். இருந்தாலும், சொந்த வீடுகளான மகர, கும்ப ராசிகளுக்கு பெரிய கெடுதல்களைச் செய மாட்டார். வருட துவக்கத்தில் 4 மற்றும் 5ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை யோகத்தோடு தொடங்குவ தால் சிலருக்கு தாவழி சொந்தங்களுடன் அன்பு பாராட்டக்கூடிய அமைப்பு ஏற்படும். சிலர் புதிய வண்டி வாங்குவீர்கள். சிலருக்கு வீடு கட்டி குடி போகும் யோகம் உண்டு.

இந்த ஆண்டு செவ்வா ஆளுமைக்கு உட்பட்ட தனால் உங்கள் ராசிக்கு 4 மற்றும் 11ஆம் இடத்துக்கு அதிபதியாக வருவதால் பெருவாரியான தொழில் புரிபவர்களுக்கு அதிக லாபம் ஏற்படும். சுயதொழில் வெற்றிகரமாக நடைபெறும். ஐஸ்கிரீம், உணவுப் பொருள் தயாரிப்புத் தொழில்கள் வெற்றிநடை போடும். 7ஆம் இடம் சனியின் பார்வையில் இருப்பதால் திருமணத்தில் தாமதம், தடைகள் ஏற்பட்டு மறையும். குரு வக்ரம் பெற்று கும்பத்தில் இருந்து மகரத்துக்கு வரும்பொழுது அந்த இரண்டு மாதங்களில் அனைத்துத் தடைகளும் விலகி, நல்ல நிலை உருவாகும். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். சிலருக்கு வெளி நாட்டில் வேலை கிடைக்கக்கூடிய வாப்பு அமையும். பெண் குழந்தை களின் மூலம் பெற்றோர்களுக்கு அதிக நன்மைகள் ஏற்படும்.

ஆன்மிகப் பணிகளை மேற்கொள்வதற்கான வாப்புகள் அமையும். சிலருக்கு ஆலய புனரமைப்பு வேலைகளைச் செயும் யோகமும் கிடைக்கும். பத்தாம் அதிபதி சுக்ரன் யோகம் பெற்று இருப்பதால் கலைத்துறையில் உள்ளவர்களுக்கு யோகமான காலகட்டமாக அமைகிறது. இசை, நடனம் போன்ற துறைகளில் ஈடுபடுபவர்களுக்கு நற்பெயர், புகழ் ஆகியவை கிடைக்கும். சிலருக்கு மூத்த சகோதர, சகோதரிகள் மூலம் ஆதாயம் ஏற்படும். விவசாயிகள், தொழிலாளிகள் நல்ல ஆதாயத்தைக் காண்பர். கொடுத்த கடன் விரைந்து வசூலாகும். வாக்கு வன்மை சிறக்கும். உங்களுக்கு பணியிடத்தில் அதிகாரிகளின் பாராட்டுக்குப் பஞ்சமிராது. பிள்ளைகளின் கல்வி மேலோங்கும்.

பரிகாரம் : ஆஞ்சனேயர் மற்றும் குலதெவ வழிபாடு செய்து வருவது நல்ல பலனை அளிக்கும்.

கும்பம்

எல்லோரிடமும் சகஜமாகவும் பொறுமையுடனும் பழகக் கூடிய கும்ப ராசி வாசகர்களே! இந்த ஆண்டில் ராசியாதிபதி சனி பகவான் 12ஆம் இடமான விரய ஸ்தானத்தில் ஆட்சியாக உள்ளார். ஆண்டு தொடக்கத்தில் மூன்றாம் அதிபதிக்கும் நான்காம் அதிபதிக்கும் பரிவர்த்தனை யோகம் இருப்பதால் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும்.

சொந்த வீடு கட்டி குடி போகும் யோகம் சிலருக்கு உண்டு. சிலருக்கு தந்தை வழி சொந்தங்களுடன் அன்பு பாராட்டும் சூழ்நிலை உருவாகும். சுயதொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாக நடைபெறும். பத்தாம் இடத்தில் கேது தொடர்பு இருப்பதால் நல்ல வேலை கிடைக்கும். பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும்.

பன்னிரெண்டாம் இடத்து சனி பகவானால் ஏற்படக்கூடிய விரயம் மற்றும் ஏழரை சனியின் பிரச்னைகளை சந்திக்கக் கூடிய மனோதிடம் உண்டாகும். ஆண்டின் துவக்கத்தில் 5ஆம் அதிபதியான புதன் 2ஆம் இடத்தில் நீச்சமாகத் தொடங்குகிறார். குரு பகவான் செப்டம்பர் மாதம் வரை ராசியில் அமர்ந்து இருப்பதால் சிலருக்கு இட மாறுதல்கள் உண்டு. குரு பகவான் தன்னுடைய நேர் பார்வையாக ஏழாம் இடத்தைப் பார்ப்பதால் திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமணம் நடைபெறும்.

சுய தொழில் சிறப்பாக நடைபெறும். கூட்டுத் தொழில் புரிவோர் கூட்டாளிகளுடன் இணக்கமாக செயல்படுவர். கூட்டாளிகள் ஒற்றுமை மேலோங்கும். கணவன், மனைவி இடையே இருந்து வந்த மன வேற்றுமைகள் மாறும். குடும்ப ஒற்றுமை சிறக்கும். பிள்ளைகளின் படிப்பில் கவனம் தேவை. அரசு ஊழியர்கள் பலவித அனுகூலங்களைப் பெறுவார்கள். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல யோகமாக காலகட்டம். கட்சி தலைமையிடம், தொண்டர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். சேமிப்பும் சிக்கனமும் கூடும். மருத்துவர்கள், பொறியாளர்கள், மருந்து வியாபாரம் செபவர்களின் தொழில் மேன்மையுடன் செல்லும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாப்புகளும் சூழ்நிலைகளும் உங்களுக்கு சாதகமாக உள்ளது.

பரிகாரம் : சனிக்கிழமை தோறும் ஆஞ்சனேயர் மற்றும் வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு செது வருவதால் அனைத்தும் நலமாக நடைபெறும்.

மீனம்

தொழிலில் நேர்மையும் செயல் திறனும் கொண்ட மீன ராசி வாசகர்களே! இந்தத் தமிழ் புத்தாண்டில் சனி பகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சியாக இருந்தாலும், வருமானத்தை ஓரளவுக்கே எதிர்பார்க்க முடியும். குரு பகவான் செப்டம்பர் மாதம் வரை கும்பத்தில் விரய ஸ்தானத்தில் உள்ளார். குரு வக்ரம் பெற்று செப்டம்பர் மாதம் மகரத்துக்குச் செல்லும்போது ஓரளவுக்கு லாபமாக மாறுவதற்கு வாப்பிருக்கிறது. இருந்தாலும், செவ்வா காரகத்துவம் உள்ள ஆண்டு இதுவென்பதால் முயற்சியின் அடிப்படையிலேயே வெற்றிகளை அடைய முடியும்.

சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாப்புகள் உண்டு. தந்தை வழி சொந்தங்களோடு அன்பு பாராட்டும் சூழ்நிலையில் உருவாகும். ஆண்டின் முற்பகுதியைக் காட்டிலும் பிற்பகுதி லாபகரமாக உள்ளது. 4 மற்றும் 7ஆம் அதிபதியான புதன் ராசியில் நீச்சத்துடன் ஆண்டை துவங்குவதால் உடல் உடல் நலத்தில் கவனம் தேவை. வண்டி வாகன செலவு உண்டு. கணவன், மனைவி இடையே பிரச்னைகள் வந்து போகும். தொழிலில் கூட்டாளிகளுடன் கருத்து மோதலைக் களைந்து இணக்கமாக நடைபோடவும்.

சுயதொழிலில் சுணக்கம் ஏற்படும். குரு 10ஆம் இடத்துக்கு அதிபதியாக இருப்பதால் சிலருக்கு வேலை பளு கூடும். வருவா குறையும். வருடத்தின் முதல் நான்கு மாதங்கள் பணிபுரியும் இடத்தில் மிகவும் கவனம் தேவை. ஆண்டின் இறுதியில் குரு பகவான் மீனத்துக்கு அதிசாரமாக செல்லும்பொழுது சிலருக்கு வெளிநாடு செல்லும் வாப்புகளும் வரும். ஒரு சிலருக்கு உத்தியோக உயர்வு, சம்பள உயர்வுகளும் உண்டு. பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்கும் உள்ளாவீர்கள். பிள்ளைகள் பெற்றோர் சொல் கேட்டு நடப்பர்.

சொந்த வீடு கட்ட, புதிய வாகனம் வாங்க செப்டம்பர் மாதத்துக்கு மேல் உகந்த காலம். விவசாயிகளுக்கு ஆண்டின் முற்பகுதி சிரமங்கள் தந்தாலும் இறுதியில் சிறப்பாக உள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்கு செப்டம்பர் மாதத்துக்கு மேல் திருமணம் நடைபெறும். ஆண்டின் இறுதியில் சிலர் பங்கு சந்தையில் அதிக லாபம் ஈட்டுவார்கள்.

பரிகாரம் : சுக்ர வழிபாட்டோடு ஒவ்வொரு சனிக் கிழமையும் ஆஞ்சனேயரை வழிபட்டு வருவது விரயங் களைக் கட்டுப்படுத்தும்.

Post Comment

Post Comment