வாரிசு அருளும் வடாரண்யேஸ்வரர்!


புத்திர பாக்கிய தீர்த்தவாரி (11.4.2021)
சிவ.அ.விஜய்பெரியசுவாமி -மயிலாடுதுறை மாவட்டம், திருவாலங்காட்டில் அமைந்துள்ளது வண்டார் குழலம்மை உடனுறை வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரர் திருக்கோயில்.

திருவாலங்காடு எனும் பெயரில் இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று திருவள்ளூர் அருகில் உள்ள ஈசனின் ஊர்த்தவ தாண்டவம் நடைபெற்ற, காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற திருத்தலம். மற்றொன்று, மயிலாடுதுறை - கும்ப கோணம் வழிப்பாதையில் திருவாவடுதுறை அருகில் உள்ளது ஆகும்.

இவ்விரு தலங்களிலும் ஈசனின் திருநாமம் வடாரண்யேஸ்வரர், அம்பாளின் திருநாமம் வண்டார் குழலம்மை என்பதாம். அதேபோல், இந்த இரண்டு தலங்களிலும் உள்ள எல்லை தெய்வத்துக்கும் வடபத்ரகாளி அம்மன் என்பதே திருநாமம். நாம் தரிசிக்க விருப்பது மயிலாடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம்.

பரதன் எனும் அந்தணச் சிவ பக்தன் நீண்ட காலம் குழந்தைப்பேறு இல்லாமல் வருந்தினான். இதனால் மனம் வெதும்பிய அவன் திருத்துருத்தி அமிர்த முகிழாம்பிகை உடனுறை சொன்னவாறு அறிவார் திருக்கோயில் ஈசனை வழிபட்டு, தவம் மேற் கொண்டான். அவனது தவத்துக்கு இரங்கிய ஈசன் அசரீரியாக, பரதா! அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம் சென்று, அங்குள்ள புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் பங்குனி மாத அமாவாசையன்று நீராடி, வடாரண்யேஸ்வரரையும், புத்திர காமேஸ்வரரையும் அபிஷேகம், அர்ச்சனை செய்து, பசு நெய்யை கருவறை தீபத்தில் சேர்த்து வழிபட்டு வா. கண்டிப்பாக உனக்குப் புத்திர பாக்கியம் கிட்டும். அதுமட்டுமல்ல, ஆண்டுதோறும் பங்குனி மாத அமாவாசை தினத்தில் புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி எம்மை வழிபட, மலடியும் குழந்தை பெறுவாள்" என்று அருளினார்.

பரதனும் அவனது மனைவியும் அவ்வாறே பங்குனி மாத அமாவாசை நாளுக்காகக் காத்திருந்து திருவாலங்காடு புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி வழிபட்டு, ஒரு பெண் குழந்தையைப் பெற்றனர் என்கிறது தல வரலாறு. கோயிலின் வெளிச்சுற்றுப் பிராகாரத்தில் தனிச்சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இத்தல தீர்த்தம் புத்திர காமேஸ் வர தீர்த்தம் ஆகும். இதில் நீராடி ஈசனையும் புத்திர காமேஸ்வரரையும் வழிபாடு செது அதிதி தேவர் களைப் பெற்றாளாம். இந்திரன் இந்தத் தீர்த்தத்தில் நீராடி, மகன் ஜெயந்தனை பெற்றானாம்.

கோயிலின் வெளிப்பிராகாரத்தில் தனிச்சன்னிதி யில் மேற்கு நோக்கிய வண்ணம் புத்திரகாமேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இத்தல மூலவர் வடாரண்யேஸ் வரரும் மேற்கு நோக்கிய நிலையில் அருள்பாலிப்பது, இத்தலம் மிகச் சிறந்த பரிகாரத் திருத்தலம் என்று கட்டியம் கூறி நம்மை அழைக்கிறது. வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரர் வழிபாட்டின் மூலம் கண்டிப்பாக குழந்தைப்பேறு கிட்டும் என்கிறது இக்கோயில் தல வரலாறு. இக்கோயில் பைரவருக்கு அமாவாசை, அஷ்டமி நாட்களில் சந்தனக் காப்பிட்டு வெள்ளியில் சிறிய நா காசு செய்து அதனைக் கருப்பு கயிற்றில் கட்டி தாயத்து செய்து அதனை புத்திரகாமேஸ்வரர், பைரவர் காலடி யில் சமர்ப்பித்து அதனை குழந்தைகளுக்கு அணிவித்தால் குழந்தைகளை பாலாரிஷ்ட தோஷங்கள் அண்டாது என்கிறார்கள்.

சில குழந்தைகள் இரவில் காரணம் இல்லாமல் அழுதுகொண்டே இருக்கும். சில குழந்தைகள் அடிக்கடி கீழே விழுந்து அடிபடுதல், அடிக்கடி நோவாப்படும் குழந்தைகளுக்கு இக்கோயில் பைரவரை வழிபாடு செது நாகாசு தாயத்துப் போட்டால் பிரச்னைகள் விலகி குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பர் என்கிறார்கள். கோயிலின் வெளிப்பிராகாரத்தில் தனிச்சன்னதியில் மேற்கு நோக்கிய வண்ணம் புத்திரகாமேஸ்வரர் அருள் பாலிக்கிறார். இத்தல மூலவர் வடாரண்யேஸ்வரரும் மேற்கு நோக்கிய நிலையில் அருள்பாலிப்பது,இத்தலம் மிகச்சிறந்த பரிகாரத் திருத்தலம் என்று கட்டியம் கூறி நம்மை அழைக்கிறது. இந்தக் கோயிலில் பழைய அம்மன், புதிய அம்மன் என இரண்டு அம்மன்கள் அருள்பாலிக்கின்ற னர். பழைய அம்மனின் சிலை சிறிது பின்னமானதால் அதற்கு பதில் புதிய அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து உள்ளனர். புதிய அம்மன் சிலையை பிரதிஷ்டை செது, பழைய அம்மன் சிலையை அகற்ற எத்தனிக்க, அப்போது அசரீரியாக, உங்கள் வீட்டில் யாருடைய உடல் பாகமாவது பின்னமாகி விட்டால் அவர்களை உங்கள் வீட்டை விட்டு அகற்றி விடுவீர்களா?!’ என உரைக்க, ஆலயத்தினர் பழைய அம்மன் சிலையை அகற்றாமல் ஆலயத்திலேயே வைத்து விட்டனர்.

ஸ்ரீ வண்டார்குழலி அம்பாள் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.அமாவாசை, பௌர்ணமி, பஞ்சமி நாட்களில் அம்பாள் சன்னிதி கருவறை தீபத்தில் தூய பசு நெ சேர்த்து, அம்பாளுக்கு குங்குமார்ச்சனை செது, அபிராமி அந்தாதி பாராயணம் செது வழிபட, வேண்டிய கோரிக்கைகள் யாவும் விரைவில் நிறை வேறும். இக்கோயிலில் அருளும் பழைய அம்மனும் மிகவும் உயிரோட்டமானவள். எனவே, மூலவர் வண்டார்குழலி அம்மனுக்கு செயும் அனைத்து உபசாரங்களையும் பழைய அம்பாளுக்கும் செய்ய வேண்டும் என்கிறார்கள். பழைய வண்டார் குழலி அம்மன் அருகில் தனிச் சன்னிதியில் சரஸ்வதி தேவி காட்சி தருகிறாள். ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கு புனர்பூசம், பஞ்சமி மற்றும் புதன் கிழமைகளில் நெ தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபட்டு வர, குழந்தை கள் கல்வியில் சிறப்பிடம் பெற்று விளங்குவர்.

அம்பாளின் கடைக்கண் பார்வையில் விநாயகர், காவேரி அம்மன், வள்ளி-தெவானை சமேத முருகர் சன்னிதிகளும் உள்ளன. உட்பிராகாரத்தில் இரட்டை விநாயகர், பைரவர், சனி, சூரியன், மூன்றாம் குலோத்துங்கர், நாகர், எமதர்மன், சித்திர குப்தர், அறுபத்து மூவர் சன்னிதிகளும் உள்ளன. இத்தலத்தில் பைரவர், சனி பகவான், சூரியனும் அருகருகில் உள்ளனர். சனி தோஷங்கள் அகன்றிட இத்தலத்தில் பைரவர், சனி, சூரியன் கூட்டு வழிபாடு செய்திடல் சிறப்பு.

திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உட்பட்ட இந்தக் கோயிலில் எமதர்மன், சித்திரகுப்தர் சன்னிதியில் சித்ரா பௌர்ணமி, மகம் நட்சத்திர நாட்கள், அமாவாசை நாட்களில் வழிபட, தொடர்ந்து வரும் துன்பங்கள் அகலுவதோடு, மரண பயமும் அண்டாது என்கிறார்கள். ஆடி பதினெட்டாம் நாளில் இத்தலத் தில் காவேரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செவிக்கின்றனர். இக்கோயிலிலுள்ள நான்கு வேத சிவலிங்க சன்னிதியில் அபிஷேகம் செய்து தொடர்ந்து வழிபட்டுவர கல்வி, இசை, ஞானம், கலைகளில் முதன்மை பெறலாம்.

மூன்றாம் குலோத்துங்கச் சோழன் இத்தல ஈசனின் திருவடியை தனது சிரசில் பதித்து உள்ளானாம். இதனை இத்தல குலோத்துங்கச் சோழன் திருவுருவம் காட்டுகிறது. இங்கு குழந்தை பாக்கியம் வேண்டி வழிபடுவோர் அமாவாசை நாட்களில் வந்து புத்திர காமேஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள். ஆனாலும், புத்திர பாக்கியம் வேண்டி இங்கு வழிபட மிகச் சிறப்பான நாள் பங்குனி மாத அமாவாசை நாள்தான். அன்றைய தினம் புத்திரகாமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, ஆலயத்தை ஐந்து முறை வலம் வந்து வடாரண் யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டு பலனடையலாம்.

பங்குனி மாத அமாவாசையன்று புத்திரகாமேஸ்வரர் சன்னிதியில் சிறப்பு யாகம் நடைபெறுகிறது. இன்று ஆலயத்தில் புத்திரகாமேஸ்வர தீர்த்தத்தில் ஈசனுக்கு தீர்த்தவாரியும் சிறப்பாக நடைபெறுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டி வழிபடுவோர் இங்கு வழிபட்ட பிறகு, அருகில் உள்ள திருவாவடுதுறை ஒப்பிலா முலைநாயகி உடனுறை கோமுக் தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள புத்திர தியாகேசரை வழிபட்டு பிரார்த்தனையை நிறைவு செதிட, விரைவில் புத்திரப் பாக்கியம் கிட்டும் என்கிறார்கள்.

அமைவிடம் : மயிலாடுதுறை அருகில் குத்தாலத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாலங்காடு.


Post Comment

Post Comment