படித்தேன்; ரசித்தேன்!தொகுப்பு : எஸ்.மாரிமுத்து, சென்னை -நம்பிக்கை

நம்பிக்கை ஒன்றே முற்றும் முடிவான நிலையாகும். ஒருவனிடம் நம்பிக்கை இருக்குமானால், அவன் தன் குறிக்கோளை அடைந்த மாதிரிதான்.- சாரதா தேவி

தியானம்

ஆத்மாவை அறிய தியானமே அவசியம். இடை விடாது தியானம் செய்வதால் நம் எண்ணங்கள் தூய்மை அடைகின்றன. எல்லா ஜீவனுக்குள்ளேயும் உறைகின்ற ரசனை தியானிப்பதால் நம்முடைய இறுதி லட்சியத்தை நிச்சயமாக அடைய முடியும்.- ஷீர்டி சாய்பாபா

கடவுளின் தன்மை

சுயநலம், சுயநலமின்மை என்பதைத் தவிர கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. கடவுளுக்குத் தெரிந்த அளவுக்கு சாத்தானுக்கும் எல்லாம் தெரியும். ஆனால், தெய்வீகத் தன்மை மட்டும்தான் அதனிடம் கிடையாது. தெய்வீகத் தன்மை இல்லாமல் பெறுகிற மித மிஞ்சிய அறிவும், ஆற்றலும் மனிதர்களை சாத்தான்களாக்கி விடுகின்றன. சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும்.- விவேகானந்தர்

உடல்

எல்லாப் பிறப்புடம்புகளிலும் உயர்வுடையதாக இருக்கிறது ஆறறிவுள்ள மனித பிறப்புடம்பு. முக்தியடைவதற்கு இந்த மானிட தேகமே தகுந்த தாகவும், வேறு தேகத்தால் அதை அடைவது அரிதாகவும் உள்ளது. ஆகவே, எந்தவிதத்திலாவது தேகம் நீடித்திருக்க, இந்த உடம்பை அலட்சியம் பண்ணாமல் பொன்னைப்போல பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும்.- வள்ளலார்

வாய்ப்பு

இன்றைக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும் கைநழுவ விட்டால், அதை மீண்டும் பெற ஒருவேளை ஆயிரக் கணக்கான வருஷம் காத்திருக்க வேண்டியதிருக்கலாம்.- ஸ்ரீ அரவிந்த அன்னை

தீமை

கொல்வது, திருடுவது, பொய் பேசுவது, பிறரைப் பழிப்பது, வம்பளப்பது போன்ற தீமைகள், ஆசை, பகைமை, மனமயக்கம் இவற்றுக்கு வேர்களாக உள்ளன. இந்த வேர்களை அகற்றி விட்டால் தீமைகளை வென்றுவிட முடியும்.- கௌதம புத்தர்
Post Comment

Post Comment