கண்டேன் எனது குருவை!


வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்! 26
ராஜ்மோகன் -‘குரு’ என்ற சொல்லுக்கு இருளை நீக்குபவர் எனும் ஒரு பொருளும் உண்டு. ஒரு மனிதனுக்கு நல்ல குரு கிடைப்பது என்பது அவன் பூர்வ ஜன்ம பயன்.

உங்களுக்குத் தொடர்ந்து குருமார்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறார் கள் என்றால் நீங்கள் மிகவும் பாக்கிய சாலியானவர். வேதாத்திரி மஹரிஷி தனது ஆன்மிக உயர்வுக்கும் வாழ்க்கை யின் முழுமைக்கும் என்றென்றும் நன்றி சொல்வது அவரின் குருமார்களுக்குத் தான்.

வைத்தியபூபதி கிருஷ்ணாராவ் மூலம் வைத்திய நுட்பங்களைக் கற்றறிந்த மஹரிஷி, அவருக்கு வாழ்க்கையின் இறுதிக்காலம் வரை நன்றி பாராட்டிக் கொண்டே இருந்தார். குடும்ப வாழ்க்கைக்குப் பின்னர், பலவித சிக்கல் களைச் சந்தித்து அதில் விடுபட்டு முழுமையை நோக்கிய பாதையில் பயணித்துக் கொண்டிருந்த இளம் வேதாத்திரிக்கு மூன்றாவதாக ஒரு குரு கிடைத்தார். மிகுந்த சிக்கல்களுக்கிடையே இருந்த அவருக்கு இது புதிய ஆறுதலையும் ஆன்மிகம் குறித்த புதிய கதவுகளையும் திறந்து விட்டது என்றே சொல்லலாம்.

பரஞ்சோதி மகான் என்பவர் ஒரு ஞான சபை அமைத்து அனைவருக்கும் எளிய முறையில் ஆன்மிக சாதகங்களை போதித்து வந்தார். பரஞ்சோதி மகான் பற்றி ஒரு நண்பரின் மூலம் அறிந்துகொண்ட மஹரிஷி, அந்த மகானை சந்திக்க விரும்பினார். ஒரு ஓவு நாளில் பரஞ்சோதி மகானைத் தேடி அவரின் ஞான சபை அமைந்திருந்த திருவொற்றியூருக்குச் சென்றார்.

அது ஒரு அற்புதமான தருணம். ஞானிகள் இருவர் சந்திப்பது என்பது ஒரு சாதாரண நிகழ்வாக வெளியில் பார்க்கப்படும். ஆனால், அது அவர்களுக்குள் ஒரு பேரின்ப பரவச நிலையை ஏற்படுத்தும். இப்படித்தான் நரேந்திரனாக இருந்த சுவாமி விவேகானந்தர் தனது குரு ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்திக்கச் செல்கிறார். நரேந்திரனை பார்த்த ராமகிருஷ்ண பரமஹம்சர் பேரின்ப நிலையை அடைகிறார். நரேந்திரா வா! இத்தனை நாளாக எங்கிருந்தா? உனக்காக நான் எத்தனை நாட்களாகக் காத்திருக்கிறேன் தெரியுமா?" என்று ஒரு தந்தையின் தவிப்புடன் அவரை ஆரத் தழுவுகிறார்.

அதன் உள்ளர்த்தம் குருவும் சீடரும் பல பிறவிகளாக மீண்டும் மீண்டும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த யுகத்தில் நரேந்திரர் வருவார் என்று முன்பே உணர்ந்து காத்திருந்தார் ராமகிருஷ்ண பரமஹம்சர். வேதாத்திரியை பார்த்தவுடன் பரஞ்சோதி மகானுக்கு அதே மகிழ்ச்சி நிலை ஏற்பட்டது. சுவாமியுடன் பூர்வ ஜன்ம தொடர்பு கொண்டவராக உரையாடிய பரஞ்சோதி மகான் மஹரிஷியின் ஆன்மிக ஆர்வத்தையும் அதில் அவர் நிற்கும் முன்னேறிய நிலையையும் உணர்ந்து ஆரத் தழுவிக் கொள்கிறார். உடனே அந்த ஞான சபையில் இணைகிறார் மஹரிஷி.

பரஞ்சோதி மகான் இந்தியராக இருந்தாலும் அவரின் வாழ்க்கைப் பயணம் பல ஆண்டுகள் மலேசிய நாட்டில் கழிந்திருந்தது. அங்கு குண்டலினி யோக முறைகளைக் கற்றுத் தேர்ந்து அதில் முழுமை யடைந்து இருந்தார். அவருக்கு மலேசியா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் இருந்து ஏராளமான சீடர்கள் உருவாகியிருந்தனர். சொந்த மண்ணான இந்தியா வுக்குத் திரும்பிய அவர், ஞான சபை மூலம் தான் கற்ற எளிய முறை குண்டலினி யோகத்தை மற்றவர்க்கு போதித்து வந்தார்.

குண்டலினி யோக தீட்சையை முன்பே மஹரிஷி அறிந்து இருந்தாலும், ‘சாந்தி யோக தீட்சை’ எனும் நுட்பத்தை சுவாமிஜிக்கு கற்பிக்கிறார் ஞானவள்ளல் பரஞ்சோதி மகான். இது, ‘இறங்குபடி’ எனும் சிறப் பான யோகப் பயிற்சி. குரு பக்தியுடன் ஒழுங்கான முறையில் தீட்சை பெற்று, நல்ல சிந்தனையோடு பயிற்சி செது வந்தார் மஹரிஷி. அவரது மனதுக்கு உகந்த ஒன்றாக அந்தப் பயிற்சி இருந்தது.

அதுவரையில் மஹரிஷி அவர்கள் கற்றுக்கொண்ட தத்துவ விளக்கம், தியான முறை இவற்றோடு இதை இணைத்து ஆராந்து வந்தார். அந்தக் காலத்தில் ஞான சபை மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது. பலர் அந்த சபைக்கு வருவார்கள். அந்த முக்கிய பிரமுகர்களும் மஹரிஷிக்கு நண்பர்கள் ஆனார்கள். ஒத்த சிந்தனையுடைய ஆன்மிக சாதகர்கள் ஒன்றிணைந்து சாதகம் செவது மேலும் வலுவுள்ள தாக மாறியது. எல்லோரும் இணைந்து இப்படி செயல்பட, ‘உலக சமாதான ஆலயம்’ என்று பொருத்தமான பெயர் வைத்திருந்தார் ஞானவள்ளல் பரஞ்சோதி மகான்.

ஞான வள்ளலோடான தொடர்பு மேலும் மேலும் ஆன்மிக சாதனையிலும் உள்நோக்கிய பயணத்திலும் ஈடுபடத் தூண்டியது. காலை முதல் பணி, பின்னர் குடும்பப் பொறுப்பில் இருந்து ஓவு கிடைக்கும் நேரம் முழுவதும் தவம், தத்துவ ஆராச்சியில் ஈடுபட்டார். இரவு நேரங்கள் பெரும்பாலும் இறை குறித்த ஆராச்சியில் மனம் லயித்தது. விடுமுறையும் ஓவு நேரமும் கிடைக்கும் போதெல்லாம் ஞானசபைக்கு சென்று சத்சங்கங்களில் கலந்து கொண்டார். ஞான வள்ளலோடு உரையாடினார். அப்போது சுவாரஸ்யமான விவாதங்கள் அங்கே களைகட்டும்.

இப்படி, ஆத்ம விசாரணையில் நல்ல முன்னேற்றங் களை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாலும், குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. அகம் - புறம் இரண்டும் இணைந்ததுதான் வாழ்க்கை. புறத்தில் ஏற்படும் பிரதிபலிப்புகள் அகத்தை பாதிக்காமல் காத்துக்கொள்வதுதான் ஆன்மிக சாதகனுக்கு வெற்றி தரும். மஹரிஷி புறத் தில் ஏற்படும் சிக்கல்களை வெற்றி கொள்ள தனது முயற்சியைத் தொடர்ந்துகொண்டே இருந்தார்.(குருத்துவம் தொடரும்)

ஆராதனை-மனதுக்கு அமைதி!

‘கடவுளர் போற் றும் கல்யாணத் திரு நாள்’ பங்குனி உத்திரம் படமும் செய்தியும் அருமை.- பிரகதா நவநீதன், மதுரை

அகரம் மேல் பச்சைவாரணப் பெரு மாள் திருத்தலப் பெருமை மனதுக்கு அமைதி தருவதாக உள்ளது.- ஆர்.மகாலட்சுமி, சென்னை

ஒழுக்கம் பிறழாது அறவழியில் வாழ்ந்துகாட்டிய வேதாத்திரி மஹரிஷியின் வாழ்க்கை அனைவருக்கும் எடுத்துக்காட்டு.- ஆ.திவ்யதர்ஷன், வந்தவாசி

மணக்கோலத்தில் வள்ளி, தெவானை சமேத ஸ்ரீ சுப்ரமண்யர் சுவாமி தரிசனம் கண்டு மெசிலிர்த்துப் போனேன்.- என்.புவனா நாகராஜன், செம்பனார்கோவில்

சபரிக்கு முக்தி அளித்த ஷிவ்ரி நாராயண் கோயில் வரலாறு பரவசம்.- ஏ.சங்கரி, சென்னை

‘நந்திக்குக் காட்சி தந்த பஞ்சலிங்கேஸ்வரர்’ படமும் செதியும் படித்து, அந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.- வெ.முத்துராமகிருஷ்ணன், மதுரை

‘நமக்கானது’ என்று பரமாச்சாரியாரின் கூற்று மெசிலிர்க்க வைத்தது.- உஷா முத்துராமன், திருநகர்

‘அருள்ஜோதி சேஷாத்ரி சுவாமிகள்‘ கட்டுரையில் வந்த மூன்று பித்தர்கள் செதியைப் படித்ததும் மெசிலிர்த்தது. - லக்ஷ்மி ஹேமமாலினி, சென்னை

‘தர்ப்பண பூஜை செதால்போதும். அதுவே சரியான திதி’ என்று அழகாக சொல்லிக்கொடுத்த ‘தீபம்’ இதழுக்குப் பாராட்டுக்கள்.- நந்தினி கிருஷ்ணன், மதுரை

வலங்கைமான் பாடைக்காவடியின் சிறப்பும், பெருமையும் மெசிலிர்க்க வைத்தன. - த.ரவி, சென்னை

கதம்பமாலையில் இடம்பெற்ற, ‘பிறந்த ஊருக்கு வரும் அம்மன்’ செதி சுவாரஸ்யமா இருந்தது.- ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்

மகத்தான கின்னஸ் சாதனை!

வேதாத்திரி மஹரிஷி அவர்கள் சமாதியடைந்த மார்ச் 28ஆம் தேதி உலக அமைதிக்கான முயற்சியாக ஒரு கின்னஸ் முயற்சி செததைப் பற்றி ஏற்கெனவே எழுதி இருந்தோம். இதுவரை இணையம் மூலம் ஒரே நேரத்தில் ஒரு லட்சம் அன்பர்கள் ஒருமித்து தியானிக்கும் நிகழ்வு நடந்தது இல்லை. இப்படி ஒரு நிகழ்வின் மூலம் கின்னஸ் சாதனையை நிகழ்த்த திட்டமிட்டு எந்தவிதமான விளம்பரமோ, பரப்புரையோ இல்லாமல் சத்தமே இல்லாமல் கடந்த வாரம் இந்த சாதனை நிகழ்த்தி முடிக்கப்பட்டிருக்கிறது.‘உலக சமுதாய சேவா சங்கம்’ மூலம் சுமார் ஒன்றரை மணி நேரம் நிகழ்ந்த இந்த பஞ்சபூத நவக்கிரக தவ நிகழ்வில் சுமார் 1.5 லட்சம் அன்பர்கள் பங்கேற்று மகத்தான சாதனையை நிகழ்த்தியிருக் கிறார்கள். ஆன்மிக அன்பர்களின் இந்த தவ நிகழ்வினால் நேர்மறை எண்ணம் பிரபஞ்சத்தில் நிலைநின்று உலக அமைதிக்காக செயலாற்றிக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை. பஞ்சபூத நவக்கிரக தவத்தை நீங்களும் செய விரும்பினால், தீதீதீ.ண்டுதூதூணிஞ்ச்ணாதி/தூணிதணாதஞஞு எனும் இந்த சுட்டியைத் தட்டி உள் நுழையவும்.

மனிதனுக்கு ஏற்ற விஞ்ஞானம்!

கேள்வி : சுவாமி, சைவ உணவே மனிதனுக்கு ஏற்றது என்கிறீர்கள். ஆனால், அசைவ உணவு உண்ணும் மேல்நாட்டு மனிதர்கள்தானே நம்மை விட மிகச்சிறந்த விஞ்ஞான ஆராச்சி எல்லாம் செகிறார்கள்? பதில் : ஆராச்சி செது என்ன பயன்? சைவ உணவு உண்ணும் இவர்கள் மெதுவாக மனிதர்களைக் கொன்றால், அசைவ உணவு உண்ணும் அவர்கள் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கில் மனிதர்களை கொல்ல ஆராச்சி செகிறார்கள். அந்த விஞ்ஞான அறிவால் என்ன பயன்? அது மனித வாழ்வுக்கான விஞ்ஞானம் இல்லையே. தானும் வாழ வேண்டும்; பிறரையும் வாழ விட வேண்டும் என்பதுதான் மனி தனுக்கு ஏற்ற விஞ்ஞானமாகும். அது எங்கே வளர்ந் தது என்று பாருங்கள். அசைவ உணவு உண்ணும் மேலை நாடுகளின் சரித்திரத்தைப் பாருங்கள். அவ்வப்போது படையெடுத்து சிறிய நாடுகளை நசுக்கித் தன்னோடு சேர்த்துக்கொண்ட நாடுகள்தான் அவை. அவர்கள் பிறர் வாழப் பொறுக்க மாட்டார்கள். அது மிகச்சிறந்த விஞ்ஞான ஆராச்சி அல்ல!
Post Comment

Post Comment