நலம் தரும் பரிகாரங்கள்!


வழிகாட்டி
அமுதா அசோக்ராஜா -



அன்றாட வாழ்வில் ஒருவர் அனுதினமும் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். அவற்றுக்கான தீர்வு கைக்கெட்டும் தொலைவில் இருந்தும், அதை இன்னதென்று அறியாமல் குழப்பத்தில் பலரும் தவித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். உடலையும் மனதையும் வருத்தும் அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வாக கீழே சில எளிய பரிகாரங்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது. படித்துப் பயன் பெறுவோம்.

வீட்டு பூஜை அறையில் எத்தகைய கிரக தோஷங்கள் இருந்தாலும், தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்து வருவது மிகவும் நன்மை தரும். மேலும், வாழைத் தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றி வணங்கினால் குலதெவ குற்றமும், குலதெவ சாபமும் நீங்கும்.

சிவன் கோயிலில் உள்ள வன்னி மரம், வில்வ மரத்தை இருபத்தியோரு முறை வலம் வந்து, மனக் குறைகளைக் கூற, அவற்றுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு ஒருவர் கூறுவதைக் கேட்கும் சக்தி உள்ளதாக ஐதீகம்.

இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமைதோறும் காலை 10.30 - 12 ராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாத்தி, அபிஷேகம் செது, நெ தீபம் ஏற்றி வணங்கி வந்தால் தம்பதிகள் ஒற்றுமையுடன் அன்னியோன்யமாக வாழ்வர். குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிச் சென்ற பரிகாரம்.

தீராத கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், சிறு கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். ஸ்ரீ நரசிம்மரின் எந்தத் திருக் கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமணத் தடைகள் விலகி, நன்மை பெறலாம்.

கோயிலில் உள்ள திரிசூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செவினை தோஷங்கள் விலகும்.

வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால், பூத கண சேஷ்டைகள் வீட்டில் ஏதும் இருந்தால் அது மறைந்து விடும்.

சக்கரத்தாழ்வார் சன்னிதியில் 48 நாட்கள் நெ தீபம் ஏற்றி, பன்னிரெண்டு முறை சுற்றி வந்து வழிபட தொழில், வழக்கு சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் போன்றவை நீங்கும். இப்படி இருபத்தியோரு செவ்வாக்கிழமைகளில் நெ தீபம் ஏற்றி வழிபட, கொடுத்த கடன் விரைவில் வசூல் ஆகும்.

பைரவர் சன்னிதியில் தொடர்ந்து எட்டு செவ்வாக் கிழமைகளில் நெ தீபம் ஏற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செது வழிபட்டு வர, கொடுத்த கடன் விரைவில் வசூலாகும்.

ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் சிவ பெருமானுக்கு பால் அபிஷேகம், அர்ச்சனை செது வழிபட, ஜாதகத்தில் உள்ள சனி பகவானின் பாதிப்பு குறையும். அதேபோல் சனிக்கிழமைகளில் சனி பகவான் சன்னிதியில் தேங்கா உடைத்து, இரண்டு மூடி களிலும் நல்லெண்ணெ ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றி வழிபட்டாலும் சனி பகவானின் தோஷம் குறையும். சிவன் கோயிலில் கால பைரவரை யும், விஷ்ணு கோயிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட, செவினை தோஷங்கள் நெருங்காது.

வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்ரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, நெ தீபம் ஏற்றி வழிபட, கணவன், மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பிரதோஷ காலத்தில், ரிஷபாரூட மூர்த்தியா, மகேசனை தேவியுடன் வழிபடுவோர், ஆயிரம் அஸ்வமேத யாகங்களை செத பலனைப் பெறுவர். அதிலும், ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாரதனையை தரிசித்தால் உடல் நோகள் மட்டுமின்றி, வறுமையும் நீங்கும். மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவ பெருமானுக்கு தொடர்ந்து பதினொரு மாதங்கள் பால் அபிஷேகம் செய்தால், தடைபட்ட திருமணங்கள் விரைவில் நடைபெறும்.

காரியங்கள் ஸித்தியாக துர்கை வழிபாடு சிறந்தது. அதுவும் ராகு காலத்தில் கடைசி அரை மணி நேரமான அமிர்த கடிகை நேரம் மிகவும் சிறப்பான பரிகார நேரம். நெ விளக்கு ஏற்றி வழிபட இது மிகவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30 - 6.00 மணிக்குள் துர்கைக்கு தீபமேற்றி வழிபட, பிராத்தனைகள் அனைத்தும் நிறைவேறும். அதேபோல், வெள்ளிக்கிழமை காலை 10.30 - 12.00 ராகு காலத்தில் துர்கைக்கு தாமரைத் தண்டு திரி போட்டு நெய் தீபமேற்றி வழிபட, தெவ குற்றம், குடும்ப சாபம் போன்றவை நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்கைக்கு சிவப்பு பட்டு துணி சாத்தி, செந்தாமரை மலரை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாத்தி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் அணிந்து வர, தடைபடும் திருமணம் விரைந்து நடைபெறும்.

சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி அர்ச்சனை செது வழிபட, சங்கடங் கள் தீரும். இன்று விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு தீபமேற்றி வழிபட பிள்ளைகளின் கல்வி சிறக்கும். இரட்டைப் பிள்ளையாருக்கு ரோஹிணி நட்சத்திரத்தன்று சந்தனக்காப்பு செது வழிபட, கடன் பிரச்னைகள் தீரும்.

செவ்வாக்கு அதிபதியான முருகப்பெருமானுக்கு செவ்வாக்கிழமைதோறும் நெய் விளக்கு ஏற்றி வழிபட, மூன்று மாதத்தில் நல்ல வேலை கிடைக்கும். அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சம் பழத்தை சொருகி, அர்ச்சனை செது வழிபட, விபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்.

ருத்ராட்சம், சாளக்ராமம், துளசி, வில்வம் போன்றவை உள்ள இடங்களில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு செவினை கோளாறுகள் ஏதும் அணுகாது. பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீட்டில் தெளித்து வர தோஷம், தீட்டு போன்றவை நீங்கி, இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.

ஆறு தேபிறை அஷ்டமிகளில் கால பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செது வழிபட்டு வந்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். அதேபோல், வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சிணாமூர்த்திக்கு தொடர்ந்து நெய் தீபம் ஏற்றி வர, விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு உண்டாகும்.

பெருமாள் கோயிலில் உள்ள கருடாழ்வார் சன்னிதியைச் வலம் வந்து நெ விளக்கு ஏற்றி வழிபட, சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் போன்றவை நீங்கும்.

வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோயில்களில் பூஜை நடக்க உதவுதல், அனாதைப் பிணங்களின் தகனத்துக்கு உதவுதல் ஆகிய மூன்றும் செவது அசுவமேத யாகம் செததற்குச் சமம்.

பௌர்ணமிதோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வதால், செதொழிலில் தடை, கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு, குடும்பத்தில் ஒற்றுமையின்மை போன்றவை நீங்குவதோடு, வெளிநாட்டு வேலை முயற்சியில் வெற்றி போன்ற நற்பலன்களும் நடைபெறும்.




Post Comment

Post Comment