சமத்துவ சனாதனத் துறவி


ஸ்ரீ ராமானுஜ ஜயந்தி (18.4.2021)
எம்.கோதண்டபாணி -சமயப் பணியையும் சமூகப் பணியையும் சரிசமமாக பாவித்த அவதார புருஷர் ஸ்ரீ ராமானுஜர். ஆத்திகம், நாத்திகம் என்றில்லாமல் அனைவராலும் போற்றப்பட்ட மகான். சாதி எனும் கோட்டைச் சிறையில் சிறைப்பட்டிருந்த சமயத்தை மீட்டெடுத்த தத்துவஞானி. தென்னக மொழிகள் மட்டுமின்றி, வடமொழி யிலும் பெரும் புலமை பெற்றிருந்த மாபெரும் சமய சீர்திருத்தவாதி. இடைக்காலத்தில் முளைத்தெழுந்த சாதி வேற்றுமையை உடைத் தெறிந்து புரட்சி செய்ததில் இவரே முதன்மையானவர் என்றால் அது மிகையல்ல.

வைஷ்ணவத்தின் ஒப் பற்ற மகான் ஸ்ரீமத் ராமா னுஜர் ஆயிரத்து பதினேழாம் ஆண்டு சித்திரை மாதம் ஸ்ரீபெரும்பூதூரில் வாழ்ந்து வந்த அசூரிகேசவ சோமாயாஜுலு - காந்திமதி அம்மையாருக்கு திருமகனாக திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித் தார். ‘இளையபெருமாள்’ என்று பெற் றோரால் பெயர் சூட்டப்பட்ட இவருக்கு, எட்டு வயதில் உபநயனம் செயப்பட்டது.

தந்தையின் மறைவுக்குப்பின் இவர் குடும் பத்துடன் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். அவரை ஸ்ரீரங்கம் அழைத்துச் செல்ல வந்து கொண்டிருந்தார் பெரியநம்பி. இளையபெருமாளும் பெரியநம்பியிடம் கல்வி பயில ஸ்ரீரங்கம் சென்று கொண்டிருந்தார். இருவரும் மதுராந்தகம் ஸ்ரீராமர் கோயிலில் சந்தித்துக் கொண்டனர். இளையபெருமாளை அங்கேயே சீடனாக ஏற்றுக்கொண்ட பெரியநம்பி, ‘பஞ்ச சமஸ்காரம்’ என்னும் சடங்கை அவருக்குச் செது ‘ராமானுஜர்’ எனப் பெயரிட்டார். அந்தப் பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.

மண வாழ்க்கையில் ஈடுபாடு காட்டாமல் இருந்த ஸ்ரீ ராமானுஜர் மனைவியுடன் ஏற்பட்ட மனவேற்றுமை யின் காரணமாக துறவறம் மேற்கொண்டார்! ‘ராமா னுஜன்’ என்பதற்கு ஸ்ரீராமனுக்கு அடுத்தவன் என்றும் ஒரு பொருளுண்டு. ஸ்ரீராமனுக்கு அடுத்தவன் என்றால் அது லட்சுமணன்தானே! அண்ணனுக்குத் தொண்டு செய துறவுக் கோலம் பூண்ட லட்சுமண னைப் போல், அரங்கனுக்குத் தொண்டு செய துற வறம் மேற்கொண்டவர் ஸ்ரீ ராமானுஜர். அவரது துறவுக் கோலத்தைக் கண்ட திருக்கச்சி நம்பிகள் அவரை, ‘யதிராஜரே’ என்று அழைத்தார். ‘யதிராஜர்’ என்றால் துறவிகளுக்கெல்லாம் அரசர் என்று பொருள்.

ஸ்ரீ ராமானுஜர் பிட்சை வேண்டிப் போகும் சமயம், ஆண்டாளின் பாசுரங்களைப் பாடி பிட்சை வேண்டியதால் இவர், ‘திருப்பாவை ஜீயர்’ எனவும் அழைக்கப்பட்டார். ஸ்ரீ ராமானுஜரின் தோற்றத்தில் பெருமாளைக் கண்ட பக்தர்கள் இவரை, ‘எம்பெருமானார்’ என பக்திப்பெருக்குடன் அழைத்து மகிழ்ந்தனர். வேதங்களின் சாரத்தை, ‘வேதாந்த சாரம்’ எனும் உரையில் அருளிச்செத பெருமை ஸ்ரீ ராமானுஜரையே சேரும். பிரம்ம சூத்திரங்களுக்கு, ‘ஸ்ரீ பாஷ்யம்‘ எனும் உரையெழுதி, ‘பாஷ்யகாரர்’ எனவும் அன்பொழுக அழைக்கப்பட்டார்.

கர்நாடக மாநிலம், திருநாராயணபுரத்தில் சில ஆண்டுகள் வாழ்ந்த இவர், அங்கிருந்து ஸ்ரீரங்கம் புறப்படும் சமயம், அங்கு அதுவரை அவரிடம் அன்பு காட்டியோர் மிகவும் வருந்தினர். அதைக் கண்ட ஸ்ரீ ராமானுஜர், அவர்களின் விருப்பப்படி தம்மைப் போலவே ஒரு சிலையை உருவாக்கச் சொல்லி அந்தச் சிலையைக் கட்டித் தழுவி தமது ஆற்றலை அந்தச் சிலையினுள் செலுத்தினார். பின்னர், நான் இந்தத் திருச்சிலை வடிவில் உங்களுடன் எப்போதும் இருப் பேன்" என அவர்களுக்கு ஆசி வழங்கினார். அந்தத் திருச்சிலை, ‘தமர் உகந்த திருமேனி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

அதைப்போலவே, அவரது அவதாரத் தலமான ஸ்ரீபெரும்பூதூரிலும் வாழும் காலத்திலேயே அவருக்கு ஒரு திருச்சிலை வைக்கப்பட்டது. அதை ஸ்ரீ ராமானுஜரே பிரதிஷ்டை செதார் என்பது குறிப் பிடத்தக்கது. அந்தத் திருச்சிலை, ‘தானுகந்த திருமேனி’ என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம் சென்ற ராமானுஜர், அங்கே ஸ்ரீ ரங்கநாதர் கோயிலின் வழிபாட்டு முறைகளை ஒழுங்குபடுத்திக் கொடுத்து, அந்தத் தலத்திலேயே தங்கியிருந்தார். இவர் தமது 120ஆவது வயதில், தாம் பிறந்த அதே பிங்கள ஆண்டு, மாசி மாதம் வளர்பிறை தசமி, திருவாதிரை நட்சத்திரத்தில், சனிக்கிழமை நண்பகல் நேரத்தில் பூமியின் வாழ்நாளை முடித்துக்கொண்டு ஸ்ரீவைகுண்டமான திருநாட்டுக்கு எழுந்தருளினார். பக்தர்கள் அவரது பூதவுடலை ஸ்ரீரங்கம் கோயிலின் வசந்த மண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ள ஒரு தனி சன்னிதியில் எழுந்தருளச் செது வழிபட்டு வருகின்றனர். இந்தத் திருமேனியை, ‘தானான திருமேனி’ என பக்தர்கள் அழைக்கின்றனர்.

ஸ்ரீ ராமானுஜரின் திருமேனி பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ போன்ற அரிய மூலிகைகளால் பதப் படுத்தப்பட்டுள்ளதால், அவர் இன்றும் உயிருடன் உள்ளது போல் காட்சி தருவது விசேஷம். சித்திரை திருவாதிரை மற்றும் ஐப்பசி திருவாதிரை என ஆண்டுக்கு இரு நாட்களில் பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ தைலத்தால் காப்பிட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

பத்ரிநாத், காசி, காஷ்மீர் என பாரதம் முழுதும் பாத யாத்திரை சென்று பக்தியை பரப்பியவர் ஸ்ரீமத் ராமானுஜர். பல லட்சம் மக்களை தமது பக்தித் தொண்டின்பால் ஈர்க்கச்செது, பல திருக்கோயில்கள் அமையக் காரணமாக இருந்தார். வட இந்தியாவில் மிகப்பெரும் ஆச்சாரியராக வணங்கப்படும் ராமானந்தர், ஸ்ரீ ராமானுஜரிடம் உபதேசம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மேலை நாட்டு அறிஞர்கள் பலரும், ‘பக்திசார் தத்துவங்களை முன்நிறுத்தியதில் ஸ்ரீ ராமானுஜர் முதன்மையானவர்’ என்று போற்றுகின்றனர்.

‘உடையவர்’ என்று போற்றப்படும் ஸ்ரீ ராமானுஜர் இந்த பூமியில் அவதரித்து ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. ‘பிறப்பில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லை. கடவுளின் முன் அனைவரும் ஒன்றே’ என்னும் சமத்துவ தர்மத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கிய புரட்சித் துறவி ஸ்ரீ ராமானுஜர். அவரது ஜயந்தி திருநாளில் அவரது திருவடிகளைச் சரணடைவோம்.


Post Comment

Post Comment