காலதேவனின் நசிகேதஸ் உபதேசம்!


புராணம்
-வாசஸ்ரவசு என்பவர் யாகங்கள் செய்தார். கறக்காத பசு போன்று தமக்கு வேண்டாதவற்றை மற்றவர்க்கு தானமாகக் கொடுத்தார். அதைப் பெருமையாக தாமே நினைத்துக்கொண்டார்.

அவரது ஒரே மகன் நசிகேதஸ். பயன்படாத பொருளை மற்றவர்க்கு தானமாகக் கொடுக்கிறாரே என்று அவனுக்கு தந்தை மீது எரிச்சல். இதனால் அவன் தனது தந்தையிடம், என்னை யாருக்குத் தானம் கொடுக்கப்போகிறீர்கள்?" என்று கேட்டான்.

இதைக் கேட்டு அவர் மௌனமாக இருந்தார். நசிகேதஸ் விடாமல் மூன்று நான்கு முறை இப்படியே கேட்க, வாசஸ்ரவசு, உன்னை எமனுக்குத் தான மாய்க் கொடுத்துவிட்டேன். போ..." என்றார்.

தந்தையின் சொல்படி நசிகேதஸ் எமலோகம் போய்ச் சேர்கிறான். எமன் வீட்டு வாசலில் அவனைப் பார்க்க மூன்று நாட்கள் காத்திருந்தான். அதற்குப் பிறகு எமன் வெளியே வந்தான். எமனுடைய மந்திரிகள் அவனிடம் நசிகேதஸின் தூமையைப் பற்றியும் அவனைக் காக்க வைத்தது அபத்தம் என்றும் கூறுகின்றனர்.

எமன் தாம் பெரிய தவறு செய்துவிட்டதாக வருந்துகிறான். அதற்காக நசிகேதஸிடம் மன்னிப்பு கேட்கிறான். மேலும், அதற்குப் பரிகாரமாய் மூன்று வரம் தருகிறேன். கேள்" என்றான்.

முதல் வரமாக, நசிகேதஸ் தாம் திரும்பி பூலோகம் செல்லும் சமயம் தமது தந்தை தெளிந்த மனதுடன், கோபமின்றி இருக்க வேண்டும் என்றும், இரண்டாவது வரமாக, ஒருவர் சுவர்க்க லோகம் அடைய செய வேண்டிய யாகம் என்னவென்பதை தாம் அறிய சொல்லும்படி வேண்டுகிறான்.

அதற்கு எமன், அந்த யாகத்தை அனைவரும் செய்துவிட முடியாது. அதை மூன்று முறை செய்ய வேண்டும். தாய், தந்தை, குரு ஆகியோரிடம் தொடர்பு வேண்டும். தர்ம சாஸ்திரங்களை நன்கு கற்றறிய வேண்டும். தான தர்மங்கள், யாகங்கள் செய்ய வேண்டும்" என அனைத்தையும் விளக்குகிறான். (எமனால் உபதேசம் செயப்பட்டதால் இதை, ‘நசிகேதஸ் யாகம்’ என்று புராணம் கூறுகிறது.)

மூன்றாவது வரமாக, ஒரு மனிதனின் மரணத் துக்குப் பின்னர் என்ன நடக்கிறது என்பதை நான் அறிந்துகொள்ள வேண்டும்" என்று கேட்கிறான் நசிகேதஸ்.

அதற்கு எமன், இது தேவர்களுக்கே தெரியாத ரகசியம். என்னால் அதைச் சொல்ல முடியாது. வேறு ஏதேனும் கேள். என்ன கேட்டாலும் தருகிறேன். பெரும் செல்வம்... அரண்மனை... எல்லாம் தருகிறேன்" என்கிறான்.

அதைக்கேட்ட நசிகேதஸ், நான் உன்னைப் பார்த்த உடனேயே, நீ கூறிய அனைத்தும் எனக்குக் கிடைத்துவிட்டது. எம தர்மனையே பார்த்து விட்டேன். இனி, எனக்கு வராத செல்வம் உண்டா?! எனக்கு வேண்டியது நான் கேட்ட வரமான மரணத்துக்குப் பிறகு மனிதனுக்கு என்ன நடக்கிறது? என்பதுதான்" என்கிறான்.

வேறு வழியே இல்லாமல், தேவர்களே அறிந்திராத அந்த ரகசியத்தை நசிகேதஸுக்கு உபதேசம் செது வைக்கிறான் எமதர்மன்.(கடோபநிஷத் புராணத்திலிருந்து...)- ஆதினமிளகி, வீரசிகாமணி
Post Comment

Post Comment