மனிதநேயமும் மகிழ்ச்சியும்


டி.வி.ராதாகிருஷ்ணன்உலகின் மகிழ்ச்சி யான நாடுகள் பட்டியல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையில் 2021க்கான மகிழ்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை யின் சிறப்பு அம்சம்: தங்கள் குடிமக்களை 149 நாடுகள் எவ்வளவு மகிழ்ச்சியாக வைத்துள்ளன என்பதை ஐ.நா. நிலையான வளர்ச்சி தீர்வுகள் நெட்வொர்க் பட்டியலிட்டு இருந்தது.

உலக வாக்கெடுப்பு கேள்விகளின் அடிப்படையில் மகிழ்ச்சி ஆவு உலக நாடுகளை வரிசைப்படுத்து கிறது. அதன் முடிவுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூகப் பாது காப்பு உள்ளிட்ட பல காரணிகளைப் பொருத்திப் பார்த்துப் பட்டியலிடப் பட்டுள்ளது. அதன் வகையில் உலகின் மகிழ்ச்சியான நாடாக முதல் இடத்தை ஐரோப்பிய நாடான பின்லாந்து பெற்றுள்ளது.

இதில் இந்தியாவிற்கான இடம் 139 ஆகும்.இச்செதியைப் படித்ததும் மகிழ்ச்சிக்கும் இச்செதிக்கும் மனித நேயத்துடன் ஒரு தொடர்பு இருக்கக் கூடும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட அதில் உருவானதே இக் கட்டுரை.

மனித நேயம் என்றால் என்ன?

பிறருக்குத் துன்பம் அளிக்காமல் இருத்தல். மற்றவர்களை மதித்து நடத்துதல். ஏழைகளின் துன்பத்தைப் போக்குதல். எந்த மனிதனிடம் மனிதநேயம் அதிகம் உள்ளதோ அவன் உயர்ந்து நிற்கிறான். அவனால் அவன் நாடும் உயர்ந்து நிற்கிறது.

மனிதநேயம் அதிகம் உள்ள நாடுகளின் செல்வம், ஆரோக்கியம், கல்வி, சுகாதார அமைப்பு, வசதி வாப்புகள் எல்லாம் மேலோங்கி நிற்கும்.மனிதநேயம் குறைவாக உள்ள நாடுகளில் வறுமை, நோ, பஞ்சம், பட்டினி எல்லாம் அதிகமாக இருப்பதாக ஓர் ஆவு அறிக்கை சொல்கிறது.

மக்களின் சேவையே மகேசன் சேவை என்றும், கோயிலின் விக்கிரகத்தில் கடவுளைப் பார்க்கின்றவன் பக்தியின் அடிமட்டத்தில் நிற்கின்றான் என்றும், ஆனால் ஒரு விதவையின் கண்ணீரைத் துடைப்பதிலே பசியுடன் இருக்கும் ஒருவனுக்கு உணவளித்து அவன் பசியினைப் போக்குவதிலே மற்றவர் களின் துன்பத்தைப் போக்குவதிலே ஈடுபடு பவன் கடவுளைப் பார்க்கின்றான், மேலே உயர்ந்து நிற்கின்றான் என சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்.

உலக நாடுகள் கொரோனா தடுப்பு முயற்சி யில் உள்ளபோது பல நாடுகளுக்கு மனிதநேய அடிப்படையில் இந்தியா தடுப்பு மருந்தினை இலவசமாகவே தந்து உதவி வருவதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும், எந்த நபரிடம் இருந்தாலும், விரோதி யிடம் இருந்தாலும் சரி, அதை நாம் பாராட்ட வேண்டும். அவர் களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நம் வாழ்க்கையில் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

கடவுள் எந்த மனிதனுக்கும், ஏன் எந்த விலங்குகளுக்கும்கூட தவறான தண்டனையோ, அதிக மான தண்டனையோ, குறைவான தண்டனையோ தரமாட்டார்.

ஒருவன் ஏழையாகவோ, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவ னாகவோ, அல்லது பணக்கார னாகவோ, நோயாளியாகவோ, ஆரோக்கியம் உடையவனாகவோ, படித்தவனாகவோ, படிக்காதவ னாகவோ எந்நிலையில் இருந்தாலும் கடவுளால் கணக்கிட்டுக் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆகவே, பணக்காரனைப் பார்த்து ஏழையோ, ஆரோக்கியமானவனைப் பார்த்து நோயாளியோ, அழகானவனைப் பார்த்து அழகில் குறைந்தவனோ, வேறு நல்ல அம்சங்களைப் பார்த்து அவை இல்லாதவனோ பொறாமைப்படுவதில் என்ன லாபம் இருக்கிறது?

புண்ணியம் செய்திருந்தால் அவனுக்குக் கடவுள் நல்லவற்றைக் கொடுக்கின்றார்.ஆகவே, நம் வாழ்நாளிலும் நல்ல காரியங் களைச் செது புண்ணியம் தேடி, அதைப் போன்றோ, அதற்கும் மேலாகவோ நல்ல நிலைக்கு வருவேன் என உறுதிகொள்ள வேண்டும்.

நல்ல குடிமகனாக இருந்தோமாயின் நாம் உயர்வதுடன் நாடும் உயரும்.இனிவரும் காலங்களில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் நம் நாடும் முன்னணி யில் நிற்கும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :