பங்குனி பௌர்ணமியும் சூயஸ் கால்வாயில் ‘டிராபிக் ஜாமும்’


மீரான்உலகின் பரபரப்பான கப்பல் போக்கு வரத்துக் கடல் பரப்பான சூயஸ் கால்வாயில் அண்மையில் டிராபிக் ஜாமாகியிருந்தது. 400 மீட்டர் நீளமும், 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களில் ஒன்றான Ever Given இங்கு டிராபிக் ஜாமுக்குக் காரணமாகியிருந்தது. இரு வாரங்களுக்கு வேகமாக மணல் புயலினால் கப்பல் திரும்பி சூயஸ் கால்வாயின் இரு பக்கங்களிலும் கப்பலின் முனைகள் மோதிக்கொண்டு நடுக் கால்வாயில் வழியை மறித்துக்கொண்டு தரையைத் தட்டியது. கப்பலை நகர்த்த அதை இயக்கும் குழுவினால் முடியவில்லை.

இதனால் உலகப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்பட வாப்பு இருக்கிறது என்கிறார்கள். சீனாவிலிருந்து நெதர்லாந்தின் துறைமுக நகரமான ரோட்டர்டாமிற்கு இந்தக் கப்பல் சென்றபோதுதான் இந்த விபத்து நடந்துள்ளது. இந்தக் கப்பலில் உள்ள ஊழியர்கள் 25 பேர் இந்தியர்கள்.

ஒரு கால்வா அடைபட்டுப் போனால் என்ன ஆகிவிடப் போகிறது என்று நினைத்து விடக் கூடாது. அடைபட்டிருந்தது சூயஸ் கால்வா. பொருளாதாரத்தையும், புவியிய லையும் இணைக்கும் இந்தக் கால்வா மனிதர்களால் உருவாக்கப்பட்டவற்றில் மிகவும் அற்புதமான கட்டுமானம்.

ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியை யும் ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர்வழித்தடமாக சூயஸ் கால்வா உள்ளது. செயற்கையாக உருவாக் கப்பட்ட 193 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தக் கால்வா உலகின் முக்கிய நீர்வழிகளில் ஒன்றாகும். இது 1869ம் ஆண்டு தொடங்கப் பட்டது. ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிச் செல்ல வேண்டியதைத் தவிர்த்து பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பயண தூரத்தைக் குறைக்கும் சர்வதேச வர்த்தகத்தில் அதிலும் குறிப்பாக எண்ணெ வர்த்தகத்தில் இந்த சூயஸ் கால்வாயின் பங்கு மிக முக்கியமானது.

இந்த நீர் வழி எகிப்துக்குச் சொந்தமானது. 1869ஆம் ஆண்டில் இது திறக்கப்பட்டது. உலகளாவிய வர்த்தகத்தை எளிமையாக்கியது. இது எண்ணெ சப்ளை உட்பட சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியமான வழித்தடமாக மாறியது. சூயஸ் கால்வா முக்கியம் இந்த வழித்தடத்தின் முக்கியத்தை உணர்ந்து, சூயஸ் கால்வாயை எகிப்து தேசியமயமாக் கியது. எனவே, 1956ம் ஆண்டில், இஸ்ரேல், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை எகிப்து மீது படையெடுத்தன. அதைக் கைப்பற்ற முயன்றன. ஆனால், பின்னர் அவர்களின் படைகள் பின்வாங்கின.

2015 ஆம் ஆண்டில், எகிப்து நாடு இந்தக் கால்வாயில் பெரும் புனரமைப்பைத் தொடங் கியது. சில மதிப்பீடுகளின்படி, உலகளாவிய வர்த்தகத்தில் 12% இப்போது சூயஸ் கால்வா வழியாகத்தான் நடக்கிறது. லாயிட்ஸ் லிஸ்ட் என்ற கப்பல் துறை சார்ந்த பத்திரிகை, சூயஸ் கால்வா மூடப்பட்டால், ஒவ்வொரு நாளும் சுமார் 9 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட் கள் வணிகம் பாதிக்கப்படுகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகெங்கும் சரக்குக் கப்பல்களின் அகலம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொண்டிருந்தது இந்த சூயஸ் கால்வாயின் அகலம்தான். அந்தக் கால்வாயில் நுழைய முடியாவிட்டால் சர்வதே நீர் வழியில் கப்பல் ஓட்ட முடியாது. 2015ம் ஆண்டு கால்வாயை அகலப்படுத்தி யதும் கப்பல்களும் அதற்கேற்ப பெரிதாகி விட்டன. இந்தக் கப்பல் ரொம்பவே நீள மானது. ஒரு ஈபிள் கோபுரத்தைவிட பெரியது. கப்பல் கால்வாயைப் பயன்படுத்த அனுமதிக் கப்பட்ட அதிகபட்ச நீளத்தில்தான் இந்தக் கப்பல் உள்ளது. எனவே சிறிய மாற்றமும் பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும்.இதன் மாலுமிகள் அனைவரும் இந்தியர் கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளார்கள்.

கப்பல் எவ்வாறு சிக்கியது?

சரக்குக் கப்பல்கள் விபத்துகளைத் தவிர்ப் பதற்காக சூயஸ் கால்வாயின் குறுகிய பாதையை ஒவ்வொன்றாகக் கடக்கின்றன. அதாவது சின்ன பாலமாக இருந்தால் நாம் வாகனத்தை எப்படி ஒவ்வொன்றாக ஓட்டிச் சென்று கடப்போமோ அதுபோல. ஆனால், விபத்து நடந்த அன்று, இந்தப் பகுதியில் கடும் மணல் புயல் வீசியுள்ளது. இதனால் கப்பல் மாலுமியால் ரூட்டை பார்க்கவே முடியாத அளவுக்கு மோசமான சூழல் நிலவி யுள்ளது. கடும் காற்றால் கப்பலைக் காப்பாற் றத்தான் மாலுமி முயன்றாரே தவிர ரூட்டை சரியாகக் கணிக்கவில்லை. இதனால் கப்பல் மணல் பரப்பில் சிக்கியுள்ளது.

கப்பலை நகர்த்த என்ன முயற்சி செயப்படுகிறது?

பல நாட்களாக, மீட்புப் படகுகள் கப்பலின் கனமான பகுதியை மணலில் இருந்து வெளியே தோண்டி இழுக்க முயற்சி செ கின்றன. ஆனால், இது நீண்ட நாட்கள் தேவைப்படும் நடவடிக்கையாகும். எனவே நெதர்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த நிபுணர் குழுக்கள் உதவி செய்ய விரைந்துள்ளன. கப்பலின் எடையைக் குறைப்பது முதல் பணியாக இருக்கும். அதன் எரிபொரு ளைக் குறைக்க வேண்டும். அல்லது அதன் சரக்குகளை அகற்றவேண்டி வரும். இது இன்னும் அதிக நேரம் எடுக்கும். கப்பல் முழுமையாக அகற்றப்படுவதற்குச் சில வாரங்கள் ஆகலாம் என்று அவர் கூறுகிறார்.

இந்தச் சம்பவம் சர்வதேச வர்த்தகத்தை எவ்வாறு பாதிக்கிறது?

எவர்கிவன் கப்பல் சிக்கியிருப்பதால் அதன் பின்னால் 237 கப்பல்கள் வரிசை கட்டி நிற்கின்றன. காத்துக்கொண்டிருக்கும் கப்பல் களில் உயிரினங்கள் தொடங்கி இயற்கை எரிவாயு வரை என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். சூயஸ் கால்வாயில் இன்னும் பல நாட்களுக்குக் கப்பல் போக்குவரத்து நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.எனவே நிதி சார்ந்த விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. உலகளாவிய வர்த்தகத்தில் இடையூறுகள் ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக கச்சா எண்ணெ விலை கடந்த வாரம் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிவன் கப்பலை மீட்கும் பணி தீவிரப்படுத் தப்பட்டது. ஒருவழியாக சுமார் 18 மீட்டர் ஆழத்திற்குத் தோண்டப்பட்டு 27,000 கியூபிக் மீட்டர் அளவிலான மணல் வெளியேற்றப்பட்டு சகதியில் சிக்கிய கப்பலை மிதக்கும் நிலைக்குக் கொண்டு வந்தது மீட்புக் குழு. இழுவை படகுகள் மூலம் தொடர் முயற்சி எடுக்கப்பட்டுவந்த நிலையில் மீட்பதற்குச் சில வாரங்கள் ஆகும் எனக் கூறப் பட்டது.

இந்நிலையில் நாம் ஹோலியைக் கொண் டாடும் முக்கிய நாளான பங்குனி மாதப் பௌர்ணமி அன்று வழக்கத்துக்கு மாறாக, கடல் அலைகள் உயர்ந்து கால்வக்குள் பாந்தது. இது வழக்கமான செயல் என்றாலும் அன்று உயர்ந்த நீரின் வேகமும் உயரமும் கப்பல் நகர உதவியாக இருந்தது. வேகமாகத் தண்ணீரின் மட்டம் உயர்ந்த தால் கப்பலை மிதக்கும் நிலைக்கு விரைவில் கொண்டுவர முடிந்தது என்று கூறினார்கள். இதையடுத்து தொடர் முயற்சியின் மூலம் மீட்புப் படகுகள் மூலமாக எவர் கிவன் கப்பலை மறுநாள் மதியம் 3.00 மணியளவில் முற்றிலுமாக மீட்டு விட்டனர்.

அசையாமல் நிற்கும் ஒரு கப்பலால் பெரும் கவலையிலிருந்த வணிக உலகம் நிம்மதிப் பெருமூச்சுடன் இயற்கைக்கு நன்றி சொல்லுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :