உங்கள் குரல்


கல்கியின் ஆன்மிகப் பகுத்தறிவு
-கல்கி எப்படி நடுநிலை தவறாதோ அதேபோல யார் முதல்வர் என்ற கேள்வியை வாசகர் களிடமே கேட்டு வாசகர்களின் நடுநிலைக்கு மையப் புள்ளி வைத்து ‘பலே பலே சூப்பர் கல்கி சூப்பர்’ பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்... சரியான கில்லாடி சார் நீங்க.- ஆர்.நாகராஜன் செம்பனார்கோவில்

தமிழக வாக்காளர்கள் மீது கல்கிக்கு அப்படியென்ன (அவ)நம்பிக்கை?பின் என்ன? இரண்டு திராவிடக் கட்சிகளின் தலைமையில் இயங்கும் அணிகளின் தலைவர்களுக்குள் ஒருவர் தான் முதல்வராக வரப் போகிறார். யார் அவர்? என்று வாசகர்களிடம் கருத்துக் கணிப்பு கேட்கிறீர்களே! ஏன் ‘ஆம் ஆத்மி’ தில்லியில் வென்றது போல் கமலின் ‘மக்கள் நீதி மயம்’ மலர வாப்பில்லையா? - திருவரங்க வெங்கடேசன், பெங்களூரு

பலம் வாந்த ராணுவம் நம்மிடம் இருந்த போதிலும் அண்டை நாடுகளு டனான எல்லைப் பிரச்னைகளைத் தீர்க்க முடியவில்லை என்னும் தராசின் வருத்தம் நியாயமானதே!- சீனி ராமசாமி, கோவை

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என் பதை முந்நூறு சதவிகி தம் நிரூபித்துக்காட் டும் கம்பீரத்தில், செம்பருத்திப் பூவின் முகநூல் தரிசனத்தை, கடைசிப் பக்கக் காவியமாக, சுவாரஸ் யம் ததும்ப விரித்து, வெற்றிக்கொடி நாட்டிவிட்டார் சுஜாதா தேசிகன். கவலையே வேண் டாம்.- நெல்லை குரலோன்

மூளை, இதயம் பற்றி பிரம்ம பூரண விசாரத்தில், ரத்தினச்சுருக்கமாக எதார்த்த லயத்தில் விளக்கி, அலைபாயும் அறியா நெஞ் சில் ஞானஒளியேற்றி, திடமும், தெளிவும், திசை யும் அளித்து, பரவசப் பேரானந்தத்தில் திளைக்க வைத்த அருட்கடலாம் காஞ்சி மாமுனிவரின் பாதம் பணிந்து, உருகும் பாக்கியம் காலம் முழுவதும் கிட்டினால் போதும். வேறொன்றும் வேண்டாம் இறைவா!- இ.சங்கரன், காஞ்சிபுரம்

மதுக்கடைகளை மூடு வோம் என்று வைகோ தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது பற்றிய கேள்விக்கு, ‘அவர் முதல்வராகும்போது நிச்சயம் செவார். நம்புங்கள்’ என்று பாஸிடிவ் நயத்தோடு தராசார் கூறிய பதிலை யும், தன் கம்பீரமான புகைப்பட போஸையும் பார்த்து, வைகோ (கல்கி யின் தீவிர வாசகர் ஆயிற்றே) நிச்சயம் சிரித்து வெடித்திருப்பார். - மஹாலட்சுமி, சிவகாசி

பாரம்பரியம் மிக்க பல கோயில்களில் குறைந்த அளவில் கூட பூஜைகள் நடத்த வசதி கள் இன்றித் தவிக்கும் நிலை உள்ளபோது, தற்போது பிரம்மாண்ட மாகத் தெவ சந்நிதிகள் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று தராசார் கூறியுள்ளது, ஓர் ஆன்மிகப் பகுத்தறிவு.- கண்ணன், நெல்லை

‘அசுரன்’ படத்திற்கு தேசிய விருது கிடைத் திருப்பது, தமிழ் சினிமா உலகத்திற்கும், கலைஞர் களுக்கும் கிடைத்திருக் கும் அங்கீகாரம். தான் சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்ட நிலை யிலும் தனது வருத்தங் களை வெளிப்படுத்தா மல், தன்னை நம்பி பணம் முதலீடு செத தயாரிப் பாளர் அதைத் திரும்ப எடுக்க வேண்டும் என்ற மனநிலையுடன் உழைப்பை வெளிப்படுத் திய வெற்றிமாறன், கிரேட். - நா. பாலகிருஷ்ணன், சிதம்பரம்

கொரோனா இரண்டாவது அலை குறித்து எச்சரிக்கையும், கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகள் போடவேண்டிய அவசியம், தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பு பின்பற்ற வேண்டியவை குறித்து தெளிவாகத் தலையங்கத்தில் விளக்கி இருந்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 6% தடுப்பூசி மருந்துகள் வீணாகிறது என்பது கவலையளிக்கிறது. ஜனநாயகத்தின் தேர்தல் திருவிழா நடப்பதால், அரசியல் தலைவர்களின் பேச்சைக் கேட்க மக்கள், அவர்கள் பாஷையில் ‘அலைகடலென’த் திரளும்போது, தொற்று குறித்து அவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டியது தலைவர்கள் கடமை அல்லவா? ‘வாக்குகளைவிட வாக்களிப்பவர்களின் உயிர் முக்கியம்’ என்று ‘கல்கி’ தலையங்கத் தில் அறிவுறுத்தியுள்ளது உயிர்களைப் பாதுகாப்பதற்கான அறைகூவல்.- வாசக நண்பன், நெல்லை

நகைச்சுவைகளைத் தெறிக்கவிட்ட ‘கொடுத் ததெல்லாம் கொடுத் தான்’ சிறுகதை விறு விறுப்பாக இருந்தது. ஆம்புலன்ஸில் உடலில் பேண்டேஜ் போட்டுக் கொண்டு பணத்தை ஒளித்துக்கொண்டு வந்த வரை நினைத்துச் சிரித் துக்கொண்டே இருக்கிறேன். - ஜெயபாரதி, மதுரை

மக்கள் நீதி மயம் 120 இடங்களில் ஜெயிக்குமா? நல்லவேளை, தேர்தல் திருவிழாவை, சிரிப்பு திருவிழாவாக்குவதில் தனது பங்களிப்பை பொன்ராஜ் சிறப்பாக செய்துள்ளார். - சிவ சண்முகம், தாராபுரம்

Post Comment

Post Comment