கடந்த காலத்தேர்தல் விநோதங்கள்


வா.பாலகிருஷ்ணன்இன்று நடக்கும் தேர்தல் பிரசாரங்களில் என்னென்னவோ விநோதங்கள் நடைபெறு கின்றன. வேட்பாளர்கள் துணி துவைக்கிறார்கள், இஸ்திரி போடுகிறார்கள். டீ போடுகிறார்கள், பரோட்டா சுடுகிறார்கள். பாடல்கள் துண்ட றிக்கைகள், மீம்ஸ்கள் என பிரசார உத்தி ளர்ந்திருக்கிறது. இதே மாதிரி கடந்த காலத் தேர்தல்களில் என்னென்ன விநோதங்கள் நடந்தன என்று பார்ப்போம் வாருங்கள்.

மாகாணப் பிரதமர்

1920 டிசம்பர் மாதம் சென்னை மாகாணத் துக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதுதான் தமிழகத்தில் நடந்த முதல் சட்ட மன்றத் தேர்தல். 1921ல் கடலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பராயலு முதலமைச்சராகப் பதியேற்றார். அதாவது பட்டியலில் முதலாவதாக இருப்பவர் முதலமைச்சர். அப்போது பிரீமியர் அதாவது மாகாணப் பிரதமர் என்று அந்தப் பதவிக்குப் பெயர். 1920லிருந்து 1936 வரைக்கும் சென்னை மாகாணத்தில் அரசியல் செல்வாக்குப் பெற்றி ருந்தது நீதிக் கட்சி. சுப்பராயன் குமார மங்கலம் நீங்கலாக மற்றவர்கள் நீதிக்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் முதலமைச்சர்களாக இருந்தார்கள்.

தேர்தல் நடப்பதே தெரியாது

1920 முதல் 1933 வரை தேர்தல்கள் இன்று நடப்பதைப்போல பரபரப்பாக நடந்ததில்லை. பெருவாரியான மக்களுக்கே தெரியாது. பொதுமக்களுக்கு அதில் பெரிய அளவில் பகேற்பு இல்லை. பொதுஜனங்கள் அந்தத் தேர்தலில் வாக்காளர்களாக இடபெறவில்லை. பட்டா உள்ளவர்களும், மிட்டா மிராசுதாரர் களும் பணக்காரர்களும் நிலப் பிரபுக்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றார்கள். அவர்கள் மட்டுமே வாக்களிக்கக்கூடிய தகுதி பெற்றிருந்தார்கள்.1937ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில்தான் வெகுஜனப் பங்கேற்பு அதிகமாக இருந்தது. எனவே அதைத்தான் சென்னை மாகாணத்தில் நடந்த முதல் பொதுத் தேர்தலாகக் கருத முடியும். இந்தத் தேர்தலில்தான் கடந்த 16 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நீதிக் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நீதிக் கட்சியிலிருந்து பிரிந்துபோன பித்தர்புரம் ஜமீன்தார் தொடங்கிய மக்கள் கட்சி என்ற கட்சிக்கும் முஸ்லிம் லீக் கட்சிக்கும் இடையில் நடந்த தேர்தலாக நடைபெற்றது.

பொரும்பான்மை இருந்தாலும் ஆட்சி அமைக்கவில்லை

அப்போது சட்டமன்றத்தினுடைய மொத்த எண்ணிக்கை 215. சட்டமன்றத்தில் போட்டி யிட்ட காங்கிரஸ் 159 இடங்களில் வென்றது. பெரும்பான்மை பெற்றிருந்தாலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. காரணம் ஆளுநர் தன் சிறப்பு அதிகாரம் வீட்டோவைப் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதியளித்தால் ஆட்சி அமைப்போம் என்றார்கள். சென்னை ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் புறக்கணித்தது காங்கிரஸ். இடைக் கால முதலமைச்சராக கே.வி.ரெட்டி நாயுடு இருந்தார். நான்கு மாதங்கள் பதவி வகித்தார். அடுத்து ராஜாஜி மந்திரி சபை 1937, ஜூலை மாதம் ஆட்சியில் அமர்ந்தது. பிறகு 1939ல் ராஜாஜி மந்திரி சபை ராஜினாமா செதது.

முதன்முதலில் சின்னங்கள்

கடந்த தேர்தல்களில் கட்சி வேட்பாளர் களுக்கென்று எந்தச் சின்னமும் ஒதுக்கப்பட வில்லை. 1937ல் தான் முதன்முதலாக ஒவ்வொரு கட்சியையும் அடையாளப்படுத்துவதற்காக பச்சை, நீலம், மஞ்சள், சிவப்பு என நிறப் பெட்டிகளை அறிமுகப்படுத்தினார்கள். காங்கிரஸுக்கு மஞ்சள் பெட்டி, நீதிக்கட்சிக்கு நீலப் பெட்டி, மக்கள் கட்சிக்கு வெள்ளைப் பெட்டி. முஸ்லிம் லீக் பச்சைப் பெட்டி. இதன்படி தேர்தல் நடந்தது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றது.

கோயிலில் தொடங்கிய பிரசாரம்

காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தை சென்னையில் தொடங்கியது. அதாவது வடசென் னையில் ஏழு கிணறு ஆஞ்சநேயர் கோயில் சந்நிதியில்தான் சுப்பாராவ் தலைமையில் மஞ்சள் நிறப் பெட்டிக்கு வாக்களியுங்கள் என்று பிரசா ரத்தை சென்டிமென்டாகத் தொடங்கினார்கள்.நீதிக்கட்சி கூட்டம் நடந்தால் அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் நின்று இடைஞ்சல் செவார்கள். காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடந்தால் நீதிக்கட்சித் தொண்டர்கள் நின்று இடைஞ்சல் செவார்கள். அதாவது கல்லெறிதல், சோடா பாட்டில் அடிப்பது, எதிர் கோஷம் போடுவது நடக்கும். அப்போது கல்லுக்கடை, சாராயக் கடைகள் திறந்து இருந்தது. தேர்தல் காலங்களில் இடைஞ்சல் காரர்களுக்கு கள்ளுக்கடை, சாராயக் கடைகள் பிரதானம் வகித்தது.

பிரசாரத்தில் விநோதம்

1937ல் இன்னொரு விஷயமும் நடந்தது. இப்போதெல்லாம் ஒரு கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் இறந்துவிட்டால் அந்தத் தொகுதி தேர்தலை ஒத்திவைக்கப்படு கிறது. ஆனால் 1937ல் நடந்த தேர்தலில் திருவல்லிக்கேணியில் காங்கிரஸ் சார்பில் என்.எஸ்.வரதாச்சாரி போட்டியிட்டார். நீதிக் கட்சியின் வேட்பாளர் சி.நடேசன் முதலியார் போட்டியிட்டார். ஆனால் தேர்தல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 18.2.1937 அன்று நடேசன் முதலியார் உடல்நலமில்லாமல் மரணமடைந்தார். 17ஆம் தேதி வரதாச்சாரி பிரசாரத்தை முடித்துக்கொண்டு திரும்பும்போது துளசிங்க பெருமாள் கோயில் பக்கத்தில் காங்கிரஸுக்கு விரோதமானவர்களால் அடித்துக் காயப்பட்டார் வரதாச்சாரி. படுகாயம் அடைந்த அவர் சிக்கிச்சை பெற்று வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக நடேசன் முதலியார் இறந்தார். இருந்தாலும் தேர்தல் நடைபெற்று வரதாச்சாரியார் வெற்றி பெற்றார். 1937 தேர்தலில் இன்னொரு விநோதமும் நடந்தது. ஒன்றிணைந்த தமிழக மாகாணமாக இருந்த ஆந்திரத்தில் பணக்கார வேட்பாளர்கள் தேர்தல் காலத்தில் விமானங்களை வாடகைக்கு எடுத்து அதில் சென்று துண்டறிக்கைகளை மேலிருந்து தொகுதி மக்களிடம் போட்டார்கள். மக்கள் பணமாக இருக்குமோ என்று பார்த்தால் அதில் இந்தக் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றிருந்தது. அன்றைய தலைமைத் தேர்தல் கமிஷனராக இருந்த போக் வெள்ளை அரசுக்கு எழுதி அது தடைசெயப்பட்டது.

யானை வந்தது முன்னே...

ஆந்திர மாநிலம் பொப்பிலியில் கோயில் ஊர்வலம் ஒன்று நடந்தது. அந்தத் தெருவிலேயே வி.வி.கிரி வேட்பாளர் சார்பாக காங்கிரஸ் பிரசாரம் செதுகொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் கவிக்குயில் சரோஜினி நாயுடு பேசிக் கொண்டி ருந்தார். அதே தெருவில் நீதிக்கட்சி சார்பாகப் போட்டியிட்ட பொப்பிலி ராஜா கிருஷ்ணாராவுக்கும் ஆதரவாகப் பிரசாரம் நடந்துகொண்டிருந்தது. அங்கிருந்த அந்தத் தெருவில் உள்ள கோயிலில் விழா நடந்துகொண்டிருந்தது. அங்கிருந்த யானை ஒன்று வேகமாக காங்கிரஸ் தொண்டர்களை நோக்கி வந்தது. நீதிக்கட்சிக்காரர்கள் தான் அந்த யானையை அனுப்பினார் என்று காங்கிரஸ் தொண்டர்கள் பயந்து ஓடினார்கள். மறுநாள் பத்திரிகைகளில் அறிக்கை எல்லாம் விடப்பட்டது. பொப்பிலி அரசர் கிருஷ்ணாராவ் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். வி.வி.கிரி வெற்றி பெற்றார். ராஜாஜி மந்திரி சபையில் மந்திரியானார் வி.வி.கிரி. 1957, 62 தேர்தல்களில் பாம்பு, மாடுகளை விட்டு கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்துவது, வாக்காளர் களை வழிமறித்து, இந்தக் கட்சிக்குத்தான் வோட்டு போடணும்னு வலியுறுத்தியதும் உண்டு. அப்போது ஒரு வேட்பாளர் 250 ரூபா டெபாசிட் தொகை கட்டவேண்டியிருந்தது. அரசாங்க பாண்டாகவோ போலிங் ஆபிசரிடம் பணமாகவோ கட்டணும்.

மாட்டு வண்டியில் வோட்டு வேட்டை

இப்போது இருப்பதுபோல் அப்போது அருகருகே வாக்குச் சாவடிகள் இல்லை. சுமார் 8 லிருந்து 10 மைல் தூரத்தில்தான் இருந்தது. ஆயிரம் வாக்குகளுக்கு ஒரு வாக்குச் சாவடி வீதம் 10 இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் மாட்டுவண்டிகளில் வாக்காளர்களை அழைத்துச் சென்று வாக்கு செலுத்தினார்கள் கட்சிக்காரர்கள். 70 லிருந்து 80 சதவிகிதம் வாக்குகள் பதிவானதாகத் தகவல்கள் சொல்கின்றன.

திடுக்கிட வைத்த திண்டிவனம்

1952ல்தான் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் முதல் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் எல்லாரும் வியந்து பேசப்பட்ட ஒன்று திண்டிவனம் தொகுதித் தேர்தல். எஸ்.எஸ். இராமசாமி படையாட்சி தொடங்கிய தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சார்பில் திருக்குறள் வி.முனுசாமி போட்டியிட்டார். இது இரட்டை உறுப்பினர் தொகுதி. முனுசாமியை எதிர்த்துப் போட்டியிட்டவர் காங்கிரஸ் சார்பில் தினமணி பத்திரிகையின் அதிபர் கோயங்கா. இவர் விமானத்தை வாடகைக்கு எடுத்து தனது சின்னமான இரட்டைக் காளைகள் பூட்டி சின்னத்தை அச்சடித்து விமானத்திலிருந்து தொகுதி மக்களுக்குக் கீழே போட்டு வாக்குக் கேட்டார். மக்கள் பணம்தான் போடுகிறார்கள் என்று அந்தத் துண்டறிக்கைகளை எடுத்துப் பார்த்தார்கள். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திருக்குறள் வி.முனுசாமி மாட்டு வண்டிகளில் போ திருக்குறள் பற்றிய கதைகளைச் சொல்லி சேவல் சின்னத்தில் வாக்குக் கேட்டார். தமிழ்நாட்டி லேயே ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முனுசாமி வெற்றி பெற்றார்.

1952 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கோஷம் என்னவென்றால் 1937 தேர்தலில் மஞ்சள் பெட்டிக்கு வாக்கு போட்டீங்க மக்காசோளம் கொடுத்தாங்க. (அப்போது அரிசிப் பஞ்சம்) இப்ப (1952) வாக்கு போட்டீங்கன்னா மண்ணாங்கட்டி கொடுப்பாங்க’ என்று பிரசாரம் செதார்கள்.

1952ல் உணவுத் தட்டுப்பாடு அதிகமிருந்தது. ரேஷன் அரிசி 12 அவுன்ஸிலிருந்து 8 அவுன்ஸாகக் குறைக்கப்பட்டது. சென்னை ஹோட்டல்களில் தோசை இட்லி கிடைக்காது என்று போர்டு வைக்கின்ற அளவில் இருந்தது. ரவா உப்புமா தரப்பட்டது.

1959ல் காமராஜ் முதலமைச்சராக இருந்த போது ஊட்டியில் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் 7-8 நாட்களுக்கு ஒரு கூட்டத்தொடர் அங்குள்ள ஜோத்பூர் மன்னர்களுக்குச் சொந்தமான அரண்மூர் அரண்மனையில் நடைபெற்றது. தமிழகச் சட்ட மன்றம் இரண்டு இடங்களில் நடந்தது அப்போது தான்.

காகிதப்பூ மணக்காது

1962ல் காங்கிரஸுக்கு எதிராக திராவிட முன்னேற்றக்கழகம் போட்ட கோஷம். ‘கும்பி எரியுது, குடல் கருகுது, குளுகுளு ஊட்டி ஒரு கேடா? காங்கிரஸே குளுகுளு ஊட்டி ஒரு கேடா?’, ‘காங்கிரஸ் டாட்டா -பிர்லா கூட்டாளி பாட்டாளிக்கு பகையாளி’ என்று கோஷம் எழுப்பி பிரசாரம் செதது தி.மு.க. 1971ல் திமுக எழுப்பிய கோஷம். காகிதப்பூ மணக்காது. காங்கிரஸ் சோஷலிஸம் இனிக்காது.

1952ல் கம்யூனிஸ்ட்கள் இடது, வலது என்று பிரியாமல் ஒன்றாக இருந்தது. அப்போது கம்யூனிஸ்ட்கள் மீது ஏராளமான சதி வழக்குகள் போடப்பட்டிருந்தன. கட்சியின் வேட்பாளர்களான பி.ராமமூர்த்தி, பி.சீனிவாசராவ், மணலி கந்தசாமி, பாலதண்டாயுதம் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். அந்த நேரத்தில் தலைமறைவாகப் பலர் இருந்து தேர்தலில் நின்றனர். குறிப்பாக தோழர் ஜீவானந்தம் வண்ணாரப்பேட்டை தொகுதி யிலிருந்தும், தோழர் பி.ராமமூர்த்தி மதுரைத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறு அவுன்ஸ் அரிசி

1952ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து கம்யூனிஸ்டு தோழர்கள் எழுப்பிய கோஷம் ஆறு அவுன்ஸ் ஆட்சி ஒழிக.

1957ல் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த பிரசா ரத்தில் வில்லுப்பாட்டு நடத்தப்பட்டது. அதில் இசைஞானி இளையராஜா அண்ணன் பாவலர் வரதராஜன் எழுதிய ‘ஒத்தரூபா தாரேன்’ பாடலைப் பாடி காங்கிரஸுக்கு எதிராகப் பிரசாரம் செதார்கள்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :