அவர்கள் கூட்டணியிலேயே எடப்பாடியை முதல்வராக ஏற்கவில்லை!


தேர்தலை நோக்கி...
பொன்.மூர்த்தி - ஸ்ரீஹரிதமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தல் அரசியல் கட்சிகளிடையே சூடுபிடித்து விட்டது. பரபரப்பாகத் தேர்தல் வியூகங்களை அமைத்து தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அணிகளைச் சார்ந்தவர்கள் இங்கே வாரந்தோறும் தங்கள் பார்வைகளை எடுத்து வைக்கிறார்கள். இந்த வாரம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி.

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாப்பு எந்த அளவுக்கு உள்ளது?

தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. காரணம், தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் வோட்டு சதவிகிதம் என்பது அ.தி.மு.க.வின் வோட்டு சதவிகிதத்தைவிட அதிகம். இரண்டாவது, தி.மு.க. கூட்டணி ஒரு கொள்கையின் அடிப் படையில் இருக்கிறது. இதை மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். மூன்றாவது கூட்டணிக் கட்சிகள் எல்லாம் நாடாளுமன்றத் தேர்தலின் போதே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள், ‘எங்களது கூட்டணி வெற்றி பெற்றால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முதல்வர்’ என்று. ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் 20 நாட்களுக்கு முன்புகூட பா.ம.க.வும், பா.ஜ.க.வும் எடப்பாடிதான் முதல்வர் என்று சொல்லவில்லை. தில்லி தான் முடிவு செயும் என்று பா.ஜ.க.வும், நாங்கள் யோசித்துச் சொல்வோம் என்று பா.ம.க.வும் கூறியது. எனவே, அவர்களிடம் ஸ்திரமற்றத்தன்மை இருக்கிறது. எங்களிடம் ஸ்திரமான தன்மை இருக்கிறது. மக்கள் இவற்றை எல்லாம் கூர்ந்து பார்ப்பார்கள். அதுமட்டுமல்லாமல், தி.மு.க. தேர்தல் அறிக்கை என்பது வளர்ச்சியை, வேலை வாப்பை மையமாகக் கொண்டது. எல்லா வற்றுக்கும் மேலாகத் தமிழகத்தை யார் ஆள்வது என்பதைப் பற்றிய கேள்வி அதில் இருக்கிறது. தமிழகத்தைத் தமிழ்நாட்டுத் தலைமை ஆள வேண்டுமா? அல்லது தில்லியில் இருந்து கட்டளைகளைப் பெற்று இங்கிருப்பவர்கள் ஆளவேண்டுமா என்பது தான் கேள்வி. இன்றைக்கு அ.தி.மு.க. நிலை எப்படி இருக்கிறது என்று சொன்னால், பிரதமர் மோடி முன்பு முதல்வரும், துணை முதல்வரும் தலைகுனிந்து நிற்கிறார்கள். அதை மக்கள் விரும்ப மாட்டார்கள்."

வருமான வரித் துறையைக் கொண்டு தி.மு.க. கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை பா.ஜ.க. மிரட்ட வாப்புள்ளது என்ற விவாதம் எழுந் துள்ளதே?

பா.ஜ.க. ஒரு ஜனநாயகக் கட்சி அல்ல. அவர்கள் ஒற்றை ஆட்சியிலும், ஒற்றைக் கொள்கையிலும் நம்பிக்கை உடையவர்கள். ஒன்றில் வெற்றி பெறவேண்டும் என்பதற் காக சாம, பேத, தான, தண்டம் என எல்லா வகையிலும் செயல்படுவார்கள். ஒவ்வொரு தனி மனிதனின் சொந்த விஷயத்திலும் அவர்கள் தலையிடுகிறார்கள். தங்களது கட்சியில் இருப்பவர்களையும் ஒரு கண்காணிப்பில் வைத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சியில் உள்ளவர்களையும் துன்பத்துக்கு ஆளாக்க, சிரமங்கள் கொடுக்க அவர்கள் தயாராக இருக் கிறார்கள். ஆனால், இதெல்லாம் வெற்றி பெறாது. உலக, இந்திய வரலாற்றில் எல்லாம் இதுபோன்று ஏராளம் நடந்திருக் கிறது. இவ்வளவு நாள் ரெடுக்கு வராமல் இப்போது ஏன் வருகிறார்கள் என்ற எண்ணம் மக்களுக்கு வரும். எனவே, அது பா.ஜ.க. வைப் பலப்படுத்திடவோ, எங்களை பலவீனப்படுத்திவிடவோ முடியாது."

அ.தி.மு.க. அமைச்சர் வேட்பாளர்கள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதே?

எனது 50 ஆண்டு கால அரசியல் அனுப வத்தில் இவர்களைப் போன்று அத்துமீறியவர் கள் கிடையாது. இயற்கை வளங்களைக் கொள்ளை அடித்தனர். மணல் வியாபாரத்தில் ஒரு வெளிப்படையான கொள்கை என்பதே கிடையாது. வேண்டியவர்களுக்கு மண்ணை அள்ளிக் கொடுக்கிறார்கள். அதில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் கோடி ரூபா விரயமாகிறது. இவ்வளவு பெரிய அரசால் அந்த மணல் விற்பனையை ஒழுங்குபடுத்தி எந்தக் குறைபாடும் இல்லாமல் செய முடியாதா? ஆனால், அவர்களுக்குப் பெரிய வருமானமே அதில்தான் வருகிறது. டெண்டர் விடுகிற விஷயத்தில் ஆன்லைன் டெண்டர் என்று சொல்கிறார்களே தவிர, இறுதியாக அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே அந்த டெண்டர் போகிறது. அதுமாதிரி சந்து பொந்துகளை வைத்திருக்கிறார்கள். இதெல் லாம் மக்களுக்கு நன்றாகத் தெரிகிறது. கிராமச் சாலைகளில் இருந்து ஒன்றிய, மாவட்ட, நகரச் சாலைகள் எல்லாம் பயணம் செய முடியாத அளவுக்குத் தரமில்லாமல் உள்ளன. இவை எல்லாம் இந்த அரசாங்கத்தின் தோல்விகள்."

அதிருப்தியில் இருக்கக்கூடிய மாற்றுக் கட்சி யினரை பா.ஜ.க.வுக்கு இழுத்து சீட் வழங்கி வருவது பற்றி?

பா.ஜ.க. தோல்வியே அதுதான். பா.ஜ.க. வில் இருப்பவர்களுக்கு சீட் கொடுக்க முடிய வில்லை. ஏனென்றால் சீட் பெறும் அளவுக்கு பா.ஜ.க.வில் ஆள் இல்லை. பா.ஜ.க.வின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. எனவே, கட்சி மாறுகிறவர்களை பா.ஜ.க. ஆதரிக்கிறது. இப்படி கட்சி மாறுகிறவர் களைப் பற்றி மக்கள் மனதில் என்ன அபிப் ராயம் இருக்கும். தமிழ்நாட்டில் காமராஜருக் கும், கலைஞருக்கும் உள்ள பெருமை என்ன வென்றால், பிறந்ததில் இருந்து இறப்பு வரை ஒரே கட்சியில் இருந்தார்கள் என்பதுதான். மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்றால், சரியோ, தவறோ யார் ஒரே கட்சியில் இருக் கிறார்களோ அவர்களைத்தான் விரும்பு கிறார்கள். ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறுபவர்களுக்கு பா.ஜ.க. சீட் வழங்குகிறது என்றால் பா.ஜ.க.வில் தகுதியான வேட்பாளர் களே இல்லை என்பது தெரிகிறது. பா.ஜ.க.வின் இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களை முகம்சுளிக்க வைக்கின்றன."

கமல்ஹாசன், டி.டி.வி.தினகரன் ஆகியோரது கூட்டணிக் கட்சிகளால் தி.மு.க. வேட்பாளர்களின் வோட்டுகளைப் பிரிக்க வாப்புள்ளதா?

அப்படி வாப்பு இல்லை. காரணம், தமிழக மக்களுக்கு ஒன்று தெளிவாகத் தெரி யும். தங்களது வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்று கருதுவார்கள். வெற்றி பெற வாப் புள்ள தாங்கள் விரும்புகிற கட்சிக்குத்தான் அவர்கள் வாப்பளிப்பார்களே தவிர, கமல் ஹாசனை அவர்கள் விரும்பினாலும், நேசித் தாலும், ரசித்தாலும் அவர்கள் கொள்கை சரியென்று கருதினாலும், இதை எல்லாம் செயல்படுத்துவதற்கு இந்தத் தேர்தலில் அவருக்கு வாப்பில்லை. கமல்ஹாசன் அணி, வாக்குகளைப் பிரிக்கத்தான் வந்து நிற்கிறது என்பது மக்களுக்குப் புரியும். டி.டி.வி.தினகரன் நிலைமையும் அதுதான். எப்போது சசிகலா அரசியலில் இருந்து விலகு கிறேன் என்று சொன்னாரோ, அதன் பிறகு அவர்களை விரும்புகிறவர்கள் இவர்களை நம்பி என்ன பிரயோஜனம் இருக்கிறது என்றுதான் நினைப்பார்கள். வேண்டியவர்கள் கொஞ்சம் இருப்பார்கள் மற்றவர்கள் அவர் களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்."

Post Comment

Post Comment