வேலை தேடும் பெண்களின் வேடந்தாங்கல்


விஜயா கண்ணன்படித்த, படிக்காத பெண்களுக்கு இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாப்பு பெற்றுத் தந்திருக்கிறார் எலிசபெத். சென்னை விருகம்பாக்கத்தில் ‘யுனிவர்ஸல் எம்ப்ளான்ட்மென்ட் சர்வீஸ்’ என்கிற அமைப்பின் மூலம் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் 18 முதல் 60 வரையான பெண்கள் நிறைய பேர் இவரிடம் வேலை வாப்பைக் கேட்டு வருகிறார்கள். இப்படி இருபது ஆண்டுகளாக அவர்களுக்குத் தங்கும் இடம், உணவு கொடுத்து வேலையும் வாங்கிக் கொடுக்கிறார் இலவசமாக எலிசபெத். அவரிடம் பேசினோம்.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

சொந்த ஊர் திருநெல்வேலி. பி.எஸ்ஸி., உளவியல் மற்றும் சட்டம் படித்துள்ளேன். பன்னிரண் டாம் வகுப்பு முடித்தவுடன் திருமணம் ஆகிவிட்டது. திருமணத் திற்குப் பிறகு தான் நான் எல்லா பட்டப் படிப்பையும் படித்தேன். தற்போது ஒரு மகன் ஒரு மகளுடன் சந்தோஷமாக இருக்கிறேன்."

இந்த நிறுவனம் நடத்தும் எண்ணம் எப்படி வந்தது?

அடையாறில் உள்ள இன்டர்நேஷனல் மேன்பவர் நிறுவனத்தில் என்னைப் பதிவு செ வதற்காகச் சென்றேன். அப்போது உடனே ஒரு நபர் தேவை என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அந்த வேலை எதிர்பாராதவிதமாக எனக்கே கிடைத்தது. இந்த நிறுவனத்தில் இரண்டு மாதங்கள் பணியாற்றினேன். பணியாற்றும் பொழுது நிறைய பெண்கள் வேலை கேட்டு தினமும் வந்துகொண்டே இருந்தார்கள். இந்த நிறுவனம் நிறைய கிளைகளைக் கொண்டது. அப்போது விருகம்பாக்கம் கிளையை நடத்த முடியாமல் சிரமப்பட்டி ருந்தார்கள். அதை 2002ஆம் ஆண்டிலிருந்து நான் ஏற்று ஐந்து உதவியாளர்களுடன் வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்."

வேலை வாப்பு எதன் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது?

நாங்கள் வேலை வாங்கிக் கொடுக்க எந்தத் தகுதியும் பார்ப்பதில்லை. வேலை தேடி எங்களிடம் வந்துவிட்டாலே அவர் களுக்கு நூறு சதவிகிதம் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறோம். படித்தவர் களைவிட படிக்காதவர்களுக்குத்தான் நாங்கள் அதிகம் வேலை வாப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். அவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுப்பது சற்று எளிமையாக இருக்கும். அவர்களுக்கு எவ்வித வழி நடத்தலும் தேவையில்லை. படித்தவர்கள் என்றால் அவர்களுக்கு என்று தனி பிளாட்பார்ம் இருக்கிறது. அவர் களின் படிப்பிற்கு ஏற்றாற்போல், அவர்கள் வேலைக்குச் சரியான வர்களா என்று பல ஆராச்சிக்குப் பின்னரே வேலை ஏற்படுத்திக் கொடுக்கிறோம். முதலில் நாங்கள் அவர்களின் தற்குறிப்பை (Resume) சோதித்து ஆட்கள் தேவை என்ற நிறுவனத்திற்கு அவர் களின் தற்குறிப்பை அனுப்பி வைப்போம். இதற்கு நாங்கள் எவ்வித கட்டணமும் வாங்கு வதில்லை. படிப்பைத் தொடர்ந்து படிக்க முடியாதவர்களுக்கு நிறைய வேலை வாப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம்."

ஆட்கள் தேவை என்று விரும்பும் நபர்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது?

வேலைக்குத் தேவை என்று விரும்புவோர் மனநிலை வேலையைச் சரியாகச் செய்வார்களா?

என்பதாகவே இருக்கும். எங்களிடம் வருவோரின் எதிர்பார்ப்பை நாங்கள் முழு மையாக நிவர்த்தி செய்து கொடுக்கிறோம். நாங்கள் வேலைக்கு ஏற்றாற்போல் ஆட் களைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதால் எவ்விதப் பிரச்னையும் இல்லாமல் எல்லாம் சரியாகவே நடக்கிறது. நாங்களும் ஏதோ வேலை கொடுத்தால் போதும் அவர்களுக்கு சம்பளம் வந்தால் போதும் என்று வேலைக்கு ஆட்களை அனுப்பவதில்லை. அவர்களைப் பற்றி முழுமையான தகவல்கள், குடும்பம், குழந்தை எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்து கொள்வோம். அதன் பின்னரே வேலைக்கு அனுப்புகிறோம். ஏதேனும் பிரச்னை வந்தா லும் அதை நாங்கள்தான் முழுப் பொறுப் பேற்று சரிசெய வேண்டும்."

மறக்க முடியாத நிகழ்வு ஏதேனும் நடந்துள் ளதா? அதைப் பற்றிச் சொல்லுங்கள்?

இந்தப் பணியில் ஒவ்வொரு நாளும் ஒரு மறக்கமுடியாத நிகழ்வு நடந்துகொண்டு தான் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் ஏதேனும் சண்டையிட்டு விவாகரத்து வரை போ விடும். அப்படிப்பட்ட சூழலில் என்னிடம் வருவார்கள், அவர்களுக்கு முறையான கவுன்சிலிங் கொடுத்து அவர்களுக்கு நல்ல ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்திருக் கிறோம். அதேபோல் புதியதாகத் திருமணம் ஆன மகன் தனது மனைவியின் பேச்சைக் கேட்டு அவனின் தாயை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிடுவான். அப்படிப்பட்ட இடத்திலிருந்து அந்தத் தா எங்களிடம் கண்ணீர் மல்க வருவார்கள். அவர்களுக்கு அவர்களின் உடல் நலனுக்கேற்ற வகையில் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறோம். வேலை வாங்கிச் சம்பளம் வந்தவுடன் அவர் களால் யாரையும் எதிர்பார்க்காமல் வாழ்வை நடத்த முடிகிறது.

அதேபோல் ஒரு பொறியியல் பட்டதாரி மாணவன் கொரோனா காலத்தில் வேலை செத இடத்தில் நிறுவனத்தை மூடியதால் அவனுக்கு வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி விட்டது. அவரின் அம்மா கணவனை இழந்தவர். அவர் எங்கள் நிறுவனத்தில்தான் வேலை பார்க்கிறார். அப்படிப்பட்ட சூழலில் என்னிடம் வந்து, எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை. நான் செகிறேன் என்று வேதனையாகக் கூறினார். எல்லா தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டியிருந்த சூழலில் மருத்துவமனை மட்டுமே திறந் திருந்தது. அப்போது மெடிக்கல் அட்டண்ட ராக நல்ல சம்பளத்தில் வேலை வாங்கிக் கொடுத்தோம். இப்படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கதைகளைக் கேட்டும் பார்த்தும் இருக்கிறேன்."

வீட்டைவிட்டு அனுப்பப்படும் முதியவர் களுக்கு நீங்கள் அடைக்கலம் தருகிறீர்களா?

ஏதேனும் ஒரு பிரச்னையால் வீட்டை விட்டு வெளிவந்து நிர்கதியா இருக்கும் முதியோர்கள் எங்களிடம் வருகிறார்கள். வந்தவுடன் அவர்களிடம் நாங்கள் எதுவும் கேட்பதில்லை. சில நாட்கள் பின்னர் அவர் களே எல்லாவற்றையும் சொல்லிவிடுவார்கள். அவர்கள் தங்குவதற்கென்று ஒரு இல்லம் இருக்கிறது. அங்கு அவர்கள் தங்கிக் கொள்ள லாம் உணவு மூன்று வேளையும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த இல்லம் எங்கள் அலுவலகத்திற்கு அருகில்தான் இருக்கிறது. பெண்கள் மட்டும் தங்கும் இடமாக இருக் கிறது. இந்த இடத்திற்கு நிறைய பேர் உதவி கள் செது வருகிறார்கள்."

ஆண், பெண் இருவரில் யாருக்கு வேலை வாங்கிக் கொடுப்பது எளிது?

ஆண்களுக்கு வேலை வாங்கிக்கொடுப் பதுதான் சவாலான காரியம். ஏனென்றால் அவர்கள் எல்லா விஷயத்திலும் சற்று அவசர மாக இருப்பார்கள். வந்தவுடன் உடனே வேலை வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். இதை நான் தவறு சொல்ல முடியாது. அவர்களின் குடும்ப சூழல் அவ்வாறு இருக்கும். நான் யாரையும் அவர்களைப் பற்றி முழுமையாக விசாரிக் காமல் வேலை வாங்கிக் கொடுப்பதில்லை. ஆண்கள் எல்லாவற்றையும் முழுமையாகச் சொல்லிவிட மாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படியில்லை. சற்று உணர்ச்சிவசப்பட்டு கேட்டால் எல்லாவற்றையும் முழுமையாகச் சொல்லிவிடுவார்கள். இதனால் பெண்ணிற்கு வேலை வாங்கிக் கொடுப்பது எளிதானதுதான்."

இதுவரை எத்தனை பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறீர்கள்?

இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக் கிறோம். அதுவும் கணவனால் கைவிடப்பட்ட வர்கள், விதவைப் பெண்கள், குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்ட பெண்கள், படிப்பைப் பாதியில் நிறுத்திய பெண்கள் போன்றோருக்கு நல்ல வேலை வாப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். வீட்டு வேலைகள், சமையல் வேலைகள், துப்புரவு வேலைகள், மனவளர்ச்சி குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தை களைப் பராமரிக்க, செவிலியர்கள் போன்ற பெண்கள் சம்பந்தமான வேலைகள் எங்கெல் லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பல பெண் களை வேலைக்காக அனுப்பிருக்கிறோம்."

எதிர்காலத் திட்டம் பற்றி?

விவாகரத்து ஆனவர்கள், கணவனை இழந்தோர், பெற்றோரை இழந்தோர், கைக்குழந்தையுடன் வாழும் பெண்கள் என நிறைய பெண்கள் இருக்கிறார்கள். இவர் களுக்கென்று ஒரு தனி இல்லமும், குழந்தை கள் இல்லமும் தொடங்கி அவர்களுக்கு வாழ்வில் ஒரு மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்பதே என்னுடைய எதிர்காலத் திட்டம்."

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :